Wednesday, January 24, 2007

என் கேள்விக்குகளுக்கு என்ன பதில் இரவு கழுகார் அவர்களே!

ஐயா, நேற்றிரவு உங்கள் விளக்கம் பார்த்து புல்லரித்துப் போய் ஒரு கமெண்ட் போட்டேன். இன்னும் அது வெளியாகவில்லை.அதற்குள் உங்கள் பதிவை பலரும் பார்த்திருப்பார்கள். சிலர் அதை உண்மை என்றும் நம்பலாம். எனக்கோ கணிணி அறிவு சுத்தம் அதனால் கேஸ் போடுவேன், ஐபி அட்ரஸ் இப்படி எல்லாம் பேச விருப்பமும் இல்லை. ஆக என்னைப்பற்றி உங்களிடம் இந்த "உண்மையை" எடுத்தியம்பிய புண்ணியவான் யார் என்றுக் கேட்டு நீங்கள் உட்பட யாரையும் தர்மசங்கடத்தில் உட்படுத்த விரும்பவில்லை. ஆனால் பதிவு என்று ஒன்றை வைத்து அதில் பல உண்மைகளை பட்டவர்த்தமாய் வெளியிடும் உங்களிடம் ஓரே ஒரு கேள்வி, எதையும் ப்ரூப் இல்லாமல் செய்ய மாட்டீர்கள் என்றும் மனப்பூர்வமாய் நம்புகிறேன்.

தமிழ் மணத்தில் இருந்து விலகி தேன் கூட்டில் சேருங்கள் என்ற என் பெயரிலான மெயில் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் எந்த ஐடியில்? ஏன் என்றால் அதே ஐடியில் இன்னும் என்ன கூத்து வேண்டுமானாலும் என் பெயரில் செய்யலாம் இல்லையா? இல்லை போகிறப் போக்கில் யாராவது சொன்ன தகவலா? அப்படி யாராவது எதையாவது கொளுத்திப் போட்டால் அதை பதிவாய் போடுவதன் விளவுகள் உங்களுக்கு தெரியுமா?

நான் என் சொந்த பெயரில் பதிவு வைத்திருக்கிறேன். புனித பிம்பமாய் "நுனிப்புல்"லும், முக்காடுப் போட்டுக்கொண்டு வாய்க்கு வந்ததை எழுதவும் வேறு எந்த பதிவும் இல்லை.பலமுறை
சொன்னது, சாட் செய்வதில்லை என்பது மீண்டும் ஒரு முறை! அப்படி இருக்க, என் பெயரை நீங்கள் குறிப்பிட என்ன காரணம்? மேலும் இன்று ஓரள்வு எழுத்து துறையில் என் முயற்சிகள் வென்று வரும் சூழ்நிலையில், நீங்கள் எழுதியது சரியா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

நண்பர்களே, என் பேச்சைக் கேட்டு தமிழ்மணத்தில் இருந்து விலகி , தேன்கூட்டில் சேர்ந்தவங்க கையை தூக்குங்கப்பா! உங்களிடம் அப்படிப்பட்ட மெயில் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உஷா

34 பின்னூட்டங்கள்:

At Wednesday, 24 January, 2007, சொல்வது...

ஆட்டத்துலே என்னையும் சேர்த்துக்குவிங்களா உஷா?

எனக்கும் கை தூக்குங்கப்பா:-)

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

அட விடுங்கப்பா இதுக்கெல்லாம் டென்ஷனாகிக்கிட்டு. இந்த மாதிரி பிரபலங்களான இப்படிப்பட்ட கிசுகிசு எல்லாம் வரத்தான் வரும். அதுக்கு எல்லாம் பதில் சொல்லி விளக்கம் கேட்டுக்கிட்டு இருந்தா வேற ஒண்ணும் எழுத முடியாது.

உங்க பதிவை பார்த்து அந்த பதிவை பார்க்காதவங்களையும் பார்க்க வைக்கறீங்களே.

