படம் இரண்டு, பாடம் ஒன்று
படம் இரண்டு, பாடம் ஒன்று
(எழுத்தாளர் வெற்றி வேந்தனும், இயக்குனர் மதியரசும் யோசனையுடன் அமர்ந்திருக்கின்றனர்)
வெற்றிவேந்தன் - இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவேயில்லை சார்
இயக்குனர் மதியரசு - எதாவது செய்யணும்யா. நம்ம படம் புனுகுபூனைக்கு நல்லத்தான் வந்திருக்கு. பத்திரிக்கைகளும் ஆஹா, ஓஹோன்னு புகள்ந்து இருக்காங்க, ஆனா ரிசல்ட்? அந்த போர்கிளி ஹவுஸ் புல்.
வெ.வே -சார், படம் ஓடாட்டி ராசி இல்லாதவன்னு சொல்லிடுவாங்க சார்.. அதவிட சுப்பராமன் வசனம் எழுதிய போர்கிளி படம் பிச்சிக்கிட்டு ஓடுது. அத நெனச்சா வயித்தெரிச்சலா இருக்கு. அவனுக்கு எழுத கத்துக் குடுத்ததே நாந்தான். மெல்லின, வல்லின ராவுக்கு வித்தியாசம் தெரியாது அவனுக்கு.
(மெல்லினம், வல்லினம் ஆகிய சொற்கள், இயக்குனருக்கு சில இடைகளை நினைவுப்படுத்த நினைவுகள் சுழன்றன.)
அவர் முகம் சொன்ன செய்தியை புரிந்துக் கொண்டு, தன்னை சுதாரித்துக் கொண்ட வெ. வே- சார், நா சொன்னது சின்ன ராவுக்கும், பெரிய ராவுக்கும் கூட வித்தியாசம் கூட அந்தாளுக்கு தெரியாது
இ. ம - அப்படி ஒழுங்கா சொல்லு. அந்தாளு, படத்துல யாரோ சின்னபொண்ணு தேவின்னு ஒரு அம்மாவ வம்புக்கு இளுத்து நாலு டயலாக் எளுதியிருகிராரு. அந்தம்மா, அத்த கண்டிச்சி கூட்டம், போராட்டம்ன்னு போட்டுக்கிட்டு இருக்குது இவுரூ பக்கம் நாலு பேரூ, அந்த பக்கம் நாலு பேரூ பேச பேச படம் பிச்சிக்கிட்டு ஓடுது. அது யாரூய்யா அது சின்ன பொண்ணு தேவி., இன்னா சண்ட ரெண்டு பேருக்கும்?
வெ. வே- (ப்ச்ச்சு என்று சவுண்ட் கொடுத்துவிட்டு)- அதெல்லாம் இல்லே சார். ஏதோ பேசி வெச்சிக்கிட்டு செய்ராங்க. இலக்கியவாதி சினிமாவுக்கு வரேன்னு நா கூட நாலு பத்திரிக்கைங்க, ரெண்டு டீவின்னு பேட்டி கொடுத்தேன்.
இ.ம- என்னத்த சொல்ரது, ப்ளான் பண்ணி சென்சேஷனலா இளுத்துட்டான்.
வெ.வே- ஆமாம் சார். எழுத்தாளர் ஏகாம்பரம் கூட ரொம்ப வருத்தப்பட்டு சொன்னாரு, அவுரு ஓரு கூட்டத்துல பொம்பளைங்களுக்கு அறிவேயில்லை என்னு பேசினாராம். அது பிரச்சனை ஆனா, அதை எப்படி மாத்தி சொல்லுவதுன்னு நல்லா தயார் செஞ்சி வெச்சியிருந்தாராம். அத்தனையும் வீணாப்போயிடுச்சுன்னு அழுதுட்டாரு சார்.
