Saturday, January 12, 2008

ALOPECIA- புழுவெட்டு

என் கணவருக்கு இங்கு வந்ததும் தலையின் பின் பகுதியில் வட்டமாய் முடி உதிர தொடங்கி,
அரிப்பும் இருந்தது. இத்தகைய நோய்களுக்கு அலோபதி சரிப்படுமா என்று சந்தேகமாய் இருந்தது. கூகுளில் தேடியதில் http://www.alopeciacure.com/ இந்த முகவரி கண்ணில் பட்டது. அந்த மருத்துவர் தந்த எண்ணை மற்றும் மூலிகை பொடியின் பலனாய் பழைய இடத்தில் முடி வளர்ந்தாலும் புதியதாய் நான்கைந்து சிறு வட்டங்கள் தோன்றியுள்ளன.

இதைப் படிப்பவர்கள் யாராவது உபயோகமான செய்திகளை சொன்னால் நலம். அலோபதி உட்பட, எந்த மருத்துவ முறையால் சரியாகும்? உங்கள் பதில்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன். தமிழ் பா·ண்ட் இல்லாதவர்கள் ஆங்கிலத்தில் தட்டச்சுங்கள். தங்கலீஷ் தவிர்க்கவும்

16 பின்னூட்டங்கள்:

At Saturday, 12 January, 2008, Blogger துளசி கோபால் சொல்வது...

இதோ வந்தேன் உஷா.

செம்பருத்தி இலை கிடைக்குமா? அதை நசுக்கித்தேய்க்கலாம்.

நான் இதுபோல வந்த சமயத்தில் பூண்டு ஒரு பல் எடுத்து நசுக்கித் தேய்ச்சேன்.

தினம் ரெண்டு அல்லது மூணு முறை.

இப்ப நல்லா ஆகிருச்சு. இது நடந்து 28 வருசம் ஆச்சு.

அதுக்கப்புறம் இதுவரை ஒண்ணும் வரலை( டச் உட்)

என்னுடைய தெரிவு : வெள்ளைப்பூண்டு.

 
At Saturday, 12 January, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

உடனடி பதிலுக்கு நன்றி துளசி. காலையில் பார்க்கிறேன் புதியதாய், பழைய ஒரு பைசா சைசில் மூன்று புது வட்டங்கள். கவலையாய்
போய்விட்டது.

 
At Sunday, 13 January, 2008, Blogger aathirai சொல்வது...

one of my grandmothers had. they tried everything except puli paal. no use.

 
At Monday, 14 January, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ஆதிரை பயமுறுத்தாதீங்க :-)

 
At Tuesday, 15 January, 2008, Blogger Sri சொல்வது...

I have read an article abt this in mangayar malar long back. The best cure is sambar onion (small onion). u can grind it along with coconut milk and a little salt and apply on scalp..heard it is a deinite cure

 
At Thursday, 17 January, 2008, Blogger Raj Chandra சொல்வது...

Don't you think it would be better to talk to a dermetologist rather than searching and asking non-specialists?

No offense to the friends who have already commented in this post.

Good luck.

Regards,
Rajesh

 
At Thursday, 17 January, 2008, Blogger Nirmala. சொல்வது...

உஷா, வெங்காயம், பூண்டெல்லாம் பயனளிப்பதாக நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹோமியோபதி பலனளிக்க பார்த்திருக்கிறேன். தலைவரை பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க. ஆமா மொபைல் நம்பர் என்னாச்சு? வீட்டு நம்பரையாச்சும் மெயில் பண்ணுங்க.

 
At Thursday, 17 January, 2008, Blogger Balloon MaMa சொல்வது...

உஷா,
மேலும் இணையத்தில் தேடியதில்

//In some cases, alopecia is an indication of an underlying medical concern, such as iron deficiency.// http://en.wikipedia.org/wiki/Alopecia

இப்படிச் சொல்கிறார்கள். எதற்கும் அலோபதியையும் consult செய்யலாம். அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை ஏற்பது நமது choice ஆக இருக்கட்டும். Alopecia க்கான காரணங்களை அலோபதி மருத்துவர்கள் விளக்கலாம்.

**
எந்தவிதமான உபயோகமான தகவல்களும் என்னிடம் இல்லை என்றாலும், we keep you in our thoughts என்ற அளவிலாவது சொல்லிச் செல்கிறேன்.

