தமிழகத்தின் அடுத்த தலைவி குஷ்பூ.
போகிற போக்கைப் பார்த்தால், குஷ்பூவை பிரபலமாக்காமல் விட மாட்டார்கள் போல் இருக்கிறது. இ.டூவில் ஏதோ சொன்னாங்க, படிச்சிப் பார்த்தப் பொழுது, அதில் தமிழ் மக்களைக் குறித்து இல்லை என்பது தெரிந்தது. ஆனால் மறுநாள் சொன்னது பற்றிக் கொண்டது. கண்டனம், ஆர்பாட்டம், உருவ பொம்மை கொளுத்துதல், செருப்படி மற்றும் அதன் நீட்சியாய் கோர்ட் கேஸ் என்றதும், கண்ணீரும் கம்பலையுமாய் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
சரிதான் கதை முடிந்தது என்றுப் பார்த்தால் விதி சும்மா விடவில்லை. ரிடையர் நடிகை சுஹாசினி வீறுக் கொண்டு எழுந்து, பெண்ணீயவாதியாய் காட்டிக் கொள்ள குஷ்பூ சொன்னது தப்பில்லை என்று சொல்லிவிட்டார். அவர்தான் ஏதோ சொல்கிறார் என்றால் இந்த குஷ்பூ அது முடிஞ்சிப் போன கதை என்று மேடையிலேயே எடுத்து சொல்லி மேட்டரை குளோஸ் செஞ்சியிருக்கலாம் இல்லையா? ஒருவேளை சுஹாசினிக்கும் அரசியல் ஆர்வம் வந்துவிட்டதா?
வலைப்பதிவில் இருந்து, பெண்களை மதித்து தெய்வமாய் வழிப்படும் சத்தியராஜ், மேடை பேச்சாளர் வெற்றி கொண்டான் வரை, தமிழ் பெண்களை அப்படி பேசியது தவறு என்று கண்டித்திருக்கிறார்கள். நடிகை உளறினால் அவர்களுடைய பூர்வீகம் அலசப்படும், இன்று குஷ்பூவுடன் சுஹாசினியை எவ்வளவு கீழ்தரமாய் பேசுகிறார்கள்?
ஆனா ஒண்ணுங்க, இந்த பிரச்சனையை ஊதி ஊதி பெருசாக்கினால் நாளைக்கு குஷ்பூ எலக்ஷன்ல நின்று எம்.எல்.ஏ பிறகு
மந்திரி பிறகு... நினைச்சாலே சிரிப்பாய் இருக்கிறது. சொல்ல முடியாது, கோவிலே கட்டியவர்கள் ஓட்டு போட மாட்டார்களா என்ன? தன்னைப் பாடாய் படுத்துகிறார்கள் என்று இன்னும் கொஞ்சம் நன்றாய் அழுது ஓட்டு வாங்குவது வெகு சுலபம். இன்று குஷ்பூவை அசிங்கமாய் திட்டும் காகிதபுலிகள் அன்றைக்கு எப்படி நடந்துக் கொள்வார்கள்?
அரசியலில் "வாய்மையே வெல்லும் " என்று பெரிய தலைவர் சொல்லியிருக்கார். அதாவது வாயும், மையும் வெல்லும்.
அதாவது மைக்( வாய்) பிடித்து பேசுபவர்களைப் பற்றிய செய்திகள்( மை) பத்திரிக்கைகளில் தொடர்ந்து வந்தால் வெற்றி.
30 பின்னூட்டங்கள்:
பெண்களை மதித்து தெய்வமாய் வழிப்படும் சத்தியராஜ்
put a single quote or a smiley there
//அதாவது மைக்( வாய்) பிடித்து பேசுபவர்களைப் பற்றிய செய்திகள்( மை) பத்திரிக்கைகளில் தொடர்ந்து வந்தால் வெற்றி. //
அது!!!!!!
இன்னும் கொஞ்ச நாள் போனால் ரேவதி ஆதரவு தெரிவிப்பார். அதன்பிறகு இன்னும் யாராவது.. எங்கே இருந்தாவது சுகாசினிக்கோ, மணிரத்னத்திற்கோ மேலிடத்து பிரஷர் வந்தால் இவரும் மன்னிப்பு கேட்டுகொள்வார்.
இது சினிமா அரசியலுங்க!
