Saturday, November 24, 2007

வயது வந்தவர்களுக்கு மட்டும்- 2

பிரச்சனையின் ஆணி வேர் நம் சமுதாயம் * என்றாலும், முழு முதற்காரணம் இந்த பயல்களே! இருபத்தி எட்டு வயது( சராசரியாய்) வரை, ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி விட்டு, திடீரென்று லகான் போட ஒருத்தி வருகிறாள் என்றால் இவனுக்கு முதலில் ஏற்படுவது பயம்.

ஆணின் வாழ்க்கைக்கும், பெண்ணின் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. பெண்ணுக்கு கல்யாண பேச்சு என்பது நினைவு தெரிந்ததில் இருந்து விழுந்துக் கொண்டே இருக்கும். அதனால் கல்யாணம் நிச்சயம் ஆனதும், அவளுக்கு பயம் எல்லாம் தோன்றாது. என்னத்தான் படித்து வேலைக்குப் போனாலும், பதவிசாய் ( ஆக்ட் ஆனாலும்) வாங்கிய சம்பளத்தை வீட்டில் கொடுத்து விட்டு எதிர்காலத்தையும் பெற்றவர்களிடம் தந்துவிடுபவள் பெண்.

பழைய துணிகளைப் போட்டு எவர் சில்வர் பாத்திரம் வாங்குவார்கள். வீட்டில் இருக்கும் பாட்டி, அதை உபயோகிக்க வேண்டாம், அப்படியே ஜில்லுக்கு எடுத்து வைத்து விடு என்று ஆணைப் பிறப்பிப்பார்கள். பெற்றவளோ, அந்த பாத்திரத்தை ஜில்லுவிடம் கொடுத்து, நீ மாமியார் வீட்டுப் போகும்பொழுது இதைக் கொண்டுப் போக வேண்டும் என்றதும், நாலு வயது ஜில்லு அதை வைத்துக் கொண்டு அன்று முழுவதும் அலையும். இப்படி மாமியார் வீடு, கணவனுடன் குடித்தனம் என்ற போதனைகள் அவள் காதில் வேண்டியளவு வீழ்ந்துக் கொண்டே இருக்கும்.

இதனால் பெரும்பாலான பெண்கள், கல்யாணம் நிச்சயம் ஆனாலும் பெரியதாய் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். 99% சதவீத பெண்களுக்கு அவசரத்துக்கு குக்கர் வைக்க மட்டுமே தெரியும். பெற்றவள், நிச்சயமாகி விட்டது, சமையல் கற்றுக் கொள் என்று கெஞ்சினாலும், போமா காலம் முழுவதும் இனி சமைக்க வேண்டும், கொஞ்ச நாளாவது நிம்மதியாய் இருக்கிறேனே என்று சொல்லி விடுவார்கள். மாமியார் வீடு என்பதே வழக்கொழிந்துப் போய், கணவனுடன் தனி குடித்தனம் என்பதால், சமையலுக்கு எல்லாம் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று பெண்ணுக்கு நன்கு தெரியும்.

பையனுக்கோ, பதினைந்து வயதில் இருந்து ஹாஸ்டல், பிரண்ட்ஸ், வேண்டாத பழக்கங்கள், போதனைகள் எக்கசக்கம். இவையெல்லாவற்றையும் விட வேண்டும். பெண் என்ற ஜீவனாய் அவன் பார்த்தது, அம்மா மட்டுமே! வீட்டில் அக்கா, தங்கை இருந்தாலும், அம்மா
மட்டுமே அவனுக்கு தெய்வம். போதாதற்கு ஆண்டாண்டு காலமாய் சினிமாக்களும், இலக்கியங்களும் அம்மா என்றால் அன்பு, தெய்வம் என்று ஏற்றி விட்டதால், அம்மாவை அவன் ஒரு பெண்ணாகவோ, மனைவியாகவோ, மருமகளாகவோ அவன் கண்கள் பார்க்க
மறுத்திருக்கின்றன. சரி இந்த விஷயத்தை பிறகு பார்க்கலாம்.

எனக்கு தெரிந்த ஒரு பையனுக்கு கல்யாணம் நிச்சயமானது. பத்து நாள் கழித்துப் பார்க்கிறோம். பையன் முகத்தில் மீசையைக் காணோம். என்னவென்று விசாரித்தால், பெண் சொல்லிற்றாம், நீ நல்ல கலராய் இருக்கிறாய். மீசையை எடுத்தால் அசல் ஹிந்தி ஹீரோ மாதிரி இருப்பாய் என்று! சொல்லும்பொழுது பார்க்க வேண்டுமே, நாணத்தில் முகம் சிவந்துப் போயிற்று.

