Tuesday, January 29, 2008

ஏகாம்பரி வீட்டில் தமிழ் வருட பிறப்பு- *ஒரு அறிவியல் புனைக்கதை*

இரண்டாவது சனிக்கிழமை, அலுவலகமும், பள்ளியும் விடுமுறை என்பதாலும் யாரும் எழுந்திருக்கவில்லை. ஏகாம்பரி எழுந்து, பாலைக் காய்ச்சி காபி கலந்துக் குடித்துக்
கொண்டே, கணிணியை முடுக்குகிறாள்.

குஷ்பூ அதிமுகவில் இணைந்தார் என்ற செய்தி கண்ணில் பட்டது. தொற்றிக் கொண்ட சுவாரசியத்துடன் வலைப்பதிவுகள், இணைய தளங்கள் என்று வட்டமடிக்க, குஷ்பூவே
பிரதானமாய் தென்பட்டார்.

குஷ்பூவுக்கு அத்வானி போனில் வாழ்த்து தெரிவித்தார். அரிதார மயக்கத்தில் ஆடும் நாற்காலிகள் கலைஞரின் கவிதை முரசொலியில், கனிமொழி எம்.பி, குஷ்பூ
அரசியலில் நுழைவதற்கு ஆதரவு, வந்தாரை வாழ வைக்கும் இளிச்சவாய தமிழர்கள் மருத்துவர் ஐயா ஆவேசம் என்று வலைப்பதிவுகள் பலவற்றில் இதே செய்தி.
பின்னுட்ட அரசியல், அடிதடி என்ற வம்புகளில் ஆழ்ந்திருந்தவள் காதில் கணவன் சொன்னது சரியாய் காதில் விழவில்லை.

கணவன் அருகில் வர, குஷ்பூ ஏடிஎம்கேல சேர்ந்துட்டாங்களாம் என்றாள் கணிணியில் இருந்து கண்களை எடுக்காமல்.

சரி, சரி! ராத்திரி நீ நல்லா தூங்கிகிட்டு இருந்தே. அப்பா போன் செஞ்சாரூ. என்னவோ தோணிச்சு, வருஷ பொறப்புக்கு வாங்கன்னு சொல்லிட்டேன்.

குஷ்பூ மேட்டர் மறந்து, தன்னையும்,குரலை சகஜமாக்கிக் கொண்டு, "நா கூட சொல்லணும்னு நெனச்சேன். ரொம்ப நாள் ஆச்சு இல்லே அவங்க வந்து?"

"அம்மாவுக்கு ரெண்டாயிரத்துல ஒரு புடைவையும், அப்பாவுக்கு நாலு கதர் சட்டையும் வாங்கிடலாம்", என்றவன், சிறிது யோசனையுடன், " நீயும் வேணா ஒன்னு எடுத்துக்கோ" .

" அந்த கதையே வேணாம். இந்த கலர் இருக்கு, டிசைன் நல்லா இல்லே அப்படி இப்படின்னு ஆயிரம் குத்தம் சொல்லுவாங்க. அவங்களையே அழைச்சிக்கிட்டு போய் எடுத்துடரேன். ஆனா கணக்கா கையில ரெண்டாயிரம் குடுத்துடுங்க. கிரெடிட் கார்ட்டுன்னா, இஷ்டத்துக்கு இழுத்து விட்டுடுவாங்க" என்றாள் ஏகாம்பரி.

சரி, சரி! செல் அடிக்குது .

அப்பாத்தான் என்றவன், சரி சரி ஆமாம்.ம்ம் என்ற வார்த்தைகளை உரைத்தவன், நீ பேசு என்று ஜாடை செய்து, செல்பேசியை ஏகாம்பரியிடம் தந்தான்.

" என்னமா நல்லா இருக்கியா? இப்பத்தான் பஸ்ல ஏறி ஒக்காந்தோம். எப்படியும் வீடு வர மணி ஆறாயிடும். அவங்களுக்கு இருமல் கொஞ்சம் அதிகமா இருக்கு. ராத்திரிக்கு
கொஞ்சம் மொளகு ரசம் வெச்சிடு "என்று உத்தரவுகளை பிறப்பித்தார் மாமியார்.

