Thursday, January 04, 2007

2, 2007- புத்தக சந்தையில் என்ன புத்தகங்கள் வாங்குவது?

சென்னை புத்தக சந்தையில் சில புத்தகங்களை வாங்கச் சொல்லி என் உறவினரிடம் சொல்லியிருக்கிறேன். உங்களிடமும் ஒரு பட்டியல் இருக்கலாம், அதை சொன்னால் எனக்கு பிடித்தவற்றை என் ப்ட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன். இதைப் படிக்கும்போது ஏதோ பின்னுட்ட எண்ணிக்கைக்கூட்ட என்று நினைப்பவர்கள் சங்கிலித் தொடராய் பதிவுப்
போடலாம் :-)

என் பட்டியல்

கணையாழி கடைசிப்பக்கங்கள்- சுஜாதா
(1965- 1995 முழு தொகுப்பு)
அடி- தி.ஜானகிராமன்
மரப்பசு - தி.ஜானகிராமன்
பாரீசுக்குப்போ- ஜெயகாந்தன்
கிரெஞ்சவதம்- காண்டேக்கர்
புயலில் ஒரு தோணி- ப.சிங்காரம்
பெண் ஏன் அடிமையானாள்- பெரியார்
தமிழர் தலைவர் பெரியார் - சாமி சிதம்பரனார்
புத்தம் வீடு- ஹெப்சிபா ஜேசுதாசன்
தலைமுறைகள்- நீலபத்மநாபன்
போக்கிடம்- விட்டல்ராவ்
வாடிவாசல்- சி.சு. செல்லப்பா
தாம்ஸ் வந்தார்- க.நா.சு

பெயர், இன்ஷியல் இவைகளில் தவறு இருந்தால் திருந்தவும். இதில் பல என்றோ படித்தவையே. தற்சமய பட்டியல் இது. நீளும் அபாயம் உண்டு :-)
பி.கு இதுவரை கவிதை தொகுப்பாய் வாங்கியதும் இல்லை. வாங்க பயமாகவும் இருக்கிறது. கவிதை என்பது ஊறுகாயைப் போல, தட்டில் வைத்து சாப்பிட முடியுமா? ஆக கவிதை தொகுப்பு, சமையல், சுகிசிவம் பாணி சுய முன்னேற்றம், தற்கால ஆனந்தாங்கள் அருளும் ஆன்மீகம் இவை எல்லாம் வேண்டாம்.

19 பின்னூட்டங்கள்:

At Friday, 05 January, 2007, சொல்வது...

நமக்கு பட்டியல் எல்லாம் கிடையாதுங்க. மூன்று தடவையாவது புத்தக கண்காட்சிக்கு போவேன். கண்ணில் படும் புத்தகங்களையெல்லாம் குறிப்பெடுத்து எதை வாங்குவது என்று யோசித்து ஒவ்வொரு தடவையும் கை/பை கொள்ளுமளவுக்கு வாங்குவேன். தமிழில் வாங்கப்படும் புத்தகங்கள் விரைவில் படித்து முடிக்கப்படும். ஆங்கில புத்தகங்கள் தூங்கும்.

இந்த தடவை செல்ல முடியாத நிலை என்பதே வருத்தமாக இருக்கிறது.

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

Happy New Yera Usha
நேரமின்மையால் எழுதுவது குறைந்துவிட்டது.
காண்டேகரின் மொத்த தொகுப்பும் அலையான்ஸ் பதிப்பகத்தில் கிடைக்கும்; ஜெயகாந்தனின் தொகுப்புகள்(உங்களுக்கு அவர் எழுத்து பிடிக்குமா?) சமீபத்தில் பாரீஸுக்குப் போ படித்தேன். அற்புதமாக இருந்தது:அப்புறம் யவன ராணி, கடல்புறா, பொன்னியின் செல்வன் எல்லாம் ஏகப்பட்ட மலிவு விலையில் கிடைக்கும்.

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

உங்க லிஸ்ட்டைக் காப்பி அடிக்கலாம்ன்னு வந்தா நீங்க எங்களை லிஸ்ட் கேக்குறீங்களே .. வெரி பேட்:)

சரி பின்னூட்டம் பார்த்து அப்போ அப்போ லிஸ்ட் அப்டேட் பண்ணிக்குவோம் :)

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

அ.பி கைல நிறைய சில்லறை இருக்கு போல :-) நான் லிஸ்டு போட்டுக் கொண்டுதான், மளிகை
கடையானாலும், புத்தக கடையானாலும். வாங்கிய புத்தகத்தை படிக்காம விட்டதா சரித்திரமே கிடையாது, எந்த திராபை
என்றாலும் :-)

தாணு, நினைவுறுத்தலுக்கு நன்றி, முக்கியமாய் காண்டேக்கரின் கிரெஞ்சவதம் (ஸ்பெல்லிங்க் சரியா) பட்டியல் போட்டுவிட்டேன். ஆனால் சாண்டில்யன் எல்லாம் படிக்கும் பொறுமை எப்பொழுதும் இல்லை. புத்தாண்டு வாழ்த்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.

