Saturday, November 26, 2005

கண் படும் விஷயம்.

கண் படும் விஷயம்.

கேரளா பாணி திருமணங்கள் நம் ஊரில் அதிகமாகி வருகிறது. வரதட்சணை வேண்டாம் என்று சொல்லப்பட்டாலும் அதிக ஆடம்பர திருமணங்கள் அதிகமாகி வருகின்றன. இருக்கிறதோ இல்லையோ, சொந்தங்கள் நட்புகளை செய்வதைப் பார்த்து நாமும் செய்தே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை. ஒன்றிரண்டு நாள் வைபவத்துக்கு லட்ச கணக்கில் பணம் செலவழித்து பெருமையைக் காட்டிக் கொண்டாலும், அதைப் பார்த்தவர்கள் யாரும் போற்ற போவதில்லை, ஞாபகத்திலும் வைத்துக் கொள்ளப் போவதில்லை.

பணம் இருந்தவர்கள் காட்டும் பகட்டு, இருக்கு என்று காட்டிக்கிறார்கள், அலட்டிக் கொள்கிறார்கள் என்று பொறாமை பேச்சு
எழும். இல்லாதவர்கள் செய்தால், கடன் வாங்கியாவது செய்யணுமா, இவர்கள் பவுஷ¥ தெரியாதா என்று கேலி பேசுவார்கள்.
இல்லை என்றால் "இது என்ன கல்யாணம் இதை விட நாங்க சூப்பரா செஞ்சோம்" என்று வெட்டி பெருமை பேசப்படும்.

நான் கல்யாணம் முடிந்து அஸ்ஸாமுக்கு போனப் பொழுது, கிட்டதட்ட ஓரே வயது செட். கேரளா, ஆந்திரா, வட இந்தியர்கள் இன்ஜியர் மாப்பிள்ளைக்கு அள்ளிக் கொடுத்திருந்தார்கள். எனக்கு அப்படி எதுவும் தரவில்லை :-) சமையல் பாத்திரம் தவிர அனைத்தும் என் கணவர் வாங்கியது.

எங்கள் வீட்டு கல்யாணங்கள், வெகு எளிமையாகத்தான் இருக்கும். வரதட்சணை, பேரம், நகை, சீர் என்ற பேச்சுகள் அபூர்வம். அப்படி பேசினால் பெண் தர மாட்டார்கள். வசதி இருந்தாலும் பின்னால் தருவார்களே தவிர கல்யாணத்தின் பொழுது அடக்கி வாசிப்பார்கள். அதற்கு பிறகும் தீபாவளி, பொங்கல் லொட்டு லொசுக்கு சீர் கதையெல்லாம் கிடையாது. பிள்ளை பேறின் பொழுது, மாப்பிள்ளை ஆஸ்பத்திரி செலவை ஏற்றுக் கொள்ளுவது சகஜமான விஷயம்.

என் கல்யாணத்தில் தாலி காலை ஆறரை மணிக்கு கட்டியப்பிறகு, மத்தியானம் பன்னிரண்டு மணி வாக்கில் அத்தை, என் அம்மாவிடம் "நீங்கள் போட்ட நகைகளை, எங்க வீட்டு பெரியவர்கள் (பெண்கள்) பார்க்க ஆசைப்படுகிறார்கள், கொஞ்சம் உஷாவிடம் அனுப்புங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அவருக்கு என் பெற்றோர் என்ன போட போட்டிருக்கிறார்கள் என்று அதுவரை தெரியாது. இதை பலரிடம் சொன்னப் பொழுது யாரும் நம்பவில்லை. எங்கள் கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்தது என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் :-)

தன் பெற்றோரை பாடாய் படுத்தி நடத்தப்படும் கல்யாணம் எந்த பெண்ணுக்கு புகுந்த வீட்டின் மீது பிரியத்தை ஏற்படுத்தும்? பொதுவாய் கல்யாண பேச்சுகளிலும் பிறர் தலையீடும் இருக்காது. இப்பொழுது வெளிநாட்டு மாப்பிள்ளைகள் அமைவதால், எனக்கு தந்த எவர்சில்வர் பாத்திரங்கள் கூட வாங்க தேவையில்லை. பகட்டு பட்டு புடைவைகளும் தேவையில்லை என்கிறார்கள்.

அதனால் பெண் பிறந்துவிட்டால், பெரியதாய் சேர்த்து வைப்பது கவலைப்படுவது எல்லாம் இல்லை. பொறாமையாய் இருக்கிறதா?

8 பின்னூட்டங்கள்:

At Saturday, 26 November, 2005, சொல்வது...

//பொறாமையாக இருக்கிறதா?//

இல்லை உஷா. சந்தோஷமாக இருக்கிறது.

என் கல்யாணத்திலும் செலவு மிகவும் குறைவுதான்.

வரதட்சிணையெல்லாம் இல்லை.

 
At Sunday, 27 November, 2005, சொல்வது...