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

புரியுது துளசி புரியுது. கொஞ்சம் பொறுங்க, புரூப் கேட்டு இருக்கேன் இல்லே. பேமெண்ட் எப்படி? யூரோலையா? டாலர்லையா? மெயிலு மட்டுமில்ல, உங்களுக்குன்னா ரகசியமா சாட் செஞ்ச காப்பியை கூட கண்டுப்பிடிச்சி அனுப்பிடுவாங்க. எனக்கு ? ஆங் போன் பில்லு! அமீரகத்துல இருந்து உலகத்தின் பல மூலைகளில் இருந்து ஆட்களை பிடித்து அனுப்பியதற்கு அதையும் கிளைம் செய்யலாமே? எது செஞ்சாலும் ஒழுங்கா செய்யணும். என்ன சொல்றீங்க?

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

வாங்க இலவசம் மற்றும் இது நியாயமா! இப்படிப்பட்ட அறிவுரை வரும் என்று நன்கு தெரிந்தே இந்த பதிவு போட்டேன். நான் என்ன அனானி கமெண்டுகளையா அனுமதிக்கிறேன்? வீரமாய் வந்து எனக்கு கைக் கொடுக்க :-))))))))))))))
நாலு நாளுக்கு முன்பு பெரியாரின் கருத்துக்கள் பிடிக்கும் என்றதும் நான் தமிழ் மண ஆளாய் தெரிந்தேன் இன்று தேன்கூடு நல விரும்பி. ஆரம்பம் முதல் பார்க்கிறேன் ஏன் இப்படி என்னை ஒரு செட்டில் சேர்க்க வேண்டும் என்று ஆள் ஆளுக்கு ஒரு முடியோடு அலைக்கிறீர்கள்? என்பதே என் கேள்வி. அட கேள்வி உங்களுக்கு இல்லை ஐயா!
வரவர பதிவு எழுதும் ஆசையே போய்விட்டது. ஒழுங்காய் பதிவு எழுதியே பல மாதங்கள் ஆகிவிட்டது. உண்மையில் நான் அந்தப் பதிவைப் பார்த்து சிரித்துவிட்டு, கொஞ்சம்
கவலையுடன் ஒரு கமெண்ட் போட்டேன். அதுக்கு அந்த ஆள் ஒரு விளக்கம் போட்டார் பாருங்க, சில விஷயங்கள் என்னால் பொறுத்துப் போக முடியாது. இது என் குணம். ஒண்ணு புரூப் காட்டு இல்லை என்றால் மன்னிப்பு கேட்டு பதிவை தூக்கு.

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

:-)))))))

உஷா மேடம்!

எனக்கு வந்த செய்தியை அப்படியே போட்டிருக்கிறேன். உஷாரான பெண்பதிவர் உலகத்திலேயே நீங்கள் மட்டும் தானா? வேறு எந்த பெண்பதிவரும் உஷாராக இருக்க கூடாதா?

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா?

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

பின்னூட்டத்துக்காக இதுநியாயமா என்றொரு முகவரி தொடங்கியிருப்பதும் உஷாரான பெண்பதிவர் தானாம்.

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

கழுகு, ஆந்தை என்றெல்லாம் 'தமிழ்' மணக்கும் இடங்களில் உலாவருவதற்கான தேவை இல்லை தான். ஆனால் நம்மில் சிலரே தன் அரசியல் வாந்திகளை, காழ்ப்புச்சளிகளை இங்குத் துப்பி வருவதால் இவையும் இறக்கை விரித்துப் பறக்கத் துவங்குகின்றனவோ!

ஒரே ஒரு உதாரணம் எனக்குத்தெரிந்தது: நீங்கள் முஸ்லீமாகவோ/கிறித்தவராகவோ இருந்து-என்ன தான் யாரையும் தாக்காமல்-அபூமுகைத்தனமாக நியாயமான விமர்சனங்களுக்கு விளக்கமளித்து வந்தாலும் பீஹைவ் தன் கூட்டில் 'நோ' சொல்லிவிடுமாம்.
அதே, அடிமைகள் திம்மிகள் என்று பிற மதத்தைத் தாக்கும் பதிவர்கள் 'கரி'ந்த மனதுடன் இருந்தாலும் - உயர்சாதியினர் என்றால் ஒய்யாரமாக உலா வர அனுமதிக்குமாம்.
ஏனிப்படி? என்ற கேள்வியை தவிர்க்க முடிகிறதா, பாருங்கள்!

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

போராட்டமா உஷா? சரி. போராடுங்க. ஆனா என்ன....ஒங்க நேரம் வீணாகப் போகுது. கண்டுக்காம அடுத்த பதிவு எழுதிப் போடுங்க. அதுதான் முக்கியம்.