தேவ், போட்டாச்சு.

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

பிரசன்னா, புதுசு ஜெ.மோவின் கொற்றவை, நாஞ்சில் நாடன் சிறுகதை தொகுதின்னு ஆகஸ்டில் அள்ளிட்டு வந்தாச்சு :-)

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

>>புயலில் ஒரு தோணி- சிங்காரம்
** ப. சிங்காரம் **

>> பெரியார் சிந்தனைகள்- சிதம்பரனார்

"ஈ.வே.ரா. பெரியார் சிந்தனைகள்" (மூன்று தொகுதிகள்) வே ஆனை முத்து தொகுத்தது. சாமி சிதம்பரனார் எழுதியது "தமிழர் தலைவர் பெரியார்" என்ற வாழ்க்கை வரலாற்று நூல்.

>>புத்தம் வீடு- ஜெசிபா.....
** ஹெப்சிபா ஜேசுதாசன் **

>>வாடிவாசல்- பி.சி; செல்லப்பா
** சி.சு. செல்லப்பா**

>>ஏசு வந்திருந்தார்- கா.நா.சு
** க.நா.சு **

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

மேலும் சில பழைய புத்தகங்கள்:

உயிர்மை:
1. எஸ்.ராமகிருஷ்ணன் - 'விழித்திருப்பவனின் இரவு'
2. நாவல் - 'உறுபசி'
3. கி.ராஜநாராயணன் & கழனியூரன் - 'மறைவாய் சொன்ன கதைகள்' (நாட்டுப் புற பாலியல் கதைகளின் தொகுப்பு),
4. மு. சுயம்புலிங்கம்: 'நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்'
5. 'கு.அழகிரிசாமி கடிதங்கள்' (கி.ராவுக்கு எழுதியது)

6. ராஸ லீலா - சாரு நிவேதிதா
7. ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் - மணா
8. இந்தியப் பிரிவினை சினிமா இந்து முஸ்லீம் பிரச்சினை - யமுனா ராஜேந்திரன்

கிழக்கு பதிப்பகம்:
9. ரெண்டு - பா.ராகவன் (குங்குமம் நாவல்)
10. இராக் பிளஸ் சதாம் மைனஸ் சதாம் - பா.ராகவன்
11. கே.ஜி.பி - என்.சொக்கன்
12. சுப்ரமண்ய ராஜு கதைகள்
13. மு.க - ஜெ. ராம்கி

விகடன்:
14. தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
15. டூரிங் டாக்கீஸ் இயக்குநர் சேரன்
16. எத்தனை மனிதர்கள் - சின்னக்குத்தூசி
17. இவன்தான் பாலா
18. காலம் - வண்ணநிலவன்

வேறு:
19. ஆரிய உதடுகள் உன்னது - பாமரன் (அம்ருதா)
20. பெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி (உயிர்மை)
21. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் (விஜயா பப்ளிகேஷன்ஸ்)
22. இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை : கு அழகிரிசாமி - வெளி ரங்கராஜன் (சாகித்திய அகாதெமி)

காலச்சுவடு, தமிழினி கொண்ட விரிவான விழவுப் பட்டியலை என் பதிவில் இட எண்ணம். படிக்கத்தான் முடியவில்லை. பட்டியல் நிச்சயம் ; )

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

கருவாச்சி காவியம் ????

-- Vicky

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

கிரெளஞ்சவதம்.
பாலகுமாரனின் -அகல்யா
தி.ஜா வின் மோக முள், அம்மா வந்தாள்,கண்ணதாசனின் திரை இசைப் பாடல்கள்

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

உஷா.

நான் உங்களுக்கு பட்டியல் சொல்லலைங்க. ஆனா ஒரு உதவி கிடைக்குமான்னு கேக்கறேன்.

க்ரௌஞ்ச வதத்தையும் கொற்றவையையும் வாங்கி எனக்கும் அனுப்ப முடியுமா? உடையார் நான்கு பாகங்கள் படிச்சிருக்கேன். அடுத்த பாகங்கள் வந்திருந்தா அவையும். அனுப்ப முடியாட்டி ஜூனுல இந்தியா போறப்ப வாங்கிக்கறேன்.

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

>>பெயர், இன்ஷியல் இவைகளில் தவறு இருந்தால் திருந்தவும்.

என்னால் முடிந்தது இது மட்டும்தான். ;-)

>>ஏசு வந்திருந்தார்- கா.நா.சு

தாமஸ் வந்தார் - க.நா.சு

க்ருபா
-புள்ளிவலை
-உதவாக்கரை

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்யாயன்.