(அப்பொழுது எழுத்தாளரின் உதவி பரபரப்பாய் உள்ளே வருகிறார்)
உதவி - மவுண்ட் ரோட்டுல பெரிய ஊர்வலம். கல்லெறி, போலீஸ் தடியடின்னு ஏகப்பட்ட ரகளை சார். அதுதான் லேட்டு
வெ. வே- ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமே
உதவி - ஊர்வலம் எதுக்கு தெரியுமா? போர் கிளி படத்துல சின்ன பொண்ணு தேவிவைக் கிண்டல் அடிச்சி, சுப்பராமன் வசனம் எழுதியிருந்தாரு இல்லையா, அத கண்டிச்சி ஊர்வலம் சார். செம்ம கூட்டம். பெண்களை இழிப்படுத்தாதேன்னு அரசியல்வாதிங்கள்ல இருந்து வூட்டு வேல செய்யற பொம்பளைங்கவர செம்ம கூட்டம்.
வெ.வே- ( உச்சிக் கொட்டியவர், இயக்குனரைப் பார்த்து) சார், எனக்குதான் திரையுலகம் புதுசு. நீங்க பத்து வருஷமா பில்£டுல இருக்கீங்க, இப்படி ஏதாவது எளுத சொல்லியிருந்தா, நானும் எளுதியிருப்பேனே, ஒரு இலக்கியவாதிக்கு இந்த சூது எல்லாம் எப்படி தெரியும்?
(உதவி "தோடா" என்று சொல்ல வந்து வார்த்தையை முழுங்குகிறார். ஆனால் அந்த வார்த்தை இயக்குனர் வாயில் இருந்து
வருகிறது)
வெ. வே - ( தன்னை சமாளித்துக் கொண்டு) சார், சினி வோர்ட்ல்டு சூட்சுமம் தெரியாதுன்னு சொல்ல வந்தேன்
உதவி - டி.வி, பேப்பர், பத்திரிக்கை, கம்ப்யூட்டர்னு எங்கப் பார்த்தாலும் ஹாட் டாபிக் இதுதான் சார். அந்தம்மா புக்ஸ் கேட்டு கேட்டு வாங்கிகினு போராங்களாம். சினிமா டிக்கெட்டு பிளாக்குல நல்லா போகுது. இப்படிதான்சார், சத்தியராஜ் மகா நடிகன் படத்துல நெறைய விஷயத்த புட்டு புட்டு வெச்சிருக்காரு. நாமும் அதுமாதிரி ஏதாவது செய்யலாமா சார்?
அவரைப் பார்த்து முறைத்துவிட்டு, இ.ம- சரி வுடு. சேட்டு எதுனாச்சும் செய்வாரு. அந்த ஆளு கில்லாடி. எத்தினி ரூபா இன்வெஸ்ட் செஞ்சிருக்காரு. புதுசா விளம்பரம், அது இதுன்னு எப்படியாச்சு நூறு நாள் ஓட்டிடுவாரு. அடுத்த படம் விஜய், விக்ரம் டேட்ஸ் வாங்கியிருக்காராம். லத்தீன் அமெரிக்கக் கதை, நம்ம பீல்டுக்கு சூட் ஆகும்னீயே , அத்த பண்ணலாம் வாய்யா.
(இருவரும் எழுந்து மாடியேறிப் போகிறார்கள். உதவி அவர்கள் தலை மறைந்ததும், டீவியை ஆன் செய்கிறார். இரண்டே நிமிடத்தில் சார் என்று அலறி அடித்தவாறு இயக்குனர் அறைக்குள் ஓடுகிறார் உதவி)
உதவி - ( பொங்கும் உற்சாகத்தின் சுருதியைக் கட்டுப்படுத்திக் கொண்டு ) சார், அந்தம்மா விஷம் குடிச்சி, ஆஸ்பத்திரில உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காங்களாம். மன்னிக்க வேண்டும் சகோதரின்னு எழுத்தாளர் சுப்பராமன் உருக்கமா பேட்டிக் கொடுத்துக்கிட்டு இருக்காரு! எல்லா சேனலிலும் இதுதான் ஓடிக்கிட்டு இருக்கு. நாலு மணிக்கு ஸ்பெசல் ரிப்போர்ட்டாம்.
(இருவரும் கீழே இறங்கி டீவியைப் போட, உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாய், திரைக்கு வந்து நான்கே நாட்களான புனுகு பூனை, வரும் புத்தாண்டு ஒலிப் பரப்பாகும் என்று கூப்பாடு வர, கீழே ப்ளாஷ் நியூசாய் சுப்பராமன், சின்னபொண்ணு தேவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்)
உதவி - சேட்டு கில்லாடி, வந்த காசுக்கு படத்த வித்துட்டாரு.