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

நன்னி இ. கழுகு நான் இல்லை என்று தெளீவாய் சொன்னதற்கு. ஆனா அது என்ன கடைசியாய் குற்றமுள்ள நெஞ்சுன்னு என்னைய சொல்லுறீங்க :-)

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

அந்த கழுகுக்கு ஒரு லிங்க் கொடுத்திருக்கலாம். இப்போ நான் எங்கே போய் தேடுவேன் ? மத்தியானத்தில் இருந்து நெட்டு இல்லை...இப்போதான் பார்த்தேன்...கூகுள் துணை !!!

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

ரவி,
கழுகே இந்தப் பக்கம் பறந்து வந்திருக்கு பாருங்க, அதும் சிறகப் பிடிச்சிகிட்டுப் போனாக்க, ஒரு வேளை படிக்கலாம் ;)

உஷா,
எனக்கு ஒரு சந்தேகம்

....
...
இரவு + கழுகு = இரவுக்கழுகு அல்லவா? இருபெயரொட்டுப் பண்புத் தொகையாக இங்கு ஒற்று மிகும் தானே?

நீங்க ஏன் ஒற்றில்லாம தலைப்பு வச்சிருக்கீங்க?
இதெல்லாம் உஷாரா இருக்க வேணாமா? :)))))

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

ரவி, பொன்ஸ் சொன்னதை பின்பற்றவும்.

பொன்ஸ், இனி நான் என் ஆங்கில அறிவை பட்டை தீட்டிக் கொண்டு புக்கர், புலிச்சர் என்று முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன். அதனால் இனி எனக்கு இந்த தமிழ் இலக்கண பாடம் எல்லாம் தேவை இல்லை. கவனிக்க, இங்கு ஸ்மைலி எதுவும் போடவில்லை. அருள் வாக்கு தரும்பொழுது, நம் முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்.

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

// இனி நான் என் ஆங்கில அறிவை பட்டை தீட்டிக் கொண்டு புக்கர், புலிச்சர் என்று முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன்//
புதுவருசத் தீர்மானம் பொங்கலோடு போச்சா! :)

//அருள் வாக்கு தரும்பொழுது, நம் முயற்சியை ஆரம்பிக்க வேண்டும். //
இது தான் புரியலை.. அருள் ஏதாச்சும் வாக்கு கொடுத்திருக்காரா? ;)

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

//இது தான் புரியலை.. அருள் ஏதாச்சும் வாக்கு கொடுத்திருக்காரா? ;)//

பறந்து ஐடியாவ குடுத்துட்டு இப்படி தேமே என்று முழிக்ககூடாது

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

"இருபெயரொட்டுப் பண்புத் தொகையாக.."

மாவாகிய மரம் மாமரம், கூடலாகிய ஊர் கூடலூர் ஆகியவையே (அதாவது சிறப்புப் பெயராகிய பொதுப்பெயர் வந்தால்தான்) இரு பெயரொட்டு பண்புத் தொகை வரும்.

இரவுக்கழுகார் என்பது இரவின் கழுகைப் போன்ற பதிவர் என்றால், அது ஆறாம் வேற்றுமைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும்.

நான் சரியாகக் கூறுகிறேன் என்றுதான் நம்புகிறேன். தவறாக இருந்தால் திருவல்லிக்கேணி இந்து உயர் நிலை பள்ளியில் சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் எனது எட்டாம் வகுப்பை எடுத்த ஆசிரியர் ஜயராம ஐயங்கார் என்னை ஒரு வாரம் பெஞ்சு மேல் நிற்கவைத்திருப்பார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

//பறந்து ஐடியாவ குடுத்துட்டு இப்படி தேமே என்று முழிக்ககூடாது //

தலைவா நாடோடி, இன்னிக்கு நேரமே சரியில்லை.. யானைப்பதிவு போட்டா உள்குத்து கண்டுபிடிச்சாங்கன்னு பதிவையே தூக்கிட்டேன். இப்போ பின்னூட்டத்திலுமா..

