ஆரம்பிச்சுட்டாங்கையா.. ஆரம்பிச்...சிட்டாங்க.
இணையத்தில் பதிவு போடுமாறு பலரும் சொன்னப் பொழுது தயங்கியதற்கு தொழிநுட்ப அறிவு குறைவு என்ற பிரச்சனையிருந்தாலும், இது அடிக்கடி அப் டேட் செய்ய வேண்டிய ஒன்று என்று சொன்னதைக் கேட்டுத்தான் அதிகம் பயந்தேன். அப்படி தினமும் எழுத என்ன விஷயம் கிடைக்கும் என்பதுதான் என்று குழப்பமாய் இருந்தது.
ஆனா பாருங்க தங்கர், குஷ்பூ, கற்பூ பிறகு சுகாசினி, செருப்பு, விளக்குமாறு என்று மேட்டருக்கா பஞ்சம் என்று தமிழ் கூறும் நல்லுகம் கையைக் காட்ட, இப்ப மாட்டினார் கலைஞர். மரம் அவர்களின் மொழியில் சொன்னால் "டிகிடி, டிகிடி" என்று பதிவுகள் கொட்ட தொடங்கியுள்ளன.
பாவம் கலைஞர், ஏதோ வயசான காலத்துல பழைய நெனப்புல சொல்லிட்டார். ஆனா, இது இந்த காலத்துல ஒர்க் அவுட் ஆகுமா என்ன? ஒரு சின்ன சந்தேகம், வை.கோ பொதுவாய் இத்தகைய பிரச்சனைகளில் தலையிடுவதில்லையா? அவர் கருத்து சொல்லிப் பார்த்ததில்லை!
பீகார், மஞ்சுநாத், வெள்ளம், மழை, சிவசேனா அரசியல் அதெல்லாம் எதுக்கு? இனி ஆளு ஆளுக்கு இழுத்து நாறப் போகுது தமிழ் இணையம்.
13 பின்னூட்டங்கள்:
>>>>>>>>>
ஒரு சின்ன சந்தேகம், வை.கோ பொதுவாய் இத்தகைய பிரச்சனைகளில் தலையிடுவதில்லையா? அவர் கருத்து சொல்லிப் பார்த்ததில்லை!
>>>>>>>>
http://alexpandian.blogspot.com/2005/11/vs.html
ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு' என்பதைப் போல் சில கூட்டணித் தலைவர்கள் மௌனம் காத்து காத்திருப்பது இதற்குத் தானோ ?
>>>>>>>>>>>>>
:-)))))))
வைகோ கதை தெரியாதா உங்களுக்கு? அவரு வெள்ள நிதிக்கு பத்து லட்சம் மதிமுக சார்புல குடுக்க ஃபோன் போட்டாராம். யாரும் ஒழுங்கா ரெஸ்பான்ஸ் குடுக்கலையாம். அப்புறமா 12.30க்கு வரச் சொன்னாங்களாம். இவரு 11.45க்கே அங்க போயிருக்காரு. கரெக்டா அந்த செக்க வாங்க வேண்டிய ஆளு வெளிய கெளம்பீட்டு இருந்திருக்காரு. வழியிலேயே மடக்கிப் பிடிச்சி செக்கைக் குடுத்திட்டு வந்திருக்காரு வைகோ. மத்த தலைவர்கள் செய்யுறதெல்லாம் வைகோ செய்ய வேண்டாம். இப்படியே செய்யட்டுமுன்னுதான் நான் நெனைக்கிறேன். சும்மா இருக்குறப்பதான மத்த விஷயத்துக்கெல்லாம் நேரம் இருக்கும்.
//வை.கோ பொதுவாய் இத்தகைய பிரச்சனைகளில் தலையிடுவதில்லையா? அவர் கருத்து சொல்லிப் பார்த்ததில்லை!
Naatula evanum nimmathyaa irukka koodathuthnnu oru nalla ennam thaane?! :-)
ஏற்கனவே பேசிட்டு இருக்கிறவங்க பிரச்னையே ஓயலை, அதுக்குள்ளே புதுசா ஒருத்தரை ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க!
கலைஞர் பழைய நெனைப்பில் அல்ல - தெளிவாக உணர்ந்து தான் சொல்லியிருக்கிறார்.
அது மட்டுமல்ல - தன் மகள் கனிமொழிக்கும் ஒரு குட்டு வைத்திருக்கிறார் தான் எந்தப் பக்கம் என்று.
சுகாசினி பேசிய தவறான பேச்சை கலைஞர் சற்று முன்னதாகவே கண்டித்திருக்க வேண்டும்.
