Friday, March 14, 2008

ஒரு நடிகையின் வாழ்க்கை

அவர் ஒரு நடிகை, நடிகை என்றால் அன்றைய காலக்கட்டங்களில் வில்லனின் ஆள்,
கிளப் டான்சர், காமடியனின் காதலி என்று நடித்தவர். அவர் என் உறவினர் வசித்த
அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் காற்று வெளிச்சமும் இல்லாத சிங்கிள் பெட் ரூம், சதுரத்தை பதினைந்து வருட பழசு, செகண்ட் ஹாண்டாய் வாங்கி குடியேறினார். ஒரு மாதிரி சாமியாரிணி போல, கழுத்தில் துளசி மாலை, ருத்ராட்ச மாலைகள், நெற்றியில் வீபூதி, அகல குங்குமம் மற்றும் எப்பொழுதும் கசங்கிய காவி புடைவை. யாருடனும் ஒரு வார்த்தைக் கூட பேசமாட்டார். வயது அறுபது பிளஸ்.

ஆனால் அவர் குடிவந்ததும் சிலர் ஆட்சேபணை கிளப்பினார்கள். நான் அங்கு
சென்ற அன்று, அசோசியேஷன் மீட்டிங் நடந்து முடிந்திருந்தது.

உறவினள் சொன்ன இரண்டு விஷயங்களை என்னை மிகவும் பாதித்தன. அந்தம்மாள்
அங்கு இருக்ககூடாது என்று சொன்னவர்களைப் பார்த்து, ஆமாம் நான் தே.. யாதான்? அதுக்காக தானே என்னை விரட்ட பாக்குறீங்க? அதெல்லாம் வேண்டாம் என்றுதானே வயசான காலத்தில் இந்த குச்சில் வந்து இருக்கிறேன் என்று தடாலடியாய் சொல்லிவிட்டு, வீட்டை காலி பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

என் உறவினர் சொன்ன மிக முக்கிய மேட்டர்- அந்தம்மாளை கரித்துக் கொட்டியவர்கள் அனைவரும் ஆண்கள், பெண்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றாள் :-)

இச்சம்பவத்தை முன்பே "தோழியர்"கூட்டு பதிவில் எழுதியிருந்தேன். அதை ஒரு
சிறுக்கதையாக்கி, கோவை ஞானி அவர்கள் நடத்தும், பெண்களுக்கான சிறுக்கதைப்
போட்டிக்கு அனுப்பினேன். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுக்கதைகளை புத்தகமாகவும்
வெளியிட்டு இருக்கிறார்கள். நேற்று தபாலில் கிடைக்க பெற்ற அத் தொகுப்பில் என்னுடைய " அந்த ஒரு சொல்" சிறுக்கதையும் இடம் பெற்று இருக்கிறது. மற்ற விவரங்கள் தெரியவில்லை.

22 பின்னூட்டங்கள்:

At Friday, 14 March, 2008, சொல்வது...

//தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுக்கதைகளை புத்தகமாகவும்
வெளியிட்டு இருக்கிறார்கள்.//

வாழ்த்துக்கள் :-)

 
At Friday, 14 March, 2008, சொல்வது...

உங்கள் தளத்தில் அந்த கதை உள்ளதா ?

 
At Friday, 14 March, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா.:):)

 
At Friday, 14 March, 2008, சொல்வது...

நன்றி ஆயில்யன்.

யாத்ரீகன் இல்லை. விரைவில் போடுகிறேன்.

 
At Friday, 14 March, 2008, சொல்வது...

இதே போன்று ஒரு தெருவில் நடக்கும் சம்பவத்தை வைத்து ‘பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா' என்ற தலைப்பில் ஒரு குறு நாவலைத் திருமதி அனுராதா ரமணன் அவர்கள் எழுதினார்.25 ஆண்டுகளுக்கு முன்பு. அற்புத்மாக இருக்கும். படித்திருக்கிறீர்களா?

 
At Friday, 14 March, 2008, சொல்வது...

போடுங்க படிக்கிறேன்!! அப்புறம் கருத்து சொல்லறேன்!! :))

 
At Friday, 14 March, 2008, சொல்வது...

வாழ்த்துகள் உஷா..கதை படிக்கவும் ஆவல்..

 
At Friday, 14 March, 2008, சொல்வது...

நல்ல கதையாகத் தான் இருக்க வேண்டும்.
உண்மைகளைப் பேசுவதில் என்ன தவறு.
நேற்று விஜய் டிவியில்
நளினா ஜமீலா என்னும் ஒரு ....மாதின் பேச்சு என்னை மிக யோசிக்க வைத்தது.
எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் அதில் கலந்து கோண்டார்.அதைப் பற்றிப் பதிவு செய்யக் கூட எனக்குத் துணீவு இல்லை:((

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

Balachandar has left a new comment on your post "ஒரு நடிகையின் வாழ்க்கை":

அந்த நடிகை, தமிழச்சியா அல்லது தெலுகு பார்ட்டியா?