பொதுவா எனக்கு எழுத்துப் பிழைகளைப் பார்த்துட்டா, அதைத் தாண்டிப் போய் பதிவைப் படிக்கிறதே பெரிய கஷ்டமான வேலை. இ'க்'கன்னா தொலைஞ்சது ஏன்ன்னு ஆராய்ச்சி செஞ்சிகிட்டே படிச்சதுல புலிச்சர், தாட்சர் எல்லாம் மிஸ் ஆகிடுச்சு.. இப்போ தான் புரியுது :)

உஷா,
தமிழில் எழுதி புலிச்சர் வாங்கச் சொல்றவங்களுக்கெல்லாம் பதிவு போடத் தொடங்கிட்டீங்களா? வெளங்கினாப்புலத் தான். கொத்ஸ் சொல்வதை வழிமொழிஞ்சிக்கிறேன் :)

[பி.க 4 ஆகிடுச்சு.. இத்தோட ஜூட் :) ]

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

உஷா, நல்லா எழுதறத்துக்குப் பொறுமையும் வேண்டும்னு இப்போதான் புரியுது.
நீங்க வருத்தப் பட வேண்டாம்.

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

//கொத்ஸ் சொல்வதை வழிமொழிஞ்சிக்கிறேன் :)//

நான் ரெண்டாவது பின்னூட்டத்தில் சொன்னதை வழி மொழிய உங்களுக்கு 20 பின்னூட்டம் ஆச்சாக்கும்?

இதைத்தான் பெரியவங்க சொல்லுவாங்க.... ;-)

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

கனி அவர்களே, உங்கள் கேள்விகள் சில மணி நேரமாய் என் மனதை சுற்றிக் கொண்டு இருக்கின்றன. நிதானமாய் பதில் அளிக்க வேண்டும் என்று வேலைகளை முடித்துவிட்டு உட்கார்ந்துவிட்டேன். இணையம் தந்த கட்டுபாடு இல்லாத சுதந்திரத்தை
எல்லாரும் அதீதமாய் பயன் படுத்துகிறோம்.ஆனால் இந்த எல்லை மீறிய சுதந்திம் மற்றவர்களை எந்தளவு பாதிக்கும் என்பதை வெகு சுலபமாய் மறந்துவிடுகிறோம்.
உங்கள் கேள்வியை தவிர்க்கவில்லை, ஆனால் இதற்கு நான் என்ன பதில் தர முடியும்? என் எழுத்தில் ஏதாவது தப்பு, தவறு இருந்தால் சொல்லுங்கள். என்னால் இயன்றால் திருத்திக் கொள்கிறேன். இல்லை என்றால் வழக்கமாய் சொல்வதுதான் இந்த "நுனிப்புல்" பதிவை எல்லாம் படித்து நேரத்தை வீண்டிக்காதீர்கள் என்று :-)

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

Madam,
//என் எழுத்தில் ஏதாவது தப்பு, தவறு இருந்தால் சொல்லுங்கள். என்னால் இயன்றால் திருத்திக் கொள்கிறேன்./
I did not point you. Please note, Whoever; whatever it may be, my vision is always with my own eyes, neither of IRAVU KAZUKAAR nor of USHAJI.
எனக்கு பதிலளிக்க வந்த டமில்ரெபர் (RS) என்பவர் நான் குறிப்பிட்ட பதிவர் பெயர்களை பரிசோதிக்காமலேயே தனக்கேஉரிய அவசரத்திலும், யாருக்கோ உரிய அபிமானத்திலும் நான் சுட்டிய குறையை அடிப்படையற்ற வதந்தி' என்கிறார். அப்பெயர்களை பரிசோதிக்காமல் பதிலளிப்பது தான் அடிப்படையானதா?

ஒரு திரட்டிக்கு தான் விரும்பும் (அ) வெறுக்கும் இன ஆட்களை மட்டும் பட்டியலிடும் (அ) புறக்கணிக்கும் சுதந்திரம்+உரிமை கண்டிப்பாக உள்ளது தான். நேர்மையாக அறிவித்துவிட்டுச் செய்யலாமே என்று தான் என் கேள்வி. தவறாக இருந்தால் சொல்லுங்கள். ஏனிப்படி?

அளவுக்கு அதிகமான சுதந்திரத்தால் தான் இங்கு இத்தனை எச்சில்கள் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்ல்ல்ல்லை....

