Thursday, March 22, 2007

weird- அம்மணியின் பில்ட்- அப் களைத் தகர்கிறேன் - உஷாவின் மனசாட்சி.

வணக்கம், நான் உங்களை எல்லாம் முதல் முறையா சந்திக்கிறேன். பல உண்மைகளை புட்டு புட்டு வைத்திருக்கிறேன். சொன்னது நானு, அதனால கேள்விகளை, சந்தேகங்களை கமெண்டு பாக்சில் உஷாவிடம் கேட்டுடாதீங்க. அவிங்களுக்கும் இந்த பதிவுக்கும்எந்த சம்மந்தமும் இல்லை.

கவிதா தன் பதிவுல கூப்பிட்டுட்டு ஒரு மெயிலும் போட்டாங்க. இந்தம்மா, நேரமில்லே என்று சொன்னதும், பரவாயில்ல நீங்கவேலைய பாருங்கன்னுட்டாங்க. இதுவே ஒரு புளுகு. காலைல தமிழ் மணத்தைப் பார்த்துட்டு, நாலு கமெண்டுப் போட்டாதான், விரலைல்ல அரிப்பு நிக்கும். பாசமலர் அனி ஓடி வந்து எழுதினாத்தான் ஆச்சுன்னு சொல்லிடுச்சு. ஒடனே கெடக்கிறது எல்லாம் கெடக்கட்டும் கிழவிய தூக்கி மணையில வையினு எழுத்துபணியைத் தொடங்கிட்டாங்க. படிச்சிப் பார்த்துட்டு எனக்கு சிரிப்பு தாங்கலை. என்னா பில் டப்பு! குறைகளை சொல்லிப்பதாக இல்லே பெருமை அடிச்சிக்கிறதான்னு தமாஷா இருந்துச்சு. ஒதுங்குன்னுட்டு, இது நாளுவரை ஊமையா இருந்த நா வெளியே வந்துட்டேன்.

அம்மணியோட கிறுக்கு தனம் ஊர் அறிஞ்ச ரகசியம். இந்த அழகுல ஒருமுறை அம்பலம் சாட்டில சுஜாதா, எழுதுகிறவங்க எல்லாருமே கொஞ்சம் கிறுக்குதான்னு சொல்லிட்டார். ஆக, இந்த கிறுக்குதனமே, எழுத்தாளியா ஆவதற்கு ஒரு தகுதின்னு நெனப்பு அம்மணிக்கு. வயசுக்கு ஏத்த மாதிரி நடக்கிறது என்பது இவுங்க அகராதியிலேயே கிடையாது. எப்பப் பார்த்தாலும், எடக்கு மடக்கா பேசிக்கிட்டு இருக்கிறது, புள்ளைங்கக்கூட ஆட்டம் போடுறதுன்னு ஓரே அலம்பல்தான். அவுங்க வூட்டுக்காரரூ சீரியசா ஏதாவது சொல்லும்போது ஜோக் அடிக்க வேண்டியது. அவரும் பாவம் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டு, நமக்கு வாச்சது அவ்வளவுதானு சைலண்ட் ஆயிட்டாரூ. முரண்பாடுகளின் மொத்த உருவம். ஓண்ணைப் பிடிச்சிடான்னா குரங்கு பிடித்தான். எப்போதும் ஓவர் உற்சாகம். அந்த உற்சாக வெள்ளத்தில் மாட்டினா திக்கு முக்காட வேண்டியதுதான். சிலசமயம் அப்படியே மெளனத்தில் ஆழ்ந்திடுவாங்க. இப்படி கிறுக்குதனங்களை பட்டியல் போட்டா அதுப் போயிக்கிட்டே இருக்கும், நா சிலதை மட்டும் விலாவாரியாய் சொல்லுகிறேன்.

