Saturday, March 22, 2008

உலக இணைய வரலாற்றில் முதல் முதலாய் .....




இது உலகில் எந்த மொழியில் வராத அதிசயம். தமிழ் வலைப்பதிவாளர்கள் கை வண்ணத்தில் விரைவில் வர இருக்கிறது ஒரு தனி தமிழ்சேனல். ஆன்மீகம், உலக செய்திகள், சமூக சிந்தனைகள், மகா தொடர்கள், குறும்படங்கள், அரசியல் என்று பன் முக தன்மையுடன், எந்த தமிழ் சானலிலும் காண இயலாத புது புது அம்சங்களுடம்
வர இருக்கும் சானலைக் குறித்து சில செய்திகள்.

பக்தி ரசம்- வழங்குபவர் குமரன், ஜிரா, தி.ரா.ச

ஆன்மீகமும், சமுதாயமும் வழங்குபவர் கே ஆர் எஸ்

காலை மலர்- தினம் ஒரு தகவல் - ரத்தனேஷ், மா.சிவகுமார்

புத்தக அறிமுகம்- விருபா

செய்திகள்- சற்றுமுன்

ஜோதிடம் அறிவோம்- எஸ்.பி.சுப்பையா

நினைவில் நின்றவர்கள்- வலைச்சரம்

தேன்கிண்ணம்- கானாபிரபா

குறும்படங்கள்- டுபுக்கு, சிறில் அலெக்ஸ்

வீக் எண்ட் ஜொள்ளு- மோகன் தாஸ், மங்களூர் சிவா

டாப் டென்- சர்வேசன், வசந்தம் ரவி

கேளுங்கள் சொல்கிறோம் தினம் தோறும் ஒரு துறையில் வல்லுனர்கள் பதில் அளிப்பார்கள்

சட்டம் அறிந்துக் கொள்ளுங்கள்- பிரபு ராஜதுரை

பணம் அள்ளலாம் வாங்க- ஷேர் மார்கெட் பற்றி சாமானியன்

தினம் ஒரு உப்புமா- சமையல் குறிப்புகள் வழங்குபவர்கள் பினாத்தல் சுரேஷ், இலவச கொத்தனார்

புகைப்பட கலை- சிவீஆர்

மகளிர் மட்டும்- லஷ்மி, கண்மணி, மங்கை, பத்மா அரவிந்த், டாக்டர் டெல்பின்



அவ்வப்பொழுது வரும் தொடர்
அவனா நீயீ- அன்புடன் பாலா
காமடி டைம்- வ.வா. சங்கம்
உலாவரும் ஒளிக்கதிர்- தருமி
மீண்டும் மீண்டும் சிரிப்பு- குசும்பன்

மெகா சீரியல்கள்- துளசி வழங்கும் பாசமலர்கள்

டோண்டு ராகவன் வழங்கும் இழுக்க இழுக்க இன்பம்

கீதா சாம்ப சிவம் - ஆன்மீக லூட்டி

ஆசிப் மீரான்- மொக்கை சாமி

இவை தவிர எந்த தமிழ் தொலைக்காட்சியில் கண்டிராத புதுமை அம்சம். WWF பாணியில் பதிவாளர்கள் இடையே நடக்கும் மயிர்கூச்சரிக்கும் சண்டைகள். யார் தயாரிப்பு,
டைரக்ஷன், யார் நடிக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இது இழுக்காது, அறுக்காது. சண்டை ஆரம்பித்து இரண்டொரு நாளில் முடிவுக்கு வந்துவிடும்.
பிறகு வேறு ஒன்று தொடங்கும். நித்தம் ஒரு சண்டை, பின்னுட்டங்களில் அனல் கக்கும் கைக்கலப்பு. பரபரப்புக்கும், சுவாரசியத்துக்கும் பஞ்சம் இருக்காது.

இதைத் தவிர புது புது நிகழ்ச்சிகள் தினம் தோறும் உங்கள் பார்வைக்கு வரும்.

இப்படி பல புதுமைகள் கொண்ட வலை என்கிற புதிய தமிழ் சானல் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஐந்தரை மணிக்கு,
பக்தி கீதம்- பாடுபவர் நுனிப்புல் உஷா. கண்டுக் கேட்டு ரசியுங்கள்.

45 பின்னூட்டங்கள்:

At Saturday, 22 March, 2008, சொல்வது...

பிரண்ட்ஸ்! எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று புரியாமல், பலரின் பதிவுகள் விட்டுப் போய் இருக்கிறது. மன்னிச்சிடுங்க :-)

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

:)))))))))))

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

தமிழில் பேசு தங்கக் காசு- திரு.இராமகி
மூலிகை வைத்தியம் - இக்பால்

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

தமிழ் பிரியன் நன்றி

கூத்தனல்லூராரே சூப்பர். சேர்த்துவிடுகிறேன்

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

சூப்பெர் எப்படிதான் தோணுதோ இப்படில்லாம்.......தெய்வமே..எங்கேயோ போயிட்டீங்க..........!!

