Friday, December 09, 2005

உள்குத்துக்கள்

ஒரு கல்லில் ஒரு மாங்காய்
அடித்துதான் பழக்கம்
விழுந்தால் மாங்காய்
போனால் ஒரு கல்
ஒரு கல்லில் நான்கு
மாங்காய் அடிப்பேன் என்றவனை
மரியாதையுடன் பார்க்கும்பொழுது
நான் ஆறு மாங்காய்கள்
அடிப்பேன் என்றான் இன்னொருவன்
அந்த சாமார்த்தியங்கள்
முதலில் பிரமிக்க வைத்தாலும்
ஒரு கல்லில் பல மாங்காய்கள்
அடிக்க தலை பிய்த்துக்
கொள்ள வேண்டும்
திட்டங்கள் தீட்ட
பல நாட்கள் தூக்கத்தை
இழக்க வேண்டும்
அடிக்க கையில்
வலு கூட்ட வேண்டும்
வேண்டாமைய்யா
ஒரு கல்லில்
ஒரு மாங்காய்
அடிப்பதே உத்தமம்!

35 பின்னூட்டங்கள்:

At Friday, 09 December, 2005, சொல்வது...

உஷா. ஒரே ஆள் பல வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார்களே அவர்களைச் சொல்கிறீர்களா என்ன?

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

// ஒரு கல்லில்
ஒரு மாங்காய்
அடிப்பதே உத்தமம்! //

இதுதான் சாமான்யனுக்கும் "தலை"வனுக்கும் உள்ள வித்தியாசம்...

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

//சாமி, இந்த உள்குத்து என்றே சொல்லே சமீபத்துல தெரிஞ்சிக்கிட்டது. யாரையாவது திட்டணும் என்றால், சொந்த பெயர்ல
நேரா திட்டிப்புடரது. இந்த இலக்கிய கருத்துமோதல்கள் (டமிள் மீனிங்) சமாசாரம் எல்லாம் புரியாத, சாதாரண ஆளு நானு //

உள்குத்துக்கள் பிரமாதம் :-)

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

காசு கொடுத்து வாங்குனேன்
கல் எறியும் கஷ்டமில்ல
விழுமா விழாதா கவலையுமில்ல
தோட்டக்காரன் புடிப்பானோனு பயமுமில்ல

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

ஒரு மாங்கா கூட அடிக்கத் தெரியாத மாங்கா மடைச்சி நான், இதுக்கு என்ன கருத்து சொல்ல முடியும்?

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

பல பேருக்கு வலை வீசும் மன்மதன் தான்!ஞானீஸ் என்ன வரதட்சனை கொடுத்து விலைக்கு வாங்கினேன் அதனால் கஷ்டம்,கவலை,பயம் இல்லை என்கிறார்!

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

குமரரே! கும்பிட்டுக்கிறேன், புதுசா எதையாவது ஆரச்சிடாதீங்கய்யா :-)

மற்றப்படி எளுதின "கவிதை" இதுக்கு விளக்கமெல்லாம் கொடுக்கக் கூடாது என்று எனக்கு சொல்லியிருக்காங்க.

முகமூடியாரே, ஞானபீடம் அவர்களே, பல்லவி வருகைக்கு நன்றி.

தாணு, நீங்க எல்.கே.ஜி என்றால் நான் யூ.கே.ஜி :-) எனக்கு தெரிஞ்ச வரையில் புத்திசாலியை விட, அப்பாவியாய் இருப்பதே நிம்மதி.

§Á¡¸ý ¾¡Š, Òк¡ ¦¾Ã¢ïº Å¢„ÂÁ¢ø¨Ä¡? «Ð¾¡ý ¸Å¢¨¾Â¡ ÅÊð§¼ý

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

கவிதைக்குத்தான் விளக்கம் சொல்லக்கூடாது, இதுக்கு சொல்லலாம்:-))))))))))))))))) (இந்த ஸ்மைலி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?).

