Monday, January 01, 2007

1, 2007- என் புத்தாண்டு தீர்மானங்கள் - உங்கள் கையில்

என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் பெரும்பாலும் ஒன்றேதான். அதாவது ஜனவரி ஒன்றாம் தேதிக்கு என்று தனியாய் தீர்மானம் ஒன்றை கடைப்பிடிக்கிறேன் என்று அறிவிப்பதில்லை என்பதுதே. பொதுவாய் எதாவது செய்வது அல்லது கடைப்பிடிக்க தோன்றினால், செய்ய முடியுமா என்று யோசித்துவிட்டு அந்த கணம் முதல் ஆரம்பிப்பதே என்னுடைய வழி. ஆனால் காலையில் தோன்றியது, இன்று புத்தாண்டு என்பதாலும் பதிவும் போட்ட கணக்கில் ஆயிற்று என்று என் புத்தாண்டு தீர்மானத்தைச் சொல்லிவிடுகிறேன்.

ஊரைக்கூட்டி அறிவிப்பதன் மிக முக்கியக்காரணம் உங்கள் அனைவரின் உதவி தேவை.
ஆம்- நான் இனி ஒழுங்காய், தமிழ் எழுத பழகப் போகிறேன்.
என் பிரச்சனைகள் இரண்டே இரண்டுதான்.

ஒன்று. வல்லின, மெல்லின ர, ற பிரச்சனை (அதுதாங்க சின்ன ர, பெரிய ற பிரச்ச்னை) இது அவசரமாய் தட்டச்சினால் மட்டுமே வரும். கொஞ்சம் நிதானித்து, அவதனித்துப் பார்த்தால் குறையைக் களைந்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை.

அடுத்து, ஐயகோ! நான் என் செய்வேன்! சந்திப்பிழை என்னும் அரக்கன் என்னைப்பிடித்து ஆட்டுகிரானே! சில சமயம் வேண்டாம் என்றாலும் நானே அவனைப் பிடித்து வலுவில் சேர்த்துக் கொள்ளுகிறேன்.

ஆகப் படிக்கும் அன்பு நண்ப, நண்பிகளே! என் பதிவில் எங்காவது சொற்பிழை இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள். எழுத ஆரம்பித்து இரண்டு கழுதை வயது ஆகியும், இன்னும் திருந்தாத என்னை தமிழ் கூறும் நல்லூலகம் நாளை இகழலாலா?

மேலும் ஒரு கொள்கை அறிவிப்பு. தங்லீலிஷ் உபயோகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு எண்ணம். ஆக என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் நிறைவேற்றி வைப்பது இனி உங்கள் கையில் :-)

அனைவருக்கும் கொஞ்சம் தாமதமாய் புத்தாண்டு வாழ்த்துக்கள்

17 பின்னூட்டங்கள்:

At Monday, 01 January, 2007, சொல்வது...

அவதனித்து/ அவதானித்து
நல்லூலகம்/ நல்லுலகம்
இகலாலா/ இகலாதா
ஆட்டுகிரானே/ ஆட்டுகிறானே

புத்தாண்டு வாழ்த்துகள்!

 
At Monday, 01 January, 2007, சொல்வது...

கேட்டபின் சும்மா இருக்கலாமா? நல்லூலகம் - நல்லுலகம்
அவதனித்து - அவதானித்து
புத்தாண்டு வாழ்த்துகள் உஷா.

 
At Monday, 01 January, 2007, சொல்வது...

உஷா அவர்களே!

எனக்கு இரண்டு சந்தேகம்....

1.தமிழ் கூறும் நல்லூலகம்(?) எங்கே இருக்கிறது.

2.ஒரு கழுதை வயசு என்றால் எத்தனை வயசு?...

ஹி...ஹி....க்ளியர் டவுட் ப்ளீஸ்...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்பன்
பங்காளி....

 
At Monday, 01 January, 2007, சொல்வது...

//2.ஒரு கழுதை வயசு என்றால் எத்தனை வயசு?...//

எனக்கும் சேம் டவுட்...

 
At Monday, 01 January, 2007, சொல்வது...

சிவஞானம்ஜி, பத்மா நன்றி. கையில் பிரம்பு ஒன்றும் இல்லையே :-)

//இகலாலா/ இகலாதா//
சிவஞானம்ஜி, இது சரியில்லை போல இருக்கே, ழ வர வேண்டாம்.