குஷ்பு பேசியதைக் கண்டிக்க அவருக்குத் தயக்கம் இருந்திருக்கலாம். ஆனால் சுகாசினி பேசியதைக் கண்டிக்க எந்தத் தயக்கமும் தேவை இல்லை.
விவாதத்திற்கு இடமின்றி - சுகாசினி அநாகரீகமாக பேசினார். காலம் காலமாய் மரபணுக்களில் புகுத்தப்பட்ட ஆபாசங்கள் வந்து விழுந்தன - தன்னையுமறியாமல்.
ஞாநி சப்பைக் கட்டுக் கட்டுகிறார் - உங்கள் தலையில் தான் கொம்பில்லையே - அப்புறம் ஏன் சண்டைக்கு வருகிறீர்கள் என்று.
நம்மூர் அறிவு சீவிகள் சில சமயங்களில் LKG பிள்ளைங்களின் தரத்தை விடவும் கீழே போய்விடுகிறார்கள்.
என்ன ஒரு பரிதாபம்....
(இந்தப் பின்னூட்டம் சேமிக்கப்பட்டுள்ளது - பார்க்க
http://nanbancomments.blodspot.com)
பிரச்சனைக் கிளப்ப சொல்லவில்லை. வை.கோ ஓரளவு டீசண்ட் பாலிடிஷியனாய் தோன்றும். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் :-)
வைகோ வாவது இது பற்றிப்பேசாமல் இருக்கிறாரே. அவர் கொஞ்சம் வித்தியாசமானவர்தான்.
அவரிடம் எனக்குப் பிடித்த விசயம். அவரின் கட்சியில் வாரிசுகள் இல்லை. ஒரு வேளை அவர் தமிழக முதல்வராகும் போது ( அட ஒரு பேச்சுக்குங்க ) அவரும் மாறலாம். யார் கண்டார்.
//இப்ப மாட்டினார் கலைஞர்// -
இணையத்துல தமிழ் வந்தப்பயே மாட்டிட்டாரு கலைஞர். வை.கோ அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர்தான்.
//இனி ஆளு ஆளுக்கு இழுத்து நாறப் போகுது தமிழ் இணையம்//
நீங்க சொல்றதுதான் நடக்கப் போகுது.
உங்களுக்கு வாக்களிக்க முயன்றால்., இயலவில்லை. நண்பகல் நட்சத்திரம் தெரியவில்லை (அது எப்படி பகல்ல தெரியும்னு கடிச்சிறாதிங்கப்பா...) இப்ப இப்படி.
ராகவன், மரம், கண்ணில்பட்ட செய்திகளின் படி வை.கோ, எதிரான பண்பட்ட அரசியல்வாதியாய் தெரிகிறார். இது அவருடைய
கட்சி, கொள்கைகளை இங்கு குழப்பிக் கொள்ள வேண்டாம் :-) சிறையில் இருந்ததையும், பின் வெளி வந்தப் பிறகு அதை அனுதாபத்திற்கு பயன் படுத்தவில்லை.
அவர் மகன் தற்பொழுது கார்த்திக் சிதம்பரம், கனிமொழி போல ஒரு தன்னார்வ தொண்டு மையம் ஒன்றை ஆரம்பித்ததாய் ஆ.வியில் சில மாதங்களுக்கு முன்பு படித்தேன். கல்வெட்டு இது அரசியலுக்கு அச்சாரமா என்றுக் கேட்காதீர்கள்:-)
//இது அரசியலுக்கு அச்சாரமா என்றுக் கேட்காதீர்கள்:-)//
இருக்கலாம் யார் கண்டார்கள் :-))
மத்திய அமைச்சர் அன்புமணி பசுமைத்தாயக அமைப்பில்தான் முதலில் ஈடுபாடு காட்டினார்.ராகுல் காந்தியும் முதலில் அவர் அம்மா, அப்பா தொகுதிகளில் சமூகப்பணிகள் போன்றவற்றில் ஆர்வம் காட்டினார். பல உதாரணங்கள் உள்ளன.
நண்பர்களே, "நட்சத்திர குத்து" வேண்டாம் என்றுப் பார்த்தேன். ஆனால் சிலர் கேட்டுக் கொண்டதால் திரும்ப போடப்பட்டுள்ளது.
பிளஸ்ஸோ, மைனஸ்ஸோ போடுங்கப்பா, ம்மா ஓட்டு.
உங்க வலைப்பூவிற்கு இதற்கு முன் வந்திருப்பினும் பல நாட்கள் கழித்து இப்போது தான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள். எழுதுங்கள் இன்னும்...
Post a Comment
<< இல்லம்