மாங்காய் அறுவடையில் இவ்வளவு உள்குத்து இருப்பதால், கல்லெடுக்காமல் காசு கொடுத்தே மாங்காய் வாங்குகிறேன் நான் (இதையும் உடச்சுப்போட்டு கவிதை ஆக்கிடலாமா?) (மறுபடியும் ஸ்மைலி)

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

ஒரு மங்கானாலும் சரி இல்ல ஆறு மாங்கானாலும் சரி, குத்தரதை குத்துனா தான் உண்டா? சர் தான்:-))))

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

சுத்தமா புரியலை.
பெரிய கவிஞர் ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்:):)

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

// அடிக்க கையில்
வலு கூட்ட வேண்டும்
வேண்டாமைய்யா
ஒரு கல்லில்
ஒரு மாங்காய்
அடிப்பதே உத்தமம்! //

இதில் அரசியல் உள்குத்து எதுவும் இல்லையே? :-)))))

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

சுரேஷ், அப்ப இது கவிதையில்லேங்கிறீங்களா? என்னமோ போங்க, நா கவிதைன்னுதா நெனச்சிக்கிட்டு இருந்தேன். இப்படி சந்தேகத்தை கெளப்பிட்டீங்களே? ஞான்ஸ், பல்லவி, நீங்க மூணு பேரும் வேற விதமா யோசிச்சா மாதிரி இருக்கு, என்னன்னு புரியலை. ( நா எழுதினதுக்கு உங்கக்கிட்ட விளக்கம் கேட்டா நல்லா இல்லே :-)))

வெளிகண்டரே, ஒன்றுடன் நிறுத்திக் கொண்டா உடம்புக்கு நல்லது, சாரி மனசுக்கு!

ஆதிரை, தனிமடல் போட்டால் விளக்கம் அளிக்கிறேன். அதுக்காக பெரிய கவிதாயினி என்று எல்லாம் சொல்லி வெறுப்பேற்றக்கூடாது. ( இங்கு வெறுப்பேற்றுவது என்னைக் குறிப்பது இல்லை. உண்மையாக கவிதை எழுதும் கவிஞ, கவிஞிகளை)

பாலராஜன் கீதா சார், ஒரு கவிதை தானே எழுதிக் கொள்கிறது என்பதை நினைவில் கொள்க :-)

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

Villangina mathiri iruku anal illai
(-._.-)
_( Y )_
(:_-*-:)
(_)-(_)

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

கவிதைங்கற மீடியத்தை இந்த சப்ஜக்ட்க்கு உபயோகபடுத்தாதீங்க...போன கவிதையோட மரியாதையை இது குறைக்குது....அல்லது இன்னும் கொஞ்சம் பூடகமா பயன்படுத்தி இருக்கலாம்.(இதில எதும் உள்குத்து இல்லை)

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

சிநேகிதி, இரண்டு நாட்களாய் குழவி மற்றும் ரோசவசந்தின் பதிவுகள் மற்றும் பின்னுட்டங்களை தொடர்ந்து படித்ததும், பின்பு மோகன் தாஸ் அவர்களின் விசிலடிச்சான் குஞ்சு பதிவில் நான் சாதாரணமாய் ஸ்மைலி போட்டதற்கு அவர் உள் குத்து இல்லையே என்று கேட்க, நம் நிலைமை இப்படி ஆகி விட்ட்தே என்ற எண்ணத்தில் தோன்றியது இது.

ஆதிரை இப்ப புரியிதுங்களா?

மற்றப்படி, பல்லவி, ஞா.பீ, சுரேஷ் வேறு ஏதோ "வாழ்க்கை கல்வி மேட்டர்" என்று நினைத்துக்கொண்டு விட்டார்கள்
போல இருக்கு. தலைப்பை "எழுத்து" என்று வைத்தால் சரியாய் இருக்குமா?

முத்து, இதற்கு பெரிய பதில் தர வேண்டும். விரைவில் வருகிறேன். கவிதை என்று எழுதுபவர்களுக்கு இத்தகைய முட்டு
கட்டைகள் தேவை. இல்லை என்றாலும் நானும் நாளுக்கு நாலு எழுதி தள்ளி விட
ஆரம்பிப்பேன் :-)

 
At Saturday, 10 December, 2005, சொல்வது...

அதென்னங்க உங்க பதிவில மாத்தரம் உள்குத்து வெளிக்குத்துன்னு பேசிக்கிறீங்க ஒன்னும் புரியலை. மாங்காவை அடிச்சித்தான் பழக்கம், குத்துறது எப்படி. கொஞ்சம் சொல்லுங்க.

