Monday, January 09, 2006

கதைத்தலும் பாவித்தலும்- 1

கொஞ்சம் கதைக்கலாம் வாருங்கள்!

வணக்கம், வணக்கம், வணக்கம். அது என்ன கதைக்கலாம் என்று கேட்கிறீர்களா? ஈழத்தமிழில் "கதைத்தல் மற்றும் பாவித்தல்" வார்த்தைகள் எனக்கு மிகப்பிடிக்கும். கதைத்தல் என்ற சொல், தமிழகத்தில் புழக்கத்தில் இல்லை. இதற்கு பொருள் சொல்வது என்றால் பேசுதல், அளவளாவுதல் அல்லது வம்படித்தல் என்று சொன்னாலும் ஈடான அர்த்தம் வரவில்லை இல்லையா? கதைப் பேசுதல் என்றால், சின்ன வயசுல அது என்ன எப்பொழுதும் கதை பேசிக்கிட்டு இருக்கே என்று அம்மாவிடம் திட்டு வாங்கியது ஞாபகம் வருகிறது.

என் அண்ணன் ஒருமுறை, அண்ணாசாலையில் பார்த்த நண்பனுடன் பேசிக் கொண்டே, சைக்கிளை தள்ளிக் கொண்டு, அவனை திருவல்லிகேணி லாட்ஜ்ஜில் விட்டு விட்டு வந்த கதையைச் சொல்லியிருக்கிறான். இப்படி பேசிக் கொண்டே நடப்பது, தெரு முனையில் நின்று வம்படிப்பது, வாசல் கேட்டை பிடித்துக் கொண்டே இந்த சப்ஜெட் என்று இல்லாமல் மணிக்கணக்காய் பேசுவது ஆண்கள் வாங்கி வந்த வரம்.

பி.எஸ். ராமய்யா எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற புத்தகத்தில் படித்த இலக்கியவாதிகளின் கூட்டங்கள், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் வீட்டு மாடியில்- அதற்கு சபை என்று பெயராம்! அங்கு எழுத்தாளர்கள் கூட்டம் நடக்குமாம், போன்றவைகளைப் படிக்க படிக்க பொறாமையாய் இருந்தது. காரணம் பெண்களுக்கு இத்தகைய பேச்சு அனுபவம் குறைவு. பெண்கள் பேசுவது இல்லையா என்று கேட்காதீர்கள். புடைவை, நகை அல்லது மாமியார் நாத்தனார் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் என்று பேசுபவர்களே அதிகம். இலக்கியம், புத்தகம், வாசிப்பு, அரசியல் போன்ற சமாச்சாரங்களை பேசும் பெண்கள் மிக குறைவு.

பெண் எழுத்தாளர்கள் மேல் அதிகம் சொல்லப்படும் குற்றச்சாட்டு, திரும்ப திரும்ப அடுப்படி கதைகள்தானா என்று எள்ளல் எழும். என்னசெய்வது அவரவருக்கு தெரிந்ததுதானே எழுத முடியும். அந்தக்காலத்தில் கோவா, போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்ததை கதைக்களமாய் கொண்டு ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல் "வளைக்கரம்". செய்திகளை திரட்ட அவர் எவ்வளவு மெனக்கெட்டு இருப்பார் என்று நினைக்க பிரமிப்பாய் இருக்கிறது. இப்பொழுது இணையம் வந்துவிட்டது. தட்டினால் செய்திகளை உட்கார்ந்த இடத்தில் கொண்டு வந்துக் கொட்டுகிறது. என்னைப் போன்ற பெண்கள் நாலு அறியும் வழியைக் காட்டியுள்ளது. ஆனால் இத்தகைய பேச்சுகள் வெறும் "ரீசைக்கிளிங்" தாங்க. அங்கங்க காதில், கண்ணில் விழுந்ததை, கொஞ்சம் நம்ம சரக்கையும் சேர்த்து அடித்துவிடுவது.