விரைவில் குணமடையட்டும்.

 
At Friday, 18 January, 2008, Blogger சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) சொல்வது...

ஆதிரை ,ஏன் இப்படி பயமுறுத்திறீங்க.
என் தங்கமணியும் முடி உதிர்வைத்தடுக்க இந்த மாதிரியெலலாம் பண்ணித்தான் பார்க்கிறார். ம்ஹூம்...பலன் தான் கிடச்சபாடில்லை.பேசாம எனக்கு முடி உதிர்வையும்,அவருக்கு நல்லா முடியும் கொடுத்திருக்கலாம் =))).

 
At Saturday, 19 January, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ஸ்ரீ , கல்வெட்டு நன்றி.

ராஜ்சந்திரா, நான் கூட முதலில் டெர்மடாலஜிஸ்ட் பார்க்கலாம் என்றேன். இங்கு இருக்கும்
டாக்டர்களும் ஒன்றும் புண்ணயமில்லை. நான் இங்குப் போட்டதற்கே அதுதான் காரணம். இப்படி வந்து, அலோபதி மருந்தாலும் சரியானவர்கள் விளக்கம் தரலாமே என்ற எதிர்ப்பார்ப்பில்!

நிர்மலா மெயில் வருது.

சாமானியன், முடிக் கொட்டுதல் வேறு இது வேறு. நல்ல ஹேர் ஆயில் போட சொல்லுங்க.

 
At Saturday, 19 January, 2008, Blogger சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) சொல்வது...

<= சாமானியன், முடிக் கொட்டுதல் வேறு இது வேறு. நல்ல ஹேர் ஆயில் போட சொல்லுங்க. ==>
=)

 
At Sunday, 20 January, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

சாமானியன் புரியலை

மேடம், நன்றி!
எங்களுக்கும் அதே சந்தேகம். இங்கு எந்த சலூனிலும் சுத்தம் இல்லை. பெண்களுக்கான இடத்திலும், பைசா மட்டும் வாங்கிக் கொள்கிறார்களே தவிர, ஒருவருக்கு வெட்டி விட்டு அதே கத்திரி கோலில் மற்றவர்களுக்கும். அதனால், நான் வீட்டுக்கு வந்ததும், டெட்டால் போட்ட தண்ணீரில் தலையைக் கழுவுகிறேன்.

 
At Sunday, 20 January, 2008, Blogger ✨முருகு தமிழ் அறிவன்✨ சொல்வது...

பலரும் பல விதயங்கள் சொல்வார்கள்...
மதுரைப் பக்கம் யாராவது இருந்தால்,செல்வார்களாயின் விளக்குத்தூண் பகுதியில் கடைகளில் 'காஷ்மீர் குசம்' என்ற ஒரு கலவை பாக்கெட் விற்பார்கள்;இது சுமார் 15-20 நாட்டு மருந்துகளின் கலவை,ஒரு பாக்கேட் விலை ரூ 20.க்குள் தான் இருக்கும்;ஒரு பாக்கெட் கலவையை சுமார் 300 மிலி கண்ணாடி அல்லது செராமிக் கலனில் (பிளாஸ்டிக்,மெட்டல் கலன்கள் வேண்டாம்)தேங்காயெண்ணெயில் ஊறவைத்து ஒரு சுத்தமான மெல்லிய வெள்ளைத் துணியால் மூடி நல்ல சூரிய வெய்யிலில் சுமார் 15 நாட்கள் ஊறவைத்து,காயவைக்கவும்.
ஒவ்வொரு நாளும் இரவில் நன்கு கலந்து மறுநாள் காயவைக்கவும்.
பின்னர் தெளிவாக வடித்துக் கொண்டு(பில்டர் செய்ய வேண்டிய அவசியமில்லை,தெளியவைத்து பாட்டில் மாற்றினாலே போதும்),அந்த பாக்கெட்டுடனேயே ஒரு சிறிய பாட்டிலில் வாசனைத் தைலம் கொடுத்திருப்பார்கள்,அதை ஊறவைத்து வடித்தெடுத்த எண்ணெயுடன் சேர்த்து கலந்துகொண்டு(சூப்பரான வாசனைத் தைலம் தயார் !) தினமும் மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து சுமார் 45 நிமிடங்கள் கழித்து கடலை மாவு/பயத்தம் மாவு/சுத்தமான் சீயக்காய்த் தூள் போட்டு குளித்துவிடலாம்.அல்லது நாள் முழுதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் சிறிதளவாக எடுத்து,நன்றாக மசாஜ் செய்து கொண்டு,தலைக்கு நீர் விடாமல் தலை சீவிக் கொள்ளலாம்.