அதுசரி என்ன உஷா எங்க வீட்டு பக்கமே காணோம்? வந்தீங்கன்னா அப்பப்ப ஏதாவது உள்குத்து வெளிக்குத்துன்னு போடுங்க. ரெண்டு மூனு நாளா நீங்க வராம சோர்ந்து போயிட்டேன்.

 
At Saturday, 10 December, 2005, சொல்வது...

மாங்காவுக்கும் உள்குத்துக்கும் என்னாங்க சம்மந்தம். இந்த உள்குத்துக்கு வேற ஏதாச்சும் அர்த்தம் இருக்கா. நான் ஒரு மாங்கா மடையன் பூடகமா சொன்னா புரியாது. அதான் கேக்கறேன்.

அதுசரிங்க.என்ன நீங்க நம்ம வீட்டு பக்கமே காணோம். நக்கலா ஏதாவது சொல்லுவீங்கன்னு பார்த்தா.. ரெண்டு மூனு நாளா உங்க முதலையை பார்க்காம சோர்ந்து போய்ட்டேன்.

 
At Saturday, 10 December, 2005, சொல்வது...

நானும் கல் ஏறிஞ்சுதான் பாக்கிறேன். ஒண்ணுகூட விழுந்த பாடில்லை..

 
At Saturday, 10 December, 2005, சொல்வது...

ஜோசப் சார், தருமி சார், தன்னிலை விளக்கம் மேலே இருக்கு, ஒருக்கா படிச்சிடுங்க.

ஜோசப் சார், நேரம் þ(சரியி) ல்லை, அதுதான் :-)

தருமி சார், அதெல்லாம் இணையத்துல "பழம் தின்னு கொட்ட போட்டா" தானா வரும் :-)

 
At Saturday, 10 December, 2005, சொல்வது...

yaru kedum villakam sollatha Usha nan kedathum sollitanga mathavanga ellam enga poyitinga sandaiku pongappa usha ready a irukangalam.:-)

 
At Saturday, 10 December, 2005, சொல்வது...

சிநேகிதி, சும்மா விளையாடாதீங்கப்பா! கத வேற டிராக்குல போனதும் விளக்கம் போட வேண்டியதாயிடுச்சு.

 
At Saturday, 10 December, 2005, சொல்வது...

அது சரி...எல்லாரும் ஏன் மாங்காவ அடிக்கறீங்க, கொய்யாக்கா,தேங்கா, நார்த்தங்கா,பேரிக்கா...லாம் அடிக்க மாட்டீங்களோ!
இதுலயும் உள்குத்து இல்லீங்கோ!

 
At Saturday, 10 December, 2005, சொல்வது...

Neenga enna PT Usha enna vilayadavendam endu sollringa :-)

 
At Saturday, 10 December, 2005, சொல்வது...

தம்பி பொட்டி கடை, பழமொழியை ஆராயக்கூடாது, அனுபவிக்கணும் என்று பம்மல் உவே சம்மந்தம் சொன்னதை ஞாபகப்படுத்திக்கிட்டு படியுங்க. இல்லே "ஓரே கல்லுல ரெண்டு மண்டை" என்று மாற்றிதான் ஆவேன் என்று பிடிவாதம் பிடித்தால், அப்புறம் உங்க செளகரியம் :-)

சிநேகிதி, பல்லை நற நற ந்னு கடிக்கிறா மாதிரி ஸ்மைலி, முன்னாடி மதி போடுவா "முட்டிக்கிறா" மாதிரி ஸ்மைலி ! அதையெல்லாம்
தேடிக்கிட்டு இருக்கேன் :-))))

 
At Sunday, 11 December, 2005, சொல்வது...

k if u find them pls nekum fwd panidunga.

 
At Sunday, 11 December, 2005, சொல்வது...