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

மாயா பதிவுலயும், தொலை பேசியிலும் சொன்னதுதான்ங்க. 3வது முறையாவும் திரும்பவும் அதையே சொல்றேங்க உஷா

"விட்டுத்தள்ளுங்க மேடம்"

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

ஜிரா. உருப்படியாய் எழுத சிந்தனையும் வேணும் இல்லையா? மார்ச் கடைசியில் ஊருக்கு திரும்பும் உத்தேசம் அதனால் உண்மையாகவே நேரமும் இல்லை, மனமும் ஒத்துழைக்க மறுக்கிறது. நேற்று பார்த்தீங்களா என்ற செய்தியைப் பார்த்துவிட்டுதான் அந்த பதிவையே பார்த்தேன்.சில குறிப்பிட்ட மனத்துக்கு தொல்லை தராத பதிவாளர்களின் எழுத்தை தவிர மற்றவைகளை
படிப்பதில்லை.

தமிழ் ரீபிர்,நாடோடி, பொன்ஸ்,வல்லி, ரவி, டோண்டு, இலவசம், கனி உங்கள் கருத்துக்கு நன்றி.

கிருஷ்ணன் கோனார், உங்கள் பின்னுட்டத்தில் இரவுகழுக்கார் யார் சொல்லியிருக்கிறீர்கள் அவர் யாராக இருந்தாலும் எனக்கு அந்த செய்தி தேவையில்லாதது. அதை வெளியிட்டால், , நான் இந்த பதிவு போட்டதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் :-) மன்னிக்கவும்.

இளா, சில கோபங்கள் நியாயமானவை என்று நம்புகிறேன். அவை தேவை என்றும் நினைக்கிறேன். இந்த பதிவில் நான் யாரையாவது அவதூறாய் பேசியிருப்பதாய் நினைக்கிறீர்களா?

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

ஒன்னுமே புரியலே உலகத்துலே...
என்னமோ நடக்குது...
மர்மமா இருக்குது...

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா கணிணி படிச்சவங்க
நாலு பேரூ சொன்னங்க
நான் ஒரு முட்டாளுங்க

சீனு, இந்த பாடலை எனக்கு நானே டெடிகேட் செஞ்சிக்கிறேன் :-)

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

அடடா! இப்போ சொ.செ.சூ.வெச்சுக்கிட்டது நானா? இல்ல நீங்களா?

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

சகோதரி,

மீண்டும் மாயா..தயவு செய்து பின்வரும் எழுத்துக்களை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..கைப்புள்ள ஸ்டைலில் படிக்கவும்...

நீங்க எத்தைனை 'வாட்டி' வார்த்தைகளால் மற்றவர்களிடம் காயப்பட்டாலும் திருப்பி வந்து எழுதுரீங்க பாரு..ரொம்ப நல்லவங்க நீங்க..மற்றவங்க எல்லாம் கைப்புள்ள மாதிரி பேசுவாங்க..எழுதுவாங்க..ஆனா நீங்க வாழுந்துகிட்டு இருக்கீங்க...

/மாயா பதிவுலயும், தொலை பேசியிலும் சொன்னதுதான்ங்க. 3வது முறையாவும் திரும்பவும் அதையே சொல்றேங்க உஷா
"விட்டுத்தள்ளுங்க மேடம்"/

வழி மொழிகிறேன் சகோதரி..

இன்னொரு மேட்டர்..
/"இருபெயரொட்டுப் பண்புத் தொகையாக.."

மாவாகிய மரம் மாமரம், கூடலாகிய ஊர் கூடலூர் ஆகியவையே (அதாவது சிறப்புப் பெயராகிய பொதுப்பெயர் வந்தால்தான்) இரு பெயரொட்டு பண்புத் தொகை வரும்.

இரவுக்கழுகார் என்பது இரவின் கழுகைப் போன்ற பதிவர் என்றால், அது ஆறாம் வேற்றுமைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும்.

நான் சரியாகக் கூறுகிறேன் என்றுதான் நம்புகிறேன். தவறாக இருந்தால் திருவல்லிக்கேணி இந்து உயர் நிலை பள்ளியில் சமீபத்தில் 1958௫9 கல்வியாண்டில் எனது எட்டாம் வகுப்பை எடுத்த ஆசிரியர் ஜயராம ஐயங்கார் என்னை ஒரு வாரம் பெஞ்சு மேல் நிற்கவைத்திருப்பார்.
/

எப்படி இவர் மட்டும் எது சொன்னாலும் எதாவது ஜெர்மன்,புரிந்த மொழி,இஸ்ரேல்,திருவல்லிக்கேனி இப்படி எதையாவது லிங்க் பண்ணிருரரு..ஜக'தல'பிராதபன் யா(இதுக்கும் எதாவது நாவல் அல்லது படம்,அந்தப் படம் பார்க்கும் போது இடைவேளையில் முருக்கு வித்தவனுடன் நடந்த 'சம்பாஷனை' அப்படின்ன்னு எப்படித்தான் எழுத முடியுதோ...

