Sunday, September 09, 2007

வாழ்வை சுவையாக்கும் சில அபத்தங்கள்

.
இரண்டு நாட்களுக்கு முன், மாலை எதிர் வீட்டு அம்மணி சொன்னாளே என்று சூரத்தில் பிரபல மிட்டாய் கடைக்கு சென்றோம். மிட்டாய் கடை என்றால் ஸ்வீட் ஸ்டால். பல பெயர் தெரியாத இனிப்புகள். ஓரே பலகாரம், ஆனால் செய்முறையில் வித்தியாசம் இருக்கும்போல,
ஊர் பெயர் இணைந்த பேடாக்கள். சோன்பப்டி கால் கிலோவும், பவன் பூர் பேடா கால் கிலோவும் வாங்கினேன். இது ரெண்டும் மகள், ஹாஸ்டலுக்கு திரும்பும்போது எடுத்துப் போகவும், வீட்டுக்கு என்று நூறு நூறு பேடாவும், காஜூகத்லியும் வாங்கினேன்.

அல்வா தின்று நாளாகிறதே என்று எனக்கு தெரிந்த ஹிந்தியில் கேட்க, அந்தாளும் குஜராத்தியில் ஏதோ சொல்லிக் கொண்டு கைக்காட்டி, கால்கிலோ பேக் செய்து பில் போட்டுவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும், அல்வா பொட்டலத்தை பிரித்தால் "அத்ரி பச்சா" ( அத்ரி பச்சா கதை தெரியாதவர்கள் கையைத் தூக்கவும்) என்று எகிறி குதித்தேன். சின்ன பிளேஷ் பேக். நான் நான்காவது படித்துக் கொண்டிருக்கும்போது, பாம்பேயில் இருந்து வந்த உறவினர் பாம்பே ஸ்வீட்ஸ் வாங்கி வந்திருந்தார். அதன் சுவை நாவிலேயே இருந்தது. டியூ பேப்பர் சுற்றி லேயர் லேயராய் மெல்லியதாய் இருந்தது, நிறமும் வெள்ளை நிறம்தான். ஏனே என் மனதில் அதன் பெயர் பேடா என்று விழுந்துவிட்டது. பேடா பேடா என்று ஜபித்துக் கொண்டு இருந்தேன். இப்பொழுது மாதிரி, அப்பொழுது எல்லாம் தெருவுக்கு தெரு ஸ்வீட் ஸ்டால் எல்லாம் ஏது?
அப்படி இருந்தாலும், வீட்டில் செய்வார்களே தவிர, கடையில் வாங்கி சாப்பிடும் பழக்கம் இல்லை.

பிறகு ஏழாவது படிக்கும்பொழுது அம்மாவும் அப்பாவும் பாம்பேக்கு சென்றிருந்தனர். பேடா, பேடா என்று பினாத்திக் கொண்டிருந்ததால், அம்மா வந்ததும் இந்தாடி பேடா என்று தந்ததைப் பிரித்தால்... அத்ரி பச்சா கதைதான். இது இல்லை நான் கேட்ட பேடா என்று அதை வீசிறிப் போட்டு அழ, அம்மாவின் கை முதுகில் அழகிய கோலம் போட்டது.

அப்பாவும், அம்மாவும் இதன் பெயர்தான் பேடா என்று எத்தனை சமாதானம் செய்தாலும், ஒப்பாரி நிற்கவில்லை. அம்மாவின் அக்கம் பக்க தோழிகளும் வந்து அதுதான் பேடா என்று சத்தியம் செய்தாலும், அம்மா ஏமாற்ற பார்க்கிறாள் என்று நம்ப மறுத்தேன். பிறகு கண்ணில் படும் பாம்பே ஸ்வீட் ஸ்டால்களில் எல்லாம் ஸ்வீட்டில் அங்க அடையாளங்களை சொல்லி தேடியும் பயனில்லை. இப்படி என் வாழ்வில் கண் சிமிட்டி மறைந்த அந்த இனிப்பு இப்பொழுது என் கையில்! இன்னும் பெயர் சரியாய் தெரியவில்லை.

