Thursday, January 26, 2006

நேற்றைய பொழுது

காலையில் போலி டோண்டு முகத்தில் முழித்ததும், ஆரம்ப வரியிலேயே தெரிந்ததும், இரண்டு மடல்களை டெலிட் செய்ததும், பினாத்தல் சுரேஷ் அவர்களின் பதிவுக்கு சென்றேன். அவரிடம் பலமுறை சொல்லியும் மாடரேஷன் செய்வதில் அவருக்கு இருக்கும் பிரச்சனைகளை சொல்லி அவருடைய பாஸ்வோர்ட்டை என்னிடம் கொடுத்துள்ளார்.

இரண்டாவது முறையாய் அந்த எழவைப் பார்த்துவிட்டு குப்பை தொட்டியில் வீசலாம் என்றால், போக மறுத்து பிளாக்கில் மராமத்து பணி நடக்கிறது என்ற அறிவிப்பு வந்தது. எனக்கு இருக்கும் அரைகுறை கணிணி அறிவில் என்ன செய்வது என்று போன் அடித்தால் வீடு செல்பேசி இரண்டும் எடுக்கப்படவில்லை. ஊரில் இல்லையா என்று மிகவும் குழம்பிப் போய் மீண்டும் அவரின் பிளாக்குப் போனால், அதே மராமத்து வேலை நடக்கிறது என்ற அறிவிப்பு.

கண்ணில் பட்டத்தால், இம்முறை மதி, காசி, மாயவரத்தான், செல்வராஜ், டோண்டு மற்றும் அவர்கள் வீட்டு அனைத்து பெண் சென்மங்களை, இப்படியும் ஒரு தாய் வயிற்றில் பிறந்து, சகோதரிகளுடன் வாழ்ந்து, பெண்ணை மணந்து பெண் குழந்தைகளைப் பெறுபவர்கள் சொல்ல முடியுமா? தட்டச்சு செய்யும் விரல்களும் அதைக் கொண்ட உடலும் நாறி போகட்டும் என்று கண் கலங்கி சாபம் இட்டேன்.

அதற்குள் குப்பை தொட்டில் போட ஆரம்பித்தேன், போட போட வரத் தொடங்கியது. அதற்கு முன்பு சுரேஷ¥ம் சாக்கடையை
சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளார். அப்பொழுது சுரேஷ் இடமிருந்து போன் வந்ததும், வந்த கோபத்தை அவரிடம் காட்டினேன்.
மாடரேஷன் போடுங்க, ஈமெயில் ஐடி தரேன், நானே வர வர டெலிட் செய்துவிடுகிறேன். என்னால் தாங்க முடியவில்லை என்றேன். அவருடைய ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள, சுந்தர தமிழில் அழகாய் சில வார்த்தைகள் என் காது குளிர சொல்லிவிட்டு, மாடரேஷன் போடுகிறேன் என்ற உறுதி மொழியை தந்தார்.

அவரிடம் இந்த மாடரேஷன் விதிமுறையை வலியுறுத்த சொல்லி காசிக்கும், செல்வராஜ்க்கும், மதிக்கும் ஒரு மெயில் போட
போகிறேன் என்று சொல்லிவிட்டு, வேலையைப் பார்க்கப் போனேன். சில மணி நேரம் கழித்துப் பார்த்தால் தமிழ் மணம் நிர்வாகிகளிடமிருந்து இதையே சொல்லி ஒரு மடல். அதுவரை என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை, செய்யும் வேலையிலும் மனம் ஒப்பவில்லை. உடலும், மனமும் மரத்துப் போனதுப் போல இருந்தது.