ஆக இங்கு கதைத்தல் என்ற சொல்லை நான் பாவிப்பதற்கு காரணம் அரசியல், சினிமா, பயணம், ஆன்மீகம், சமூகம், இலக்கியம், புத்தகம் வேண்டுமென்றால் பெண்ணீயம் என்று அனைத்தையும் கலந்துக்கட்டி எழுதப்போவதால் கதைத்தல் என்று தலைப்பு இட்டுள்ளேன். கதைத்தல் என்ற சொல்லுக்கு பொருள் சரியாய் சொல்ல முடியாவிட்டாலும், பொருள் உங்களுக்குப் புரிந்து இருக்கும். ஓரளவு அருகில் வரும் அல்லது ஈடான இன்னொரு சொல்லை சொல்ல முடியுமே தவிர, முழுக்க முழுக்க இணையான சொல்லை சொல்ல முடியாது.

tamiloviam.com

(கொஞ்சம் கதைக்கலாம் வாருங்கள் என்ற தொடரை தமிழோவியம் டாட் காமில் எழுத ஆரம்பித்துள்ளேன். அங்கு ஞாயிறு
அல்லது திங்கள் அன்று வலை ஏற்றுவார்கள். நான் இங்கு அதை புதன்கிழமை மீள்பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன்)

12 பின்னூட்டங்கள்:

At Monday, 09 January, 2006, சொல்வது...

உஷா,

என்னங்க இந்த கதைத்தல்ன்ற வார்த்தையெல்லாம் பாவிக்க ஆரம்பிச்சுட்டீங்க:-))))

தமிழோவியத்திலா? அடிச் சக்கை!
வாழ்த்துக்கள் உஷா.

 
At Monday, 09 January, 2006, சொல்வது...

//**வாசல் கேட்டை பிடித்துக் கொண்டே இந்த சப்ஜெட் என்று இல்லாமல் மணிக்கணக்காய் பேசுவது ஆண்கள் வாங்கி வந்த வரம்**.// :-)))

//**ஆக இங்கு கதைத்தல் என்ற சொல்லை நான் பாவிப்பதற்கு காரணம் அரசியல், சினிமா, பயணம், ஆன்மீகம், சமூகம், இலக்கியம், புத்தகம் வேண்டுமென்றால் பெண்ணீயம் என்று அனைத்தையும் கலந்துக்கட்டி எழுதப்போவதால்**// இந்த அரசியல், பெண்ணீயம், சமூகத்தை விட்டுட்டு மத்ததை எழுதுங்க. இதை படிச்சி படிச்சி புளிச்சி போச்சி. படிக்கறவங்களையும் கொஞ்சம் நெனைச்சி பாருங்கப்பா. கொஞ்சம் ஜாலியா எழுதுங்க. சீக்கிரம் ஆரம்பிங்க.

 
At Monday, 09 January, 2006, சொல்வது...

//இந்த சப்ஜெட் என்று இல்லாமல் மணிக்கணக்காய் பேசுவது ஆண்கள் வாங்கி வந்த வரம்.
//
இது என்ன கூத்து..ஆண்கள் பல சப்ஜெக்ட்டில் மணிக்கணக்காக பேசுவதைவிட ,சப்ஜெக்டே இல்லாமல் மணிக்கணக்காக பேசுவது பெண்கள் வாங்கி வந்த வரம்.

 
At Monday, 09 January, 2006, சொல்வது...

இப்படி பேசிக் கொண்டே நடப்பது, தெரு முனையில் நின்று வம்படிப்பது, வாசல் கேட்டை பிடித்துக் கொண்டே இந்த சப்ஜெட் என்று இல்லாமல் மணிக்கணக்காய் பேசுவது ஆண்கள் வாங்கி வந்த வரம்.//

இந்த பகுதிய நான் கமெண்ட் எழுதலாம்னு காப்பி கமாண்ட் குடுத்ததுக்கப்புறம்தான் ஜோவோட கமெண்ட படிச்சேன். சூப்பரா இருந்திச்சி.