சரி, கல்யாணம் ஆனதா, ஒரு மாதம் கழித்துப் பார்த்தால் மீசையின் அறிகுறிகள் தென்பட்டன. என்னடா என்றுக் கேட்டால், மீசை என்பது தன் தனிப்பட்ட விஷயம், இதில் எல்லாம் மனைவிக்கு இடம் கொடுத்தால், தலைக்கு மேல் போய் விடுவாள் என்ற ஞானோதயம் ஏற்பட்டு இருக்கிறது. ஒண்ணுமில்லை, ஏதோ தகராறு இருவருக்கும், தன் கோபத்தை மீசை வளர்ப்பில் காட்டியிருக்கிறார் ஐயா.

இதுதாங்க, இவங்க பிரச்சனை! மீசை எடுத்ததும் தவறு, போதாதற்கு வீட்டில் யாராவது பெருசுகள், இவன் அவ பேச்சைக் கேட்டு மீசை எடுத்தவன் தானே என்ற அவதூறும் காதில் விழுந்திருக்கும். இதே ஒரு பெண், வரப் போகிறவனுக்காக எதையாவது செய்தால் அது
தியாகப்பட்டியலில் சேர்ந்து விடும்.

கல்யாணத்திற்கு முன்பு, எள் என்றால் எண்ணையாய் நின்றதும், கல்யாணம் ஆகி பத்தே நாளில் எல்லாம் தெளிந்து, போதாதற்கு வீட்டு பெருசுகள், நட்புகள், அலுவலக நண்பர்கள், ரொம்ப எடம் கொடுத்திடாதடா என்று அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்ததும், பையன் பேச்சில், நடத்தையில் மாற்றம் தோன்ற ஆரம்பிக்கும். பெண்ணிற்கு ஒன்றும் புரியாது. கைக்குள் இருந்தவன் நடத்தையில் மாற்றம், ஏறுமாறான பேச்சு, பெற்ற தாய் போல வருமா போன்ற பேச்சுக்கள் அவளை விரக்தியின் விளிம்பில் கொண்டுப் போய் நிறுத்திவிடும்.பிரச்சனைகள் ஆரம்பிக்கத் தொடங்கும்.

18 பின்னூட்டங்கள்:

At Saturday, 24 November, 2007, சொல்வது...

சொம்மா கால் காசுக்கு பொறாத மீசைய எடுக்கறதுல இம்புட்டு பிரச்சனையா?..ரொம்ப உஷாராத்தேன் இருக்கணும் போல..

 
At Saturday, 24 November, 2007, சொல்வது...

//
99% சதவீத பெண்களுக்கு அவசரத்துக்கு குக்கர் வைக்க மட்டுமே தெரியும்
//
thanks for warning.

 
At Saturday, 24 November, 2007, சொல்வது...

ஆகா - ஆண்கள் பெண்களுக்கு இடம் கொடுப்பது தவறில்லை. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள். பின்னர் மாறத்தான் செய்யும். ஆனால் கவலைப் படும்படியாக ஒன்றும் நடக்காது.

 
At Saturday, 24 November, 2007, சொல்வது...

//மங்களூர் சிவா said...
//
99% சதவீத பெண்களுக்கு அவசரத்துக்கு குக்கர் வைக்க மட்டுமே தெரியும்
//
thanks for warning.//

எ ஸ்பெஷல் ரிப்பீட்டே :))

 
At Saturday, 24 November, 2007, சொல்வது...

ஏங்க இப்படி பயமுறத்தறீங்க...நான் கல்யாணம் பண்ணவே இல்லைனா அதுக்கு முழுக்காரணமும் நீங்கதான்...சொல்லிபுட்டேன்.

 
At Saturday, 24 November, 2007, சொல்வது...

//அலுவலக நண்பர்கள், ரொம்ப எடம் கொடுத்திடாதடா என்று அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்ததும், ....//

என் சோகக்கதையைக்கேளு தாய்க்குலமே.......
ரொம்பசரி. கஷ்டப்பட்டு, மீனாட்சியம்மாளைப் பார்த்துப் பார்த்துச்செஞ்சு சோறு கட்டியனுப்புனா, நல்லா மொக்கிட்டு ஒரு வார்த்தைகூட நல்லவிதமாச் சொன்னதில்லை.
நல்லா இருக்குன்னு சொல்லிட்டா அப்புறம் இன்னும் நல்லாச் சமைக்கமாட்டேனாம்.
அடப்பாவி. ஜேபி என்னும் ஜெயப்ப்ரகாஷ் ( துஷ்டநண்பன்) உபதேசமாம்.