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

வயலும் வாழ்வும் மற்றும் சுற்றுப்புற சூழல் ன்னு போட்டு வின்செண்ட் ன்னு போடுங்க ...வெட்டிவேரு வன நாள் ன்னு பதிவு போட்டு கவனம்கொண்டுவருபவர்.
------------------

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

கலக்கல

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

அக்மார்க் உஷா போஸ்டிங். கலக்கல். :-)

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

Super :)))))

But still,
//
அவனா நீயீ- அன்புடன் பாலா
//

Please give some respect ;-)

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

:-))))))))))))

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

சூப்பரக்கோவ்...

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

பட்டிமன்றம்: (தெக்கி) காட்டானின் எரிப்பதா புதைப்பதா?

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

//பக்தி கீதம்- பாடுபவர் நுனிப்புல் உஷா.//

பக்தி????
உஷா??????????

velanginappolathan!

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

பெனாத்தல், நம்மளைப் பத்தி நல்லதா சொல்லி இருக்காங்க. அதுல ஏன் இவ்வளவு கடுப்பு?

அவங்க பக்திப் பாடல் பாடும் போதுதான் நாம உப்புமா கிண்டுவோமாம். அப்படின்னா நாம இப்போ போடறது எல்லாம் சூப்பர் பயனுள்ள பதிவுதானே!!

சர்டிபிகேட் குடுத்த உஷாக்கா வாழ்க!!

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

சூப்பர்..

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

//இவை தவிர எந்த தமிழ் தொலைக்காட்சியில் கண்டிராத புதுமை அம்சம். WWF பாணியில் பதிவாளர்கள் இடையே நடக்கும் மயிர்கூச்சரிக்கும் சண்டைகள். யார் தயாரிப்பு,
டைரக்ஷன், யார் நடிக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. இது இழுக்காது, அறுக்காது. சண்டை ஆரம்பித்து இரண்டொரு நாளில் முடிவுக்கு வந்துவிடும்.
பிறகு வேறு ஒன்று தொடங்கும். நித்தம் ஒரு சண்டை, பின்னுட்டங்களில் அனல் கக்கும் கைக்கலப்பு. பரபரப்புக்கும், சுவாரசியத்துக்கும் பஞ்சம் இருக்காது//

இந்த விஷயத்தில் இரு தரப்பிலும் சுடச்சுடப் பேட்டிகள் எடுக்கும் பொறுப்பு உஷாவுக்குப் பொருத்தமாக இருக்கும்..

 
At Saturday, 22 March, 2008, சொல்வது...

ரசித்துச் சிரித்தேன்

அன்புடன்...ச.சங்கர்

 
At Sunday, 23 March, 2008, சொல்வது...

//ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது//
இந்தச் சேனல்தான் தொடர்ந்து வெற்றிகரமா நடந்து கொண்டிருக்கிறதே.

 
At Sunday, 23 March, 2008, சொல்வது...

உஷா,

"சுவையான அங்கதம் (குறிப்பாக எ.அ.பாலா பற்றியது சூப்பர்)" என்று திருவாளர் கி.அ.அ.அனானி இந்தப் பதிவு குறித்து மடல் வழியாக என்னிடம் கமெண்டியிருந்தார் !!! (காரணம், நீங்கள் அனானி கமெண்ட் ஆப்ஷனை மூடி வைத்திருப்பதால், அவரால் இங்கு பின்னூட்டம் இட முடியவில்லையாம்!)

அவனா-நீயீ என்பதை "அவரா-நீங்கள்'" என்று மரியாதையாக விளித்திருக்க வேண்டாமோ ? (அதைத் தான் மேலே உள்ள கமெண்ட்டில் கேட்டிருந்தேன்!). இருந்தாலும், நீங்கள் "மூத்த பதிவர்" இல்லையா ? அதனால், OK :)))))))

எ.அ.பாலா

 
At Sunday, 23 March, 2008, சொல்வது...

அனனவருக்கும் நன்றி.

பாசமலர், நல்ல எண்ணம். இரண்டு பக்கத்திடமும் ஒதை வாங்க என்னால் இயலாது :-)

எ.அ.பாலா மற்றும் கி.அ க்கு நன்றி.நாங்க எல்லாம் சாமியையே ஒருமைல தான் கூப்பிடுவோம். அதனால கண்டுக்காதீங்க.

ஐயா இலவசம், அது என்ன உமக்கும், உம்ம தோஸ்துக்கு மட்டும் நல்ல சர்ட்டிபிகேட் தந்தா மாதிரி பேசுறீங்க. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான்.

கயல்விழி முத்துலட்சுமி, துளசி!குட்டீஸ்கார்னர் நிலா, பவன். மலரும் மொட்டும்/என் செல்லம் கண்மணி, நானானி மற்றும் பாசமலர் போட்டு இருக்கணும்.

 
At Sunday, 23 March, 2008, சொல்வது...

haa haa

 
At Sunday, 23 March, 2008, சொல்வது...

கலக்கல் பதிவு - கலக்கிட்டீங்க போங்க

 
At Sunday, 23 March, 2008, சொல்வது...

//ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஐந்தரை மணிக்கு//


சூப்பர் , ஆமா அது யாரு பிறந்த நாள் ஏப்ரல் 1. அன்று ஏன் ?