ஒரு நிமிடம் ஒண்ணும் புரியாத ஏகாம்பரி, தன்னை சமாளித்துக் கொண்டு, " கெளம்பிட்டீங்களா அத்தை! அவரூ நீங்க வருஷ பொறப்புக்கு வருவீங்கன்னு சொல்லிக்கிட்டு
இருந்தாரூ ... " என்று இழுக்க,

" ஆமாம் அதுக்குதான் வாரோம். நாளக்கு தானே வருஷ பொறப்பு?" சந்தேகமாய் கேட்க, ஏகாம்பரி, "ஜனவரிலதானே அத்தை, வருஷ பொறப்பு.." அவள் முடிக்கும் முன்பு,
ஆமாம், இவ வெள்ளக்காரி பாரூ, ஜனவரில கொண்டாட என்று மனதில் திட்டிக் கொண்டே, " தோ பாரூ! நமக்குன்னு கலாச்சாரம், பண்பாடுன்னு இருக்கு, அத விட்டுட்டு...
பூஜைக்கு வாழை இல, வெல்லம், பூ, பழம், எக்ஸ்ட் ரா பாலு எல்லாம் வாங்கி வெச்சீடூ. சிக்னல் சரியில்ல, அப்புறமா பேசுரேன்"என்று சொல்லிவிட்டு, செல்லை வைத்தார்.

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முழித்த ஏகாம்ப்ரி, "என்னங்க இன்னைக்கு ராத்திரியே உங்க அப்பா, அம்மா வராங்களாம்" என்றதும்,

"இவ்வளவு நேரம் அதைத்தானே சொல்லிக்கிட்டு இருந்தேன். வருஷ பொறப்பு, நம்மோட்
கொண்டாட வராங்க. டிரெயின்ல எடம் கிடைக்காட்டா, பஸ்ல வரேன்னு சொன்னாங்கன்னு. நா சொல்லரேன்னு நினைக்காதே, எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டரையே கட்டிக்கிட்டு அழுவதாலே, நான் சொல்லுரதுகூட உன் காதுல விழற்து இல்லே" என்றான் சோகமாக!

"வருஷ பொறப்பு ஜனவரியில இல்லே வருது"

"நீயூ இயர் ஜனவரில, தமிழ் வருஷ பொறப்பு நாளைக்கு இல்லே? அதுக்குதான் அவங்கள வரச் சொன்னேன்.

"என்ன சொல்றீங்க? தமிழ் வருஷ பொறப்பு இனி மேலே தை மாசம் பொங்கல் அன்னைக்குதான். கவர்மெண்ட்ல மாத்தியாச்சு. மறந்துட்டீங்களா?" என்றாள் ஆவேசத்துடன்.

கவர்மெண்ட் எத்தினியோ ரூல்ஸ் போடுது. யாரூ பா·லோ பண்ணுராங்க. இன்னைக்கு சனிக்கிழமை, நாளைக்கு ஞாயித்துகிழம! பண்டிகை கொண்டாடவும் வசதியா
இருக்கு. கம்ப்யூட்டர ஏறக்கட்டிட்டு மடமடன்னு வேலைய பாரூ.

ஏகாம்பரி உடலும் மனமும் படபடத்தது. நாளைக்கு வருஷ பொறப்பு கொண்டாடி யார் கண்ணிலாவது, காதிலாவது செய்தி விழுந்தால் என்ன ஆவது? நினைக்க, நினைக்க வேர்த்துக் கொட்டி கண் இருண்டது. வாய் மட்டும் புலம்பிக் கொண்டு இருந்தது.

"ஏகாம்பரி ஏகாம்பரி" என்று கணவன் பயத்துடன் அழைப்பதும், முகத்தில் விழுந்த தண்ணீரும் அவள் கண்களை திறக்க வைத்தன.

"நாளைக்கு வருஷ பொறப்பு இல்லே இல்லே"என்று மட்டும் மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டு இருந்தாள்.

