Saturday, March 08, 2008

நனநா நனநா....

இரண்டு நாட்களாய் அவ்விளம்பரத்தில் வரும் ஹம்மிங் மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது. கூகுள் எதற்கு இருக்கிறது? பாடலும், இசையும், கொஞ்சும் பாலசுப்ரமணியத்தின் குரலும், இனித்துக் கொட்டும் ஜானகியின் குரலும் சேர்ந்து, பாடலை படமாக்கியவிதம்.... பாடலை மட்டும் ஓரே முறைதான் டிடியில் பார்த்திருக்கிறேன். மனதில் அழியா சித்திரம் அது. இப்படி எல்லா வகையிலும் ஒரு பாடல் அருமையாய் வருவது மிக அபூர்வமானது.

இளமையான அனில்கபூர், கிரண் காதலர்களாய், ச்சும்மா பேசி, சிரித்துக் கொண்டு மாலைவேளை வீதியில் கையைக் கோர்த்துக் கொண்டு, மெல்ல அணைத்துக்கொண்டு நடந்துக் கொண்டே விண்டோ ஷாப்பிங் பார்த்து, ஐஸ்கீரீம் சாப்பிட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டு இருக்கும்பொழுது மெல்ல மெல்ல சூரியன் வானில் அழகு கோலம் போட்டுவிட்டு
மறைய, பெங்களூர் வீதியில் தெரு விளக்குகள் ஒளிர தொடங்க, வீடு, கடைகண்ணிகளில் ஒவ்வொன்றாய் விளக்குகள் போட ஆரம்பிக்க, தெருவில் வண்டிகள் விளக்கை சிந்தியப்படி போக்குவரத்து கூட, முழுக்க இரவாகிவிடும். பிண்ணனியில் இளையராஜாவின் இசை ராஜாங்கம். காமிராவில் கட்டிப் போட்டவர் பாலுமகேந்திரா. படம் பல்லவி அனுபல்லவி. இந்த கன்னட படத்தை இயக்கியவர் மணிரத்தினம். பாடலைக் கேட்டுப் பாருங்கள். பாடலின் ஆரம்பத்தில் ஜானகியின்ஹம்மிங், இப்பொழுது ஐடியா போன் விளம்பரத்தில், அதுதான் அபிஷேக் பச்சன், தாஜ்மகாலில் கைடாய் நடிக்கிறாரே அந்த விளம்பரம்தான்.

டீன் ஏஜ் ஏஜ் பருவத்தில் வந்த பல கனவுகளில் பாலுமகேந்திராவிடம் கேமிரா உமனாய் சேர வேண்டும் என்ற எந்த முயற்சியும் செய்யாத, செய்ய இயலாத அசட்டு கனவு. அண்ணன் இளையராஜா என்று புலம்பிக் கொண்டு இருக்க, என்னை மூடுபனி, கோகிலா, மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் என பாலுமகேந்திரா பைத்தியம் என்னைப் பிடித்தது.

அந்நேரம் என் உறவினர் ஒருவர் குன்னூரில் வங்கியில் மாற்றல் கிடைத்ததும், ஊட்டி பார்க்க வேண்டும் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டேன். அன்றும் இன்றும் ஊட்டி என்றால் பாலுமகேந்திராதான். ஊட்டி ஒரு நாள் பார்த்துவிட்டு மூன்று நாட்கள் குன்னூரில் இருந்தேன். வீட்டு ஓனர் வீட்டில் ஒரு வேலைக்கார பெண். அவ்வூர் பெண். எனக்கு சரியான செட்டு. காலையில் நானும் உறவினர் வீட்டு குட்டி பையனும் வாக்கிங். மாலை அப்பெண்ணும் நானும்! இருட்டும் வரையில் குன்னூரின் அற்புதங்களை காட்டினாள். மாலை சூரியனின் அழகு, மலைகளில் விசேஷம்தானே. மனம் முழுக்க இப்படியும் இயற்கையின் அழகு கொட்டிக்கிடக்கிறது என்று காட்டிய பாலுமகேந்திராதான். கையில் இருந்த சாதாரண கேமிராவில் தனியாய் இருந்த ஒரு மொட்டை மரத்தை காமிரா கண்ணுடன் படம் பிடித்துக் கொண்டேன். மேலும் இயற்கையின் அழகை எல்லாம் காமிராவில் சுட்டிக் கொண்டு, சென்னைக்கு வந்து பிரிண்டு போட்டால்...:-( பிறகுதான் தெரிந்தது லைட்டிங் என்று ஒன்று உண்டு என்று

அவர் காமிராவில் என்னை ஒரு படம் எடுக்க சொல்லி கேட்க வேண்டும் என்றும் ஒரு ஆசை, அதை இன்று நினைவில் வர முகத்தில் புன்னகை வருகிறது. பாடலைக்
கேட்க போய், இளம் வயதின் நினைவுகளை மனம் அசைபோட தொடங்கிவிட்டது. இந்த இனிய நினைவுகளுடன்., என்னை மயக்கிய அந்தப் பாடலையும் கேளுங்கள்.(வந்தியதேவன் உதவியுடன் பாடலை பார்த்தும் கேட்டும் ரசியுங்கள்)

நகுவா நயனா....ஜானகி ஆரம்பிக்கிறார்

10 பின்னூட்டங்கள்:

At Saturday, 08 March, 2008, சொல்வது...