இந்த கதை எல்லாம் நீட்டி முழங்கிவிட்டு, தின்னு பாருங்கள் சூப்பராய் இருக்கும் என்று எல்லார் கையிலும் கொடுத்தால், ஓவர் பில்டப்பின் பலன், அப்படி ஒன்றும் ஸ்பெஷலாய் இல்லை என்று மூவரும் ஓரே குரலில் சொன்னார்கள். விள்ளல் விள்ளலாய் கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு இருந்தது. கதையும் தொடர்ந்தது. முதல் முறை இந்த இனிப்பை எங்கே உட்கார்ந்து தின்றேன், பிறகு பேடாவை விசிறிப் போட்டு வாங்கிய உதை என்று மனசு அந்த வயசுக்கே போய் விட்டது.

அம்மாவுக்கு போன் அடித்தால், போதும் உங்கதை மணி பத்தாகுது! பாதி ராத்திரியில் (!) இதை சொல்லவா போன் செஞ்சே என்று திட்டு விழுந்தது. வழக்கப்படி பிள்ளைகளுக்கு ஆனந்தம், அம்மா திட்டு வாங்குவதைப் பார்த்துதான். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் வயது ஆக ஆக நான் இன்னும் சின்ன பிள்ளை என்று நினைப்பு அதிகமாகிவிடுகிறது.

இந்த கூத்தில் வாங்கிய கால் கிலோவும் நானே தின்று இருக்கிறேன். அய்யயோ தீர்ந்துப் போச்சே, அடுத்த முறை பக்கம் போனால் வாங்க வேண்டும் என்றதும், நமக்கு ஆளுக்கு ஒரு சின்ன பீஸ் கொடுத்துட்டு., கால் கிலோ ஸ்வீட்டை இரண்டு மணி நேரம் கதை சொல்லிக்கிட்டே முழுங்கி இருக்கா, இதுல சுகர் வேற, அட்வைஸ் எல்லாம் எனக்குதான் என்று ஆற்றாமையுடன் குரல் எழும்ப, சிரித்து விட்டேன்.

நேற்றுதான், சுகர் கண்ட் ரோல், எக்சசைஸ், டயட் என்று ஒரு பதிவு போட்டேன் என்று சொன்னதும், பாலிடிக்ஸ்ஸில் சேர அனைத்து தகுதியும் இருக்கு என்றார்.

சான்சே இல்லை, ஏன் என்றால் இதையும் எழுதிடுவேனே என்றேன் காலி அட்டை பெட்டியை குப்பையில் போட்டபடி:-)

25 பின்னூட்டங்கள்:

At Sunday, 09 September, 2007, சொல்வது...

சே, ஸ்வீட் பேர அடுத்தபதிவுலயாவது போடுங்க..

 
At Sunday, 09 September, 2007, சொல்வது...

இளா, அந்தாளு பாம்பே அல்வான்னுதான் சொன்னாரூ. ஆனா நம் ஊர் அல்வா, சிவப்பு ஆரஞ்சு கலரில் பளபளன்னு இருக்குமே!
மீண்டும் அத்ரி பச்சா கதை தொடங்குகிறது. மொழி தெரிந்த யாரையாவது அழைத்து சென்று வாங்கணும். எதிர் வீட்டு
அம்மாளிடம் கேட்கலாம் என்றால் சாம்பிள் காட்ட முடியாமல் அத்தனையையும் முழிங்கியாச்சு.

 
At Sunday, 09 September, 2007, சொல்வது...

கேள்வி 1: சம்பவம் நடந்தப்ப சம்பவத்துல இருந்த பொருள் வெள்ளையா இருந்ததா ?

கேள்வி 2: சம்பவத்துல வர்ற பொருள் ஜீரா (ஜீ.ராகவன் அல்ல) வுல ஊறி இருந்ததா ?