முன்னரே படிக்காமல் இருந்தால் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல்.

பெண் ஏன் அடிமையானாள்? பெரியாரின் புத்தகம் உங்கள் பட்டியலில் இருப்பதால் இதுவும்.

பெண் அடிமைத்தனம் மட்டுமல்ல மனித குலத்தின் அனைத்து அடிமை சங்கிலிகளையும் வரலாற்றோடு கதைப் போக்கில் பொருத்தி பார்த்து பொது உடமை கருத்துக்கள் என்னும் நூலில் கோர்க்கப்பட்ட புத்தகம்.
-------
நான் ஒரு காலத்தில் புத்தகமும் கையுமாக திரிந்த ஆள்... இதெல்லாம் படிக்கறதுனால உங்களுக்கு என்ன புண்ணியம் என்று வீட்டுக் காரம்மா கேட்ட பிறகு படிப்பது மிகவும் குறைந்து விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கையில் இருந்த காசுக்கெல்லாம் புத்தகங்களாக வாங்கியது படித்தது. ம்ம்.. அது ஒரு கனாக்காலம்.

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

உஷா,
"வால்காவிலிருந்து கங்கை" தவிர ராகுல் சாங்கிருத்யாயனின் மற்றுமொரு நூலைப் பற்றி (விவேகானந்தர் பற்றியது என்று நினைவு) வேறு ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள். என்ன புத்தகம் என்று மறந்துவிட்டது. உங்களுக்குப் பெயர் நினைவிருக்கா?

 
At Friday, 05 January, 2007, சொல்வது...

இதையும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்... விடுபட்டவை: எனக்கு பிடித்த டாப் டென் புத்தகங்கள்.

 
At Sunday, 07 January, 2007, சொல்வது...

tamil reber, என்ன வாங்குவது அவங்க அவங்க விருப்பம், நான் கேட்டேன் சொல்ல விருப்பம் இருக்கிறவங்க சொல்லட்டும், ஆனா நான் அவ்வளவு சுலபமா ஒருத்தரூ சொன்னாங்கன்னு எல்லாம் வாங்கிட மாட்டேன். வம்புக்கு பார்க்க :-)

http://nunippul.blogspot.com/2006/07/blog-post_20.html

 
At Sunday, 07 January, 2007, சொல்வது...

பிரசன்னா, மு.சுந்தரமூர்த்தி, கிருபா திருத்தி போட்டு விட்டேன் நன்றி.

பாபா, உங்கள் பட்டியலில் இருப்பவைகளில் சில வாங்கிவிட்டேன், பத்திரிக்கை தொடர்கள் விட்டு விட்டு படித்தவை. அது என்ன பாமரன் எழுதிய ஆரிய உதடு என்னுது- நம்ம வை.மு வின் பாட்டு மாதிரி இருக்கு :-)
தலைகீழ் விகிதங்கள் மட்டும் சேர்த்துக்கிறேன்.

விக்கி, கள்ளிக்காட்டு இதிகாசம் நல்லா இருந்தது. என்னிடம் இருக்கு. ஆனா இது எப்படி என்று ஏன் யாரும் பேசவில்லை?

தாணு, சினிமா பாட்டு, பாலகுமரனுக்கு எல்லாம் அனுமதி கிடையாது ;-)

 
At Sunday, 07 January, 2007, சொல்வது...

குமரன், நானே பாலைவனத்துல ஒட்டகத்துக்கு புல்லுக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். என்னை புத்தகம் வாங்கி வை என்றுக் கேட்பது நியாயமா ஐயா? நானே ஆள் தேடுக் கொண்டு இருக்கிறேன். எனி இந்தியனையோ, கிழக்கையோ பிடியுங்கள்.

அரைபிளேட்,நான் என் டீன் ஏஜ் பருவத்தில் படித்த பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் பற்றி பொன்ஸ் தமிழ்மண நட்சத்திரமாய் இருந்தப்பொழுது எழுதிய விமர்சனத்தில் நான் குறிப்பிட்டது, ஆண்களை குற்றம் சாட்டும் பெரியார் பெண்களின் அசட்டுதனத்தையும் சாடியிருப்பார் என்றுச் சொல்லியிருப்பேன். படிப்பது என்பது ரத்தத்தில் ஊறிய பழக்கம், அதனால் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார் பாவம், ஆனால் பொருளாதார நிலையில்
கொஞ்சம் உயர்ந்ததும், சமீபக்காலமாய், அதுவும் நம்ம ஆளு கம்ப்யூட்டர் புத்தகங்கள் ஆயிரம், ரெண்டாயிரம் கொடுத்து வாங்கும்போது எனக்கும் கொஞ்சம் சாங்ஷன் ஆனது.

