மீண்டும் மகாலஷ்மி
மதுராவின் http://tamizhachchikal.blogspot.com/ - தாய் நாட்டில் ததிகினனத்தோம் -2ல் சில வரிகளைப் பார்த்ததும், ஏதோ ஒருவகையில் நானும் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் சில விளக்கங்கள்.
முகம் தெரியாத ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று ஆவல் எழுந்தாலும், இருந்தி முகந்திருந்தி அனுமதி வாங்கி பணம் அனுப்ப வேண்டும். ஒரு ஹவுஸ் ஓய்ப்பின் எல்லைகள் உங்களுக்கு புரியும். மாதமானால் குறிப்பிட்ட தொகை இதற்கென்று எடுத்து வைத்து
விட்டாலும், ஆற்றில் போட்டாலும் அளந்துப்போடு என்பதே எங்கள் கொள்கை. ஒருமுறை ஏமாந்ததன் விளைவும், சாதாரண நிலையில் இருந்து, பல போராட்டங்களுக்கு பின் உயர்ந்ததால் ஒவ்வொரு நயா பைசாவின் அருமை தெரியும். கருப்பு பணமோ, வியாபாரம் செய்து
கொட்டுக்கிடக்கும் பணத்தில் இருந்து வரிவிலக்குக்குக்காக உதவி செய்வதோ இல்லை. இந்த சமூகம் எங்களுக்கு தந்ததை நாங்கள் வேண்டியவர்களுக்கு திருப்பி தருகிறோம். நாளை மகாலஷ்மி நல்ல நிலைமைக்கு வந்ததும், அதே போல பிறருக்கு உதவுவார் என்ற நம்பிக்கையுடன்! அறம் செய்ய விரும்பு என்ற பாட்டியே, ஏற்பது இகழ்ச்சி என்றாள். முதலில் அறுபதாயிரம் தேவை என்பதால் ஐந்தாயிரம் அனுப்பினேனே தவிர, முப்பதாயிரம் என்றிருந்தால், தொகையைக் குறைத்திருப்பேன். ஊர் கூடி தேர் இழுத்தால், நாமும் செய்யலாம்
என்ற எண்ணம் மேலும் சிலருக்கு தோன்றும்.
முகம் தெரியாமல் பழகும் இணைய நட்புகள் மூலம் எழும் கோரிக்கைகளில் நம்பகம் மிக மிக முக்கியம். வெளிப்படையான அணுகுமுறையும் முக்கியம். மிகச் சுலபமாக பெயரில்லாத் தாக்குதல்கள் ஆரம்பித்து விட முடியும்! முதல் முறை பாராட்டு மழைகளுடன் வரும் தாக்குதல்களையும் சமாளித்துக்கொண்டு, அடுத்த முறை கொஞ்சம் யோசனையுடன் ஆரம்பிப்பவர்களை இந்த சமூக சேவைக்கஷ்டங்க¨விட்டுத் துரத்துவதும் எளிது - அந்த சாத்தியக்கூறை மறுதளிக்க வெளிப்படையான அணுகுமுறை மிக அவசியம் என்று கருதுகிறேன்.
நிலாவின் கருத்துக்கள் என மனதுக்கு ஒப்பவில்லை. முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது. மகாலஷ்மி படித்து முடித்தாக வேண்டும் என்றே தோன்றியது. ஞானவெட்டியான் ஐயாவுக்கு திண்டுக்கல்லுக்கு போன் அடித்தேன். ஐயா தன் நிலைமையை தெளிவாய் விளக்கிவிட்டார். அறுபது வயது கடந்துவிட்டவர், வாழ்க்கை தந்த அனுபவம் யதார்த்தமாய் நான் கேட்காலேயே சொல்லிவிட்டு, சிரமதானம் மட்டுமே செய்யமுடியும் என்றார். வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர், மனைவியும் தானும், பல்வேறு உடற்கோளாறுகளால் அவதியுறுவதாலும், தன்னால் தற்சமயம் இப்பெண்ணிற்கு பண உதவி செய்ய இயலாது என்றவர், ஓய்வு பெற்று வந்த தொகையில் சில லட்சங்களை ஒதுக்கி, அதில் வரும் வட்டி பணத்தில் 18 ஏழை பிள்ளைகள் படிக்க உதவுவதாகவும் கூறினார். இதய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர் ஆட்டோ பிடித்து கல்லூரியிலேயே சென்று மகாலட்சுமியைப் பற்றி விசாரித்துவிட்டேன் அம்மா, அப்பெண்ணுக்கு உதவுவது அவசியம் என்றார். ஐயா சொன்னதும், தாமதிக்காமல் பணத்தை அனுப்பி வைத்தேன். நிற்க, ஐயா தன் நிலைமையை சொல்லிவிட்டார்.
இதற்கு முன்பும் இப்பொழுதும் இணைய நட்புகளான ரஜினி ராம்கி மற்றும் என்றும் அன்புடன் பாலாவும் கோரிக்கை வைக்கும்பொழுதும் இப்படி நன்கு விசாரித்தே, (போனில், மெயிலில்) என்னால் ஆனதை செய்தேன். அவர்களும் என்ன செய்யப் போகிறோம் என்பதையும்
சொல்லிவிடுவார்கள். மிக துல்லியமாய் கணக்கைக் கொடுத்து விடுவார்கள் மேலும் இவர்கள் ஒருவராய் செய்யாமல் அறிமுகமான நண்பர்கள் இணைந்து செய்வதால் எந்த சந்தேகம் வந்ததில்லை.
