Friday, December 02, 2005

பாகவதர், நடிகையர் மற்றும் ...?

பாகவதர், நடிகையர் மற்றும் ...?

பாகவதர் என்று அழைக்கப்பட்ட எம்.கே.டி, குதிரையில் டக, டக வென்று வந்துக் கொண்டிருந்தார். கண்ணில் படும் பெண்கள் அனைவரையும் பார்த்து சகட்டு மேனிக்கு கண் அடிக்கிறார். அனைத்து பெண்களும் மோக பித்தேற அவர் பின்னால் போகிறார்கள். பயந்துப் போன பெற்றோர்கள் தங்கள் பெண்களை உள்ளே தள்ளுகிறார்கள். கணவன்கள் மனைவியின் முகத்தை மூடுகிறார்கள். ஆனால் மனைவிகளோ மூக்காட்டை விலக்கி பாகவதரைப் பார்த்து திருட்டு புன்னகை பூக்கிறார்கள். கொஞ்ச நாளுக்கு முன்பு, இரவு ஜெ. டீவியில் பார்த்தது, படம் என்னவென்று தெரியவில்லை.

கடைசியில் குளித்துவிட்டு வருவதைப் போல தலையை விரித்துக் கொண்டு, அறைகுறை உடையில் ஒரு பெண் அல்ல அல்ல
சிறுமி- ஆங்கிலத்தில் சொல்வது என்றால் சைல்ட் வுமன், பாகவதர் குதிரையில் துரத்த, துரத்த அலைகுலைந்து ஓடி, புடைவை
மரத்தில் மாட்டிக் கொள்ள, பாகவதரும் பின்னால் போகிறார். பார்த்தால் அந்த பதிமூன்று, பதினாலு வயது சிறுமி பண்டரிபாய்! எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு தெய்வதாயாகவே பிறவி எடுத்த அதே பண்டரிபாய்.

அனைத்து நடிகைகளும் இந்த அறியாத வயதில் திரையுலகில் நுழைந்தவர்கள்தான். பெற்றோர் அல்லது மற்ற உறவினர்கள் வற்புறுத்தலினாலேயே நடிக்க வந்திருப்பார்கள். அந்த வயதில் அந்தகாலத்தில் கலை சேவை எல்லாம் தெரியுமா என்ன?
நடிப்பு என்றப் போர்வையில் sexual exploitationக்கு (இதற்கு தமிழில் என்ன?) அந்த சிறுவயதில் எல்லாரும் விருப்பமில்லாமலேயே உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஓரே ஒரு நடிகை மட்டும், நடிப்பில் இதற்கு ஒத்துப்போகவில்லை. தன் கொள்கையில் கடைசிவரை உறுதியாய் இருந்து, புகழ் உச்சியில் இருக்கும்பொழுதே, நடிப்புக்கு டாட்டா காட்டினார். அவர் சாதாரண நடிகையில்லை. ஒரு காலக்கட்டத்தில் தமிழில் நம்பர் ஒன் நடிகை. யார் சொல்லுங்கள் பார்ப்போம்?

பழைய சினிமாக்களில் பெண்கள் செருப்பு அணிய தடை. காரணம் ஏதாவது சென்டிமெண்டாய் இருக்க வேண்டும். நல்ல
பன்னிரண்டு மணி வெய்யிலில் சிரித்துக் கொண்ட, அதீத ஒப்பனைகளும், இறுக்கிப் பிடித்த உடைகளுமாய் ஆடுவார்கள். பொசுங்கும் பாறையில் வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவும், வாணி ராணியில் கொதிக்கும் மணலில் குதிக்கும் வாணிஸ்ரீயையும் பார்த்திருக்கிறீர்களா? கோவிலில் கூட ஷ¥ அணிந்து ஆடும் நாயகன் இன்னொரு வேடிக்கை. இரண்டு நாளுக்கு முன்பு பார்த்த "மெளனம் சம்மதம்" படத்தில் கூட அமலா செருப்பணியாமல் ஆடினார். ஆனால் இன்று இந்த வழக்கம் மாறிவிட்டது.

பதிவுக்கு சம்மந்தமில்லாத ஆதங்கம். இன்னும் நம் அரசு விழா உட்பட அனைத்து விழாக்களிலும் பட்டுபுடைவையும், மல்லிகை பூவும் அணிந்த "இந்திய கலாசாரத்தின்" குறியீடாய், குத்துவிளக்கேற்ற உதவும் பொம்மை பெண்கள் ஏன்?

