Friday, November 25, 2005

மணியப்பன் குடும்பத்திற்கு உதவி- Infosys

தலீபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மணியப்பன் குட்டி குடும்பத்திற்கு ஒரு கோடி ( Dhrms-802162) ரூபாய் நிதியை இன்போசிஸ் நிறுவனம் கேரளா முதல் அமைச்சர் மூலம் கொடுப்பதாக அறிவித்துள்ளதாய் கல்ப் நீயூஸ் செய்திதாளில் வந்துள்ளது. வேறு எங்கும் இந்த செய்தி கண்ணில்படவில்லை. இந்த தொகைக்கூட பத்துலட்சமாய் இருக்கும் என்று தோன்றுகிறது. அரசு பத்துலட்சம் ரூபாயும், பிள்ளைகள் மேல்நிலை வரை பள்ளியில் இலவச கல்வியும் வழங்கும் என்று என்.டி டீவில் சொன்னார்கள்.

இத்தகைய பிரச்சனைக்கு உரிய இடங்களில் வேலைக்கு செல்வோர்களுக்கு அரசு சார்பில் இன்சூரஸ் திட்டங்கள் இருக்கிறதா?
இல்லை என்றால் கட்டாயம் ஆக்க வேண்டும். மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் என்பது டிரைவர் போன்ற சாதாரண தொழிலாளிக்கு நல்ல சம்பளம். அதற்கு ஆசைப்பட்டு, மணியப்பன் குட்டி அவர்களின் கிராமத்து சுற்றுவட்டார மக்கள் நிறைய பேர்கள் BRO வில் வேலைக்கு சேர்திருக்கிறார்கள்.

இங்குள்ள கேரளாவினர் அனைவருக்கும் ஊரில் வீடு கட்டிவதுதான் முதல் லட்சியம். வீடு என்றால் நாற்பது, ஐம்பது கொடுத்து வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பு இல்லை. நிலம் வாங்கி, மரமும், கிரானைட்டும், மார்பிளும் இழைத்து கட்டும் பங்களாக்கள். கேரளா சுற்றுபயணத்தில் பல வீடுகள் .. இல்லை இல்லை பங்களாக்கள் கண்ணில் பட்டன. அனைத்தும் துபாய் பணம் என்றார்கள். ஒன்று போல் ஒன்று இல்லை. அத்தகைய பங்களாக்கள் தமிழ்நாட்டில் மிக குறைவு.

இப்பொழுது ஓட்டு வீட்டில் குடியிருக்கும் தன் ஏழை குடும்பம், அத்தகைய பங்களாவில் குடியமர்த்த பாடுப்பட்ட மணியன் ராமன் குட்டியின் ஆசை இந்த உதவியால் ஓரளவு நிறைவேறலாம். ஆனால் என்ன தவறு, குற்றத்திற்கு என் தந்தை கொலை செய்யப்பட்டார் என்று அவரின் இரண்டு குழந்தைகள் கேள்வி கேட்டால் பதில் அந்த இறைவனாலும் கொடுக்க முடியாது?

5 பின்னூட்டங்கள்:

At Friday, 25 November, 2005, Blogger மணியன் சொல்வது...

இன்ஃபோசிஸ் நிறுவனம் உதவி செய்வது நல்லதுதான். ஆனால் எதற்காக என்று புரியவில்லை. மனிதாபிமானம் என்றால் காஷ்மீரில் தினம் தினம் எத்தனை ஒன்றுமறியா பொதுமக்கள் தீவிரவாதத்திற்கு இரையாகிறார்கள், அவர்களுக்கு ஏதாவது உதவியிருக்கிறார்களா ? கல்ஃப் செய்தியில் ஏதோ தவறு இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அவர் பணி புரியும் BRO நிறுவனமோ இந்திய அரசோ கொடுப்பது சரி.

ஊழலை எதிர்த்து போரிட்டு மாண்ட மஞ்சுநாத் சண்முகத்திற்கு இந்தியமக்கள் அனைவரும் கொடுக்கலாம்.

 
At Friday, 25 November, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Friday, 25 November, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

802162 திராம்ஸ் பணத்தை ரூபாய்க்கு பன்னிரெண்டால் பெருக்கிப் பாருங்க!
மணியன் எவ்வளவு, யார் என்றே கேள்வி வேண்டாமே, ஏழைப்பட்ட குடும்பம் எவ்வளவு தந்தாலும் தகும்.

 
At Saturday, 26 November, 2005, Blogger மணியன் சொல்வது...

//ஏழைப்பட்ட குடும்பம் எவ்வளவு தந்தாலும் தகும்//
நான் உடன்படுகிறேன். நான் சொல்ல வந்தது இன்ஃபோசிஸிற்கு என்ன திடீர் அக்கறை என்பதே. அவர்கள் வழக்கமாக இதுபோல கொடுத்துவந்திருந்தார்கள் என்றால் ஐயம் எழாது.

 
At Saturday, 26 November, 2005, Blogger ilavanji சொல்வது...

http://www.infosys.com/infosys_foundation/index.htm

 

Post a Comment

<< இல்லம்