உஷா, பாட்டு கேக்க முடியவில்லை.
ஆனால் நீங்க எழுதிய வர்ணனை நிஜமாவே குன்னூர்க்குப் போய் விட்டு வந்த மாதிரி இருக்கு.

சில பாடலகள் என் இனிய பொன்னிலாவே, செந்தாழம்பூ,,இளைய நிலா இதை எல்லாம் மறக்கவே முடியாது.

பாலு மகேந்திரா என்றதும் நினைவு வருவது, அவர் குமுறி அழுததுதான்....சுஜாதா சாரின் நினைவலைகள் கூட்டத்தில்.

சென்சிடிவ்.எமோஷனல்.

படிக்க ரொம்ப நல்லா இருந்ததும்மா.

 
At Saturday, 08 March, 2008, சொல்வது...

//சென்னைக்கு வந்து பிரிண்டு போட்டால்...:-( பிறகுதான் தெரிந்தது லைட்டிங் என்று ஒன்று உண்டு என்று
//

:)

 
At Saturday, 08 March, 2008, சொல்வது...

ஹை! நான் தான் முதல் பின்னூட்டம்..!

நீங்கள் குடுத்த லிங்க் ஆக்ரி ராஸ்தா வுக்கு எடுத்து சென்று விட்டது. ஆனால் பாடலை கண்டு பிடிக்க தூஸ்ரி ராஸ்தா இருக்கிறது என்று யு ட்யுபில் தேடி பிடித்து கேட்டு விட்டேன். http://www.youtube.com/watch?v=jzMgMepKSko

அருமையான பாடல். இளையராஜா இசையில் என்றும் பெரிய ராஜா தான். அனில் கபூரின் முதல் படம் அது தான் என்பது கூட இப்போது தான் தெரிந்தது.

//டீன் ஏஜ் ஏஜ் பருவத்தில் வந்த பல கனவுகளில் பாலுமகேந்திராவிடம் கேமிரா உமனாய் சேர வேண்டும் என்ற எந்த முயற்சியும் செய்யாத, செய்ய இயலாத அசட்டு கனவு.//

இத்தகைய அசட்டுக் கனவுகள் பலவற்றை நானும் சுமந்திருக்கிறேன். (இன்னும் சிலது சுமந்து வருகிறேன்). இவை பற்றி எல்லாம் பகற் கனவு காண்பது கூட சுகம்.

டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாட வேண்டும், காஸ்பரோவுடன் செஸ் விளையாட வேண்டும், பாலச்சந்தர் மணிரத்னம் போல் போல் படம் எடுக்க வேண்டும் இப்படி பலப்பல.(கனவு எல்லாம் ரொம்ப பெருசு தான்...கனவு தானே! :) )

 
At Saturday, 08 March, 2008, சொல்வது...

வல்லி, வந்தியதேவன் கொடுத்த லிங்கைப் பிடியுங்க. விஷூவலாகவும் பார்க்கலாம்.

வ.தேவன்! நன்றி, ஆனால் இப்பொழுது பார்த்தால் நினைவில் இருந்த சித்திரம் வேறு போல தோணுகிறது.அவ்வயதில் இத்தகைய
கனவுகள் எல்லாருக்கும் வருவதுதான். இந்த
கனவு/ ஆசை, ஒரு அதி திறமைசாலியின் மேல் இருந்த வியப்பாய் இருக்கலாம்.
இது மணிரத்தினம் அவர்களுக்கும் முதல் படமாம்.
ரவியா, நானும் இன்னும் ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன் :-)

 
At Saturday, 08 March, 2008, சொல்வது...

வந்தியத்தேவன் சொன்ன லிங்கில் வீடியோ வருகிறது.

ஹையா கன்னட பாட்டு.

சூப்பர்

 
At Saturday, 08 March, 2008, சொல்வது...

அந்த பாட்டு, படத்தின் பேர் 'பல்லவி அனுபல்லவி'.

 
At Sunday, 09 March, 2008, சொல்வது...

ம்ங்களூர் சிவா, லிங்க் மாற்றிவிட்டேன்.

வல்லிமா, நீங்களும் பார்த்து ரசியுங்கள்

 
At Monday, 10 March, 2008, சொல்வது...

சரி, வீட்ல போய் பாட்டு பாத்துக்கறேன். ஆபிஸ்ல பாத்தா மாத்து விழும். (வீட்லயும் தான், இருந்தாலும் பரவாயில்லை) :))

சுஜாதா பத்திய பதிவு நெகிழ செய்து விட்டது.

 
At Monday, 10 March, 2008, சொல்வது...

அம்பி, வீட்டுக்கு போயே பாருங்க. அருமையான லவ் சாங்க் அது :-)

 
At Monday, 10 March, 2008, சொல்வது...

அம்பி, வீட்டுக்கு போயே பாருங்க. அருமையான லவ் சாங்க் அது :-)

 

Post a Comment

<< இல்லம்