அனாமதிய பின்னூட்டமோ அல்லது காட்டமான எதிர்வினையோ மட்டுறுத்தலில் அனுமதிப்பதில் தவறும் இல்லை, அதை அனுமதிப்பதன் விளைவை நாம் எதிர்நோக்கிய அனுமதிக்கிறோம். அவற்றை ஒதுக்கி வைத்தால், அனுப்பியவர்கள் தங்கள் பதிவில் போடப் போகிறார்கள். பிரச்சனை அது இல்லை. வீட்டு பெண்களை இழுப்பது, என் மதம், சாதி சார்ந்த விஷயங்களை குறித்து ஆபாசமாய் கமெண்ட் இடுபவர்கள், என்னாளும் அதை பொதுவில் தன் பதிவில் போட மாட்டார்கள். நான் அதை டெலிட் செய்தால், காப்பி பேஸ்ட் செய்து பிறர் பதிவில் போட்டு, அதை நீங்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அப்படியே வைத்திருப்பது நியாயமா? இதை தானே வேண்டாம் என்கிறார்கள்.

ஐயா, ஆபாச பின்னூட்ட வீரதீர சுரர்களே, செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு இடத்தில் கணக்கு உண்டு. அதற்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். சிறு விலங்குகள் கூட தன் குட்டிகளுக்கு கேடு என்றால் பெரியவிலங்குகளை எதிர்க்குமாம், அப்படி எத்தனை பெற்றோரின் சாபங்களுக்கு உள்ளாகிறீர்கள் எனபதை ஒரு கணம் யோசியுங்கள். இன்று அலட்சியமாய் சிரிக்கலாம், ஒரு நாள் இதை நினைத்து அழும்காலம் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி

9 பின்னூட்டங்கள்:

At Friday, 27 January, 2006, சொல்வது...

சதயம், நீங்கள்தான் முன்னின்று செய்யுங்களேன். அதற்கு தேவையான உதவிகளை, பொருள் உட்பட தருகிறேன். எல்லாமே செய்யலாமே என்று பிறரை சொல்வது மிகமிக சுலபம்.

அடுத்து, இவை எல்லாம் புலம்பலாய்தான் தெரியும். ஒரு காலத்தில் நானே சிரித்திருக்கிறேன். ஆனால் அந்த லிஸ்டில் நானும் பாதிக்கப்பட்ட பொழுது, என் மகள் மீதான ஆபாச பின்னுட்டம் வந்தப் பிறகுதான் உறைத்தது. பிறகு, என் வீட்டாரை ஆபாசமாய் இழுத்தவர்களையும் என்னால் அவர்கள் வீட்டு பெண்களையோ, எழுதியவர்களையோ அதே ஆபாச தொனியில் திட்ட முடியாது. இது அவரவர் வந்த வழி.

மனதிற்குள் விடும் சாபம் தாண்டி, வாய்
வார்த்தையாலோ எழுத்திலோ யார் மீதும் கடுமையான வார்த்தை பிரயோகம் என்னால் செய்ய முடியாது. எதிர்வினைகளே
வைக்க யோசிக்கும் மற்றும் என் மீது வீசப்படும் கடுமையான வார்த்தைகளையும் நான் ஒதுக்கி தள்ளி விட்டே இந்நாள் வரை
சென்றுள்ளேன்.

இது இலக்கியவாதிகளுக்கு சரிப்பட்டு வாராது என்றால் அத்தகைய இலக்கியவாதி பட்டமே எனக்கு வேண்டாம் :-)))

 
At Friday, 27 January, 2006, சொல்வது...

உங்க ஆத்திரம் நியாயமானதுதான் உஷா..

அதுவும் என் பதிவுகளை என் இளைய மகளும் மனைவியும் படிப்பதால் நான் மிகவும் கவனமாகவே இருப்பேன். என்னுடைய பதிவுகளில் இடப்படும் கருத்துகளை என்னுடைய ஜிமெய்ல் விலாசத்துக்கு வரும்படி செய்துள்ளேன். பின்னூட்டங்கள் இடப்பட்ட அதே நிமிடத்தில் ஒரு பாப் அப் திரை என் கணினியில் வருவதால் அதே அக்கணமே நீக்கிவிட முடிகிறது.. இருந்தும் சில சமயங்களில் அலுவலக வேலைகளுக்கிடையில் கவனிக்க தவறிவிட்டால் இந்த அசிங்கம் பிடித்த பின்னூட்டங்கள் வந்துவிடுகின்றன..