அதுக்கெல்லாம் சேர்த்துவச்சுத்தான் இப்ப.........:-)))))

 
At Saturday, 24 November, 2007, சொல்வது...

எங்க வீட்டில் என்னை வைத்து தான் சமையல் பரிசோதனை செய்துகொண்டார்களாம். :-))
கல்யாணம் முடிந்து பத்து வருடங்கள் கழித்து சொன்னார்கள்.
என் நாக்கு அவ்வளவு டேஸ்ட் பார்த்திருக்கிறது. :-(

 
At Saturday, 24 November, 2007, சொல்வது...

மங்களூர் சிவா, சென்ஷி நான் எப்பொழுது உண்மையைதான் எழுதுவேன். பிறரைப் போல
உண்மையை மறைத்து பொய்யும் புனைசுருட்டும் என் எழுத்தில் வரவே வராது.

சீனா சார், ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்க போல இருக்கு :-)

துளசி, என்னத்த சொல்ல, கடைசி வரிகள் நிம்மதியை தருகின்றன :-)))))

வடூவூர் குமார், இவ்விடத்தில் "ரீப்பீட்டே" என்ற வார்த்தையை மட்டும் சொல்ல விரும்புகிறேன் :-)

பிரதாப்குமார், அழகிய தமிழ் மகன் நல்லாவே இல்லை என்று எல்லாரும் பார்த்துவிட்டு திட்டுகிறார்கள்.
ஆனால் அதை நீங்கள் பார்த்தீர்கள்/ பார்த்தே தீரூவீர்கள். அதை போலதான் இந்த மயான
வைராக்கியம் கூடதான் (இந்த மயான வைராக்கியம் என்றால் என்ன என்று தெரியும் இல்லையா?)

 
At Saturday, 24 November, 2007, சொல்வது...

//சமையல் கற்றுக் கொள் என்று கெஞ்சினாலும், போமா காலம் முழுவதும் இனி சமைக்க வேண்டும், கொஞ்ச நாளாவது நிம்மதியாய் இருக்கிறேனே என்று சொல்லி விடுவார்கள். //

இப்படி சொல்லும் தாய்மார்கள் இப்போ இல்லை....இக்கால தாய்மார்களே
இதெல்லாம் எல்லாம் சொல்வதில்லை...எல்லாம் கட்டிக்கிறவன் பாடுன்னு விட்டுடறாங்க...அதுக்கும் மேல அம்மா சொல்லி கேட்கறதெல்லாம் ஆண்கள் மட்டுமே...

//பையன் பேச்சில், நடத்தையில் மாற்றம் தோன்ற ஆரம்பிக்கும். பெண்ணிற்கு ஒன்றும் புரியாது. கைக்குள் இருந்தவன் நடத்தையில் மாற்றம், ஏறுமாறான பேச்சு, பெற்ற தாய் போல வருமா போன்ற பேச்சுக்கள் அவளை விரக்தியின் விளிம்பில் கொண்டுப் போய் நிறுத்திவிடும்//
ஏங்க நீங்களே சொல்லிருக்கீங்க ஆணுக்கு மணமாவது வரையில் தெரிவது தன் தாய் மட்டுமேன்னு...தன் தாய் தந்தை பார்த்து செய்யற கல்யாணங்களில், அந்த ஆண் தன் மனைவி தன் தாய் போல இருக்கணும்ன்னு எதிர்பார்த்து அவன் விரக்திக்கு போவதை உங்களால் உணர முடியாதுதான்...

 
At Saturday, 24 November, 2007, சொல்வது...

//ஆகா - ஆண்கள் பெண்களுக்கு இடம் கொடுப்பது தவறில்லை. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள். பின்னர் மாறத்தான் செய்யும். ஆனால் கவலைப் படும்படியாக ஒன்றும் நடக்காது.//

சீனா சார், காலம் மாறிடிச்சு...ஹிஹிஹி...நீங்க முந்தின தலைமுறைய பற்றி சொல்லியிருக்கிறீங்க..

 
At Saturday, 24 November, 2007, சொல்வது...

«ýÒûÇ ¯„¡,
¯í¸Ç¢ý ¸ÕòÐì¸û ¿¢¨È ±ÉìÌ À¢ÊòÐ þÕ츢ÈÐ.
þý¨È À¾¢Å¢ø ´Õ ¸Õò¾¢ø ±ÉìÌ º¢È¢Ð ¯¼ýÀ¡Î þø¨Ä ¯„¡.