1- ஸ்ரெய்ட் பார்வோட் - இதுக்குப் பேரு என்னத் தெரியுமா? குண்டக்க மண்டக்கன்னு பேசுவது. நேத்து நேரமில்லேன்னு இல்லேன்னு சொல்லிட்டு, நேசகுமாருக்கு ஒரு கமெண்ட்- ஏங்க முகமது நபியை இப்படி கிரிட்டிசைஸ் செய்யறீங்க. ஒடனே அவுங்க இந்துமதத்தைப் பற்றி பேச ஆரம்பிப்பாங்க. நீங்க செய்யறது நல்லா இல்லேன்னு ஒரு கமெண்ட், அடுத்து நேரா விவாத களத்துக்குப் போயி, புர்க்கா போடுரவங்க, முஸ்லீம் பொம்பளைங்க. அப்படி போடாத பெண்களும், தன் வீட்டு பெண்கள் போட சொல்லாத முஸ்லீம் ஆண்களும்தானே பேசணும்னு ஒரு கமெண்ட். நல்லவேளை அனுப்பவதற்குள்ள நான் பார்த்து நல்லா திட்டிட்டேன். பழைய கதையெல்லாம் மறந்துட்டீயான்னு? இப்படிதாங்க, வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குவது. எத்தினிதடவ சொன்னாலும் கேக்கிறது இல்லே :-(

2- அடுத்த பீலா தனிமை விரும்பி- உண்மைதாங்க. பிள்ளைகளை, வூட்டுக்கார்ரை விட்டுட்டு ஊர் சுத்துவது அம்மணிக்கு ரொம்ப விருப்பம். ஆனா செட்டு சேர்ந்துதுன்னு வெச்சிக்குங்க. அம்மா குரலுதான் பெருசா ஒலிக்கும். அது என்ன சிரிப்பு, கும்மாளமோ? அக்கம் பக்கம் யாரு இருக்காங்கனு கூட பார்க்கிறதில்லை. அடக்கம்னு ஒரு வார்த்தை தமிழ்ல இருக்கு இல்லையா, அது அம்மணிக்கு விளங்காத சொல்.அமைதியா இருன்னு நானும் பல தடவை சொல்லிட்டேன், இதுல அம்மணிக்கு அமைதியின் பூஷணமாய் விளங்குபவங்கத்தான் பெஸ்ட் பிரண்டா அமைவாங்க, அப்படி ஒரு யோகம்.

3- ஹெல்த் கான்ஷியஸ்ன்னு சொல்லிக்கிறது. இதோட ரகசியம் என்ன தெரியுமா? அவ்வப்போது பொண்ணு, பையனோட பிரண்ட்ஸ் உங்கம்மாவா இது, உன்னோட சிஸ்டர்னு நெனச்சிக்கிட்டேன்னு சொல்லிடுவாங்க. அம்மணிக்கு உச்சி குளிர்ந்துடும். ஹெல்த்கான்ஷியஸ்னு சொல்லிட்டு, வூட்டு வேலையும் மாங்கு மாங்குன்னு செஞ்சிட்டு, டெய்லி ஒரு மணி நேரம் வாக்கிங். ஆப்பிளு, ஆரஞ்சுன்னு முழுங்க வேண்டியது. ரெண்டு ஸ்பூன் எண்ணையில சமையல்ன்னு டார்ச்சர். நெட்டுல, பத்திரிக்கைகளுல ஏதாவது ஹெல்த் விஷயமா வந்தா வூட்டுக்கார், புள்ளைங்களுக்கு சொல்லி அறுப்பது. பொண்ணு போன் செஞ்சா, டெய்லி நாலு பாதாம், பத்து டிரை கிரேப்ஸ் சாப்பிடு. வாழைப்பழம் சாப்பிடு. சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லே, ரொம்ப ஹைஜீனிக்னு இந்த வரிகளை சொல்லாம போனை வெச்சதா சரித்திரமே இல்லை. அதுங்களும் ஓரளவு கேக்குதுங்க. இது எத்தினி நாளுக்கோ?

4- எதையும் பெருசா எடுத்துக்க மாட்டேன், மேல் தோலு கெட்டின்னு அப்ப அப்ப சொல்லிக்க வேண்டியது. ஓரளவுதான் உண்மைங்க. ஆனா ரொம்ப அபூர்வமா யாருமேலையாவது காண்டு வெச்சாங்கன்னு வையுங்க. அவ்வளவுதான். கொஞ்சம் சொல்லிக் காட்டிக்கிட்டு இருக்க வேண்டியது. சொந்தக்காரங்க, பிரண்ட்ஸ்ன்னு யாராவது சரிப்படலைன்னு வெச்சிக்குங்க, கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. ஆனா அவங்க சும்மா இல்லைன்னு வெச்சிக்குங்க. அவ்வளவுதான் உனக்கு எனக்கு சம்மந்தம் இல்லைன்னு அப்படியே கட் பண்ணிடுவாங்க. அப்புறம் சமாதானமாய் பேச வந்தக்கூட நீ யாரோ நான் யாரோன்னு பழைய பழக்கங்களை அப்படியே மறந்துப் போச்சுதான்..