கேள்வி 3: சம்பவத்துல வர்ற பொருள் ஓவல் ஷேப்புல இருந்ததா ?

இந்த மூனு கேள்விக்கும் பதில் சொல்லுங்க, பெயரை நான் சொல்றேன்.

 
At Sunday, 09 September, 2007, சொல்வது...

முட்டாய்க் கடைன்னதும் ஓடோடிவந்தேன். இப்படிப் பெயரைச் சொல்லாமல்
ஏமாத்திட்டீங்களே உஷா.....................

இப்ப நம்ம கதை.

நல்லா கைக்குக் கடினமா ஒரு மிட்டாய். கடிச்சா அப்படியே உள்ளெ இருந்து
நெய் நாக்குலே ஒழுகும். பெயர் தெரியாம இருந்து ஒருமுறை தி.நகர் அர்ச்சனாவில்
கண்ணுலே பட்டது. நெய் விளக்கம் சொல்லி அதுதானான்னு சந்தேகத்தைத் தீர்த்துக்கிட்டு,
'லபக்'கிட்டேன். முளைக் கட்டிய கோதுமையில் செய்யும் பலகாரம்.
பெயர் 'சோனா ஹல்வா'

 
At Sunday, 09 September, 2007, சொல்வது...

கீழ்க்கண்ட குறிப்பை இப்பதிவில் காணமே, காரணம்? ::-

1957 காமதேனு இதழில் வெளிவந்தது.

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

ஐய்யோ சோஹன்அல்வாவா
துளசி ரொம்ப மோசம்பா.

ஏன்பா ரெண்டு பேரும் இப்படி வூடு கட்டி ஸ்வீட் பதிவு போடரீங்க,.
இருக்கிற நல்ல ரிசால்வ் மறைஞ்சு போயிடப் போகுது.:))
உஷா அந்த ஸ்வீட் பேர் என்ன்னபா??

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

//இங்கு உள்ள எழுத்துக்கள், போன்றவைகளை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்//

அ முதல் ஒள வரையான உயிர் எழுத்துகளையும், இன்னபிற மெய், உயிர்மெய், ஆய்த எழுத்துகளையும் நான் பல்வேறு ஊடகங்களில் பயன் 'படு'த்திக்கொண்டிருக்கிறேன். எனவே நீங்கள் அடவாடியாக சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.

----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

//நேற்றுதான், சுகர் கண்ட் ரோல், எக்சசைஸ், டயட் என்று ஒரு பதிவு போட்டேன் //

இன்றைக்கு கால் கிலோ ஸ்வீட் சாப்டிருக்கீங்க............ என்னத்த சொல்ல....ஒரே Contraversy தான் ம்.

ஓவர் ஸ்வீட் உடம்புக்கு ஆகாது.

மங்களூர் சிவா

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

முகமூடி ஐயா! இன்னும் "லாண்டரி குறிப்புகள்" எல்லாம் பிரசுரமாகும் அளவிற்கு வளரலைங்கையா :-) ஆமாம் அது என்ன 1957, அப்ப எனக்கு வயசு என்ன????

செ.ரவி
1- பொருள் ஆப் ஓயிட் அதாவது பாதுஷா கலர். அதாவது பாதுஷா என்று அழைப்படும் ஸ்வீட் நிறம்.
2- இல்லவே இல்லை. சாப்ட்டாக கூட இல்லாமல், நெய் கையில் ஒட்டினாலும்,டிரையாக இருந்தது. ஒடித்து சாப்பிட்டேன்.
3- இதுக்கும் பதில் இல்லவே இல்லை. அரையடி சதுரம். மிக மெல்லியதாய், ஒவ்வொரு சதுரத்திற்கும் இடையில் டிஷ்யூ பேப்பர் வைக்கப்பட்டு, லேயர் லேயராய் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.

துளசி, முளைக்கட்டியது உடம்புக்கு ரொம்ப நல்லது :-)

வல்லிம்மா, பார்த்து படிச்சாலே சுகர் எகிறிட போகுது.

