Thursday, November 24, 2005

மன்னிக்கவும்

வழக்கமான முறையில் தனிநபர் தாக்குதலாய் போனதாலும், தனிமடல்களிலும் பிரச்சனை தொடர்வதாலும் பதிவை எடுத்துவிட்டேன். மன்னிக்கவும், எனக்கு வேறு வழி தெரியவில்லை.
உஷா

27 பின்னூட்டங்கள்:

At Thursday, 24 November, 2005, சொல்வது...

உஷா!

வருந்துகிறேன் :(

ம்ம்ம்.. வேறு என்ன சொல்ல?!

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

உஷா,

எந்தப் பதிவு? உடை விஷயத்துலே வந்ததே அதா?
ஏன் நம்ம ஆளுங்க எல்லாத்துக்கும், எல்லாருக்கும் வெவ்வேற கருத்து, சிந்தனைகள் இருக்குமுன்றதைப் புரிஞ்சுக்கறதில்லை?

வருத்தமா இருக்கு உஷா

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

உஷா,
என் பதிலை நீக்கியபோது அதற்கு பதிலெழுத வேண்டுமென்று நினைத்து பிறகு விட்டுவிட்டேன். ஏனெனில் எனக்கு இவையெல்லாம் இப்படித்தான் என நன்றாகவே தெரியும். truth will set you free.. but first it will piss you off..
இந்த பதிலையும் நீக்கிவிடலாம். இதுபோன்ற பிரச்னைகள் இருப்பதால்தான் ஆகஸ்ட் மாதமே தமிழ்மணத்திலிருந்து நானே விலகிவிட்டேன். நீங்கள் உங்கள் பதிவை நீக்கியது சரியல்ல என்றாலும் புரிந்துகொள்ளக்கூடியது.

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

think twice before post any serious article.dont fed up.

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

உஷா

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆயினும் நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிவுகளை ஆவலுடன் படித்தவன் என்பதால் சொல்கிறேன்:

ப்ளாக்ஸ்பாட்டில் தொல்லையென்றால் வேறு இடங்களில் கூடுதல் பாதுக்காப்புடன் கூடிய பதிவை தொடங்கலாமே...

சனிக்கிழமை,நுனிப்புல் என்ற பெயரில் ப்ளாக்சம் அல்லது உவேற்ட்பிரஸ்.காம் ல் பதிவு ஒன்றை ஆரம்பித்துவிட்டு உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.பிடித்திருந்தால் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

கமண்ட் மாடரேஷனை செயலாக்கவும். ஆட்சேபகரமான பின்னூட்டங்களை கருவிலேயே கிள்ளி எறியலாம். எழுத்துக்களை அடையாளம் காணும் வசதியையும் செயலாக்கவும்.

உங்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

அனைவருக்கும் நன்றி. வாசன் பத்ரி சொன்ன கமெண்ட் மாடரேஷன் செய்வது எப்படி என்று சொன்னால் புண்ணியமாக போகும். எதிர்விமர்சனத்தை கண்டு நான் அஞ்சவில்லை. எனக்கு ஒரு கருத்து இருப்பதைப் போல எதிராளிக்கும் ஒரு கருத்து உண்டு என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் திசை திருப்புதல் வேண்டாம் என்று சொல்லியும் திரும்ப், திரும்ப அதே நடந்தது. புண்படுத்திவிட்டதாய் பெரிய தளபதி, சின்ன தளபதி ரேஞ்சுக்கு அறிவுரை வேறு :-)
மகாபாரதத்தில் நான்கு வர்ணத்தினருக்கும் பல இடங்களில் பலவித அறிவுரைகள் வரும். ஆனால் உலகின் ஜனதொகையில் பாதி உள்ள பெண்கள் அனைவருக்கும் பொதுவான அறிவுரைகள்தான். ஏனோ இதுதான் ஞாபகம் வருகிறது.

தொடரும் ;-)

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

Usha, so simple hehe :-)

Login with your blogger id,
go to settings and in that goto comments,

there you see one option called Enable Comment Moderation choose yes.

After this you are ready for comment moderation. Then if any one post any comment in your blog then it will appear in your blogger for your moderation.

Here in Posting, Moderate Comments, in that you can select whether you want to publish that particular comment or not.