இருந்தாலும் அவர் சொன்னதுக்குக்கூட ஒரு வால் கமெண்ட். ஆண்கள் மாதிரி ரோட்டு முனையில் பேசறதில்ல. ஒத்துக்கறேன். அதான் நின்னுக்கிட்டே, நடந்துக்கிட்டே HPல பேசறாங்களே இந்த காலத்து பொண்ணுங்க. அப்படி என்னதான் பேசறாங்களோன்னு நினைச்சிப்பேன்.

 
At Monday, 09 January, 2006, சொல்வது...

சதயம் அதுதானே "ரிசைக்கிளிங்" என்று போட்டுட்டோமிலே :-) சிரிக்காம? வாழ்கையில எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கிட்டு சிரிச்சிக்கிட்டு போகிறது பழகமா போயிடுச்சு. இது '+' ஆ '- ' ஆன்னு தெரியலையே :-)

சிவா, ஜாலிக்கு காரண்டி உண்டு. ஆனா பெண் ஈயம் எழுதக்கூடாதுன்னு பெண் எழுத்தாளரிடமே சொன்னா எப்படி ?

ஜோசப் சார், ஜோ அறியா பிள்ளை மாதிரி தெரியுது, ஆனா நீங்களும் ஆமாம் கொட்டுவது ஆச்சரியமா இருக்கு :-) வீட்டுக்கார
அம்மாக்கிட்ட நா எழுதுனத சொல்லிப் பாருங்க,என்ன சொன்னாங்கன்னு எனக்கும் சொல்லுங்க.

இந்த காலத்து பொண்ணுங்க பொழுதுக்கும் போன்ல தொங்கிக்கிட்டு இருக்குங்க, நீங்க சொல்லுகிற அதே திட்டுத்தான், அப்படி
என்ன பேச்சு என்று என் மகளை திட்டுவேன். ஆனா வெளிய போறேன் என்றால் இருட்டுவதற்கு முன்பு வந்து விட வேண்டும், யாரு வீட்டுக்கு, அவங்க போன் நம்பர். அங்க யாரூ இருக்காங்க போன்ற கேள்விகள் எழும். வெளிய நின்னு பேசினா பத்து நிமிடத்துக்கு மேலே பேச முடியாது. போகிறவங்க வாரவங்க நின்னு பார்த்துட்டு போவாங்க. பிரண்டு வீட்டுக்குப் போயி
பேசலாம் என்றால் கதவை சாத்திக் கொண்டு மணிக்கணக்காய் பேச எந்த பெற்றோரும் அனுமதிக்க மாட்டாங்க. வீட்டு வரவேற்பரையில் உட்கார்ந்து பேசினா அதுல பிரைவேசி இல்லை- இது அத்தனையும் என் மகள் சொல்வது.

ஆனா அந்த காலத்துல எத்தன பேரூ விட்டுல போன் இருந்துச்சு? அம்மா ஒருமுறை கல்யாணத்துக்குப் போனபொழுது ராத்தரி
எல்லாம் அவங்க சொந்தக்காரங்க கூட பேச்சு, சிரிப்புன்னு இருந்தாங்க. அந்த மாதிரி அம்மாவின் இன்னொரு பக்கத்தை பார்த்ததில் நம்ம அம்மாவான்னு வியப்பு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. ஆனா வீட்டுல அத்தைகளுடன் அம்மா வம்படித்தால் அப்பாவும், பாட்டியும் கடுப்பார்கள். கல்யாணம் ஆன பெண்களுக்கு வாய் பேசிக்கொண்டிருந்தாலும் எண்ணம் முழுக்க பிள்ளைகள், கணவன் என்று ஓடிக் கொண்டிருக்கும். இதை சுமை என்று சொல்ல முடியாது, பொறுப்பு/கடமை அவ்வளவுதான்.

நான் சில வருடமாய் ஊருக்கு ஒரு வாரம் முன்பு சென்றுவிடுகிறேன். என் பெற்றோர்களுடன் மகளாய் செல்லம் கொஞ்சிக் கொண்டு,
நட்புகளுடன் ஊர் சுற்றல் கதைத்தல் என்று பொழுதைக் கழிப்பேன். அதிலும் என் அப்பா, என் மகளுக்கு நான் போடும் அனைத்து
ரூலையும் எனக்கு போடுவார். அவருக்கு நான் இன்னும் சின்ன குழந்தை!