அவள் நிலைக் கண்டு பயந்து செல்பேசியை எடுத்து மருத்துவருக்கு போன் செய்தான்.

டாக்டர்", நான் பிலாக்கோ போபியாவுக்கு ட் ரீட்மெண்ட் எடுக்க உங்க ஆஸ்பிடலுக்கு வந்த ஏகாம்பரியோட ஹஸ்பெண்ட் பேசுரேன். உங்க மிஸஸ், டாக்டரம்மா இல்லையா?"

அவங்க குளிச்சிக்கிட்டு இருக்காங்க. என்ன விஷயம்? சொல்லுங்க. நானும் லண்டனுக்குப் போய் ஸ்பெஷலைசேஷன் செய்துட்டு வந்திருக்கிறேன். இன்னக்கு ஈவினிங் ஆறு மணிக்கு கிளினிக்கு வாங்க. கவுன்சிலிங் செஞ்சா சரியாயிடும் என்றார்.

சுருக்கமாய் பிரச்சனை சொல்லப்பட்டது. அதற்குள் டாக்டரம்மா வர, போனை வாங்கி அவளும் விஷயத்தை அறிந்துக் கொண்டு, பேஷண்ட பேச சொல்லுங்க என்றாள்.

ஏகாம்பரி, ஏப்ரல் மாதம் வருஷ பொறப்பு கொண்டாடுவதன் சிக்கல்களை எடுத்துக் கூறினாள்.

மெல்ல சிரித்த டாக்டரம்மாள், "இங்க பாரூங்கம்மா! குடும்பம்னு இருந்தா எல்லாரையும் அனுசரித்துப் போகணும், நாம லேடிஸ் நம்ம கொள்கையே பெருசுன்னு சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. அப்படி யாராவது உங்கக்கிட்ட கேள்வி எழுப்பினா, பாலிட்டீஷியன்ஸ் சொல்லுகிறா மாதிரி மத்தவங்க உணர்வுகளுக்கு மரியாதை தரணும், மதிக்கணும்னு சொல்லிடுங்க. அவ்வளவுதான் மேட்டர் முடிஞ்சிச்சு. இதுல பயப்பட ஒண்ணும் இல்லே. தைரியமா இருங்க"

செல்பேசியை வாங்கி, ஏதோ சொல்ல முற்பட்ட ஏகாம்பரி கணவனிடம், " ஒரு பிராப்பளமும் இல்லே. மெடிசன் எல்லாம் தேவையே இல்லை. கவுன்சிலிங்க் கூட வேண்டியதில்லை. வேணும்னா ஈவினிங், கிளினிக் வாங்க." என்றார் மருத்துவரம்மா.

*********************

* இக்கதை எதிர்காலத்தில் அதாவது, இன்னும் ஒன்றரை மாதம் கழித்து நடக்கும் என்ற அனுமானத்தில் எழுதியதால் அறிவியல் புனைக்கதை வகையறாவில் வரும்
இல்லையா :-)

22 பின்னூட்டங்கள்:

At Tuesday, 29 January, 2008, சொல்வது...

வருட பிறப்புக்காக இல்லையின்னாலும் வேற ஏதாவது ஒரு விஷயத்துல இது நடக்க சான்ஸ் இருக்கு... :-)

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

யக்கோவ்!!! எங்கியோ போயிட்டீங்க...
//நாம லேடிஸ் நம்ம கொள்கையே பெருசுன்னு சொல்லிக்கிட்டு இருக்க முடியாத// எல்லாருக்கும் பொதுவா சொல்லுவீங்கன்னு பாத்தா...! இந்த விவகாரத்துல முதக்கா ஒரு அம்மணிகிட்டயிருந்து பதிவு... (அல்லது நான் ரொம்ப பதிவு படிக்கறதில்ல..)

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

ஏனுங்க?

இந்த நேரத்துல இந்தப் பு(வி)னை கதை வேணுங்களா ?