I think I am not confusing you. hehe. :-) hope your moderation wont affect my comments.

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

நீங்கள் உங்கள் பதிவை நீக்கியது தவறு.

அது உங்களின் மீதான நம்பகத்தன்மையை குலைக்கும்.

வருகின்ற ஒரு பதிவு தனிநபர் தாக்குதலா, இல்லையா என்பதை
உங்கள் பதிவை வாசித்துக் கருத்துச் சொன்ன பல வலைப்பூவாளர்களையும்
அழைத்துக் கேட்டிருக்கலாம்.

ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யாமல் போனது தவறு.

ஏனென்றால், பலரும் சுட்டிக்காட்டியது - உங்கள் கட்டுரையில் இருந்த
முன்னுக்குப் பின் முரணான சிந்தனை. அவற்றைச் சுட்டிக்காட்டி ஒரு பின்னூட்டத்தை
வைத்ததும், மொத்த பதிவையே நீக்கி விட்டது - உங்கள் குற்ற உணர்வைத் தான்
காட்டியதே அன்றி - நீங்கள் நீக்கியதை நியாயப்படுத்தி விடாது.

மேலும், நீங்கள் சம்பந்தப்படாத - பலகோடி சம்பந்தப்பட்ட ஒரு மதத்தின் பழக்கவழக்கங்களை
விமர்சிக்கும் பொழுது - நீங்களும் ஒரு தாக்குதலில் தான் ஈடுபட்டீர்கள். கண்ணாடி முன் நின்று கல் வீசும்
பொழுது - கண்ணாடி துகள்களாய் உடைந்து சிதறுவது உங்கள் உருவமாகத் தானிருக்குமே அன்றி வேறு எவராக
இருக்க முடியும்.

உங்கள் பின்னூட்டத்தில் நான் வைத்த பதிவை - ஒரு தனிப் பதிவாகவே என்னுடைய வலைப்பூவில்
வைத்திருக்கிறேன். ஏனென்றால் எனக்குத் தெரியும் - மாற்றுக் கருத்துகள் வலிமையாக எழுந்து வரும்பொழுது,
அதை தாங்க மாட்டாமல் - பதிக்காமலே போய்விடலாம் என்று. நீங்களும் அவ்வாறு தான் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்
ஆனால் - நீங்களோ மொத்த பதிவையையுமே அடித்து காலி பண்ணி விட்டீர்கள்.

அந்தப் பதிவு அவசியமாக இருந்தது - எல்லோருக்கும் புரிய வைக்க - how hollow your arguments are என்று புரிய வைக்க.

அதை நீக்கி விட்டதால் வருத்தமே....

இனியாவது எழுதும் பொழுது கவனமாக எழுதிவிட்டு - பதிந்ததும் நீக்காது வைத்திருங்கள் - வருகின்ற எதிர்ப்பை நேர் கொள்ளுங்கள் - நீங்கள்
தனியாகவோ - அல்லது வலைப்பூவில் உங்களுக்கு ஆதரவளிக்கும் மற்ற நண்பர்களின் துணை கொண்டோ......

பதிவை நீக்குவது தீர்வாகாது. ஏனென்றால், பின்னூட்டங்களையே தொகுத்து ஒரு வலைப்பூவாக்கியிருக்கிறேன்

பார்க்கவும்: http://nanbancomments.blogspot.com/

நன்றி

அன்புடன்

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

ஐயா நண்பரே, பதிவை நீக்கியதற்கு காரணம் என்னவென்று சொல்லிவிட்டுதானே நீக்கினேன்? எதிர்விமர்சனம், எழுத்தில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டும், ஆனால் புதுபுது பெயர்களில் வந்து புழுதிவாரி இறைப்பவர்களை என்னசெய்வது?
எந்த நம்பிக்கையையும் விமர்சிப்பது என் எண்ணமில்லை. ஆனால் நான் எழுதியது அப்படி பொருள் கொள்ளப்பட்டதாலும், மனம் புண்ப்பட்டது என்ற வார்த்தையும் அந்த பதிவை நீக்க காரணம்.
விமர்சனத்தை எதிர் கொள்ள பயந்து- என்ற வார்தைகள் என் மீதா? ஆனால் குறைக்கும் பிறவிகளை கண்டு பயந்து ஓடுகிறேன்.
முகமூடி அணிந்து எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று பதிவிடவில்லையே! பிறகு நண்பர்களை கலந்தாலோசித்து... ஐயா, இந்த கும்பல் சேர்த்துக் கொள்ளுவதில் கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. எது எழுதினாலும் அதற்கு நானே பொறுப்பு.