சத்யம் சொல்றா மாதிரி same to you buddy என்று சொல்லலாம்தான். ஆனால் வீட்டில் பெண்கள் இருக்கிறார்களே..

இப்போது ஒரு வழியாக அந்த தொல்லை விட்டது..

 
At Friday, 27 January, 2006, சொல்வது...

மிக்க நல்லப் பதிவு உஷா அவர்களே. நன்றி.

சதயம் அவர்களே, ஆக்ஷன் எடுத்ததில்தான் இப்போது மாடரேஷனில் வந்து நின்றிருக்கிறது. ஒரு விஷயம் தெரியுமா, சைபர் க்ற்றப் புத்தகத்தில் வழக்கு என்று வந்துவிட்டால், ஆபாசப் பின்னூட்டம் வந்தப் பதிவுகள் சொந்தக்காரர்களும் பொறுப்பேற்க வேண்டும். இப்போது மட்டுறுத்தல் இருப்பதால் அப்படியெல்லாம் பதிவாளர்களை மீறி ஆபாசப் பின்னூட்டங்கள் வராதலாவா?

இன்னொரு விஷயம், போலிப் பேர்வழியே தன் பதிவில் எவ்வளவு நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறார் என்பதைப் பார்த்தால் தலையே சுற்றும்.

ஆக, இப்போதைக்கு ஆபாசப் பின்னூட்டங்களுக்கு பெருமளவில் செக் வைக்கப்பட்டுள்ளது என்பதே நிஜம். இதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?

அப்படி மட்டுறுத்தல் செய்யாதப் பதிவுகளில் பின்னூட்டங்கள் வந்தால் அவை இற்றை செய்யப்பட மாட்டாது அவ்வளவுதான்.

இப்பின்னூட்டம் என்னுடைய வழமையானத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Friday, 27 January, 2006, சொல்வது...

சத்தீஷ் தெளிவாயிடுச்சா?

ஜோசப் சார், உங்க மனைவியை, மகளைக் கேட்டுப் பாருங்க, சேம் டூ யூன்னு சொல்லுவாங்களான்னு? யாரு சொன்னாலும் அவன் வீட்டு குழந்தையை சொல்ல என் மனம் ஒப்பாது.

டோண்டு சார், உங்களின் பெரும்பாலான பதிவுகள் எனக்கு ஒப்புதல் இல்லை. உங்களின் கருத்துக்கு பலரும் எதிர்கருத்து வைக்கும்பொழுது, நான் அவைகளை படிப்பதும் இல்லை. இவை எல்லாம் நேர விரயம் என்பது என் கருத்து. ஆனால் இந்த போலி விஷயத்தில் உங்கள் வேதனை புரிந்தாலும், ஒற்றை ஆளை குற்றம் சாட்டுவதில் சந்தேகம் உள்ளது. நல்லவர்கள்
போல வேடமிட்டு விட்டு, வேறு சிலரும் போலி பெயரில் மன வக்கிரத்தை வெளியிடுகிறார்கள் என்பது, எந்த சாட்சியும் இல்லாத என் எண்ணம்.

சதயம், சென்னையில் வசிக்கும் ஐகாரஸ் பிரகாஷ் எழுதியதைப் பார்தீர்களா? நீங்கள் விருப்பப்பட்டால் பொதுவிலோ, தனிமடலிலோ சென்னை வாசிகளிடம் இதைக் குறித்துப் பேசலாம். நான் இந்தியா/சென்னையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

மாடரேஷன் போட்டதும், போலி டோண்டுவின் ஆபாச பின்னுட்டம் ஆரம்ப வரியிலேயே தெரிந்துவிடும், அப்படியே டெலிட்டுதான்.
ஆனால் பெயரில்லாமலோ அல்லது அறியாத பெயரிலோ சாதி, சமயம் காழ்புணர்ச்சியை வெளிக்காட்டியும், என்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல் இரண்டொன்று வந்தது, அதை நிறுத்திவிட்டேன். நிறுத்தியதையும் பின்னுட்டத்தில் சொல்லிவிட்டேன்.