12 பின்னூட்டங்கள்:

At Friday, 02 December, 2005, சொல்வது...

kilambitaangaya...kilambitaaanga :-)

//தன் கொள்கையில் கடைசிவரை உறுதியாய் இருந்து, புகழ் உச்சியில் இருக்கும்பொழுதே, நடிப்புக்கு டாட்டா காட்டினார். அவர் சாதாரண நடிகையில்லை. ஒரு காலக்கட்டத்தில் தமிழில் நம்பர் ஒன் நடிகை. யார் சொல்லுங்கள் பார்ப்போம்?

My guess is... Nadhiya?!

 
At Friday, 02 December, 2005, சொல்வது...

அதே...

குத்துவிளக்கேற்ற உபயோகப்படுத்தப்படும், தேவன் கோவில் தீபமான மெழுகுவர்த்தி பற்றியும் கூட நான் ஆதங்கம் அடைகிறேன்; ஹும்... எல்லாம் கறிவேப்பிலை போல க்ஷண நேர உபயோகம் மட்டுமே!!

 
At Friday, 02 December, 2005, சொல்வது...

ராம்கி, நான் உஷா சொல்றது பானுமதியா இருக்குமுன்னு நெனைக்கிறேன். நதியாவும் இந்த விஷயத்தில் சரியே.

 
At Friday, 02 December, 2005, சொல்வது...

தங்களின் கீழ்த்தரமான மன விகாரங்களைப் பிரதிபலிக்கும் இன்னொரு பதிவு.

பழம்பெரும் நடிகைகள் எல்லோரும் வற்புறுத்தப்பட்டு நடித்தார்கள் என்பதும், sexual exploitation க்கு உட்பட்டார்கள் என்பதும் மிகப் பெரிய குற்றச்சாட்டுகள்.

அபத்தம்!

ஜயராமன்

 
At Friday, 02 December, 2005, சொல்வது...

உஷா. நீங்கள் சொல்வது ஹரிதாஸ் படம். நான் பார்க்கும் போதும் எனக்கும் அது அபத்தமாய் தோன்றியது. ஆனால் அதற்கு நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டும் 'பழம்பெரும் நடிகைகள் எல்லோரும் வற்புறுத்தப்பட்டு நடித்தார்கள், sexual exploitationக்கு உட்பட்டார்கள்' என்பதும் ஒரு sweeping comment ஆகத்தான் தோன்றுகிறது. I think you were so disgusted on seeing those scenes that you generalised it and made that comment.

 
At Friday, 02 December, 2005, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Friday, 02 December, 2005, சொல்வது...

ராம்கி, சினிமா பொதுஅறிவு சூப்பர். பதில் நதியா ( என் பார்வையில்)

கோ.ராகவன், பானுமதி, ரேவதி, தமிழில் சுகாசினி என்று இன்னும் சிலரை சொல்லலாம் என்றாலும் 100% நடிப்பிலும், பாடி லேங்குவேஜிலும் கண்ணியம் காத்தவர் நதியா மட்டுமே.

ஞானபீடம், நேற்றுகூட ஏதோ ஒரு அரசு விழாவில் இதே கதை! என்ன சொல்ல?

ஜெயராமன் சார், உங்கள் மறுமொழிக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

குமரன், அந்த சிறுமி பண்டரிபாய்தானே? அனைத்து நடிகைகளும் என்றுதானே சொன்னேன். இந்த காலம் அந்த காலம் என்று
பிரிக்கவேண்டாம். படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர்களை குடும்ப சூழ்நிலை காரணம் காட்டி வலுக்கட்டாயமாய் நடிக்க தள்ளும் கதைகள் அறிந்ததுதானே! ரம்யா கிருஷ்ணனின் முதல் படம், டீன் ஏஜ் வயது என்று
மிக நன்றாக தெரியும். என் வீட்டுப் பக்கத்தில் இருந்த நடிகை, (பெயர் வேண்டாம்) பதிமூணு வயதில் நடிக்க வந்தார். அனைத்தும்
தங்கை வேடங்கள். இவர்கள் எல்லாம் திரையுல ஆண்களிடம் என்ன பாடுபடுவார்கள் என்பதும் ஊரரிந்த ரகசியம்தானே? இல்லை என்கிறீர்களா?

 
At Friday, 02 December, 2005, சொல்வது...

உங்கள் இடுகையின் கோர்வை எனக்கு புரிபடவில்லை. ஹரிதாஸின் காட்சிகள் இன்றைய சினிமாவிலும் கண்டு கொண்டுதானே இருக்கிறோம்.

காலங்கள் மாறலாம்,
கோலங்கள் மாறலாம்,
காட்சிகள் மாறுவதில்லை.