மிக நல்ல விஷயம், பின்னூட்டத்துக்கு என்று ஒரு பதிவு. அப்படியே முகம் தெரியாமல் வந்து கல்லறிந்து விட்டவர்களும் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

பலரும் சுட்டிக்காட்டிய முன்னுக்கு பின்னான முரண்- அப்படியா? எல்லாரும் அப்படியா சொன்னார்கள்? எல்லாம் என்னிடம்
பத்திரமாய் உள்ளன. திரும்ப படித்துப் பார்கிறேன்.
மிக்க நன்றி!

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

சகோதரி.உஷா,

சல்வார் கமீஸ் உங்களுக்கு தோதான ஆடையாக நீங்கள் நினைப்பது போல் ஒரு இஸ்லாமியப் பெண் பர்தாவை தனக்குத் தோதான ஆடையாக ஏற்றுக் கொள்வதை ஒப்புக் கொள்ளாமல், ஆண்கள் பர்தா போட்டு விட்டால் பெண்கள் சுதந்திரமாக இருக்கலாம் என்கிறீர்களே. இது முரண்பாடாகத் தெரியவில்லையா?

வீனஸ் வில்லியம்ஸ் முதுகைக் காட்டும் பனியன் அணிந்து மஞ்சல்,பச்சை கலரில் விளையாடியபோது, டென்னிஸின் வெள்ளைச்சீருடை விதியைச் சொல்லி தடுத்த போது, தனக்கு ஏற்ற ஆடையை அணிய டென்னிஸ் விதி குறுக்கே வரக்கூடாது என்று வாதாடி அனுமதித்த உரிமையை சானியா தான் இஸ்லாமியப் பெண் என்று சொல்லி அவர் சார்ந்த மதக்கொள்கைக்கு ஒப்ப ஆடை ஆணிந்து விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் இன்று சானியா பிற்போக்குப்பெண் இல்லையா?

முஸ்லிம் பெயர் கொண்ட சினிமா நடிகை/நடிகர்கள் அரைகுறை ஆடையுடன் நடிக்கும் போது குறுக்கே வராத மதகுருக்கள் சானியாவுக்கு மட்டும் வருவது ஏன் என்பதில் நியாயம் உண்டு. அரைகுரையாகவும் ஆபாசமாகவும் 'கலைச்சேவை' செய்யும் சினிமாவை இஸ்லாம் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கிறது. ஆனால் விளையாட்டை அப்படிச் செய்யாததால்தான் என்ற நியாயத்தை ஏற்க மறுப்பது என்ன வகையான நியாயம் என்று சொல்லுங்கள்.

பர்தா கலாச்சாரத்தைக் காப்பதற்கு என்ற அர்த்தத்தில் முன்பு ஒரு பதிவு இட்டிருந்தீர்கள். அதில் வெயிலின் புழுக்கத்தில் பர்தா அணிந்த பெண் கஷ்டப்பட்டதாகச் சொல்லி இருந்தீர்கள். பர்தா அணிந்த பெண்களெல்லாம் கலாச்சாரத்திற்காக கஷ்டப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் அறியாமை.

பர்தாவை ஆண்களின் ஆபாசப் பார்வையிலிருந்து காத்துக் கொள்ளத்தான் இஸ்லாம் சொல்கிறதே தவிர கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதற்காக நிர்ப்பந்தித்து அல்ல என்பதை எங்கள் வீட்டுப் பெண்களிடம் அல்லது உங்களுக்குத் தெரிந்த முஸ்லிம் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள். எங்களுக்கும் தாய்,சகோதரி,மணைவி என்று பெண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களையெல்லாம் அடக்கிவைப்பதாகவும் முஸ்லிம் ஆண்களெல்லாம் கல்நெஞ்சக்காரர்கள் என்றும் நீங்கள் நினைத்தால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

மாற்று மதத்தவர் என்ற சலுகையில் இன்னொரு மதத்தைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டு விமர்சித்தால் தவறில்லை. ஆனால் விளக்கம் கொடுத்தாலும் விளக்கத்தில் இருக்கும் 1% நியாயத்தைக் கூட ஏற்காமல் சொன்னதில் குறைகண்டு விதண்டாவாதமாக விமர்சிப்பவர்களை நீங்கள் ஆதரிக்கும் தொனியில் பின்னூட்டமிட்டதால்தான் மனம் வெறுத்து உங்களின் முந்தைய பதிவில் கடைசியாக பின்னூட்டமிட்டேன்.

மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படி ஒரு தோற்றம் எழுந்திருப்பின் மன்னிக்கவும்!

அன்புடன்,

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

சாரி உஷா.

உங்களுடைய நிறைய பதிவுகளைப் படித்திருக்கிறேன். நீங்க நீக்கிட்டதா சொன்ன பதிவை மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.

ஆனாலும் நீங்க நீக்கிட்டேன்னு சொன்ன பதிவிலருந்த பின்னூட்டங்கள்லருந்து லேசா புரிஞ்சது.

பரவால்லை. உங்க பதிவில நீங்க என்ன வேணும்னாலும் எழுதலாங்க. அதை ஆதரிக்கறதும் எதிர்க்கறதும் அவங்கவங்க இஷ்டம். அதுக்கெல்லாம் டென்ஷனான அவ்வளவுதான். விட்டுத்தள்ளுங்க. உங்களுக்கே பிடிக்கலைன்னு நினைச்சி நீக்கிட்டீங்கன்னா.. ஓகே.. ஆனா மத்தவங்களுடைய ஒவ்வாமை கருத்துகளுக்கு அஞ்சி நீக்கியிருக்க வேணாம்..

OK. Past is Past. Keep going. All the best.

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

புண்படுத்திவிட்டதாய் பெரிய தளபதி, சின்ன தளபதி ரேஞ்சுக்கு அறிவுரை வேறு :-):-)

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

அன்புள்ள நல்லடியார் அவர்களே,
என்னுடைய பழைய பதிவான "புர்க்காவும், புடைவையும்" என்பதன் முழு காரணம், சென்னை வெய்யிலுக்கு ஒவ்வாத உடையில்
நானும் அந்த பெண்ணும் அவதிப்பட்டோம் என்பதை சொல்ல! இன்னும் என் சமுதாயத்தில் விசேஷம் என்றால் புடைவைதான்.

இன்னும் "மாடர்ன்" உடையான சல்வார்கம்மீசை அணிந்து கலாசாரத்தை கெடுப்பதாக கூட நம் ஊரில் சொல்லுவார்கள். ஆக, நான் கலாசாரத்தை மீறிவிட்டேன் என்று சொல்லாமா?

நீங்கள் படித்தீர்களா என்று தெரியவில்லை, நேசகுமார் என்பவர் குரானை விமர்சித்து எழுதிய போது, அது தவறு என்று முதல் குரல் கொடுத்தேன். அதே போல, இந்து சமுதாயம் போகும் இன்றைய போக்கை விமர்சித்து "தேவை இன்னொரு பெரியார்" என்று எழுதினேன். நண்பர் ஆசிப் மீரான் அவர்கள் குஷ்பூவின் ஆபாச படத்தை போட்டப் பொழுது அது தவறு என்று சுட்டிக்காட்டினேன்.

குஷ்பூ , சுகாசினி விவகாரமும் அலட்சியப்படுத்த வேண்டிய பேச்சுக்கள் என்றேன். லிஸ்ட் போதும், ஆனால் இவை எல்லாம் சமுகத்தை பார்க்கும் பார்வையே தவிர, ஒரு மத, இனம் சார்ந்த ஒற்றை பார்வையில்லை.

நேசகுமாருக்கு எழுதிய பதிவில் விவாதம் வளர்ந்தப் பொழுது புர்க்கா அணிவது ஒருவரின் தனிப்பட்ட செயல் என்றேன். அதைப் பற்றி விமர்சிக்க தேவையில்லை என்றேன்.