மற்றப்படி, எந்த பின்னுட்டத்தையும் நிறுத்தவில்லை. நிறுத்தவும் மாட்டேன்.

 
At Friday, 27 January, 2006, சொல்வது...

உஷா,

உங்கள் நிலையில் இன்று பலரும் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். நீங்கள் comment moderation போடுவதால் மட்டுமே உங்களுக்கு வரும் ஆபாச, வேண்டாத பின்னூட்டங்களைத் தவிர்த்து விடுவது இயலாது. ஏனென்றால், அதன் மூலம் உங்களுக்கு வரும் பின்னூட்டங்களை பிறர் படிக்காது தடுக்க மட்டும் தான் முடியுமே தவிர, நீங்கள் அதை வாசிக்காது இருக்க முடியாது. அதை தான் அநாமதேயங்கள் பிடித்துக் கொள்கின்றனர். உங்களை (வலைப் பதிவாளர்களை - தங்களுக்குப் பிடிக்காதவர்களை) தாக்குவது மட்டும் தான் அவர்களுடைய நோக்கமே தவிர, அதை நீங்கள் வெளியிட்டு அதை பலரும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அவர்கள் இயங்குவதில்லை.

அதனால், இந்த comment moderation என்பது ஒரு பொது இடத்தில் ஆபாச நிகழ்வுகள் நிகழாதிருக்க செய்ய முடியுமே தவிர, ஒரு வலைப்பதிவாளரை ஆபாசத் தாக்குதல்களிலிருந்து தப்புவிக்க முடியாது. அதற்கு ஒரே வழி - நான் செய்வது போல - அநாமதேயங்களின் பதிவை திறக்காமல் அப்படியே அழித்து விடுவது தான். இது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கும். ஏனென்றால் ஏதோ ஒரு ஆவல் உந்தித் தள்ள அந்த அநாநியின் மின்னஞ்சலைத் திறந்து விட்டு, பின்னர் அதற்காக வருந்துவதைத் தவிர, வேறு வழியில்லை.

ஆகையால், இனி பெயரற்று வரும் மின்னஞ்சல்களைத் தயை தாட்சண்யமின்றி தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள். அல்லது, அநாநிகளின் பதிவுகளை இழக்கிறோம் - பின்னூட்ட பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விடுமே என்ற நப்பாசையில் திறந்து பார்த்தீர்கள் என்றால் அது பற்றி புகார் செய்யாதீர்கள். இது ஒன்று தான் - பெயரற்ற மின்னஞ்சல்களை திறவாமல் அழிப்பது மட்டும் தான் அநாநிகளை தோல்வியுறச் செய்யும். இல்லை, பின்னூட்ட எண்ணிக்கை அரசியல் தான் உங்களுக்கு முக்கியமென்றால், அதன் பலனையும் ஏற்றுக் கொள்ளுங்கள் - உங்களால், அநாநிகளை ஒரு போதும் தோல்வியுறச் செய்ய முடியாது. மாறாக நீங்களே மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள்.

அப்புறம் உங்கள் விருப்பம்.

 
At Friday, 27 January, 2006, சொல்வது...

நண்பன் அவர்களே,
"அனானிமஸ்" பற்றி சொன்னீர்கள். ஆனால் எனக்கு அப்படி பெயரில்லாமல் எதுவும் வந்ததில்லை. இன்று நூற்றுக்கணக்கான பதிவாளர்கள் இருக்கிறார்கள். அதைத் தவிர பலர் பின்னுட்டம் மட்டுமே இடுபவர்கள். ஆக பெயரில் என்ன இருக்கிறது?