தேன் துளி, ரேவதி இன்னும் வாய்ஸ் கொடுக்காதது அதிசயமே! குஷ்பூவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அவ்வளவுதான் கைது செய்து, நாலு நாட்கள் ஜெயில் இருந்துவிட்டு,ஜாமினில் வந்தால், அடுத்த எலக்ஷனில் நிற்க அத்தனை தகுதியும் வந்தது. இன்னும் மேலிடம் கண் அசைக்கவில்லை,
லேசா ஜாடை காட்டினால் போதும் காட்சிகள் மாறிவிடும். இப்பொழுது சவுண்ட் விடுபவர்கள் வாய் டப் என்று மூடிக் கொள்ளும்.
சன் டீவி தினமும் குஷ்பூவைப் பற்றி சொல்லி நேர்மறையான பலனை தருகிறது.
ஜெயகுமார், அரசியல் என்றாலும் இப்படிப்பட்டவர்கள் ஆள வேண்டுள்ளது நம் தலைவிதி என்பது வேதனையான விஷயம்.
சுரேஷ், சொன்னது யாரு என்று கண்டுப்பிடிச்சீங்களா ?
ரவி, ஸ்மைலியா? பயங்கர கடுப்பில் எழுதினேன்."இங்கிலீஷ்காரன்" படம் பார்த்தீர்களா? மைத்துனி, மாமியார் எல்லாரையும் தர குறைவாய் பேசுவார், அது வெறும் லொள்ளு, தன் கேரக்டர் என்று தன்னிலை விளக்கம் வேறு.
உஷா நம்ம மக்கள் இப்ப எதுவும் முடியலைன்னா வாய்ஸ் கொடுக்க ஆரம்பிக்கறாங்க.
அதுக்கு குஷ்பு மாதிரி யாராவது மாட்டிக்கிறாங்க. முடிஞ்சு போன பிரச்சனையை திரும்ப ஆரம்பிச்சாச்சு.. இது எங்க போய் முடியுமோ?
கணேஷ், முடிந்துப் போன விஷயம் ஏன் திரும்ப ஆரம்பிக்கப்பட்டது? இதை கண்டுக்காமல் விட வேண்டும். இல்லை என்றால் குஷ்பூ இதை தனக்கு சாதகமாய் திருப்பிக் கொள்வார் என்று நினைக்கிறேன். இதை தட்டச்சு செய்யும்பொழுது, சன் டீவியில் அதே குஷ்பூ, சுகாசினி மேட்டர். சுகாசினிக்கு கருப்பு கொடி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகளிர் அணியினர் குரல்
கொடுப்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
//இன்று குஷ்பூவை அசிங்கமாய் திட்டும் காகிதபுலிகள் அன்றைக்கு எப்படி நடந்துக் கொள்வார்கள்?
//
ஒரு வேளை அப்படி ஒரு "அசம்பாவிதம்" நடந்துவிட்டால் ...................! "அம்மா!","தாயே","சகோதரியே" (சத்தியமாய் உங்களைத் தாங்க!!!!!!!) உங்களுக்கு ஏன் இந்த விபரீத சிந்தனை?
முடிந்துப் போன விஷயம் ஏன் திரும்ப ஆரம்பிக்கப்பட்டது? இதை கண்டுக்காமல் விட வேண்டும்.
இது உங்களுக்குத்் தெரிந்தும் இந்தப்பதிவு ஏன்!? இதே கதைதான் ஊரெங்கும்...:)
பேசுவதன் தாத்பரியம் புரிந்து பேசாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவது கண்டிப்பாக பிரச்னைகளைத்தான் உருவாக்கும். அன்று தங்கர், இன்று சுகாசினி! நாடே புயல் மழைன்னு அவதிப் பட்டுக்கொண்டிருக்கும்போது, இதெல்லாம் ஒரு பிரச்னை என்று ஏகப்பட்ட பேஸ் லிப்ட் தேவைதானா?
இறைநேசன் ஐயா, என் விபரீத சிந்தனைகள் பொய்த்துப் போகணும் என்று வேண்டிக்குங்க.அப்புறம் "தாயே, தெய்வமே,
சகோதரியே" எல்லாம் என்னைத்தான் குறிக்கின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ;-)
அன்பு, தாணு நீங்கள் சொல்வது சரி என்றாலும், நடிகைகள் பேசினால் ஏன் அவர்களை மட்டமாய் தாக்க வேண்டும்? சொல்லும் கருத்து சரியில்லை என்பது பின்னால் போய்விடுகிறது. பெரும்பாலும் அனைத்து ஆண்களின் பார்வைகளும் இப்படிதான் இருக்கின்றன. மிச்ச விளக்கங்கள் ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது :-)
உஷா
இன்றைய ஜீனியர் விகடன் பார்த்தீர்களா? குஷ்புவின் புது இயக்கம் பற்றி:)))
தேந்துளி பார்த்தேன்."வாய்""மை"யே வெல்லும்.