பங்காளி, தலை நரைக்க ஆரம்பித்துள்ளது. கழுதை வயசுக்கு அதுவே அறிகுறி.
அடுத்து யாராவது பரிசெல்லாம் வாங்கியிருக்கிறாள், பத்திரிக்கைகளில் கதை வந்திருக்கிறது என்றுக்
கேள்விப்பட்டு, வலைப்பதிவு படிக்க வந்து தலையில் அடித்துக் கொண்டால், அதுக்கு பெயர்தான் தமிழ் கூறும் நல்லுலம்

 
At Monday, 01 January, 2007, சொல்வது...

அன்பிற்குரிய உஷா,

நீங்கள் கேட்டதால் சொல்லுகிறேன். பொதுவாக இதுபோன்றவற்றைச் சொல்லுவதில்லை.

ஜனவரி ஒன்றாம் தேதி என்று தமிழ்நடையில் எழுதுவதில்லை. அது ஜனவரி முதல் தேதி என்று வரவேண்டும். ஆங்கிலத்தில் கூட எண்ணும் போது மட்டுமே one, two என்று எண்ணுகிறோம். இதுபோல நாட்களைச் சொல்லும் போது january first என்று சொல்லுகிறோம் இல்லையா? அதற்குப் பெயர் மொழி மரபு.

அதே போல தமிழ் மரபு என்ற ஒன்றும் இருக்கிறது. அதில் முதல் என்று தான் பல இடங்களில் சொல்லுவோம். ஒன்றாம் இடத்திற்கு வந்திருக்கிறான் என்று சொல்ல மாட்டோம். முதல் இடத்திற்கு வந்திருக்கிறான் என்று சொல்லுவோம். ஓர்ந்து பாருங்கள்.

சட்டாம் பிள்ளைத் தனத்திற்கு மன்னியுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

 
At Monday, 01 January, 2007, சொல்வது...

அவதனித்து என்பது சரியே. அவதானம் என்ற வடமொழி சொல்லில் இருந்து தோன்றியதே இவ்வார்த்தை. அவதனித்தல் என்று சொல்லும் போது இனிமையான தமிழ்ப்படுத்தலாகிறது.

கொள்ளுகிறேன் - கொள்கிறேன் என்பதே நன்று.

பிரச்ச்னை - இரண்டு ச்ச் ஏன். எழுதியபின் ஒருமுறை படித்தால் தாங்களே இதை களைந்து விடுவீர்கள்.

இகலாலா - இகழாதா (இகழ் என்னும் அடிச்சொல்லில் இருந்து)

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
At Monday, 01 January, 2007, சொல்வது...

அன்பு இராம.கி.

தேதியை சொல்லும் போது ஜனவரி ஒன்றாம் தேதி என்பது சரியே. ஜனவரி இரண்டாம் மூன்றாம் தேதிகளை வேறுவிதமாக சொல்லுதல் தங்களால் இயலுமோ.

தாங்கள் சொல்வது போல் ஒன்றாம் இடம் என்பதை விட முதல் இடம் என்பதே சரி. அதை வைத்து இது தவறு என்று சொல்லி விட முடியாது.


உஷா அவர்களே,
தங்கள் தீர்மானம் பதிவுக்கு மட்டும்தானா. பின்னூட்டங்களுக்கு இல்லையா.


மீண்டும் நல்லுலம் - நல்லுலகம் அல்லவா.

என்றுக்
கேள்விப்பட்டு - இங்கு சந்தி வராது.

நன்றிகள்.

 
At Monday, 01 January, 2007, சொல்வது...

Usha,

Glad to know I am not alone in this struggle.
Check my previous article on the ra RA confusion.
http://badnewsindia.blogspot.com/2006/10/blog-post_12.html

 
At Monday, 01 January, 2007, சொல்வது...

எங்க கைல விட்டுட்டீங்கல்ல? கவலைய விடுங்க. உங்க பதிவுப் பக்கம் வரும்போதெல்லாம் உங்கள ஒரு வழி பண்ணியர்றேன் :)))

 
At Monday, 01 January, 2007, சொல்வது...

அடங்கொக்கா மக்கா,
பதிவைப் படிக்க வைக்க இப்படியெல்லாம் வழி இருக்குதா ? :)

சேது,
பண்ணியர்றேன் அப்படீன்னா என்னங்க ? :) தமிழா இது ?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
At Tuesday, 02 January, 2007, சொல்வது...