பொழுது என்பவர்தான் ஆண்கள் புர்க்கா போட்டுக் கொண்டு வீட்டில் இருந்தால் பெண்கள் பத்திரமாய் இருப்பார்கள் என்று சொல்லியிருந்தார்.பதில் நகைச்சுவை கண்ணோட்டத்தில் ஆஹா, இதுக்கூட நல்ல ஐடியா என்றேன். ஆனால் முதலில் நான் நீக்கியவை அனைத்தும் இஸ்லாமை விமர்சித்து வந்த லிங்குதான். பதிவை விமர்சித்து வந்தவைகளை நான் நீக்கவில்லை.

அப்பொழுது வந்த தனிமடல் தந்த பாதிப்பில் அலுப்பாய் உள்ளது என்றேன். பிறகு நண்பர் என்பவர் நான் சொல்லாததை சொல்லியதாய் சொன்னது என் மனதை நோக அடித்தது. அதே இனியும் இது தொடர்ந்தால் அதே ஆட்கள் பொதுவிலும் தொடர்வார்கள். எனக்கு சமய நம்பிக்கையில்லை என்றாலும் அதற்கு பதில் அளிக்கிறேன் என்று யாராவது ஆரம்பித்தால் .... மொத்த பதிவையும் எடுத்துவிட்டேன்.

மல்லிகா- யாஸ்மீன் அவர்களும் அதில் பதிவிட்டவர்களின் கருத்துக்கும் நான் பதில் சொல்ல தேவையில்லை. சானியாவின் அணியும்
உடையைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. இதுவரை யாருடைய சொந்த விஷயத்திலும் நான் கருத்து சொன்னதில்லை. உடல் தெரியவோ, ஆடை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொள்வதும் எனக்கு
பிடிக்காது. அது என் கொள்கை, இன்றுவரை என் போன்றே என் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அதையே ஒரு வயதுக்கு பிறகு என் பிள்ளைகளிடம் கூட சொல்ல முடியாது. எந்த விஷயமும் திணிப்பதையோ, திணிக்கப்படுவதையோ நான் எதிர்கிறேன்.

மல்லிகா அவர்களின் பதிவில் கண்ணில் பட்ட ஒரே கருத்து, எல்லாருக்கும் ஏற்ற உடை, அனைத்து மதத்தினரும் அணியும் உடை புர்க்கா என்று சொல்லப்பட்டதாய் எனக்கு பட்டது.
ஆண்கள் ஐந்து வயது குழந்தையைக் கூட தவறாய் பார்ப்பார்கள், புர்க்கா அணிவதே சிறந்தது என்று சொன்னார்கள். அதற்கு தவறு யாரிடம் உங்கள் மனபான்மையை திருத்திக் கொள்ளுங்கள் என்று இந்த பதிவை அப்பொழுது போட்டேன்.

இத்துடன் நிறுத்தி விட்டேன். இதைப் படித்ததும் எத்தனை பேருக்கு அலுப்பாய் இருக்கப் போகிறதோ தெரியவில்லை :-)

ஜோசப் சார், இதை படித்தால் புரிந்துவிடும் :-)

சிநேகிதி, "சிவகாசி" ஞாபகம் வந்துவிட்டதா :-)

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

உஷா,
அந்த நல்ல கட்டுரையில் நீங்கள் சொன்ன பல நல்ல விசயங்கள் (பெண்கள் காட்டும் மெல்லிய பாலியல் உணர்வுகள் போன்ற விசயங்கள் ...) யாராலும் கவனிக்கப்படாமல், உடை பற்றிய விசயமே பின்னூட்டங்களால் பெரிதாக்கப்பட்டு விட்டது.உங்களின் பதிவில் நீங்கள் இஸ்லாம் சம்பந்தமான விசயங்களை நேரடியாக விவாதிக்காவிட்டலும் "யாஸ்மினுக்கு" என்று எழுதப்பட்டதால் இஸ்லாம் நண்பர்கள் உங்களின் கருத்தை இஸ்லாத்திற்கு எதிரான கருத்தாக எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

இஸ்லாம் பெண்களின் இந்த "பர்தா" விசயம் பற்றி, நான் குவைத்தில் வேலை பார்த்தபோது அங்கே உள்ள பல இஸ்லாம் பெரியவர்களுடன் விவாதித்தேன். இஸ்லாம் மத நம்பிக்கைகளைத்தாண்டி அவர்கள் பர்தாவுக்காகச் சொன்ன எளிய விளக்கங்கள் என்னை அவர்கள்பால் மதிப்புக் கொள்ளச் செய்தது. அதுபற்றி இங்கு பேசினால், நான் பொங்கல் பண்டிகைக்காக எடுத்துக் கொண்டு இருக்கும் முயற்சி (என்னா பெரிய முயற்சி ம்..ம்ம்..பார்ப்போம்) பாதிக்கப்படும்.