மாமி
அப்பிடி இப்பிடி சொல்லி எங்களுக்கு வரதட்சனை குடுக்காம கண்ணாலம் கட்டி குடுக்கலாம்னு
பிளான் பன்னிட்டீங்க.
பாத்திரம் பண்டமெல்லாம் வேணாமுங்க அதான்
கண்ணாலம் முடுஞ்சவுடன் நாங்க ஊர விட்டு அழச்சிட்டு வந்திர போறோமே.
அதனால உங்களுக்கு சீமந்தம் தல தீபாவளி
இந்த சிரமமெல்லாம், இந்த செலவெல்லாம் நாங்க வைக்க போறதில்ல"தன் பெற்றோரை பாடாய் படுத்தி நடத்தப்படும் கல்யாணம் எந்த பெண்ணுக்கு புகுந்த வீட்டின் மீது பிரியத்தை ஏற்படுத்தும்? பொதுவாய் கல்யாண பேச்சுகளிலும் பிறர் தலையீடும் இருக்காது. இப்பொழுது வெளிநாட்டு மாப்பிள்ளைகள் அமைவதால், எனக்கு தந்த எவர்சில்வர் பாத்திரங்கள் கூட வாங்க தேவையில்லை. பகட்டு பட்டு புடைவைகளும் தேவையில்லை என்கிறார்கள்."

இது நீங்களா பண்ணிவக்கிற கல்யாணம்

அதனால கொஞ்சம் பெரிய மனசு பண்ணி..........


எடைக்குஎடை........

(உங்க பொண்ணூக்கு நீங்க செய்யபோறீங்க!)

 
At Sunday, 27 November, 2005, சொல்வது...

வரதட்சணை பற்றிய கண்ணோட்டம் நிறைய குடும்பங்களில் மாறியிருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட சமூகத்தினரிடம் ஒட்டு மொத்த மாறுதல் வருமளவு முன்னேற்றம் இல்லை. இப்போதைய இளைஞர்களின் கருத்தும் ஓரளவு மாறி வருகிறது. மாற விடாமல் தடுப்பவர்களும் முந்தைய தலைமுறை பெண்களே என்பதுதான் வருந்தத் தக்கது.

 
At Sunday, 27 November, 2005, சொல்வது...

துளசி காதல் கல்யாணம் செஞ்சிக்கிட்டவங்கள ஆட்டத்துல சேர்த்துக்க முடியாது :-)

சிங்ஜி, பொண்ணு வக்கீலுக்கு படிக்கிறா. யாராவது தைரியமா கேட்க முடியுமா?

தாணு, நீங்கள் சொன்னது சரி என்றாலும், ஆடம்பரம் அதிகரித்துள்ளது. சரியா? எப்படி இருந்தா என்ன, பெண்ணை பெற்றவனுக்குதானே செலவு?

 
At Sunday, 27 November, 2005, சொல்வது...

//தாணு, நீங்கள் சொன்னது சரி என்றாலும், ஆடம்பரம் அதிகரித்துள்ளது. சரியா? எப்படி இருந்தா என்ன, பெண்ணை பெற்றவனுக்குதானே செலவு? //

உஷா, செலவெல்லாம் ரெண்டு பக்கமும் தான். இன்னமும் நான் என் கல்யாண கடனையும், என் மாமனார் வரவேற்பு நிகழ்ச்சி கடனையும் அடைச்சிக்கிட்டு தான் இருக்கோம் (வெளில சொன்னா தான் நம்ப மாட்டேங்குறாங்க).

ஆடம்பரம்!!! ம்ம் நிறையவே இருக்கு.

 
At Sunday, 27 November, 2005, சொல்வது...

அய்யயோ நான் வரதட்சனையெல்லாம் கேக்கலேங்க ! உங்களுக்கு தெரியும் என்ன செய்யனும்னு . சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன், அதுக்காக இப்பிடியேல்லாம் மிரட்ட கூடாது.அப்புறம் நானும் கேஸ் போட்டுருவேன்.

 
At Sunday, 27 November, 2005, சொல்வது...

டேய் வரதட்சணை வானாம்னு சொல்லாதே!.. அப்புறம் மாப்ளைக்கு அதுல இதுல ஓட்டைன்னு ஆயிரம் குறை சொல்வாங்க என்ற நண்பர்களின் வேண்டுகோளையும் நிராகரித்து வரதட்சணை வேண்டாம் என்றுதான் சொன்னேன். ஆனால் அவர்கள் சார்பில் எங்கள் பெண்ணுக்குச் செய்கிறோம் என்று சொல்லி நிறைய செய்தார்கள். கல்யாணம் ஆனபின்தான் தெரியும், எங்கள் சொந்தக்காரர் ஒருவர்'மாப்ளை அப்டிதான் சொல்லுவான், ஆனா நீங்க கட்டாயம் செஞ்சிப்புடுங்க!' என்று முன்பே கண்டித்துக் கேட்டதாக!!!

எனது சகோதரிகளுக்கு "யாரும் கேட்காமலேயே" நானாக என்னால் முடிந்த அளவுக்கு நிறைய செய்துதான் அனுப்பினேன்.

 
At Friday, 02 December, 2005, சொல்வது...

உஷா.. இந்த பதிவைப்பாருங்கள்

http://www.bethechange.org/blog/mark/index.php?p=114#more-114

 

Post a Comment

<< இல்லம்