/பொன்ஸ், இனி நான் என் ஆங்கில அறிவை பட்டை தீட்டிக் கொண்டு புக்கர், புலிச்சர் என்று முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன். /

ஜமாய்யுங்க..வாழ்த்துக்கள்..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

சீனு, சொ. செ.சூ வழக்கப்படி நமக்கு நாமேதான் :-)

மாய கிருஷ்ணரே, நேத்து உங்களைத்தானய்யா நினைத்தேன். ஆமாம் நான் எழுதினத பார்த்தா ஓன்னு அழுதுக்கிட்டு இருக்கிற மாதிரியா தோணுது? நோ ஸ்மைலி. வல்லி, நீங்களும் சொல்லிடுங்க, வருத்தப்படாதீங்கன்னு ஆறுதல் சொல்லியப்போதே கேட்கணும்னு நெனச்சேன். ஆமாம்னா, எழுத்து ஸ்டைல மாத்தரேன்.

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

//உஷா,
தமிழில் எழுதி புலிச்சர் வாங்கச் சொல்றவங்களுக்கெல்லாம் பதிவு போடத் தொடங்கிட்டீங்களா? வெளங்கினாப்புலத் தான். கொத்ஸ் சொல்வதை வழிமொழிஞ்சிக்கிறேன் :)//

பொன்ஸ் நீங்களுமா?

குன்ஸான பெண் பதிவர் பற்றி நான் கிசு கிசு எதுவும் எழுதியதாக நினைவில்லையே?

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

"எப்படி இவர் மட்டும் எது சொன்னாலும் எதாவது ஜெர்மன்,புரிந்த மொழி,இஸ்ரேல்,திருவல்லிக்கேனி இப்படி எதையாவது லிங்க் பண்ணிருரரு.."

துக்ளக் மீட்டிங்கில் சமீபத்தில் 1946-ல் பள்ளியிறுதி வகுப்பை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் முடித்த ஒருவருடன் பரிச்சயம் ஏற்பட்டது. அவருக்கும் ஜயராம ஐயங்கார்தான் வகுப்பு ஆசிரியராம். எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

யக்கோவ்,

அப்ப என்னைய கூட்டுல சேரச் சொன்னது நீங்க இல்லியா? :-))))

ஆமாம் இப்ப நீங்க எந்தக் கட்சியில இருக்கீங்க? கூட்டோட கொபசெ'ன்னு சொல்லவேயில்லியே? ;-)

ஐபி எல்லாம் கேக்கமாட்டேன்னு சொல்லி ஹிண்ட்டு கொடுத்தீங்க பாருங்க எங்கியோ போயிட்டீங்க...

கொஞ்ச நாளு ரெஸ்ட் எடுக்கலாமுன்னு பாத்தா விட மாட்டேங்கிறீங்களே? இது நியாயமா? :-)))

புக்கர், 'புலி'ட்சர்ன்னு கிலி கெளப்பி டார்ச்சர் கொடுக்கிறீங்களே... நடாத்துங்க. :-)))))

அடுத்து நீங்க என்ன கட்சின்னு வேறா யாராவது சொ(கொ)ல்லும் வரை ஜூட்டேய்...

 
At Wednesday, 24 January, 2007, சொல்வது...

வாங்க குசும்பரே, சொம்ம வாய்க்கு வந்தத பேசக்கூடாது. ஆதாரம் காட்டினா, கமிஷன் வாங்க செளகரியமா இருக்குமில்லே? மெயிலு இல்லாட்டி அமெரிக்காவுக்கு போன் போட்ட பில் கீதா? இன்னா கேட்டே? எந்த கட்சியா? பொறு நைனா, நாளிக்கு புட்சா இன்னுரு கதா யாராவது வுடுவாங்க அப்ப தெர்ஞ்சிக்க.