தறுதலை அண்ணாச்சி, சொற்குற்றம் மாற்றிவிடுகிறேன்.

ம.சிவா, அதுதான் "அபத்தம்" என்று தெளிவாய் குறிப்பிட்டு இருக்கேன் இல்லையா :-)

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

அதும் பேரு ஐஸ் அல்வா,பக்கா குஜராத்தி சுவிட்,துபைல கிடைக்குமே

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

சீக்கிரம் அந்த பேர கண்டுபுடிச்சு சொல்லுங்க...

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

நன்றி மீனா அருண். துபாய் சப்பன் போக்கில் பொதுவாய் மில்க் ஸ்வீட்ஸ் மற்றும் முந்திரி கத்லி மட்டும் வாங்குவோம்.அதுதான் பிள்ளைகளுக்கு பிடிக்கும். இணைப்பாய் எப்பொழுதாவது ஆளுக்கு ஒரு துண்டு அல்வா அல்லது சரவணபவனில்
ஜாங்கிரி வாங்குவோம். பெயர் சொல்லிட்டீங்க, சரியா என்று கேட்டு வாங்கி பார்த்து சொல்கிறேன் :-) ஆனால் ஐஸ் அல்வா என்றாலும் சில்லுன்னு எல்லாம் இல்லையே???

ஜெ.கே, மேலே பாருங்க.

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

It is Mahim Halwa

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

இம்சை, மீனா அருண் ஐஸ் அல்வா என்கிறார். நீங்க புது பெயர் சொல்றீங்க? தெளிவாக்க முதலில் கடைக்குப் போகணும் :-)

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

ரெண்டும் ஒன்னுதாங்க உஷாஜி,குஜரத்தி,மராத்திக்கு ஐச் ஆள்Vஆஆ,மங்களூர் ஆளுங்களுக்கு மாஹிம் அல்வா

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

ஹஹா! மிகுந்த வேலை பளுவுக்கு நடுவில் வாய் விட்டு சிரித்தேன். :)))

இப்பலாம் சிரிக்கறதே அபூர்வமா ஆகி விட்டது. :(

எங்க அம்மாவும் ஒரு கதை சொல்லி இருக்காங்க. ஒரு குழந்தை (நான் இல்ல) வெளியூர் போனப்ப, "எங்க அம்மா குடுக்கறத குடுத்தா தான் அழுகையை நிறுத்துவேன்"னு அடம் பிடிக்கும். உறவு, ஊர் காரங்க எல்லா திண் பண்டம், அது இது!னு குடுத்தும் அழுகை நின்ன பாடில்லை. ஒருத்தர், பளார்!னு முதுகில் ஒன்னு வைக்க, "இது தான் எங்க அம்மா குடுக்கறது!"னு அழுகையை நிப்பாட்டுமாம்.

அட பாவிபயபுள்ள! முதலிலேயே சொல்லி இருந்தா வெயிட்டா குடுத்ருப்போமே!னு சொன்னாங்களாம். இது எப்படி இருக்கு? :p

அந்த ஸ்வீட்டை மறுபடி வாங்கி ஒரு போட்டோ எடுத்து போடுங்க. (இந்த தடவையாவது நீங்களே அமுக்காம எல்லோருக்கும் குடுங்கோ!) :p

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

உஷாக்கா, இதையும் திருமதி கொத்தனாரிடம் காண்பிக்க வேண்டும்தானே?!

நல்லாப் போட்டுக் குடுங்கறாங்கப்பா! உங்க அரசியல் தகுதியில் இதையும் சேர்த்துக்குங்கப்பா.

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

அல்வான்னா அது திருநெல்வேலி அல்வாதான். பாம்பே அல்வானெல்லாம் சொல்லி பெரும் இழுக்கு பண்ணிடாதீங்கோ.
அப்புறம் அது பேரை கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு இன்னும் ஒரு கால் கிலோவை முழுங்குற ஐடியாவா?
ஆடுமாடு.

