Saturday, January 07, 2006

பின்னூட்டம்- என் முடிவு

பின்னூட்ட பெட்டியில் மாடரேஷன் போட்டதும், பிரச்சனை சரியாகிவிட்டது. ஆகையால் மறுமொழிகளை நீக்கும் பிரச்சனையும்
வெகுவாய் குறைந்துவிட்டது என்று நினைக்கும்பொழுது, இன்று திரு.போலியன் என்பவரிடமிருந்து வேறு நபர்களை விமர்சித்து
ஒரு மடல் வந்துள்ளது. ஆபாசமாய் இல்லை. ஆனால் இது என்னுடைய பதிவு, இதில் எழுதப்படும் கருத்து உங்களுக்கு சரியில்லை என்று தோன்றினால் கருத்தை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. அதை எந்த நாளும் நீக்க மாட்டேன்.

இங்கு பின்னூட்டம் இடுபவர்களின் கருத்தையும் விமர்சிக்கலாம், நாகரீகமாய். கருத்தை மட்டும், சம்மந்தப்பட்ட நபரையல்ல!
திரு.போலியன் அவர்களே, என்னை மன்னிக்கவும். நீங்கள் இட்ட மடலை இங்கு அனுமதித்தால், நீங்கள் சொல்லுபவை எனக்கு ஒப்புதல் என்று எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படலாம். அதில் எனக்கு விருப்பமில்லை. அவர்களைப் பற்றிய கமெண்டுகளை அவர்களின் பதிவில் போய் சொல்லலாமே?

ஆக, எந்த ஒரு தனிநபரை, இனத்தை, மொழியை, மதத்தை, பிரிவை, நாட்டை விமர்சித்துவரும் எந்த பின்னூட்டமும் இங்கு
பதிவு செய்யப்படாது.

இந்த முடிவு எடுக்க மிக யோசித்தேன், ஆனால் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. இவற்றின் விளைவுகளுக்கு நானே பொறுப்பு :-)

21 பின்னூட்டங்கள்:

At Saturday, 07 January, 2006, சொல்வது...

நல்லது செய்தீர்கள்.

இதை அனைவரும் கடைபிடிப்பது நலம்.

 
At Saturday, 07 January, 2006, சொல்வது...

மிகச் சிறந்த முடிவு.
எலோரும் இப்படி இருப்பின் வலைப்பூ உலகம் மணம் வீசும்.

 
At Saturday, 07 January, 2006, சொல்வது...

கொஞ்சம் பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்..

 
At Saturday, 07 January, 2006, சொல்வது...

மாடரேஷன் அப்படீன்னா என்ன?

 
At Saturday, 07 January, 2006, சொல்வது...

சரியான முடிவு உஷா.

நானும் கடைபிடிக்க எண்ணி இருக்கிறேன்

 
At Saturday, 07 January, 2006, சொல்வது...

நல்ல முடிவு. போலி டோண்டுவை ஒழிக்க இதுவே சரியான முறை. எல்லா பதிவாளர்களும் இதை செய்தால் ந்ன்றாக இருக்கும்.

சிலர் கதை முடிந்து விட்டது என நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்பதை உங்களுக்கு வந்த மின்னஞ்சல் நிரூபித்துவிட்டதல்லவா?

வழக்கம் போல இந்தப் பின்னூட்டமும் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Saturday, 07 January, 2006, சொல்வது...

நல்ல முடிவு. போலி டோண்டுவை ஒழிக்க இதுவே சரியான முறை. எல்லா பதிவாளர்களும் இதை செய்தால் ந்ன்றாக இருக்கும்.

சிலர் கதை முடிந்து விட்டது என நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்பதை உங்களுக்கு வந்த மின்னஞ்சல் நிரூபித்துவிட்டதல்லவா?

வழக்கம் போல இந்தப் பின்னூட்டமும் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Saturday, 07 January, 2006, சொல்வது...

அனைவருக்கும் இதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் மகிழ்வேன்.

தருமி சார், கடைசியில் :-) போட்டதை கவனிக்கவில்லையா?

மூகமூடியாரே, நானே கொஞ்சம் சீரியசா பேசும் முயற்சிக்கும் போது குசும்பு பண்ணாதீயும் - நோ ஸ்மஒலி :-)

ஞானவெட்டியார் அவர்களே, உங்கள் பதிவில் சொல்ல வேண்டியது, மறுமொழி நீங்கள் இடுவது மிக பெரியதானால், அதை ஒரு தனி பதிவாய் போட்டுவிடுவது உசிதம் என்று தோன்றுகிறது. மிக நீளமாய் இருப்பதை, பதிவின் தொடர்ச்சி என்று
இன்னொரு பதிவாய் போட்டால், பலரும் வந்து படிப்பார்கள். மிக நன்றாக எழுதுகிறீர்கள், பதில் சொல்ல இயலாத இன்னொரு
பதிவு உங்களுடையது.