நம்பிகையாளர்களிடம் விவாதம் கொள்ளக்கூடாது என்பதே எனது கொள்கை.மேலும் மதம் சார்ந்த (எந்த மதமாக இருந்தலும்) புனித நூல்கள் பற்றிய விவாதத்தினால் இனி அவைகள் மாற்றி எழுதப்படப் போவதில்லை. அவை அப்படியே இருக்கும். இதில் நான் சொல்லி எதுவும் நடக்கப் போவது இல்லை :-).தனது நம்பிக்கையை தானே கேள்விக்கு உட்படுத்த முன்வருபவர்களுக்கு இடையில்தான் விவாதம் ஒரு முடிவை நோக்கி நகரும். ஒரு கருத்தில் நம்பிக்கை உள்ளவர்களிடம் , அதே கருத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் விவாதம் செய்யும் போது, நேர விரயத்துடன் அந்த விவாதங்கள் ஒரு அர்த்தமற்ற குப்பையாகமாறி தனிமனித தாக்குதல்களாக முடிந்துவிடும்.

தமிழ் ஈழம் (இலங்கை-விடுதலைப்புலி பிராபாகரன்) ,பிராமணர்,இராமதாஸ்-திருமா, இஸ்லாம் போன்ற விசயங்களைத் தொடுவது எனக்கு கொஞ்சம் சிக்கலானது. இந்த விசயங்களில் யாரும் இந்த வலைப்பதிவு விவாதத்தினால் அவர்களது கருத்தை மாற்றிக் கொண்டதாக வலைப்பதிவுச் சரித்திரம் கிடையாது.

உங்களின் அந்தப் பதிவிற்கு முதலில் பின்னூட்டம் இட்டவன் நான். அப்போதே பெண்களின் உணர்வுகளை எழுதியமைக்காக உங்களின் கருத்துக்களை பாராட்டினேன். இப்போதும் அதே நிலையே.

//தளபதி, சின்ன தளபதி ரேஞ்சுக்கு அறிவுரை வேறு //

நான் எழுதியுள்ளது அறிவுரை எல்லாம் கிடையாது. ஏதோ புலம்ப வேண்டும் என்று நினைத்தேன்.. ம்ம்... புலம்பியாகிவிட்டது.

உங்களுக்குத் தனிமடல் அனுப்பியுள்ளேன். balloonmama என்று இருக்கும் ஏதோ junk mail என்று குப்பைத் தொட்டியில் கடாசிடாதிங்க.

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

உஷா

http://nunippul.blogsome.com/

http://nunippul.wordpress.com/


மேலுள்ள இரு வலைப்பதிவுகளுக்கான தளங்கள் சோதனையில் உள்ளன.

ப்ளாக்சம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் சில மாற்றங்கள் செய்துவிட்டு சொல்லுகிறேன்.

வாசன்

vaasuஅட்.ஜீமெயில்.காம்

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

மோகன் தாஸ், மிக்க நன்றி. நல்லா வேலை செய்கிறது.

வாசன், ஒரு மெயில் தட்டியிருக்கேன் பாருங்க.

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

உஷா!

வருந்துகிறேன் :(
It's all matter of perspectives and lack of objectivity. Take it on your stride. Of course, no other way also!!

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

ஆரோக்கியமா பின்னூட்டம் தரலாம் ஆனா இங்கே என்ன நடந்துச்சுன்னு தெரியலயே. இவ்ளோ துணிச்சலா பதிவிடுரீங்கன்னு ரொம்ப பொறாம பட்டிருக்கேன். நல்ல சிந்தனைகளுக்கு காலமில்லை!

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

Mohan das,

I am also using the post moderation option. But you have got only one option - either to publish or reject.

Is there anyway to edit the comments to make it publishable?

Thanks

 
At Friday, 25 November, 2005, சொல்வது...