¾¢ÕÁ½ò¾¢ü¸¡¸ ¦Àñ¸Ç¢ý ÅÇ÷ôÒô ÀüÈ¢ - ¿£í¸û ¦º¡ýÉÐ ±øÄ¡õ 50¸Ç¢Öõ,70¸Ç¢Öõ ¾¡ý
¿¼óÐ þÕìÌõ.

þô§À¡Ð þÕìÌõ ¦Àñ¸û - ¿£í¸û ¦º¡øÅÐ §À¡ÄÅ¡ ¦Àñ¸û þô§À¡Ð þÕ츢ȡ÷¸û?

¬ñ¸¨Ç Å¢¼ ¦Àñ¸û ¾¡ý þô§À¡Ð ¾É¢ ÁÉ¢¾ ;ó¾¢Ãò¨¾ «¾¢¸ôÀÊ¡¸, ¾ÅÈ¡¸
ÀÂýÀÎòи¢È¡÷¸û.«¾É¡ø ¾¡ý ¾¢ÕÁ½ Å¡ú쨸 À¢ÃÉìÌ⾡¸ Á¡È¢ì ¦¸¡ñÎ þÕ츢ÈÐ ±ýÚ ¿¢¨É츢§Èý.

¿£í¸û ´ôÀ¢ð¼Ð - 60«õ ÅÕ¼ ¦Àñ¸¨ÇÔõ, ¾ü¸¡Ä ¬ñ¸¨ÇÔõ - þ¨¾ ¦¸¡ïºõ
Àâº£Ä¨É ¦ºöÂ×õ ¯„¡.

¿¡õ Å¡Øõ þó¾ Å¡ú쨸¢ø, ¦Àñ ¬ñ ±ýÚ À¡÷측Áø,
¡¨ÃÔõ ÁÉ¢¾É¡¸ À¡÷ì¸ ¦Àü§È¡÷¸Ç¡¸¢Â ¿¡õ
¿õ ÌÆ󨾸ÙìÌì ¸üÚì ¦¸¡Îì¸ §ÅñÎõ.

À¢Ãîº¨É ±ýÀÐ ÁÉ¢¾ÛìÌ ÅÕÅÐ.«¨¾ ²ý ¬ñ ¦Àñ ±ýÚ À¡÷ì¸ §ÅñÎõ?

¸ø¡½ Å¡ú쨸 þô§À¡Ð À¢ÃÉ¡¸ì ¸¡Ã½õ - þó¾ ¦Àñ ¬ñ À¡÷¨Å ¾¡ý.

¦ÀâÂÅ÷¸Ç¡¸¢Â ¿¡õ ¾¢Õó¾ §ÅñÎõ ¯„¡.

«ô§À¡Ð ¾¡ý ÅÕõ ¾¨ÄÓ¨È ¿øÄ ¸ø¡½ Å¡ú쨸¨Â «ÛÀÅ¢ì¸ ÓÊÔõ.

ºÓ¸òòø ÁÉ¢¾õ þÕìÌõ ¯„¡
.ÁÉ¢¾õ «Æ¢óÐ ÅÕž¡ø ¾¡ý ºÓ¸ò¾¢ø ±øÄ¡§Á À¢Ãºº¨É¡¸ Á¡È¢ì ¦¸¡ñÎ ÅÕ¸¢ÈÐ
«¾É¡ø ¾¡ý þó¾ ¬ñ ¦Àñ ±ýÈ ±ñ½ò¨¾ Á¡üÈ¢ì ¦¸¡ñÎ,
ÁÉ¢¾ý ±ýÈ ±ýÉòмý Å¡Æ ¬ÃõÀ¢ô§À¡õ

«ýÒûÇ,
¯„¡ ºí¸÷.

 
At Sunday, 25 November, 2007, சொல்வது...

அன்புள்ள உஷா,
உங்களின் கருத்துக்கள் நிறைய எனக்கு பிடித்து இருக்கிறது.
இன்றைய பதிவில் ஒரு கருத்தில் எனக்கு சிறிது உடன்பாடு இல்லை உஷா.

திருமணத்திற்காக பெண்களின் வளர்ப்புப் பற்றி - நீங்கள் சொன்னது எல்லாம் 50களிலும்,70களிலும் தான்
நடந்து இருக்கும்.

இப்போது இருக்கும் பெண்கள் - நீங்கள் சொல்வது போலவா பெண்கள் இப்போது இருக்கிறார்கள்?