சொல்லும் சொல்லில் நேர்மையில்லாத கோழைகள் ஏதோ ஒரு பெயரில் வந்து சிண்டு முடிந்து விடும் வேலையை செய்தால்,படித்துவிட்டு டெலிட்டுதான். இவை எல்லாம் மன உளச்சலை தரும் என்று பயந்தால் எழுதவே வந்திருக்க மாட்டேன். ஆபாச வார்த்தைகளுக்கு பார்த்து மட்டுமே அருவருத்துப் போனேனே தவிர,மற்றவை எல்லாமே டேக் இட் ஈஸி பாலிசிதான்.

பொதுவாய் எனக்கு வரும் அனைத்து பின்னுட்டங்களும் ஏதாவது ஒரு கருத்தை செய்தியை தாங்கியே வரும். அதில் இருந்தும் பல புதிய விஷயங்கள் தெரிய வரும்.

ஆனால் சமீபத்தில் "செளதி மன்னருக்கு நன்றி" என்ற பதிவைப் போட்டு இருந்தேன். அதில் சிலர் ஷாரியா சட்டத்தைப் பற்றி விளக்க ஆரம்பித்தனர். பிறகு அதை விமர்சித்து சுட்டிகளுடன் ஒரு பதிவு, ஏதோ ஒரு பெயரில். அதை டெலிட் செய்துவிட்டேன். அவர் சொல்லுவதில் உறுதியிருந்தால், சொல்ல வேண்டிய இடம் என்னுடைய இடமல்ல. தன்னுடைய பதிவில் போட்டுக் கொண்டு, வரும் பதில்களுக்கு நாள் எல்லாம் கணிணி முன்னால் அமர்ந்துக் கொண்டு மறுப்பு சொல்லிக் கொண்டு இருக்கலாம்.

அடுத்து, இத்தகைய இஸ்லாம் சார்ந்த பதிவுகள் போட வேண்டாம் என்ற அறிவுரை. இதில் சமயம் எங்கு வந்தது? டெலிட்டுதான்.

அடுத்து என் நடுநிலைமை கருத்தை போற்றி இன்னொரு புகழ் மாலை. இதிலும் நடுநிலைமை என்ன? ஒரு பாவப்பட்ட மனிதனுக்கு
கிடைத்த விடுதலை, அதற்கு நன்றி சொன்னேன். இந்த அபத்த கருத்தையும் டெலிட் செய்தேன்.

நான் செய்தது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதுதான். ஆனால் இப்படி குறுக்கு புத்தி மனிதர்கள் பின்னுட்டம் எனக்கு தேவையில்லை
என்பதை வலியுறுத்தவே இதை சொல்கிறேன். உண்மையில் மாடரேஷன் போட்டதும் தலைவலி தீர்ந்தது. நான் ஒன்று எழுதிவைக்க, தூங்கி எழுந்து வந்து பார்ப்பதற்குள் எதையாவது யாராவது சொல்லிவிட்டுப் போக, கருத்து கந்தசாமிகள் ஓடோடி வந்து வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போவதை இந்த மாடரேஷன் தவிர்க்கிறது.

இனி தமிழ்மண திரட்டும் பதிவுகளில் ஆரோக்கியமான, நாகரீகமான கருத்து பரிமாற்றங்களும், சூப்பர் பதிவு போன்ற புகழ்மாலைகள் மட்டுமே பார்க்கலாம். என்ன ஒன்று சாட் செய்வதுப் போன்ற பின்னூட்டம் எண்ணிக்கைகள் குறையும் :-))

 
At Saturday, 28 January, 2006, சொல்வது...

நீங்கள் லக்கி தான்.

ஏனென்றால், எனக்கு வருபவை எல்லாம் அநாமதேயங்கள் மட்டும் தான். அதனால் தான் என்னால் எளிதாக அழித்து விட முடிகிறது.

பிளாக்கர்களின் பெயரில் வந்தால் சற்று சிரமம் தான். வேறு வழியில்லை. படித்து சமாளியுங்கள்.

ஆனால், ப்ளாக்கர் பெயர்களில் வருவதைப் பற்றி யாரும் எதுவும் செய்ய முடியாதா?

 
At Saturday, 28 January, 2006, சொல்வது...