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

போன பின்னூட்டத்துல ஸ்மைலி விட்டுப் போச்சு

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

சீரியசா சொன்னேன்னு யாருக்கும் டவுட்டு வரக் கூடாது பாருங்க

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

//ஒரு அறிவியல் புனைக்கதை//
எழுதின பிறகு சொல்லி அனுப்புங்க.

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

இந்த மாதிரி தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சிகளை அங்கதம் செய்யும் உங்களை தமிழின துரோகி என முத்திரை குத்தி வேட்டையாட ஒரு கும்பல் கிளம்பிக்கிட்டு இருக்கு. :))

ஒன், டூ, த்ரீ - விடு ஜூட்!!

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

கொத்தனார்.. என்ன பயமுறுத்தலோட நின்னுட்டீர்? ரெம்ப்ளேற் போட்டுத் தரமாட்டீங்களா?

யக்கோவ்.. ஏகாம்பரி மாமியாரை அவாய்ட் பண்றதுக்கு எந்த புத்தாண்டு வாகோ அதை யூஸ் பண்ணிப்பாங்க.. இதுலென்ன கொள்கை வாழுது.. இது ஜிம்பிள் மாமியார் மருமகள் தகராறு..

கெக்கேபிக்குணி,

// இந்த விவகாரத்துல முதக்கா ஒரு அம்மணிகிட்டயிருந்து பதிவு... // இது விவகாரம்னு நெனைக்கறீங்க பாருங்க.. ஹய்யோ ஹய்யோ!

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

மதுரையம்பதி, ஏதோ நா சொல்லி நல்லது நடந்தா சரி :-)

கெக்கேபிக்குணி, நானும் ஒரு பெண்ணீயவாதி என்பதை சில சமயங்களில் வெளிப்படுத்துவேன் :-))

ச.சங்கர், இரண்டாவது பின்னுட்டத்தைப் பார்த்துவிட்டுதான் பயம் நீங்கியது

முத்துகுமரன், பின் குறிப்பு பார்க்கவில்லையா? நானே சந்தேகமாய்தான் போட்டிருந்தேன், இரண்டு மாசம் கழித்து நடப்பதாக
கற்பனை செய்வது, அ.பு. கதையில் சேராதா என்று?

இலவசம், நல்லா இரும்

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

பினாத்தல், ஓய்ப்பாலஜி எழுதியவரை பாயிண்ட்டை கண்டுப்பிடித்ததில் அதிசயம் என்ன? ஏழு எட்டு மாசம் கழித்து வரப்போராங்கன்னு நினைச்சவ நெனப்புல மண்ணு விழுந்தா,யாரூதான் ஆடிப் போக மாட்டாங்க.

அதுதானே, இது என்ன விவகாரம்? நகைச்சுவை நையாண்டில வகைப்படுத்தியதை கெக்கேபிக்குணி பார்க்கவில்லை போல் இருக்கு???

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

ha ha ha

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

//ஏழு எட்டு மாசம் கழித்து வரப்போராங்கன்னு நினைச்சவ நெனப்புல மண்ணு விழுந்தா,//

//இரண்டு மாசம் கழித்து நடப்பதாக
கற்பனை செய்வது//

பி.கு: இரண்டும் உங்க பின்னூட்டம்தான் :-)

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

இப்பவே அந்தப் பொடவை வாங்கிக்கிட்டால் நல்லது. ஏழெட்டுமாசம்ன்னா விலை ஏறிடும்.

ஆமா......

நான் புத்தாண்டே கொண்டாடுறதில்லைன்னு புதுவருசத் தீர்மானம் எடுத்துருக்கேன்;-))))

 
At Tuesday, 29 January, 2008, சொல்வது...

சாமானியன், முத்துகுமரன் :-)

துளசி, புத்தாண்டு கொண்டாட மாட்டீங்களா? அப்ப நீயூ இயர் செலிபிரேஷன் உண்டா :-))))

 
At Wednesday, 30 January, 2008, சொல்வது...

