செளதி மன்னருக்கு நன்றி
கண்ணுக்கு கண் என்ற இஸ்லாமிய சட்டப்படி, தண்டனைப் பெற்ற கேரளவைச் சேர்ந்த நெளஷ்த் அவர்களுக்கு மன்னர், தண்டனையில் இருந்து விடுவித்து, மன்னிப்பு அளித்துள்ளார். மன்னிக்க முன் வந்த, பாதிக்கப்பட சை·ப் அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.
-சன் தொலைக்காட்சியில் வந்த செய்தி.
9 பின்னூட்டங்கள்:
ஆமாம் இந்தியர்கள் மேல் அவர் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி
சகோ. உமா ராமச்சந்திரன் அவர்களுக்கு,
இத்தண்டனை விதித்ததைக் குறித்து கேள்விப்பட்ட போது ஆ, ஊ என்று கத்திக் கொண்டு பதிவிட்டவர்கள் இச்செய்தி வந்த பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒழிந்து தனது மத துவேஷ எண்ணத்தை வெளிப்படுத்திய சமயத்தில், நடுநிலையோடு இச்செய்தியை பாராட்டி பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள்.
இச்சமயத்தில் ஒரு விஷயம் கூற விரும்புகிறேன்.
இஸ்லாமியச் சட்டங்களைக் குறித்து குறை கூறுபவர்கள், அதன் நன்மையான பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க எத்தனிக்கும் மறு புறத்தைக் கவனிக்க தவறி விடுகின்றனர்.
இஸ்லாமிய சட்டம் தவறு செய்தவர்களின் மேல் கடுமையான தண்டனை விதிக்கும் அதே நேரம், அத்தண்டனையை ரத்து செய்யும் உரிமையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறது.
இதனால் ஒருவருக்கொருவர் பரம்பரை பரம்பரையாக மாறி மாறி பகைமையுடன் வழக்கிடுவதற்கு முற்று புள்ளி வைக்கிறது.
இதனை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விளங்கலாம்.
சாதாரண குற்றவியல் சட்டங்கள் தண்டனை விதிக்கும் உரிமையை நீதி மன்றத்துக்கு வழங்குகிறது. இதனால் விளையும் தீமைகள் என்ன?
ஒன்றில் பணம் விளையாடி அக்குற்றவாளி தப்பி விடுகிறார். அல்லது விதிக்கப் படும் தண்டனை மிகக் குறைவாக பாதிக்கப் பட்டவரின் மனதிற்கு ஆறுதல் அளிக்காத விதத்தில் ஊள்ளது. இதனால் நீதி மன்ற வளாகத்திலேயே பாதிக்கப்பட்டவனின் சார்பாக யாராவது அரிவாளைத் தூக்கும் செயல் நடை பெறுகிறது. பின்னர் அது பரம்பரை பரம்பரையாக தொடர்கிறது.
ஆனால் இதுவே இஸ்லாம் என்ன செய்கிறது. தண்டனையை கடினமாக்கி விட்டு அதனை செயல்படுத்த பாதிக்கப் பட்டவனின் சம்மதத்தைக் கேட்கிறது. அதாவது அதனை நடப்பாக்குவது மட்டுமே அரசாங்கம். தீர்மானிப்பது(தண்டனையை நிறைவேற்ற வேண்டுமா வேண்டாமா என்பதை) பாதிக்கப் பட்டவன். இதனால் மனம் இரங்கி பாதிக்கப் பட்டவன் வேண்டாம் எனக் கூறி விட்டால் அங்கு பரஸ்பரம் அன்பும் சந்தோசமும்(கவனிக்க, பாதிக்கப் பட்டவனுக்கும், பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கும் இடையில்) ஏற்படுகிறது. ஒரு வேளை பாதிக்கப்பட்டவன் குற்றவாளியை மன்னிக்க தயாரில்லை என்றாலும் தண்டனையை நிறைவேற்றுவது அரசாங்கமாதலால் அவர்களுக்கு இடையில் பகைமை வர வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.