துளசி தாங்ஸ்!

 
At Tuesday, 10 January, 2006, சொல்வது...

'கதைக்கலாம்' என்று பார்த்ததுமே அசந்துவிட்டேன். நீங்கள் சொல்லவரும் விசயத்துக்கு 'பறையலாம்' என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் போலுள்ளது. மலையாளம் எண்டு நினைக்கவேண்டாம். சுத்தத் தமிழ். பயன்பாட்டிலிருக்கும் ஈழத்தமிழ்.

அதையும்விட சுவாரசியமா இருக்கிறதெண்டா, 'பூராயம்' (இது பல யாழ்ப்பாணத்தவருக்கே தெரியாமலிருந்தது எனக்கு ஆச்சரியம்தான்.), 'விண்ணாணம்' எண்ட சொற்களும் இருக்கு. இவை பயன்பாடற்ற அலட்டல்கள் என்ற பொருளைத் தந்துவிடுவன.

 
At Tuesday, 10 January, 2006, சொல்வது...

சுஜாதா, சாரு, எஸ்.ராமகிருஷ்ண்ன்..மற்றும் உஷா !! வாழ்த்துக்கள்.

 
At Tuesday, 10 January, 2006, சொல்வது...

அது சரி. எங்க வீட்டிலேயும் சரி, எனது நட்பு வட்டாரத்திலேயும் சரி, பெண்களுக்கு ஈடு கொடுத்து பேச நம்ம ஆட்களால் முடியாது. அது பேசும் நேரமாகட்டும், பேசும் தலைப்புகளாகட்டும். பல சமயங்களில் இதைப்பற்றி இவ்வளவு நேரம் பேச முடியுமா என்ற வியப்பே மிஞ்சும். அம்மிணிகளை அடிச்சுக்க நம்மளால முடியாதுயோவ்.

 
At Tuesday, 10 January, 2006, சொல்வது...

நல்லா கதையுங்கோ, கேக்கிறம், இல்லை இல்லை, வாசிக்கிறம். :))

 
At Tuesday, 10 January, 2006, சொல்வது...

உஷா,
உண்மையைச் சொன்னால் முன்னுரை பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பவில்லை :-(

தொடர் விறுவிறுப்பாக அமைய வாழ்த்துக்கள்

 
At Tuesday, 10 January, 2006, சொல்வது...

வன்னியன் நீங்கள் "விண்ணானம்" என்றச் சொல்லைப் பாவித்தால் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை :-)
ஈழத் தமிழைப் பற்றி எழுதுங்களேன், தெரிந்துக் கொள்ள ஆவலாய் உள்ளது.

ரவியா, கொஞ்சம் ஓவராய் இல்லை :-)

இலவச கொத்தனார் அவர்களே, பெண்கள் பொதுவாய் ஆண்கள் முன்பு சாதாரண விஷயம் தான் பேசுவார்கள். ஏதாவது கிண்டல் அடித்துவிடுவார்களே என்ற மனத்தடை.

கலை, நிலா நன்றி. நிலா, பெரிய எதிர்பார்ப்பு இல்லாத வரை நான் பிழைத்தேன் :-)

 
At Tuesday, 10 January, 2006, சொல்வது...

ஜோவையும் ஜோஸப்பையும் 100% வழி மொழிகிறேன். வம்பு பேசும் கலையில் சிறந்தவர்கள் என்ற தலைப்பை பொங்கல் பட்டிமன்றத்துக்கு பரிந்துரைக்கிறேன். (சாலமன் பாப்பையா, ராஜா குழுவினர் கலை நிகழ்ச்சி) - முடிவு தெரிந்ததுதான் என்றாலும்:-)) இதில் ஜோஸப் சாரின் மனைவியை ஞாபகப்படுத்தும் மூன்றாந்தர ப்ளாக்மெயிலையும்(?!) வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

Post a Comment

<< இல்லம்