உஷா, உங்க பதிவைப் பார்த்து நானும் ஒண்ணு ரெண்டு எடுத்துச் சொல்லலாம்னு தான் வந்தேன்.. இராம.கி ஐயா, சிஜி எல்லாம் வந்து போயிருக்கிறப்போ, நம்ம சொல்ல என்ன இருக்குன்னு தோணிப்போச்சு ;)))

தமிழ் கூறு நல்லுலகத்திற்கு உங்களால் இப்படி ஒரு புரட்சி வரப்போவதை ரொம்பவும் ரசிக்கிறேன்.. அத்தோட, ஒரு கழுதையோட சரியான வயதை நீங்க இன்னும் புள்ளிவிவரத்தோட சொல்லலை என்பதையும் நினைவுப் படுத்துகிறேன் ;)

 
At Wednesday, 03 January, 2007, சொல்வது...

மத்தவங்க தப்ப திருத்தும் வரை காத்திருப்பானேன். பள்ளியில் படிக்கும் போது choiceல விட்டத இப்பதெரிஞ்சுக்க ஆசையிருந்தா இங்கப் போய் பாருங்களேன் உபயோகப் படுகிறதா என்று
வல்லெழுத்து மிகும் இடங்கள்
வல்லெழுத்து மிகா இடங்கள்

 
At Wednesday, 03 January, 2007, சொல்வது...

Happy New Year for you and to your family. Sorry for the English saying. Thank You.

 
At Wednesday, 03 January, 2007, சொல்வது...

உஷா!
எனக்கே! பெயரிலியாக வந்து ஒருவர் திருத்தம் சொல்லுவார். உங்களை நான் எப்படித் திருத்த முடியும்.
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
யோகன் பாரிஸ்

 
At Thursday, 04 January, 2007, சொல்வது...

என்ன பிரச்சனை என்று புரியவில்லை. என்னுடைய பிளாக்கை கிளிக் செய்தால் மெல்ல போய் கொண்டே இருக்கிறது. ஆனால் திறக்கவே மறுக்கிறது. இரண்டு நாளாய் இந்த கூத்து.

இராம்கி ஐயா, நான் கேட்டுதானே நீங்கள் சொல்கிறீர்கள். அதனால் என்ன தயக்கம்? இனியும் சொல்லுங்கய்யா.

மதி, நன்றி. பிரதி எடுத்துவைத்துக் கொண்டேன். பார்க்கலாம், ஐந்தில் வளையாதது, நாற்பதில் வளையுதா என்று :-)

அரை பிளேடு, உங்களை சின்னப்பிள்ளையாய் நடத்தியத்தியதற்கு மன்னிக்கவும். இவ்வளவு அழகாய் தமிழில் எழுதுகிறீர்கள்?
உண்மையில் ஆச்சரியமாய் இருக்கிறது.

ராம், பொன்ஸ் இரண்டு கழுதைக்கான வயதை கூகுளில் தேடி அறிந்துக் கொள்ளுங்கள்.பொதுவில் வயசெல்லாம் கேட்கக்கூடாது, என்னிடமும், கழுதையிடமுமே!

கீதா, யோகன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ச.சங்கர், நியாயமா ஐயா? நா என்னமோ நமீதா போஸ்டர் போட்ட மாதிரி சவுண்ட் விடுறீங்க :-)

சேதுக்கரசி, நம்ம பிரச்சனையே அதுதான், வேற என்ன அவசர அவசரமாய் தட்டச்சு செய்வது :-)

 
At Thursday, 04 January, 2007, சொல்வது...

//என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் பெரும்பாலும் ஒன்றேதான். அதாவது ஜனவரி ஒன்றாம் தேதிக்கு என்று தனியாய் தீர்மானம் ஒன்றை கடைப்பிடிக்கிறேன் என்று அறிவிப்பதில்லை என்பதுதே.//
ஸோ, இத 364 நாள் கரீக்டா ஃபாலோ பன்னரீங்க, சரி தானே? ஏன்னா அடுத்த வருடத்துக்குன்னு திரும்ப அதே தீர்மானத்தை தூசு தட்டி எடுக்கனும் இல்ல...

நீங்க சொல்லுற 2 பிரச்சினையும் எனக்கும் உண்டு. ஆனாலும், தமிழ்த் தாய் மன்னிப்பாள் என்ற நப்பாசையில் கண்டுக்கிறது இல்லை.

//அது ஜனவரி முதல் தேதி என்று வரவேண்டும். ஆங்கிலத்தில் கூட எண்ணும் போது மட்டுமே one, two என்று எண்ணுகிறோம்.//
அட! இப்படி ஒன்னு இருக்கா? சரி! இங்க வந்ததுக்கு இதையாவது ஒழுங்கா கத்துகிடலாம்.

 

Post a Comment

<< இல்லம்