"திரு.டோண்டு அவர்கள் இந்த நிமிடம் வரை போலி டோண்டு யார் என்பதை தைரியமாக வெளியில் சொன்னதாக தெரியவில்லை, சூசகமாய் இவர்தான் அவர்தான் என கிசுகிசு பாணியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
யார் என்று தெளிவாய்ச் சொன்னால் நேரே அவர் வீட்டிற்கு(தளத்திற்கு) சென்று பேசலாமே...பிரச்சினைக்குத் தீர்வே இல்லாமல் இழுத்தடிப்பது அவர் இத்தகைய விளம்பரங்களை விரும்புகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது."
சதயம் அவர்களே, இப்போது நடப்பது போலி டோண்டுவிற்கு எதிரான ஓர் யுத்தம். எப்போது எதை எங்கு வெளியிடுவது என்பதெல்லாம் யுத்தம் செய்யும் என்னுடைய போர் யுக்தியில் நான் தீர்மானிக்க வேண்டியது. அதையெல்லாம் நீங்கள் கேட்டு விட்டீர்கள் என்பதற்காகவெல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது. அதுவும் பல இன்னல்களை தவிர்க்கக்கூடிய மாடரேஷன் விஷயத்தையே மற்றவர்கள் கூறினார்கள் என்பதற்காகவும், அதனால் வரும் அதிகப்படி வேலைகளை நினைத்து சோம்பல்பட்டும் அதைச் செய்வதிற்கில்லை என்று அசட்டுப் பிடிவாதம் பிடிக்கும் உங்களைப் போன்றவர்களிடமா அதைக் கூறுவேன்?

மேலும் கூறுகிறீர்கள்: "பிரச்சினைக்குத் தீர்வே இல்லாமல் இழுத்தடிப்பது அவர் இத்தகைய விளம்பரங்களை விரும்புகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்று.
நான் இப்போது கூறுகிறேன், மாடரேஷன் இல்லாத உங்கள் பதிவு போலி டோண்டுவுக்கு ஒரு வரப்பிரசாதமே. அதில் அவன் என் பெயரில் அசிங்கப் பின்னூட்டமிடுவான். நீங்களும் சில மணிநேரம் கழித்து சாவகாசமாக அவற்றைப் பார்த்து ரசித்து, பிறகு போனால் போகிறதென்று அழிப்பீர்கள். அதுதான் உங்கள் விருப்பம் என்று எனக்குத் தோன்றுகிறது.

நான் இவ்வாறு சளைக்காமல் யுத்தம் நடத்தியதால் இப்போது மாடரேஷன் முறை வந்து, பிரச்சினை பெருமளவில் தீர்ந்துள்ளது. அதில் உங்களுக்கென்ன வருத்தம்? இத்தனை நாள் அவன் ஒரு கட்டி போல பலருக்கு தொல்லை கொடுத்தான். அக்கட்டியை பழுக்கச் செய்து உடைத்ததுதான் என் வேலை.

போலி டோண்டுவால் முன்னால் பாதிக்கப்பட்டு களம் விட்டு விலகியவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல்கள் மூலம் நன்றி தெரிவிக்கிறார்கள். அது போதும் எனக்கு.

"ஆனால் இந்த போலி விஷயத்தில் உங்கள் வேதனை புரிந்தாலும், ஒற்றை ஆளை குற்றம் சாட்டுவதில் சந்தேகம் உள்ளது. நல்லவர்கள்
போல வேடமிட்டு விட்டு, வேறு சிலரும் போலி பெயரில் மன வக்கிரத்தை வெளியிடுகிறார்கள் என்பது, எந்த சாட்சியும் இல்லாத என் எண்ணம்."
உஷா அவர்களே, நீங்கள் மூடிய பழைய நுனிப்புல் பதிவு ஒன்றில் உங்களுக்கு வந்தப் பின்னூட்டங்களைப் பார்த்துமா இவ்வாறு பேசுகிறீர்கள்? அதன் பிறகு உங்களைத் தனிப்பட்ட முறையில் அவன் தாகியதால்தானே நீங்களே சில காலம் பதிவுகள் போடாமல் இருந்தீர்கள். ஒன்றுக்கு மேல் அவ்வாறு மனிதர்கள் இருந்திருக்கலாம் என்று அப்போதும்தானே கூறினீர்கள். அதற்கான எதிர்வினைகளையும் அப்பேர்வழி கொடுத்தானே, இன்னுமா அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