ஏகாம்பரியோட ஸ்டார் வேல்யூ அதிகம் ஆகிட்டே போகுது போங்க...இந்த காமிக்ஸ் புக்ல எல்லாம் போடுவாங்களே...."மந்திரவாதி மான்ட்ராக் தோன்றும்", "இரும்புக்கை மாயாவி தோன்றும்" னு அது மாதிரி "எழுத்தாளர் ஏகாம்பரி தோன்றும்" னு நீங்க ஒரு கலக்க்ஷன் போடலாம்...புனைக் கதை ஓகே..ஆனா அந்த "அறிவியல்" கொஞ்சம் ஓவர் தான்! :)

 
At Thursday, 31 January, 2008, சொல்வது...

வந்தியதேவன் நன்றி

 
At Tuesday, 05 February, 2008, சொல்வது...

உங்கள் நுண்ணரசியலை கண்டு பிரமித்து நிற்கிறேன். :)))

//நானும் ஒரு பெண்ணீயவாதி என்பதை சில சமயங்களில் வெளிப்படுத்துவேன் //

சில சமயங்களில் மட்டும் தானா?னு இலவசம் கேட்கறாரு. :)))

Note: கடைசில போட்ட ஸ்மைலி என்னோடது, இலவசம் போட்டது இல்லை. :p

 
At Saturday, 09 February, 2008, சொல்வது...

யக்கா..முடியலக்கா.. இதுக்கு பேர் தான் தொலை நோக்கு பார்வைனு சொல்றதோ.? :P

 
At Saturday, 09 February, 2008, சொல்வது...

அம்பி, நுண்ணரசியலா? இதுல அப்படி என்ன இருக்கு???


சஞ்சய், தொலை நோக்கு பார்வையா? கிட்ட பார்வை ஐயா! இன்னும் ஒன்றரை மாதத்தில் நடப்பதாக தானே எழுதியுள்ளேன் :-)))

 
At Saturday, 09 February, 2008, சொல்வது...

//சஞ்சய், தொலை நோக்கு பார்வையா? கிட்ட பார்வை ஐயா! இன்னும் ஒன்றரை மாதத்தில் நடப்பதாக தானே எழுதியுள்ளேன் :-)))//

இது மட்டும் நடந்தால் "வலைப்பூவில் கலைவண்ணம் காணும் ஜோதிட மாமணி உஷா(ர்)" என்று நீங்கள் அன்போடு அழைக்கப்படுவீர்கள். :))

என்னது ஐயாவா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

 
At Tuesday, 12 February, 2008, சொல்வது...

//இக்கதை எதிர்காலத்தில் அதாவது, இன்னும் ஒன்றரை மாதம் கழித்து நடக்கும் என்ற அனுமானத்தில் எழுதியதால் அறிவியல் புனைக்கதை வகையறாவில் வரும்
இல்லையா :-)//

யப்பா! பயங்கர நக்கல்க்கா உங்களுக்கு! ரீடர்ல படிச்சு பின்னூட்டாம எஸ்கேப் ஆகற என்னால உங்க பதிவில மட்டும் கமெண்ட் போடாம இருக்க முடியறதில்ல. :))

 
At Thursday, 14 February, 2008, சொல்வது...

மாமியார் மாமனார் எப்ப வந்தாலும் ஒரு
பயம் உள்ளூர ஓடத்தானெ செய்யும்.
பெண்ணீயமோ காரீயமோ இல்லப்ப.

சும்மா எழுதுங்க:))

ஆனால் அவங்களை தெளிவாச் சொல்லிட்டு வரச்சொல்லுங்க ஏகாம்பரிகிட்ட!
வருஷப்பிறப்புனா,தெலுங்கு,கன்னடா,தமிழ்,ஆங்கிலம்னு எத்தனையோ வருது.
னு.....:)

 
At Sunday, 17 February, 2008, சொல்வது...

மன்னிச்சிக்குங்கபா, ஒரு வாரமா கணிணி படுத்துடுச்சு.

சஞ்சய் தம்பி, மரியாதை எல்லாம் ஒரு பயத்துலதான் :-)

காயத்ரீ நன்றி நன்றி நன்றி

//சும்மா எழுதுங்க:))//

வல்லிம்மா, அது :-)

 

Post a Comment

<< இல்லம்