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

//தெளிவாக்க முதலில் கடைக்குப் போகணும் :-) //

அடுத்து ஒரு கால் கிலோ தின்பதற்கு காரணம் கிடைச்சாச்சு! :))


அன்புடன்...
சரவணன்.

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

:)

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

Usha...It is Mahim Halwa. It comesin 2 flavors (and colors).The half white you described is the regular "Doodhi Mahim Halwa"and the other Almond flavor is in light yellow (kesar) color.

http://www.web-virtuoso.com/chitalebandhu/products/sweets03.html

Its my personal favorite too!

In coimbatore, this sweet is available in all Dhirajlal Mithaiwala shops.

-ust

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

இவ்வளவு எழுத யோசனை வந்துச்சே!!!!! அதப் படம் பிடிக்கனும்னு யோசனை வரலை?

எனக்கு என்ன தோணுதுன்னா...நீங்க சாப்டது தடியங்கா அல்வா. காசி அல்வான்னு கூடச் சொல்வாங்க. ஆனா அதுல தடியங்காயத் துருவிப் போட்டிருக்கும். தடியங்க அல்வாங்குறது..தடியங்காய பெரிய பெரிய துண்டா நறுக்கி ஜிராவுல (செந்தழல் ரவி சொன்ன மாதிரி) ஊற வெச்சி வெளிய எடுத்து அடுக்கி வெச்சிருப்பாங்க. வெள்ளையா இருக்கும். வெளிய உலர்ந்திருக்கும். பிச்சிச் சாப்புடும் போது உள்ள ஈரம் தெரியும். இத வங்காளத்துல கும்ரோ மிட்டாய்னு சொல்வாங்க. அதுவா இது?

நீங்க அத்ரி பச்சான்னு சொல்வீங்க. எங்க பாட்டி எங்களுக்கு அத்ரி பான்ஸ்கோல்னு சொல்லிக் குடுத்திருக்காங்க.

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

உஷாக்கா சூப்பர் காமெடி :)))

\\"அத்ரி பச்சா" ( அத்ரி பச்சா கதை தெரியாதவர்கள் கையைத் தூக்கவும்) \\

நான் கை தூக்குவது தெரியுதா!!!

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

\\எனக்கு என்ன தோணுதுன்னா...நீங்க சாப்டது தடியங்கா அல்வா. காசி அல்வான்னு கூடச் சொல்வாங்க. ஆனா அதுல தடியங்காயத் துருவிப் போட்டிருக்கும். தடியங்க அல்வாங்குறது..தடியங்காய பெரிய பெரிய துண்டா நறுக்கி ஜிராவுல (செந்தழல் ரவி சொன்ன மாதிரி) ஊற வெச்சி வெளிய எடுத்து அடுக்கி வெச்சிருப்பாங்க. வெள்ளையா இருக்கும். வெளிய உலர்ந்திருக்கும். பிச்சிச் சாப்புடும் போது உள்ள ஈரம் தெரியும். இத வங்காளத்துல கும்ரோ மிட்டாய்னு சொல்வாங்க. அதுவா இது?\\

ராகவன்,அந்த் இனிப்பு பேரு ஆக்ரா பேடா.குஜராத்திகளும்,மார்வாடிகளும்,அதை இனிப்பாவெ பாக்கரத்தில்லை,அது அவங்க வாழ்க்கையில ஒரு அங்கம்.இந்த் ஐச் (அ) மாஹிம் அல்வா,பூனா,பாம்பே,அப்புறம்,குஜராத்திங்க கடைகளில் கிடைக்கும்

 
At Wednesday, 12 September, 2007, சொல்வது...

Sept 4th: Thottilai aatiyachu
Sept 9th: Kuzhandhaiyai killiyachu
OR vice versa!!
God bless those sweet lovers, who wd hv got all the required shocks by now!!
(latha) sridhar

 

Post a Comment

<< இல்லம்