ஜீவஜோதி, செரினா, ஜெயலட்சுமி, குஷ்பு, இப்போது சுகாசினி....
இதிலும் குஷ்பு மற்றும் சுகாசினியினால் ஒருவருக்கு மட்டும் பெருத்த நட்டம் - அவர் நம்ம மாற்று சக்தி - அடுத்த முதல்வர் - விசய காந்த்துதான். படத்தில் பேசு முடியா வீர வசனங்களை முன்னாள் ஹீரோயின்கள் பேசித்தாக்க சென்னை மழையில் காணமல் போன சாலைகள் மாதிரி ஆகிவிட்டார்.
குஷ்பு இயக்கம் - சுகாசினி இயக்கம் - எல்லாம் பத்திரிக்கைககளின் விற்பனைக்கான பெட்ரோல்கள்.
சுகாசினிக்கு அநேகமாக சனிதிசை என்று நினைக்கிறேன். தமிழர்களின் சார்பில் மன்னிப்பு கேட்க இவர் யார் ( 'ஜெ'க்குதான் அந்த உரிமை இருக்கிறது - விவகாரம் எதுவுமில்லை. அவர்தானே தமிழகம் ). தானே மேதாவி என்கிற அறிவீலித்தனம்தான் இது. குஷ்பு செய்த எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆதரிக்கும் இவர் எயிட்ஸ் நமக்கெல்லாம் கற்றி கொடுத்த ஒருவனுக்கு ஒருத்தி என்னும் ஒழுக்கத்தை வலியுறுத்துவர்களை கூண்டில் ஏற்றுவது ஏன்
குஷ்பு பிரச்சனையில் தூக்கப்பட்ட துடைப்பைகட்டைகள் நம்பிக்கை தருகிறது குஷ்பு சுகாசினி போன்ற கழிவுதொட்டிகளின் பின்னே இல்லை எம் பெண்கள் என்று...........
கையிலே எடுத்த துடைப்பத்தை அப்படியேக் கடாசிடாம, கொஞ்சம் தரையைச் சுத்தம் செஞ்சா
ஊரே 'பளிச்' ஆயிறாது? :-)
ஆக்கப்பூர்வமா எதாவது செய்யுங்கன்னு வேண்டிக்கலாமா?
ஏங்க, 'யாரா' இருந்தாலும் சுயமாப் பேசுனா அது தப்புங்களா? அது அவுங்க கருத்துன்னு
வுட்டுட்டுப் போகவேண்டியதுதானே?
ஆளாளுக்கு நான்தான் தமிழகம்ங்கிற மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்கய்யா!
ஒருவர் தன் சார்பாக மட்டும்தான் சுயமாக பேசமுடியும். தமிழ்கம் சார்பில் எப்படி சுயமாக பேசமுடியும்.....
மற்றபடி உங்கள் நகைச்சுவை உணர்வை ரசித்தேன்
குஷ்பூ விவகாரம் அப்படியே அமுங்கிப்போவதில் பெரிய தலைகள் சிலருக்கு ஆர்வம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஊடகங்களும், விளம்பரப்பிரிய அரசியலாரும் "தமிழகத்தை"யே குஷ்பூவின் கருத்துக்களுக்காக பொங்கி எழ வைக்கும்போது, சுஹாசினியால் தமிழருக்காய் மன்னிப்புக் கேட்பது முடியாதா என்ன?
பி கு: கில்லி படத்தில் எனக்குப் பிடித்த வசனம்: "என்னாடா எல்லாரும் தமிழ்னாடே என் பின்னாலே இருக்குதுன்னு உதார் விடறீங்க? நீங்க என்ன ஆந்திரா பார்டர்லேயா நிக்கரீங்க?"
வாயும் மையும் - ஆண்டவனால் மட்டுமே இப்படி ஒரு கருத்துச் சொல்ல முடியும் - சரிதானே உஷா?
ஆரம்பிச்சாட்டங்கையா... ஆரம்பிச்சாட்டாங்கயா.... (கொஞ்சம் வடிவேலு ஸ்டைல்ல படிங்க)
முத்துகுமரரே, நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையை பேசுவதும், அவளுக்கு கோவில் கட்டி கும்பிடுவதும் இரண்டுமே வேண்டாமே!