டோண்டு சார், என்னுடைய பதிவை நீங்கள் படித்து விட்டு அதற்கு ஒப்புதல் இல்லாமல் ஒரு கமெண்ட் மிக நாகரீக வார்த்தையில்
பதில் சொல்லிவிட்டு போகிறீ£ர்கள். அதை கிளிக் செய்து அனுமதிப்பது நான். ஆக உங்கள் பதிலுக்கும் என் அனுமதி தேவை.
நடுவில் ஒரு கருத்து கந்தசாமி, டோண்டுவா .... என்று போகிற போக்கில் உமிழ்ந்துவிட்டுப் போவதை நான் இங்கு கிளிக்கினால், இட்டால், அந்த கருத்து எனக்கு ஒப்புதல் என்றுதானே பொருள் படும். நான் சொல்லாதது என்று நழுவுவது ஒருவகையான கோழைதனம் என்று எனக்கு தோன்றுகிறது. À¢ýëð¼í¸ÙìÌ Á¡ð§Ã„ý ¦ºö¾ôÀ¢ÈÌ என்னுடைய பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கும் நானே பொறுப்பு.

 
At Saturday, 07 January, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Saturday, 07 January, 2006, சொல்வது...

நல்ல வழி தங்கள் வழி
வழி தெரியாதவர்கள் குறுக்குவழி
போனவழி தவறுவழி பிறகு முழி

 
At Sunday, 08 January, 2006, சொல்வது...

அன்பு அம்மையீர்,

செய்த தவறு புரிந்துவிட்டது.
இனி தாங்கள் கூறியவண்ணமே செய்வேன்.

 
At Sunday, 08 January, 2006, சொல்வது...

Usha
I read all your recent posts just yesterday. I liked the story "vetri". congratulations. It is very good

 
At Sunday, 08 January, 2006, சொல்வது...

மிகச் சரியாகச் செய்தீர்கள் உஷா. இது மிகச் சிறந்த முடிவு.

 
At Sunday, 08 January, 2006, சொல்வது...

என்னங்க ஞானவெட்டியான் ஐயா, தவறு என்று எல்லாம் சொல்லி என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறீர்கள்? பெரியதாய்
இருந்தால் பதிவாய் போட்டால் நல்லது என்று ஐடியா கொடுத்தேன், அவ்வளவுதான்.

தேன் துளி, உங்கள் ஊக்க டானிக்குக்கு நன்றி.

அனைவருக்கும் நன்றி, நீங்களும் செயல் படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறேன்,

 
At Sunday, 08 January, 2006, சொல்வது...

போலியன் அவர்களே, உங்கள் கமெண்ட் ஆபாசமில்லை, ஆனால் பிறரை விமர்சிப்பது இங்கு வேண்டாம் என்று தெளிவாய்
குறிப்பிட்டுள்ளேன். பிறரை நக்கல், கேலி, விமர்சனம் ஆகியவைகளை அதை நான் இங்குப் போடுவதும் தேவையில்லை என்பது என் கருத்து அவ்வளவே! அப்படி ஏதோவது சொல்ல வேண்டும் என்றால் சம்மந்தப்படவரின் பதிவில் சொல்லிக் கொள்ளலாமே!

"காசிக்கு சம்மளமில்லாத வேலைக்காரர் டோண்டு ஆகிவிட்டார்" என்ற உங்கள் கமெண்ட் என்னை இந்த முடிவு எடுக்க வைத்தது.

 
At Monday, 09 January, 2006, சொல்வது...

தவறு - அறியாமல் செய்வது
தப்பு - அறிந்தே செய்வது

இதில் தவறொன்றுமில்லையே!

நான் நல்ல மனப்பாங்குடனேயே எடுத்துக்கொண்டேன்.

 
At Monday, 09 January, 2006, சொல்வது...

அன்புள்ள போலியன்,
நீங்கள் தவறாய் சொன்னீர்களா அல்லது சரியாக சொன்னீர்களா என்பதல்ல பிரச்சனை. என்னுடைய சொந்த இடத்தில் பிறரைப்
பற்றிய விமர்சனம் தேவையில்லை என்பது என் முடிவு. மன்னிக்க!
உஷா

 
At Monday, 09 January, 2006, சொல்வது...

ஞானவெட்டியான் ஐயா மறுமொழிக்கு நன்றி.

 
At Friday, 02 June, 2006, சொல்வது...

நல்ல முடிவு. பாராட்டுக்குரியது.

நானும் கடைபிடிக்கிறேன்.

 
At Saturday, 03 June, 2006, சொல்வது...

உஷாராக இருக்கும் உஷாவுக்கு நன்றி..

 
At Saturday, 03 June, 2006, சொல்வது...

//ஆக, எந்த ஒரு தனிநபரை, இனத்தை, மொழியை, மதத்தை, பிரிவை, நாட்டை விமர்சித்துவரும் எந்த பின்னூட்டமும் இங்கு
பதிவு செய்யப்படாது.//

உங்கள் விருப்பத்தை யார் தடைபோட முடியும்.

என்னுடை பெட்டி என்னுடை துட்டு
யாரிடம் சாவி இருத்தல் சரி!
பொன்னென்றாலும் செம்பென்றாலும்
பூட்டவும் நீட்டவும் என் பொறுப்பு.

சுதந்திரப் போராட்ட பாடல்.

 

Post a Comment

<< இல்லம்