பொழுது, நல்லடியார் விடுங்க, இது ஒரு சறுக்கல் அவ்வளவுதான். சில சமயம் விளையாட்டுக்கு ஏதாவது
சொல்லப் போய்கூட பெரிய பிரச்ச¨னாய் ஆகியிருக்கிறது. யதார்த்தமாய் என கருத்தை சொன்னேன் என்று நீங்கள் அனைவரும்
புரிந்துக் கொண்டால் போதும். நண்பனும் புரிந்துக் கொள்ளுவார் என்று நினைக்கிறேன்.

இளவஞ்சி, ஆரோக்கியம், செயகுமார், மோகன் தாஸ், தருமி, டோண்டு ராகவன், சிநேகிதி, கல்வெட்டு, ஜோசப், துளசி,
கல்ப் தமிழன், வாசன் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

ரவிஸ்ரீனிவாசன், கல்வெட்டு, ஆரோக்கியம் உங்கள் பதிவுகளை நீக்கியதின் காரணம் இப்பொழுது புரிந்திருக்கும் என்று
நம்புகிறேன்.

பகுத்தறிவாளன், சாரா அன்றைக்கு கொஞ்சம் ரப்பாய் பேசிவிட்டேன். மனதின் வேதனை, என்னை நிலை தடுமாற செய்துவிட்டது. சாரா உங்கள் பிளாக்கில் ஈமெயில் ஐ.டி கேட்டிருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை போல் இருக்கிறது.

 
At Saturday, 26 November, 2005, சொல்வது...

அன்புள்ள உஷா அவர்களுக்கு,

நீங்கள் மீண்டும் என்னைக் குறிப்பிட்டு வருந்துவதால் இங்கு பின்னூடுகிறேன்.

கழிந்த பதிவில் உங்களின் கண்ணோட்டம் பல விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் நீங்கள் கூறிய ஒரு கருத்தை வைத்து கேள்வி கேட்டேன். ஆனால் நீங்கள் என்னை தவறாக நினைத்து விட்டீர்கள் என்பது உங்கள் பதிலில் இருந்து தெரிந்தது. அதனால் தான் ஒதுங்கி விட்டேன்.

சாதாரணமாக பெண்கள் உடை விஷயத்தில் பலருக்கும் பல கண்ணோட்டங்கள் உண்டு. நீங்கள் அதை உங்கள்(படித்த, பொருளாதார தன்னிறைவடைந்த பெண்கள்) கண்ணோட்டத்தில் எழுதியிருந்தீர்கள் அவ்வளவே! ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தை பொதுவான ஒரு விதிமுறையுடன் ஒப்பிடும் போது கருத்து மோதல்கள் உருவாவது இயல்பே. அது தான் இங்கும் ஏற்பட்டது.

முதலில் அனைவரும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் உடை விஷயத்தில் தற்போது அனைவரும் காணும் பர்தாவை(கறுப்பு நீள அங்கி போன்ற - எனக்கே இதில் மாறுபட்ட கருத்துண்டு - உங்களைப் போல்) கூற வில்லை. இஸ்லாம் கூறும் உடை கட்டுப்பாட்டை அனுசரிப்பதற்கு இந்த உடை இலகுவாக இருப்பதால் இஸ்லாமிய பெண்கள் இவ்வுடையை பயன்படுத்துகின்றனர் அவ்வளவே. இல்லாமல் இதைத் தான் போட வேண்டும் என்று யாரும் அவர்களை வற்புறுத்தவில்லை(சிலர் மடத்தனமாக செய்வதை இதில் சேர்க்க வேண்டாம்). நான் அறிந்தவரை வற்புறுத்தவும் கூடாது என்பது தான் இஸ்லாமிய கொள்கை. இல்லை அனைவரும் போட்டுத் தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்துவார்களானால் அது நிச்சயமாக தவறானதே. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி செயல் பட உரிமையுண்டு. அதில் தலையிட ஒருவருக்கும் உரிமையில்லை.

இது எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்பதால் அல்ல. மோசமான ஆண்களிடமிருந்து, அவர்களுடைய மோசமான பார்வைகளிலிருந்து தன்னை பாது காக்கவே. அதுவும் யார் தன்னை கண்ணியமானவர்களாக மற்றவர் காணவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களுக்கே!.