கற்பு நெறியைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள், இன்று அரசியலில், நடிப்பில் முன்னணியில் இருக்கும் நடிகர்களின் சொந்த வாழ்க்கை
சுத்தமானதா? அனைத்துக்கும் நம் அரசியல் அமைப்பு காரணம். வயசு இருபத்தி ஒன்று ஆச்சா, பைத்தியகார ஆஸ்பத்திரியில் ட்ரீட்மெண்ட் எடுத்ததில்லையா, இன்சால்வன்சி கொடுத்ததில்லை போதும் இந்த மூணு தகுதிகள் தேர்தலில் நிக்க. தனக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து குவித்த கோடிகள் மட்டும் போதாது அதிகார பலமும் வேண்டும் என்று நாற்காலி கனவுடன் வந்து விடுகிறார்கள். சின்ன வேலைக்குக் கூட படிப்பும், அனுபவமும் தேவை, ஆனால் நாட்டை ஆள????
துளசி, துடைப்ப கட்டை மட்டும் போதாது, பீளிசிங் பவுடரும் வேணும் :-)
ஐயா சுரேசு, நன்கு சொன்னீர். அந்த "ஆண்டவர்" அறியாததா? அடுத்து விஜய் அரசியலுக்கு வரப் போறார் (அருள்வாக்கு)
மூர்த்த, அதே தமிழகம்தான் நீங்களும்,
நானும் :-))))
வெ. நாதரே, யாரு ஆரம்பிச்சது ?????
sorry, பெயர் திருத்தம்- மூர்த்தி
நான் யார் தெரியுமா? என் மீது நடவடிக்கை எடுத்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி சரத்குமாருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினார் சுகாசினி.
Evlo periya SMS... :-)
சொந்த வாழ்க்கையில் அனைவரும் சுத்தமுடன் இருக்க வேண்டும் என்பதுதான் நான் கொண்டிருக்கும் எண்ணம். அரசியலைமைப்பை குறை கூறுவதை விட ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை நேர் செய்து கொண்டாலே போதும்.
நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவது என் எண்ணம் அல்ல. அதற்கு அவசியமும் இல்லை. வருத்தப்டுவதைப்போல சமூகத்ததை பற்றி அவர்கள் பேசுவது குறித்து என் உணர்வுகளை பதிவு செய்தேன் அவ்வளவுதான்.
இது போன்ற எதிர்ப்புகள் அவர்களுக்கு அவசியம் தேவை. தமக்கு தலைமைத் தகுதி வந்துவிட்டதாக எண்ணாமல் இருப்பதற்காகவாவது
//இது போன்ற எதிர்ப்புகள் அவர்களுக்கு அவசியம் தேவை. தமக்கு தலைமைத் தகுதி வந்துவிட்டதாக எண்ணாமல் இருப்பதற்காகவாவது//
முத்துகுமரன், இந்த எதிர்ப்புகளை, விளம்பரமாய் மாற்றிக் கொள்ளும் சாமார்த்தியம் அவர்களுக்கு உண்டு.
எல்லாரும் தான்! சும்மா இருக்க மாட்டீங்களே! குஷ்பு மழை பேஞ்சு ஒஞ்ச்சு! அடுத்தது சுஹாசினி, ஆரம்பிச்சிட்டாங்கையா!
ஆமாம் நான் தான் கோபிசெட்டிபாளையம் வேட்பாளர் எங்கள் தங்கத்தலைவி அறிவித்துவிட்டார்.
வெளிகண்டரே, நான் முடிச்சிட்டேன் என்று நினைத்தால், வா.மணிகண்டன் வந்து நிற்கிறார். மணிகண்டரே, விளையாட்டா நிஜமா?
ஙொக்காமக்க... இதெல்லாம் ரொம்ப ஓவரூ...(வின்னர் பட வடிவேலு சொல்ற மாதிரி)...
அஹா.. நீங்க வேற.. நீங்க சொல்றதெல்லாம் நடக்குதுனு சொல்றீங்க.. இது மட்டும் நடந்துச்சு.. !!!
-
செந்தில்/Senthil
ஒரு கழுத சுகாசினிக்கி லெட்டெர் எழுதினிச்சி
மறுகணமே அந்த கழுத தான் செஞ்சது தப்புன்னு சொல்லிட்டு
ஒரு கழுதையோட மனசு இன்னொரு கழுதைக்குதாங்க புரியும்..
http://singaarakumaran.blogspot.com/2005/11/blog-post_113196862249017962.html
This comment has been removed by a blog administrator.
Post a Comment
<< இல்லம்