ஆண்களை விட பெண்கள் தான் இப்போது தனி மனித சுதந்திரத்தை அதிகப்படியாக, தவறாக
பயன்படுத்துகிறார்கள்.அதனால் தான் திருமண வாழ்க்கை பிரச்சனைக்குரியதாக மாறிக் கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நீங்கள் ஒப்பிட்டது - 60அம் வருட பெண்களையும், தற்கால ஆண்களையும் - இதை கொஞ்சம்
பரிசீலனை செய்யவும் உஷா.

நாம் வாழும் இந்த வாழ்க்கையில், பெண் ஆண் என்று பார்க்காமல்,
யாரையும் மனிதனாக பார்க்க பெற்றோர்களாகிய நாம்
நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பிரச்சனை என்பது மனிதனுக்கு வருவது.அதை ஏன் ஆண் பெண் என்று பார்க்க வேண்டும்?

கல்யாண வாழ்க்கை இப்போது பிரச்சனையாகக் காரணம் - இந்த பெண் ஆண் பார்வை தான்.

பெரியவர்களாகிய நாம் திருந்த வேண்டும் உஷா.

அப்போது தான் வரும் தலைமுறை நல்ல கல்யாண வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.

சமுகத்த்ல் மனிதம் இருக்கும் உஷா
.மனிதம் அழிந்து வருவதால் தான் சமுகத்தில் எல்லாமே பிரசசனையாக மாறிக் கொண்டு வருகிறது
அதனால் தான் இந்த ஆண் பெண் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு,
மனிதன் என்ற என்னத்துடன் வாழ ஆரம்பிப்போம்

அன்புள்ள,
உஷா சங்கர்.

10:24 PM

 
At Sunday, 25 November, 2007, சொல்வது...

உஷா சங்கர்,
நீங்கள் சொன்னதை யூனிகோர்ட்டில் மாற்றிப் போட்டு இருக்கிறேன். நீங்களும், மதுரையம்பதியும் முடிவுரை படித்துவிட்டு வாருங்கள். விவாதிப்போம்.

 
At Sunday, 25 November, 2007, சொல்வது...

உங்கள் பதிவில் சில நியாயங்கள் இருக்கின்றன.
இருந்தாலும் பெண்கள் மீது கொஞ்சம் கரிசனம் போன்ற தோற்றம் இன்றைய பதிவில் தெரிகிறது.
முடிவுரைக்கு காத்திருக்கிறேன்...

 
At Sunday, 25 November, 2007, சொல்வது...

உஷா சங்கர் சொல்வதுதான் இந்த காலத்திற்கு சரி என தோன்றுகிறது.

 
At Sunday, 25 November, 2007, சொல்வது...

//பிரச்சனையின் ஆணி வேர் நம் சமுதாயம் * என்றாலும், முழு முதற்காரணம் இந்த பயல்களே!//

இதைத் தவிர வேறு எதாவது வந்திருந்தால்தான் ஆச்சரியமே. இல்லையா! :))

//இதனால் பெரும்பாலான பெண்கள், கல்யாணம் நிச்சயம் ஆனாலும் பெரியதாய் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.//

அவங்க இருக்கறது பொஸிஷன் ஆப் ஸ்ட்ரெங்த் - அப்பர் ஹேண்ட். அப்புறம் என்னதுக்கு பயம். அதெல்லாம் இங்கதான். அதுக்குத்தான் பெனாத்தல் மாதிரி அனுபவஸ்தங்க எல்லாம் கோனார் நோட்ஸ் எழுதறாங்க. நடக்கப் போற விஷயங்களைப் பத்தின பயம் போகாது. ஆனா அந்த Fear of unknown மட்டுமாவது போகுமில்ல..

 
At Sunday, 25 November, 2007, சொல்வது...

Dear Usha,
Enoda font ai unicode il maatriyadharuku mikka nanri.

Ungalai disturb seiya kudadhu enru enni,. marubaidyum thanglish kae vandhu vitten.

Mudivuraikum - ennudaiya karuthai sollgiren.

With Love,
Usha Sankar.

 
At Friday, 07 December, 2007, சொல்வது...

<==
இலவசக்கொத்தனார் said...

இதைத் தவிர வேறு எதாவது வந்திருந்தால்தான் ஆச்சரியமே. இல்லையா! :))

அவங்க இருக்கறது பொஸிஷன் ஆப் ஸ்ட்ரெங்த் - அப்பர் ஹேண்ட். அப்புறம் என்னதுக்கு பயம். அதெல்லாம் இங்கதான்
==>
சரியாச் சொன்னீங்க

 

Post a Comment

<< இல்லம்