வால்காவில் இருந்து கங்கை வரை என்னிடம் இருக்கு. ஒரு ஜி.கே, இதுவரை தமிழில் அதிகம் மறுபதிப்பு கண்ட ஓரே புத்தகம் ராகுல்ஜியின் இதுவேதான்.

பொன்ஸ், அதுவேதான், நானும் அந்த பெயர் என்னவென்று தேடுக் கொண்டு இருக்கிறேன். இந்தியாவின் பல மடங்கள் பற்றி எழுதியிருப்பார்,
புத்தகத்தில் முதல் வரிகள் பத்து வயது பையனும்,( அல்லது பன்னிரெண்டு) மூன்று மாத நாயும் இருந்தால் இருப்பார்கள். ஓடினால் ஓடிவிடுவார்கள்.அந்த காலத்தில் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடுவது சாதாரண விஷயம். திரும்பவும் வந்துவிடுவார்கள். கிருபா, ஆமாம் தாம்ஸ் வந்திருந்தார்- க.நா.சு எழுதியது. செயிண்ட்தாம்ஸ், திருவள்ளுவர் கால சரித்திர பிண்ணனியில். நானும் திரும்ப படிக்க வேண்டும் என்று தேடிக் கொண்டு இருக்கிறேன்

 
At Monday, 08 January, 2007, சொல்வது...

தி.ஜானகிராமனின் நாவல்களான
மோகமுள், அம்மா வந்தாள் மற்றும் நாடக வடிவமான வடிவேலு வாத்தியார்.

ர.சு. நல்லபெருமாளின் நாவல்களான
உணர்வுகள் உறங்குவதில்லை (நூல் வடிவம் பெற்றுள்ளதா எனத் தெரியவில்லை)
கேட்டதெல்லாம் போதும்
மாயமான்கள்

ராகுல் சாங்கிருத்தியாயன்
ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்

திருப்பூர் கிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்பில்
சிவப்பாய்ச் சில மல்லிகைகள்
பட்டொளி வீசி...

ஸ்ரீவேணுகோபாலனின் 'நீ நான் நிலா', மோகினி திருக்கோலம், திருவரங்கன் உலா...

அகிலன் சிறுகதைகள். அகிலன் அவர்களின் சிறுகதையான எரிமலை 'எங்கே போகிறோம்?' என்ற நாவலாக உருமாற்றம் கொண்டது. ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் - சில நேரங்களில் சில மனிதர்களாக உருமாற்றம் கொண்டது போல்.

மலேசிய எழுத்தாளர் ரெ. கார்த்திகேசுவின் 'அந்திமக் காலம்' என்ற நாவல்.

சுரேஷ்-பாலா என்கிற சுபாவின் நாவல்களான
நீரில் மிதக்கும் நிலா,
மடிமீது தலைவைத்து.

பட்டுக்கோட்டை பிரபாகரின் இப்படியும் இருக்கிறார்கள், பிருந்தாவனமும் நொந்த குமாரனும் நாவல்கள்.

இவையே தற்சமயம் என் நினைவடுக்கில் நிலைகொண்டிருக்கும் நூல்கள்.

 
At Thursday, 11 January, 2007, சொல்வது...

மசாலா படங்களை விட்டுவிட்டு, தரமான கதையம்சமுள்ள படங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றாலும்
ரஜினி படம் என்றால் முதல் நாள், முதல் காட்சி என்று ஓடுவதில்லையா? அதுப் போல பட்டியலில் நம்ம சாய்ஸ், தலைவருக்கே தந்தாச்சு :-)
நன்றி- தேசிகன். தேசி, உயிர்மை பதிப்பகம் என்று நினைக்கிறேன். நீங்கள் சரியாய் போடவில்லை.
அப்படியே விலையையும் குறிபிட்டு விடுங்கள்.

சைதை முரளி, நீங்கள் குறிப்பிட்ட பழைய எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் ஏறத்தாழ படித்துவிட்டேன். திருப்பூர் கிருஷ்ணன் தவிர. சில பழைய நூல்கள் வாங்குவது சின்ன நூலகம் போல வீட்டில் வைக்கவும், சில புத்தகங்கள் திரும்ப திரும்ப படிக்க தூண்டும் வகையில் இருக்கும் அல்லவா!
ஸ்ரீ.வே அல்லது புஷ்பா தங்கதுரை, சுபா, பட்டுகோட்டை பிரபாகர்... ஹூஹூம் . சுஜாதாவின்
அந்தக்கால கணேஷ், வசந்த் பிரபல நாவல்களே இப்பொழுது எடுத்தால் தூக்கம் வருகிறது. ரசனை
மாறி வருகிறதா அல்லது வயதாகிறதா என்று தெரியவில்லை :-)

 

Post a Comment

<< இல்லம்