எப்படி இருப்பினும் வாரத்தில் ஒருநாளாவது நன்றாக மிகுதியான எண்ணை மசாஜ் செய்து தலைக்கு நீர் விட்டு அலச வேண்டியது முக்கியம்.

முக்கியமாக தவிர்க்க வேண்டியது: அனைவரும் சொல்லும் எல்லா வைத்தியத்தையும் ஒவ்வொரு மாதம் பரிசீலித்து முயற்சிப்பது ! தலைமுடியை முழுதும் போக்கடிக்க இதைவிட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை !!!!!!

பொறுமையுடன் முயற்சி செய்யவும்,குணம் உண்டு.

கோட்டக்கல் ஆர்யவைத்ய சாலையில் மகாதிக்தகஷாயம் என்ற ஒரு கஷாயம்ம் உண்டு.

அதை ஒரு பாட்டில்(250 மிலி) வாங்கி காலையில் வெறும் வயிற்றில் உணவுக்கு 3 மணி நேரம் முன் சுமார் 15 மிலி அளவில் warm watter உடன் கலந்து பருகச் சொல்லவும்.

மருந்து ரொம்ப இனிப்பாக(!) இருக்கும்,பரவாயில்லை விழுங்கி விடவும்,நாள்பட்ட உடலின் கசடுகளால் ரத்தம் கெடுவதாலேயே தோல்நோய்கள் வருகின்றன,இதை சரி செய்யும் மிகச் சிறந்த மருந்து இது.

அதிக நேரம் இரவில் விழிப்பது தவிர்க்க வேண்டும்;குறைந்தது 6 மணி நேரத் தூக்கம்,15 நாட்களுக்க்கு ஒருமுறையாவது உடல்முழுதும் நல்லெண்ணை தேய்த்து வெண்ணீரில் குளியல் ஆகியவை உடலை மேம்படுத்தும்.

 
At Monday, 21 January, 2008, Blogger ambi சொல்வது...

வெதுவெதுப்பான நீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து உங்க ரங்கு தலையில் விடுங்க. 1 வாரத்தில் பலன் தெரியும். பங்கஸ் இருந்தால் காணாம போயிடும்.

பி.கு: இது தான் நல்ல சமயம்னு தண்ணீரை கொதிக்க கொதிக்க விட்ர வேண்டாம். ஆண்பாவம் சும்மா விடாது. :))

 
At Monday, 21 January, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

டெல்பின் மேடம், இன்று மருந்து வாங்கப்போகிறேன், கிடைக்கவில்லை என்றால் சொல்கிறேன். மிக மிக நன்றி.

அறிவன், நிறைய விஷயங்களை தந்திருக்கிறீர்கள். பலருக்கும் உபயோகமாய் இருக்கும். நன்றி

ஏண்டாப்பா அம்பி, எங்களுக்கு என்ன நேற்றா கல்யாணம் ஆச்சு. மனைவி சொல்லே மந்திரம் என்று தலையை நீட்ட? பொடுகுக்கு நீங்க சொன்ன வைத்தியம் நல்ல பலனை தரும்

 
At Friday, 26 June, 2015, Blogger  வல்லிசிம்ஹன் சொல்வது...

இப்ப சரியாகப் போயிட்டதா உஷாமா. அங்கே சொன்னதில் வெங்காயம் எல்லாம்
ஒத்துக்காது என்று விட்டார்கள் ஜான்சன் பேபி ஷாம்பூவும், இன்னோரு ஸ்டிங்கி மெடிசினும்
போட்டுக் கொள்வதாகப் பேத்தி சொல்லித்து. சாப்பிட விடமின் மாத்திரைகள் கொடுத்திருப்பதாகவும் சேதி.

 

Post a Comment

<< இல்லம்