யுத்தம் இப்போது ஏற்கனவே அடுத்தக் கட்டத்துக்கு சென்று விட்டது. அதாவது அந்த இழிபிறவி தமிழ்மணத்தில் இல்லாத மற்றத் தமிழ்பதிவுகளுக்குப் போய் இம்மாதிரி அசிங்கப் பின்னூட்டங்களை என் பெயரில் இட ஆரம்பித்து விட்டான். ஆங்கிலப் பதிவுகளையும் விடவில்லை. அங்கும் யுத்தம் செய்வேன். என் உள்ளமங்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் எனக்கு அதற்கான சக்தியைக் கொடுப்பான்.

இப்பின்னூட்டம் நான் இட்ட "மிக்க நன்றி காசி அவர்களே" என்ற இப்பதிவில் பின்னூட்டமக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_26.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Sunday, 29 January, 2006, சொல்வது...

நண்பன்,
அனானிமஸ்ஸாக இருந்தா என்ன? தினம் ஒரு பெயரில் வந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே :-)

டோண்டு சார்,
சென்ற ஜூன் மாதம் சென்னையில் நடந்த வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றியும் ஆபாச பின்னுட்டங்களுக்கு முக்கியத்துவம் தர தேவையில்லை. என்று எழுதப் போக, பல்வேறு பின்னுட்டங்கள். அப்பொழுது சென்னையில் இருந்தேன். பத்து மணிக்கு வெளியூர் கிளம்பணும். லாப்டப் பேக் செய்யணும், அந்த அவசரத்தில் அனைத்து மடலையும் சேவ் செய்துவிட்டு, பின்னுட்ட பெட்டியை மூடிவிட்டு சென்றேன். ஹாக் செய்தேன் என்ற பின்னுட்டம் உட்பட.

பிறகு செப்டம்பரில் அமீரகம் வந்ததும், மீண்டும் எழுத ஆரம்பித்தேன். ஆனால் வந்ததில் இருந்தே எனக்கு முதலில் ஜூரம் தொடங்கி பின் மஞ்சள் காமாலையாய் மாறி, தீவிரமாகி ஷார்ஜாவில் ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் அட்மிட்டும் ஆனேன். அந்நேரம் ஒரு ஆபாச பின்னுட்டம் இன்னொருவர் பதிவில், ஆங்கிலத்தில் பெயரில்லாமல் போடப்பட்டிருந்தது. ஒருவர் பார்த்து சொன்னார். அன்றைய மனநிலையில் யோசிக்கவும் தெம்பில்லாமல் இனி எழுதவே மாட்டேன் என்று பிளாக்கையே முழுவதுமாய் மூடிவிட்டேன். உடல் நிலைமை சரியானதும், அரிப்பெடுத்த கை எழுது என்றது. எழுத தொடங்கினேன். மீண்டும் வேறு பிரச்சனை. அப்பொழுது வாசன் பிள்ளை அவர்களும், மோகன் தாஸ் அவர்களும் முன் வந்து பிரச்சனை தீர்க்க சில வழிகளை சொன்னார்கள். அதில் மோகன் தாஸ் சொன்ன மாடரேஷன் செய்ததும், தலைவலி தீர்ந்தது.
ஒருவரே இருக்க முடியாது என்பதில் என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. சில விஷயம் மனதில் ஏற்படும் சந்தேகம், ஏன் என்று சொல்ல தெரியாது. அதுபோலதான் இதுவும். மற்றப்படி, பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி என்பது அவரவர் செளகரியம். உங்கள் காரியம் வெல்ல, நீங்கள் வணங்கும் கடவுள் உதவட்டும்.

 

Post a Comment

<< இல்லம்