எனவே எவ்வகையில் பார்த்தாலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் நீதியை நடப்பாக்குவதிலும், சமூகத்தில் அமைதியை ஏற்படுத்துவதிலும் எக்காலத்திற்கும் ஏற்ற சட்டமாக இருக்கிறது. இதனை இந்த கேரள வாலிபரின் வழக்கிலிருந்து நன்றாக நாம் உணரலாம்.
இதனை விளக்கும் விதத்தில் இப்பதிவினை இட்ட சகோ. உஷா அவர்களுக்கு ஒரு முறை கூட நன்றிகள்.
அன்புடன்
இறைநேசன்.
சகோதரி உஷா அவர்களுக்கு
செய்தி உண்மை தான் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி இணைப்பின் மூலம் http://timesofindia.indiatimes.com/articleshow/1381218.cms
அறிகிறேன். இதனை முதலில் அறியத் தந்தமைக்கு நன்றி.
துவேஷகர்கள் தற்போது எங்கே போய் விட்டார்கள்? எல்லாம் சரி இதனை நகைச்சுவை நையாண்டி என்ற தொகுப்பில் வைத்துள்ளீர்கள்.. சரி செய்வீர்கள் என்றும் நம்புகிறேன்.
அட்ராசக்கை அவர்களே, என்னுடைய கணிணி கொஞ்சம் பிரச்சனைக் கொடுக்கிறது. தலைப்புகள் மொத்தமும் கேள்விகுறிகளாய் வருகின்றன. ஒவ்வொரு முறையும் வகைப்படுத்தாதவைகளில் சேர்க்கப்பட்டுள்ளது, யாராவது இதை வகைப்படுத்த கூடும் என்று வரும். இந்த முறை
எதில் இருக்கிறது என்று தெரியாமல் அனுப்பிவிட்டேன். உங்களால் முடிந்தால் இதை செய்திவகையில் சேர்க்க முடியுமா?
நகைச்சுவை என்பது நெருடலாம் உள்ளது.
"KOLLAM (Kerala): An Indian man from Kerala jailed in Saudi Arabia on charges of partially blinding a Saudi national will not have to pay with an eye for his offence. He has been pardoned.
The good news for A. Naushad came days ahead of Saudi king Abdullah bin Abdul Aziz's visit to New Delhi, where he will be the chief guest at India's Republic Day celebrations.
Naushad's family said one of his colleagues telephoned to convey the news Sunday, saying the Saudi victim of the crime had pardoned him.
Naushad's 50-year-old mother Nabeeza Beevi told IANS: "Allah is great and we are thankful to all who helped us. I do not know how to thank everyone including the person who pardoned my son."
கடவுளுக்கு நன்றி. சவுதி மன்னருக்கும்தான்.
உஷா அவர்களே, உங்கள் இப்பதிவின் வகைப்படுத்தலை மாற்ற மட்டுறுத்துனர்களால்தான் முடியும். மதி அல்லது காசி அவர்களுக்கு எழுதவும்.
இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இறைநேசர் அவர்களே,
இங்கு நெளஷ் இடத்தில் ராமனோ, ராபர்ட்டோ இருந்தாலும் மன்னருக்கு நன்றி சொல்லியிருப்பேன். என் டி டீவில் அவர்கள் வீடும், தாயும் தகப்பனும், மனைவியும் பிள்ளையையும் காட்டும்பொழுது அச்சு அசலாய் மணியப்பன் குடும்பம் (தலிபான்களாய் தலை வெட்டிப்பட்ட) போன்ற ஏழ்மை நிலைமை.அவ்வளவே!
என்னுடைய பெயர் உஷா, தந்தையின் பெயரையும் சேர்த்து ராமசந்திரன் உஷா என்ற பெயரில் எழுதுகிறேன் (பாஸ்போர்ட்டில் உள்ள முழு பெயர்)
என்னார், முகமறியாதவர்களின் பிராத்தனை வீண் போகாது என்பார்கள், அது இதுதானா?
அன்பு மிகு சகோதரி உஷா அவர்களுக்கு...
//கண்ணுக்கு கண் என்ற இஸ்லாமிய சட்டத்தை//
இஸ்லாமிய சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்று கூக்குரலிடுகிறவர்கள் கவனிக்க வேண்டிய சில செய்திகளை உங்கள் பதிவின் வாயிலாக தர எண்ணுகிறேன்.