5- அன்னியன் (பெண்பால்) - ஆமாங்க, நிறைய விஷயத்துல கொணம் இப்படித்தான் சொல்லவே முடியாது. வீட்டுல புருஷன், பிள்ளைங்ககிட்ட மூக்கு மேலே உட்கார்ந்திருக்கும் முன்கோபத்துல கடுப்பு அடிப்பாங்க. அந்த கடுப்பு பெத்தவங்க மேலையும் உண்டு. ஆனா சொந்த, பந்தம்னா ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க. கேட்டா குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைன்னு ஒரு பழமொழி வரும்.இத்தோட நிறுத்திகிறேன்.

இப்ப மாட்டினவங்க லிஸ்ட்
1- மணியன்
2- மதுமிதா
3- கானாபிரபா
இவங்க மூவரையும் இழுத்ததுக்கு காரணம் பாரா நம்பர் இரண்டின் கடைசி வரிகளைப் படிக்கவும்
4- செல்லி- இணைய ஒளவையார்.
5- முகமூடியார் - தலைமறைவாய் இருப்பவரை இஸ்துக்கினு வரலாம் என்ற நல்லெண்ணத்தில்தான்.

20 பின்னூட்டங்கள்:

At Thursday, 22 March, 2007, சொல்வது...

மனசாட்சி நல்லாப் போட்டுக் கொடுத்திட்டியே.
பாவம்பா உஷா. நீ இத்தனை நாளா எங்கே இருந்தே.
அம்பலம் சாட் உஷாவும் நீங்கதானா.
அடடா இது ஒண்ணே போதுமே ஒரே கூட்டுப் பறவைனு (நேசமுள்ளாரை நெஞ்சில்) நினைனு சொல்லறத்துக்கு.

பிற்கால உஷாவான உங்கள் பெண்ணுக்கும் வாழ்த்துக்கள்.

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

யக்கோவ்,

உம்மையிலேயே நீங்க புலிட்சருக்குப் போக வேண்டிய ஆள்தான்!

அது சரி இணைய ஒளவையார் யாருங்கோ?

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

பிற்கால உஷாவான உங்கள் பெண்ணுக்கும் வாழ்த்துக்கள்//

வல்லி, வர வர நீங்க ரொம்ப பின் நவீனத்துவமா எழுதுறீங்க :-) இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்?

குசும்பன், புஸ்கர் வாங்க நா ரெடி, ஆனா நீங்கள் நக்கல் அடிப்பது சரியா? நானே சொ.செ.சூ வெச்சிக்கிட்டேனேன்னு
சோகமாய் இருக்கேன் :-)

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

குசும்பரே! செல்லின்னு அவங்க பேரை போட மறந்துட்டேன். ஒளவையார் பாடல்களை எடுத்துப்போடுவதால் இந்த பெயர்.

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

வலைபதிவு வாசகர் சங்கத்தில் இருந்த என்னை சந்திக்கு இழுத்துவிட்டீர்களே :)

இதிலே உள்குத்தாக பத்மபூஷண் போல எதோ பட்டம் எல்லாம் கொடுத்திருக்கிறீர்கள்.
அப்போ அமைதியாக இருந்துவிடு என்று அர்த்தம் கொள்ள வேண்டும் என்று என் மனசாட்சி சொல்கிறது. சரிதானே :))))

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

//weird- அம்மணியின் பில்ட்- அப் களைத் தகர்கிறேன் - உஷாவின் மனசாட்சி." //

தகர்கின்றேன் என்று சொல்லி விட்டு அநியாயத்துக்கு பிட்ட போட்டுட்டு போய் இருக்கே உங்க மனசாட்சி. ;-)

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

மணியன், நான்காட்ராவஷியல் - அமைதியானவர் என்றுப் பொருள் கொள்க

புலியாரே, பிட்டு போடுவது என்றால்? அருஞ்சொற்பொருள் விளக்கம் தருக

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

உசா
உங்க மனச்சாட்சி என்னையும் - அடியேனையும் கௌரவவிச்சிருக்கிறது எனும்போது ரொம்ப மகிழ்ச்சி!
உங்க மனச்சாட்சி நேர்மையான பணியைத்தான் செய்கிறது,வாழ்க உசாவின் மனச் சாட்சி!
நன்றி, உசா.