கற்பு, கண்ணியம் என்பதெல்லாம் கேலிக்குரியதாக நினைக்கும் சிலரிடம் உடைக் கட்டுப்பாடை குறித்து பேசுவதும் கேலிக்குரியதே. நாகரீக உலகில் குட்டைப் பாவாடை அணிவது தன் சுதந்திரம் என்றும், அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்றும் நினைப்பவர்களிடம் இவ்வுடை காண்பதற்கு ஆபாசமாக உள்ளது எனவே நீங்கள் குறைந்த பட்சம் சல்வாரையாவது அணியுங்கள் என்று கூறினால் கண்டிப்பாக அங்கு கருத்து மோதல்கள் உருவாகத் தான் செய்யும்.

 
At Saturday, 26 November, 2005, சொல்வது...

//யதார்த்தமாய் என கருத்தை சொன்னேன் என்று நீங்கள் அனைவரும்
புரிந்துக் கொண்டால் போதும்//

உஷாஜி!

புரிந்து கொண்டேன்!!!

உங்களின் நடுநிலைமையும் நேர்மையும் உங்களின் பதிவுகளின் மூலம் உணர்ந்தவன் என்பதால்தான் முந்தைய பின்னூட்டங்களில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தேன்.

(சரி. இன்னொரு தடவை முதலை வாயில் தலையை விட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். போட்டோவைச் சொன்னேன்!)

:-)))

சகோதர அன்புடன்,

 
At Saturday, 26 November, 2005, சொல்வது...

சற்று காலத்திற்கு முன்பே வலைப்பூவில் காலடி வைத்துவிட்டாலும், இப்பொழுது தான் சற்று விரிவாக பங்கு கொள்ள முடிகிறது.

பொதுவாக வலைப்பூக்களில் எழுதுகிறவர்கள் - எழுதும் இன்பத்திற்காக அன்றி - பலருடைய கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்ற நப்பாசையுடன் இயங்குகிறார்களோ என்ற எண்ணம் உண்டு.

அதனால், விமர்சனம் சற்று கடுமையாகவே வந்து விட்டது.

விமர்சனங்கள் கடுமையாக எழுந்ததற்காகவெல்லாம் பயப்பட்டால் எப்படி?

தொடர்ந்து எழுதுங்கள்.

உங்களுக்கு கவிதை பிடிக்குமென்றால், அடுத்த வருடம் பெப்ருவரி மாத வாக்கில் புத்தகமாக வரவிருக்கும் என் கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் உள்ளன.

படித்து கருத்து சொல்லுங்கள்.

அப்புறம் - என்ன சொன்னீர்கள் - கவிதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்றா?

இல்லீங்க. கவிதை மட்டுமல்ல - எதுவுமே தன்னைத் தானே எழுதிக் கொள்ளாது. இங்கும் முயற்சி தேவை. திரும்ப திரும்ப வாசித்து கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கி...

நிறைய நகாசு வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும் - ஒரு நல்ல கவிதையை உண்டாக்க.

 
At Saturday, 26 November, 2005, சொல்வது...

//தமிழ் ஈழம் (இலங்கை-விடுதலைப்புலி பிராபாகரன்) ,பிராமணர்,இராமதாஸ்-திருமா, இஸ்லாம் போன்ற விசயங்களைத் தொடுவது எனக்கு கொஞ்சம் சிக்கலானது. இந்த விசயங்களில் யாரும் இந்த வலைப்பதிவு விவாதத்தினால் அவர்களது கருத்தை மாற்றிக் கொண்டதாக வலைப்பதிவுச் சரித்திரம் கிடையாது.
//


:-) Who said?! Adi mel Adi vizhunthaaa... ammiyum naharum... :-)

 
At Saturday, 26 November, 2005, சொல்வது...

//தமிழ் ஈழம் (இலங்கை-விடுதலைப்புலி பிராபாகரன்) ,பிராமணர்,இராமதாஸ்-திருமா, இஸ்லாம் போன்ற விசயங்களைத் தொடுவது எனக்கு கொஞ்சம் சிக்கலானது. இந்த விசயங்களில் யாரும் இந்த வலைப்பதிவு விவாதத்தினால் அவர்களது கருத்தை மாற்றிக் கொண்டதாக வலைப்பதிவுச் சரித்திரம் கிடையாது.
//

Who said? Adi mel Adi vizhunthaa... Ammiyum naharum..:-)

 

Post a Comment

<< இல்லம்