//புக்கர், 'புலி'ட்சர்ன்னு கிலி கெளப்பி டார்ச்சர் கொடுக்கிறீங்களே... நடாத்துங்க. :-)))))//

ஆங்கிலேயன், 200 வருஷம் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டானே, அவனை பழிக்குபழி வாங்க ஒரு சான்சு :-) கோச்சிக்காதீங்க,
இந்த ஐபி, அட்ரஸ்ன்னா எனக்கு ரெண்டு மூணு பேரூ நினைவு வரும். அதுல நீங்களும் ஒருத்தர். -இப்படிக்கு கணிணி கைநாட்டு.

டோண்டு சார், உங்களுக்கு கிடைச்சாமாதிரி எனக்கு ஆசிரியர்கள் கிடைச்சிருந்தா நானும் ஒழுங்கா உருப்பட்டு இருப்பேன் :-)

 
At Thursday, 25 January, 2007, சொல்வது...

//ஆதாரம் காட்டினா, கமிஷன் வாங்க செளகரியமா இருக்குமில்லே? மெயிலு இல்லாட்டி அமெரிக்காவுக்கு போன் போட்ட பில் கீதா? //

ஆஹா இப்பிடி எத்தினி பேரு ஆதாரம்ன்னு கெளம்பியிருக்கீங்க? நாங்க சொல்லிட்டோம்ல. நீங்க ஏஜெண்ட்டுதான் :-) நாங்க சொன்னோம்னு சொல்லி கமிஷனைக் கேட்டுப் பெறுவீர்!!! கமிஷன் கொடுக்காட்டி இரவுப்பறவைக்கு எஸெமெஸ் தட்டுங்கோ ;-) (ஆமாம் டோண்டு ஸார் இரவு+பறவை = இரவுப்பறவை கரீக்டா? எனக்கு டெல்லித் தமிள்தான் வரும்)

//ஆங்கிலேயன், 200 வருஷம் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டானே, அவனை பழிக்குபழி வாங்க ஒரு சான்சு//

அது

//இந்த ஐபி, அட்ரஸ்ன்னா எனக்கு ரெண்டு மூணு பேரூ நினைவு வரும்.//
ஒண்ணு நான். மத்தவா யாரு? :-)))))

 
At Thursday, 25 January, 2007, சொல்வது...

திரு. விடாது கருப்பு, தனிப்பட்ட நபர் மீதோ அல்லது சாதி. இன, மத காழ்ப்புணர்வைக்காட்டும் பின்னுட்டங்களை வெளியிடுவதில்லை என்பது என் கொள்கை. உங்களுக்கு டோண்டுவிடம் ஏதாவது சந்தேகமோ கேள்வியோ கேட்க வேண்டும் என்றால் அவரிடமே கேட்கலாமே?. உங்கள் பின்னுட்டம் போடாததற்கு தயவு செய்து மன்னிக்கவும்.

திரு.வேழம் உங்கள் பின்னுட்டத்தை தவறுதலாய் ரிஜக்ட் செய்துவிட்டேன். ஆனால் அதில் எழுதியிருந்த வரிகள் என் மீது நீங்கள் கொண்ட அக்கரையைக் காட்டுகின்றன. எனக்கு வேறு வழி தெரியவில்லை. மனிதர்கள முக்கியமாய் பெண்கள் பேசாமல் அடங்கிப் போகக்கூடாது என்பது என் கருத்து. இது பொது வாழ்வில் :-)

குசும்பன், இங்கு வியாழன் வெள்ளி வீக்கு எண்டு. வெளியே கிளம்பணும். வரட்டா! இருபது கமெண்டு தாண்டினா தாங்க மாட்டேங்குது. இதுல நூறு, எரநூறுன்னு எப்படித்தான் மெயிண்டென்ண்ட் செய்யராங்களோ? ஹெல்ப் செய்ய வராட்டான்னு
யாரும் வாராதீங்க ப்ளீஸ் :-) கமெண்ட் பாக்ஸ் மூடியாச்சு!

 
At Thursday, 25 January, 2007, சொல்வது...

உஷா மேடம், இவா பேச்செல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போவேளா

எது எப்படியோ உங்க ரெண்டு பேரையும் பெரிய மனுஷாளா ஆக்கிட்டா

This is Not Ur Mistake

 

Post a Comment

<< இல்லம்