(இயக்குனரும், எழுத்தாளரும் வரும் மயக்கத்தை சமாளித்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். இனியும் அங்கு நின்றால், அவர்களின் கோபம் தன் மேல் பாயும் என்று மெல்ல பின் வாங்குகிறார் உதவி)
************
பி.கு முழுக்க முழுக்க கற்பனை கதை. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. அப்படி ஏதாவது தோன்றினால் அது அவர்களின் கற்பனையே
9 பின்னூட்டங்கள்:
குட்டியாக டூ மச் என்று மட்டும் சொல்லிக்கறேன் :-))
---இப்படி ஏதாவது எளுத சொல்லியிருந்தா, நானும் எளுதியிருப்பேனே, ஒரு இலக்கியவாதிக்கு இந்த சூது எல்லாம் எப்படி தெரியும்? ----
;-))
முழுக்க முழுக்க கற்பனை தான்.. உங்க கற்பனை வளத்துக்கு உங்களை சினிமாவுக்கு வசனம் எழுத யாரும் கூப்பிடவில்லையா?
என்னய்யா இது சிறுபிள்ளதனமா இருக்குன்னு பாத்தேன். ஆகா. இதுதான் விசயமா. சும்மா இருந்த நம்மள இப்படி பேசி உசுப்பிவிட்டு, கையில இருந்த காசெல்லாம் குடுத்து இந்த கண்ராவியெல்லாம் பாக்க வெச்சுட்டாய்ங்களே. யய்யா. இந்த அக்கா வந்து சொல்லிச்சோ நமக்கு தெரிஞ்சுது. இனிமேலாவது சாக்கிரதையா இருந்துகிட வேண்டியதுதான்.
நம்ம வைகைப்புயல் ஸ்டைலில் படிக்கவும்.
யக்கோவ்! வெவரமாத்தான் இருக்கீங்கோ.... நான்தான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு....?!
சதயம் நன்றி.
பாபா டூமச்சா? மசாலா போதலையோன்னு குறையா இருந்துச்சு :-)
ராம்கி, நீங்கதானே தெருத்தொண்டன், உங்க பதிவை காலைலப் பார்த்ததும்தான் இந்த ஐடியா வந்தது. இதுக்கு மேலே எதுவும் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன் :-)
சினிமாவா, ஜோசப் சார், க்யூல முதல்ல நிக்கிறாரூ.
தம்பி ரஜினி ராம்கி, உணர்ச்சி வசப்பட்டு சின்ன வயசுல பீபீய ஏத்திக்காதீங்க. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!
இலவச கொத்தனாரே, இதெல்லாம் படிச்சிட்டு சிரிச்சிட்டு போயிடணும். ஆளு ஆளுக்கு கருத்து கந்தசாமியா மாறி, உப்பு பெறாத விஷயத்த பெரிசாக்கணும்?
This comment has been removed by a blog administrator.
// ஓரு கூட்டத்துல பொம்பளைங்களுக்கு அறிவேயில்லை என்னு பேசினாராம். அது பிரச்சனை ஆனா, அதை எப்படி மாத்தி சொல்லுவதுன்னு நல்லா தயார் செஞ்சி வெச்சியிருந்தாராம். அத்தனையும் வீணாப்போயிடுச்சுன்னு அழுதுட்டாரு சார். //
;-))))
மத்தபடிக்கு நீங்க ஏதாவது டாபிக்க பத்தி பேசறீங்க ?? ஏன் கேக்குறேன்னா டிஸ்க்ளெய்மர் கொடுத்தாலே ...
முகமூடியாரே, பின் குறிப்ப பார்த்துட்டீங்க இல்லே. இது வெறும் கற்பனையே, கற்பனையைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
துளசி, மயில் வருது பார்க்கவும். முடிஞ்ச்சா இன்னொரு பாராட்டு பின்னுட்டம் இடுக :-)
உஷா,
இதோ என் பாராட்டு:-)
Post a Comment
<< இல்லம்