அந்த காலத்தில் ஆண் நடிகர்களும் சிறுவயதிலேயே பாய்ஸ் கபெனிகளில் நடித்து சினிமாவிற்கு வந்தவர்கள்தான்.
இன்றைய சிந்தனைகளை வைத்து பழமையை எடை போடுவது தவறு. அவற்றின் பின்னணியில் தான் இன்றைய சிந்தனைகள் உருவாகியுள்ளன.

//இன்னும் நம் அரசு விழா உட்பட அனைத்து விழாக்களிலும் பட்டுபுடைவையும், மல்லிகை பூவும் அணிந்த "இந்திய கலாசாரத்தின்" குறியீடாய், குத்துவிளக்கேற்ற உதவும் பொம்மை பெண்கள் ஏன்? //

ஏங்க,குடியரசுதலைவர் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் ADC கள் பாவமில்லையா ? அதுவும் வேறு கலாசார உடையில் :)
மங்கலப் பண்ணோடும் மங்களப் பெண்ணோடும் விழா ஆரம்பிப்பதில் ஏன் இவ்வளவு ஆதங்கம் :)))

 
At Friday, 02 December, 2005, சொல்வது...

மணியன், பாய்ஸ் கம்பனி என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பதில், நடிப்பதில் உண்டாகும் பிரச்சனைகளை தடுக்க,
ஆணுக்கே பெண் வேடமும் இட்டு, மிக கடுமையான ஒழுக்க விதிகளுடன் நடத்தப்பட்டது என்று படித்திருக்கிறேன்.
ஆக,அந்த பதிமூன்றையும், இந்த பதிமூன்றையும் சமமாக கருத்தில் கொள்ள முடியாது.
நீங்கள் சொல்வதைப் போல, பண்டரிபாய் அவர்களை அந்த கோலத்தில் கண்டதன் விளைவே இந்த பதிவு. நீங்கள்தான்
சொல்லிவிட்டீர்களே

//ஹரிதாஸின் காட்சிகள் இன்றைய சினிமாவிலும் கண்டு கொண்டுதானே இருக்கிறோம்//
அப்புறம் என்ன சொல்வது?

இந்த குத்துவிளக்கு மற்றும் பரிசளிப்பு விழாவில் கலாச்சாரம் என்ற போர்வையில் பொம்மையாய் பெண்கள் நிற்பது....

//மங்கலப் பண்ணோடும் மங்களப் பெண்ணோடும் விழா ஆரம்பிப்பதில் ஏன் இவ்வளவு ஆதங்கம் :))) //

சரி, சரி :-)

 
At Sunday, 04 December, 2005, சொல்வது...

மஙகள சடங்குகள் தானே இந்துக்களுக்கு தனி பெறும் பெறுமையே! இஸ்லாம் மக்களுக்கு இதெல்லாம் புடிக்காதுன்னா மாமிக்கும் புடிக்காது போல. ஆமா மாமிக்கு நானும் ஒரு கேள்வி கேக்கிறேன் ஆங்கில பட்த்துல நடிச்ச தமிழ் நடிகை யாருன்னு தெரியுமா .தெரிஞ்சா சொல்லுங்களேன்

 
At Monday, 05 December, 2005, சொல்வது...

ஜெயகுமார், அதிகம் சினிமா பார்ப்பதில்லை. மிக நல்ல படம் மட்டுமே பார்ப்பது. உங்கள் கேள்விக்கு விடை தெரியவில்லை.
நடிகை ரேவதி ஒரு ஆங்கில படம் இயக்கியுள்ளார். ஷோபனா நடித்தது. பெயர் மறந்துவிட்டது. ஆனால் நடிகை.... யார்?
பிறகு, குத்துவிளக்கேற்ற மற்றும் பரிசு தர பொம்மை பெண்கள்- அது ஆதங்கம் என்று சொல்லிவிட்டேனே :-)

கலை, புதுசா கெளப்பாதீங்கப்பா :-)
எனக்கு பிடித்த நடிகை என்றால் நதியா. மற்ற நடிகைகளும் பிடிக்கும், ஆனால் பாத்திரங்களை வைத்து மட்டும். மை. ம. காமராஜனின் ஊர்வசி, சதிலீலாவதியில் கோவை சரளா, தாஜ்மகாலில் ராதிகா, முதல் மரியாதை ராதா... போதுமா?

 
At Tuesday, 06 December, 2005, சொல்வது...

உஷா சொல்ல வருவதைப் பலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

அவர் சொல்ல வருவது...பண்பாட்டின் அடையாளமாக ஏன் பெண்கள் மட்டும் என்றுதான் கேட்கிறார்.

 

Post a Comment

<< இல்லம்