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

குசும்பன்
//யார் அந்த செல்லி?//
இங்கே வந்துபாருங்க

http://pirakeshpathi.blogspot.com/2007/02/blog-post_338.html

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

பிட்டுக்கு மண் சுமந்த கதை தெரியும், பிட்டுக்குப் பின்னூட்டம் போட்ட கதையில்ல நடக்குது இங்க!!!

அக்காவ், மனசாட்சியை அடக்கி வையுங்க. இல்லைன்னா விவகாரம் எல்லாம் வெளிய வந்துரப் போகுது.

 
At Thursday, 22 March, 2007, சொல்வது...

ஆகா, என்னையும் மாட்டிவுட்டிடீங்களா ;-), எனக்கு இது புது விஷயம் ஒரு நாள் அவகாசம் குடுங்க

 
At Friday, 23 March, 2007, சொல்வது...

ஆமாங்க நமக்கு தான் பர்ஸ்ட் பிரைஸ் , சேர் பண்ணிக்குவோம் சரியா?

 
At Friday, 23 March, 2007, சொல்வது...

அம்மணி, நம்ம பதிவை போட்டாயிற்று.

 
At Friday, 23 March, 2007, சொல்வது...

சேதுக்கரசி, இன்னைக்கே பிளாக் ஆரம்பித்து முதல் பதிவே "weird" தனங்களைப் பட்டியல் போடுங்களேன் :-)
கவிதை போட்டியா பார்க்கலாம்.

செல்லி, அடியேன் என்பது ஆண்பால். பெண்பாலுக்கு அடியாள் (இது சென்னை அடியாள் இல்லைங்க)

இலவசம், அது என்ன பிட்டு போடுவது? புலியும் சொல்லிடுச்சு, நீங்களும் சொல்றீங்க? விளக்குமாறு வேண்டுகிறேன்.

மணியன், படிச்சிட்டேன்... ஹூ ஹூம் :-)

கானாபிரபா, வித்தியாசமான பதிவை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

வாய்யா கார்த்திக்கு, நாம ரெண்டு பேரூ மட்டும்தான் சரியான பொருள்ல போட்டு இருக்கோம். மத்தவங்க எல்லாம் கொஞ்சம்
பீத்திகிறா மாதிரி இல்லே :-)))))

 
At Friday, 23 March, 2007, சொல்வது...

உஷா கொஞ்சம் நேரம் கொடுங்க
ஆனாலும் உண்மையை இப்படி பிட்டு பிட்டு எப்படிங்க வைக்கிறாங்க வியர்ட் அம்மணி

மணியன் சொல்றது மாதிரி அமைதியா இருந்திடலாமா:-)

சொ.செ.சூ வச்சுக்க சொல்லித்தர்றீங்களா
உள்குத்து எதுவும் இல்லியே:-)

 
At Friday, 23 March, 2007, சொல்வது...

//இன்னைக்கே பிளாக் ஆரம்பித்து முதல் பதிவே "weird" தனங்களைப் பட்டியல் போடுங்களேன் :-)//

ஆகா.. எப்படியாவது எங்களை எழுதவைக்கலாம்னு நெனப்பாக்கும். இப்படித்தான் போன வருசம் கைப்புள்ள 6 விளையாட்டுக்குக் கூப்புட்டாரு. உடனே ஃபிளைட்டு புடிச்சு இந்தியாவுக்குப் போயிட்டேன் (நெசமா!) நீங்க வேற 5 விளையாட்டுக்குக் கூப்புட்டீங்கன்னா நான் எங்க போக?

 
At Sunday, 25 March, 2007, சொல்வது...

இப்போது இருக்கும் உஷா போல, பிற்காலத்தில் சுடர் விடப் போகும், உங்க பெண்--மகள்,புதல்வி,புத்திரி
அவர்களுக்கு இப்பவே வாழ்த்து சொல்கிறேன். அதுதான் அர்த்தம்.அம்பலம் சாட் நல்லாப் போறதா?

 
At Sunday, 25 March, 2007, சொல்வது...

உஷா
என்னோட மனச் சாட்சி வியேடா இருக்குங்க. படிச்சிட்டு பதில் சொல்றீங்களா?
http://pirakeshpathi.blogspot.com/

 
At Monday, 26 March, 2007, சொல்வது...

உஷா

இதோ நம்மளோடது ;-)

http://ulaathal.blogspot.com/2007/03/weird.html

 

Post a Comment

<< இல்லம்