உதாரணத்துக்கு இந்த கண் வழக்கையே எடுத்துக்கொள்வோம்.
பதிலுக்கு கண் பறிக்கப்பட குற்றவாளியின் ஒப்புதல் வேண்டும். குற்றம் புரிந்தவரின் ஒப்புதல் இல்லையெனில் அவர் கண் பறிக்கப் படாது; மாறாக அவருடைய சிறையிருப்புத் தொடரும்-. சிறையில்
இருப்பார். அதாவது கண்ணுக்கு பகரமாக குற்றவாளி சம்மதித்தால் தான் கண்.
அவரிடமிருந்து பறிக்கப்பட்ட கண் அவரால் கண்ணிழந்தவருக்கே பொருத்தப்படும். கண்ணிழந்தவர் மன்னித்தால் அல்லது இழப்பீடு பெற்றுக்கொண்டால் இவர் சிறை மீள்வார் - விடுதலையாவார். இது தான் சட்டம்.
பாதிக்கப்பட்டவன் எக்கேடு கெட்டலென்ன; குற்றவாளிக்கு மட்டும் நேயம் காட்டி நமது மனிதநேயத்தை நிரூபிப்போம் என்று பேசுகிற சட்டதாரிகளிடையே பாதிக்கப்பட்டவனுக்கு நேயம் காட்டி 'நீதி' பெற்றுத் தருவது தான் இஸ்லாமிய சட்டங்களின் சிறப்பு.
மேலும் பாதிக்கப்பட்டவனிடம் மன்னிக்கும் பண்பை ஊக்குவித்து குற்றவாளி நிஜமாகவே திருந்த வாய்ப்புமளிக்கிறது.
(சம்பந்தமேயில்லாத அரசோ, ஜனாதிபதியோ மன்னிப்பதை விட பாதிக்கப்பட்டவனே முழு மனதோடு மன்னிப்பது தான் குற்றம் புரிந்தவனின் மனசாட்சியை விழிக்கச் செய்யும்).
திருடினால் (மணிக்)கை வெட்டு என்று இஸ்லாம் சொல்கிற அதே நேரத்தில் அதன் பின்னணி காரணத்தையும் ஆராயச் சொல்கிறது. 'பசி' காரணம் என்றால் முதலில் அந்த அவல(க் காரண)த்தை தான் களையச் சொல்கிறது. அதன் பின்பும் இச்சைக்காகத் திருடினால் தான் தண்டனை.
While I welcome that gesture I hold still hold the views that
such laws are barbaric.They may be valid according to Islam but that does not mean that they are not barbaric.
ஐயா, அனைவரும் மன்னிக்க வேண்டும். இங்கு இஸ்லாமிய சட்டங்களைப் பற்றி நீங்கள் எழுதப் போக, கதை திசை மாறிப் போய் கொண்டு இருக்கிறது. பெயரில்லா பெருந்தகை ஒருவர் அதை விமர்சித்து, சுட்டிகளுடன் நீண்ட பின்னுட்டம் இட்டுள்ளார். அதை நிறுத்திவிட்டேன்.
காரணம், இத்தகைய வாக்குவாதங்களை செய்ய எனக்கு விருப்பம், நேரம், பொறுமை இல்லை. என்னுடைய பதிவில் என்ன எழுத வேண்டும் என்று சில கொள்கைகளை வைத்துக் கொண்டு இருக்கிறேன். ஆபாசம் அல்லாத எந்த பதிவையும் நிறுத்தும் எண்ணமில்லை. ஆனால் எனக்கு ஒவ்வாத சாதி, மத அபிமானிகளின் வாக்குவாதங்கள் இங்கு வேண்டாம். அவை நாகரீகமான வார்த்தையில் இருந்தாலும் நிறுத்தப்பட்டதற்கு மீண்டும் மன்னிக்கவும்.
இதுவரை இங்கு இருப்பதை அழிக்க மனமில்லை. அவை இருந்துவிட்டு போகட்டும். அனானி அவர்களே உங்கள் பின்னுட்டத்தை
போடாதற்கு மன்னிக்கவும். மேற்கொண்டு பின்னுட்டம் இடுபவர்களும் இதை மனதில் கொள்ளவும்.
Post a Comment
<< இல்லம்