ஒரு நாளில் ஒரு கவிதை
படித்துதான் பழக்கம்
படித்தால் புரியும்
படிக்காவிட்டால் எரியும்
ஒரு நாளில் நான்கு
கவிதைகள் படிப்பேன் என்றவனை
மரியாதையுடன் பார்க்கும்போது
நான் ஆறு கவிதை
படிப்பேன் என்றான் இன்னொருவன்
அந்த சாமர்த்தியங்கள்
முதலில் பிரமிக்க வைத்தாலும்
ஒரு நாளில் பல கவிதைகள்
படிக்க தலையை பிய்த்துக்
கொள்ளவேண்டும்
புத்தி தடுமாறி
நிரந்தரமாய் தூக்கம்
இழக்க வேண்டும்
படிக்க கொஞ்சம்
அறிவும் வேண்டும்
வேண்டாமம்மா
ஒரு நாளில்
ஒரு கவிதை
படிப்பதே


( யப்பா மூச்சு வாங்குது )

 
At Sunday, 11 December, 2005, சொல்வது...

ஒரு நாளில் ஒரு கவிதை
படித்துதான் பழக்கம்
படித்தால் புரியும்
படிக்காவிட்டால் எரியும்
ஒரு நாளில் நான்கு
கவிதைகள் படிப்பேன் என்றவனை
மரியாதையுடன் பார்க்கும்போது
நான் ஆறு கவிதை
படிப்பேன் என்றான் இன்னொருவன்
அந்த சாமர்த்தியங்கள்
முதலில் பிரமிக்க வைத்தாலும்
ஒரு நாளில் பல கவிதைகள்
படிக்க தலையை பிய்த்துக்
கொள்ளவேண்டும்
புத்தி தடுமாறி
நிரந்தரமாய் தூக்கம்
இழக்க வேண்டும்
படிக்க கொஞ்சம்
அறிவும் வேண்டும்
வேண்டாமம்மா
ஒரு நாளில்
ஒரு கவிதை
படிப்பதே


( யப்பா மூச்சு வாங்குது )

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

உஷா,

"சிவகாசி" படத்தில் விஜயும், அசினும் குத்தாட்டம் போடும் ' வடுமாஆங்கா ஊறுதுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ" பாடலுக்கு என்ன அர்த்தம் ? ஒண்ணா ? ரெண்டா ? மூணா ? தெரியுமா ஏதாவது ? :-)))

- அலெக்ஸ்

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

குத்து, மாங்கா ரெண்டும் முன்பிட்ட பின்னூட்டத்தில் வந்துவிட்டதால் - தலைப்புக்கும் பின்னூட்டத்திற்கும் சம்பந்தம் (அட இது ப.கே.சம்மந்தம் இல்லீங்கோ) இருக்கிறது என நினைக்கிறேன் :-)

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

அலெக்ஸ்... தேவையா எனக்கு :-( ஏஞ்சாமி, ஏதோ இலக்கிய உலக சமாசாரங்களை சொன்னா, எழவெடுத்த சினிமா பாட்டுக்கு அர்த்தம் கேக்குறீங்களே, நல்லா இருக்கா? தேவைதான் உனக்கு டொக், டொல்=க், டொக் ( ஒன்னுமில்லிங்க, சுவத்துல முட்டிக்கிறேன்)

 
At Tuesday, 13 December, 2005, சொல்வது...

I register here to say that I completely understood the meaning of this errrr.., usha what is this?

 
At Tuesday, 13 December, 2005, சொல்வது...

சீ சீ மாங்காய் புளிக்குமாமே.... நமக்கு வேண்டாமப்பா

 
At Tuesday, 13 December, 2005, சொல்வது...

சத்தீஷ், உங்க வருகைக்கு நன்றி. வேற என்னத்த சொல்ல :-))))

 
At Friday, 02 June, 2006, சொல்வது...

//ஒரே ஆள் பல வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார்களே அவர்களைச் சொல்கிறீர்களா என்ன?
//

இது சரியான உள்குத்து!

(ஹே! நானும் உள்குத்து என்ற வார்த்தையைப் பயன்படுத்து தேர்ந்த வலைப்பதிவர் என்ற நிலைக்கு முன்னேறி விட்டேன்)

 
At Sunday, 09 December, 2007, சொல்வது...

உங்களின் இந்த பதிவைப்போலவே
பின்னுட்டங்களும் சுவாரசியம்...கவிதை நன்று..

 

Post a Comment

<< இல்லம்