பொது நல சேவை செய்வது என்பது சுலபமான விஷயம் அல்ல. கையில் இருக்கும் பணத்தில் அஞ்சோ பத்தோ அனுப்புவது என்பது மிக சுலபம். அதைவிட சுலபமானது செய்வதை வாய்க்கு வந்தப்படி பேசுவது.
ஆனால் மனதில் உறுத்திய சில கேள்விகள், நிலா கேள்வி கேட்டபோது நக்கல் அடித்தவர்கள் (எல்லா கண்ணியங்களையும் மீறிய நக்கல்கள் சேர்த்து), தொடர்ச்சியாய்ப் பதிவு போட்டு "தமிழச்சி"யின் கண்ணீரைத் துடைக்கப் புறப்பட்டவர்கள், எதிர்காலம் இளைஞர்
கையில் என்று ஆனந்த கண்ணீர் சொரிந்தவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்பது தெளிவாக்கப்படுதல் இப்படிப்பட்ட நிகழ்வுகளின் தொடர்ச்சிகளுக்கு நல்லது.
பி.கு வடிக்கட்டியே பின்னுட்டங்கள் அனுமதிக்கப்படும். இந்த விஷயத்தில் ஞானவெட்டியான் ஐயாவிடம் மட்டுமே நான் நேரிடையாய் பேசியதால், அவர் பெயர் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
8 பின்னூட்டங்கள்:
எத்தனையோ தர்ம சங்கடங்கள், தர்மம் செய்வதிலும்.
தீர விசாரித்துவிட்டே செய்யலாம்.
உண்மையான வார்த்தைகள் உஷா.
எந்த கருந்தாயிருந்தாலும் எதிர்க்கருத்துள்ளவர்கள் இருக்கத்தான் செய்வர்.
காந்தியை சுடவும் ஆளிருந்தது, இயேசுவை சிலுவையில் போடவும் ஆளிருந்தது.
அதனால் இதுபோன்ற எதிர்ப்புகளை இக்னோர் செய்வதே மிக சிறந்த வழியென நான் நினைக்கிறேன்.
இருப்பினும், உங்கள் விளக்கம் மிக தெளிவாக அமைந்துள்ளது..!!!
நன்றி !!!
உதவியவர்களில் பலர் தம் பெயரைச் சொல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் போது இது போன்ற பதிவுகள் இனி எப்போதாவது உதவ நினைப்பவர்களிடமும் தயக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
அத்துடன் மதுரா பதிவிற்குப் பின்னூட்டம் வராததிலிருந்தே யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது கண்கூடு. இப்படித் தனிப்பதிவிட்டு, கவனத்தை ஈர்ப்பது தேவையில்லை என்றே நம்புகிறேன். [தனிப்பட்ட முறையில், அந்தப் பதிவில் பல விஷயங்கள் எனக்குப் புரியவில்லை :)- வழக்கம் போல :)) ]
மகாலட்சுமி நம்மைப் போன்ற பதிவர்களிடம் பணம் பெறுவதைத் தற்கொலை முயற்சிக்கு ஒப்பிட்டு ஒரு பதிவு வந்த போது கூட பொறுமை காக்கத்தான் செய்தோம். அதே பதிவர் "சூப்பர்" என்று பாராட்டும் விதமாக ரவியும் செய்து முடித்தார். இந்த நிலையில் இப்போது இப்படி ஒரு பதிவு... உஷா, தவிர்த்திருக்கலாமோ? :(
மகாலட்சுமி விஷயத்தில், பதிவு இட்டவர்களில் நானும் இருப்பதால் தான் இந்தப் பின்னூட்டம்.
மற்றபடி அவரது கல்விக்கு நான் எப்படி உதவினேன் என்பதைச் சொல்ல எனக்கு உண்மையில் விருப்பமில்லை; அது அவசியமும் இல்லை என்றே கருதுகிறேன்.
Let's move on guys!
It's over!
பொன்ஸ், சில விஷயங்களை பொதுவில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன்.
உதவவேண்டுமென நினைத்தோம்; செய்தோம்.
புறம்பேசுவோரின் பேச்சுக்களையும், சாடை மாடை பேச்சுக்களையும் பெரிதுபடுத்தல் நல்லதல்ல. விட்டுவிடுங்கள்.
மனசாட்சிதான் நீதிபதி.
நீங்கள் சொன்னதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் காரணம் காட்டியது தேவையற்றது என்பதே என்கருத்தும்.
ஒரு நல்ல விஷயம் கொச்சைப் படுத்தப் படும்போது அதற்கு ஒத்து ஊதுவதுபோல இந்த நேரத்தில் நீங்கள் பதிவிட்டது நியாயமானதாகவும் தெரியவில்லை.
சிந்தாநதி, பதிவு தவறான பொருள் தந்தால் மன்னிக்கவும் . மற்றப்படி பொன்ஸ்க்கு தந்த பதில்தான் எல்லாருக்கும்.
Post a Comment
<< இல்லம்