திரு.பாலசந்தர் அவர்களே, தங்கள் கேள்விக்கு பதில்- தெரியாது

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

மேடம்,

//என் உறவினர் சொன்ன மிக முக்கிய மேட்டர்- அந்தம்மாளை கரித்துக் கொட்டியவர்கள் அனைவரும் ஆண்கள், பெண்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை//

காரணம் அந்தப் பெண்ணின் வயது 60.

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

ரத்தனேஷ், அதே அதே! இளம் பெண்ணாய் இருந்தால், கதை மாறியிருக்கும் :-)

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

//கதை படிக்கவும் ஆவல்..//

நானும் ரீப்பிட்ட்டிக்கிறேன்

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

காரணம் அந்தப் பெண்ணின் வயது 60.

//
:))தேவுடா.

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள்!! கதையை எப்பொழுது எங்கள் பார்வைக்கு வைக்கப் போகிறீர்கள்?;-)

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

ஆயில்யன்,யாத்ரீகன், ராதா, இலவசம், வல்லி, பாசமலர், யோசிப்பவர் அனைவருக்கும் நன்றி, விரைவில் இங்கு ஏற்றுகிறேன்.

சுப்பையா சார், அனுராதாரமணன் அவர்களின் ஆவியில் வந்த தொடர் ஒன்று மட்டுமே நினைவில் இருக்கிறது. நகரத்தார் சமூக பிண்ணனியில், இரண்டாம் கல்யாணம், முதல் மனைவி, தாயார், பெண் ஆகியோர் கரித்துக் கொட்டுவார்கள்.கணவன் விபத்தில் இறக்க, அத்தெலுங்கு பெண்ணை, தந்தையின் விருப்பப்படி கல்லூரியில் படிக்கும் மகன் காப்பாற்றுவான்
நிங்கள் சொன்னது படித்தேனா என்று
என்றெல்லாம் வரும்.
பெண் எழுத்தாளர்களில் வெகு சில ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி மற்றும் லஷ்மி.

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள்.

சீக்கிரம் போடுங்க
ஆவலுடன்

மங்களூர் சிவா

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

உஷா மேடம், வாழ்த்துக்கள். கதையை சீக்கிரம் போடுங்கள் இங்கு!

மச்சு என்றால் மாடி வீடு என்று தெரியும். குச்சு என்றால் என்ன? குடிசை வீடா?
இந்த பதிவை படித்தவுடன் வாஸந்தி தான் தனியாக டெல்லியில் தங்கியிருந்த போது எப்படி அங்கு எல்லாரும் ஒரு சந்தேகக் கண்ணுடன் பார்த்தார்கள் என்றும் தன் அம்மாவை கூட வந்து இருக்கச் சொன்னவுடன் தான் அந்த சந்தேகம் எல்லாம் தீர்ந்தது என்றும் சொன்னது நினைவுக்கு வருகிறது.

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

உஷா! யுகமாயினியில்(வெளியாகியிருக்கும்) ஐந்தும் ஆறும் என்ற உங்களின் சிறுகதை படித்தேன்
அருமையாக எழுதி இருந்தீர்கள் அது பற்றி கூறலாம் என்று(இப்போதுதான் முதன் முதலாக!)இங்கே உங்களைத் தேடி வந்தேன்..

நல்ல செய்தி சொல்லி இருக்கிறீர்கள்!மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துகள் உஷா

மீனா

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

மனமார்ந்த வாழ்த்து(க்)கள் உஷா.

சீக்கிரம் கதையை இங்கே போடுங்க.

ஆவல் எல்லை மீறுது....

 
At Saturday, 15 March, 2008, சொல்வது...

சிவா, வந்தியதேவன்,துளசி, பில்டப் ஓவராய் கொடுத்துக்கிட்டு இருக்கேனோ என்று பயமாய்
இருக்கு:-)

மீனா நன்றி. உங்களுக்கு அனுப்பிய தனிமடல் கிடைத்ததா?

வந்தியதேன, குச்சு வீடு- குடிசை போன்று சின்ன வீட்டை குறிக்கும் சொல். மாம வூடு மச்சு வூடு, மாப்புள வூடு
குச்சு வூடு- எல்லாம் இன்ப மயம், கமல் நடித்த படத்தில் வரும் பாடல் இது.

 
At Thursday, 10 April, 2008, சொல்வது...

உஷா மேடம், வாழ்த்துக்கள்'

இப்போதுதான் முதன் முதலாக இங்கே உங்களைத் தேடி வந்தேன்..

கதையை எப்பொழுது எங்கள் பார்வைக்கு வைக்கப் போகிறீர்கள்?

 
At Sunday, 13 April, 2008, சொல்வது...

///ramachandranusha(உஷா) சொல்வது...
விரைவில் போடுகிறேன்.///
எப்போது போடுவீர்கள் ? ஒகனேகல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறிய பிறகா ? சொல்லி ஒரு மாதமாகி விட்டது. :)

 

Post a Comment

<< இல்லம்