 
At Sunday, 23 March, 2008, சொல்வது...

சூப்பர்...

:))))

 
At Sunday, 23 March, 2008, சொல்வது...

சேனல் பேரு என்ன தமிழ் மணமா :))

 
At Sunday, 23 March, 2008, சொல்வது...

//மகளிர் மட்டும்- லஷ்மி, கண்மணி, மங்கை, பத்மா அரவிந்த், டாக்டர் டெல்பின்//

உங்க அரசியல் எனக்குப் பிரமாதமா புரியுது. :D

 
At Monday, 24 March, 2008, சொல்வது...

//தினம் ஒரு உப்புமா- சமையல் குறிப்புகள் வழங்குபவர்கள் பினாத்தல் சுரேஷ், இலவச கொத்தனார்
//

சைடு கேப்பில் சாண்ட்ரோ ஓட்டிய உங்களின் கெட்டிகாரத்தனத்தை எண்ணி புளங்காகிதம் அடைகிறேன். :))

நாராயண! நாராயண! (ஒன்னும் இல்ல, சும்மா குல தெய்வத்தை கூப்டேன்.)

 
At Monday, 24 March, 2008, சொல்வது...

சீனா, ம.சிவா, டாங்ஸ்.

சென்ஷீ, சானல் பேரூ வலைன்னு லோகோல தெளிவா போட்டு இருக்கேன். பார்க்கலையா?

குசும்பன், இப்படி எல்லாம் கேள்வி கேட்கபடாது :-)

மோகனா,புரிஞ்சா சரி :-)

அம்பி, உப்புமான்னா கேவலமா? அதையும் வித விதமாய் கிண்டுவது ஒரு கலையாக்கும்.

 
At Friday, 28 March, 2008, சொல்வது...

//பிரண்ட்ஸ்! எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று புரியாமல், பலரின் பதிவுகள் விட்டுப் போய் இருக்கிறது. மன்னிச்சிடுங்க :-)//

அப்படியெல்லாம் மன்னிக்க முடியாது. அக்கா நீங்க எப்படி என்னை விட்டுட்டு சேனல் நடத்தலாம்? மெகா சீரியல் இல்லாத சேனல் ஒரு (ச்சே) சேனலா? நாந்தான் அதுக்கு அழுவாச்சி ஸ்க்ரிப்ட் எழுதுவேன்.. ஓகேவா? :)

 
At Thursday, 03 April, 2008, சொல்வது...

நம்ம ப்ரோக்ராம் அப்பதான் TRB ரேட்டிங் எகிறுதாம்!!

 
At Thursday, 03 April, 2008, சொல்வது...

உங்கள் பதிவை எப்படி தவறவிட்டேன் எனத் தெரியவில்லை. இப்போதுதான் பாலாஜி சொன்னார். நான் ரசித்த வரி:
//டோண்டு ராகவன் வழங்கும் இழுக்க இழுக்க இன்பம்//

:)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Friday, 04 April, 2008, சொல்வது...

காயூ,மெகா சீரியல்கள் போட்டாச்சே,உங்களை திரை விமர்சனத்தில் போட்டு விடுகிறேன்
:-)))))))))))))))))

சிவா, சொல்லணுமா :-)

டோண்டு சார், ரசித்தற்கு நன்றி

 
At Monday, 14 April, 2008, சொல்வது...

Until I read this line...

>>பக்தி கீதம்- பாடுபவர் நுனிப்புல் உஷா. கண்டுக் கேட்டு ரசியுங்கள்.

...didn't realize it was for April 1 :).

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

நம்பினேன்.நான் நம்பினேன்.
இப்படி விட்டுட்டீங்களே உஷா:))

உமது சானலில் என்னையும்நிர்மலாவையும் சேர்த்து போர்ட்ஃபோலியோ ஒண்ணும் கொடுக்காதது மிக வருததம்;)
அடுத்த பதிவில் மது வந்துவிட்டதால் எக்ஸ்க்யூஸ்ட்.
எனக்கும் நிர்மலாவுக்கும் மாவட்டங்கள்,மற்றும் கல்கட்டா பற்றி சீன் போட தனி இடம் வேண்டும். ஆமா சொல்லிட்டேன்!!!!

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

ராஜ் சந்திரா, ஊர்லதான் இருக்கீங்களா :-)

வல்லி, முதல் குற்றசாட்டுக்கு பதில்- நிர்மலா ஒரு பிளாக்கரா?

அடுத்து, உங்க பெயர் நல்லா நினைவு இருந்தது. ஆனால் ஒரு நாள் போட்டோ பிளாக்கா இருக்கு, அடுத்த நாள் ஆன்மீகத்தில்
நனைகிறீங்க, அடுத்த நாள் பார்த்தா நினைவிடைதோயல். நான் எதை எடுத்து காரக்டர் அனாலிஸ் செய்வது ?ஆக, தவறு என் மீது இல்லை :-)

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

இந்த ஏப்ரல் 1'ல சானல் வரலையே,அடுத்த ஏப்ரல் 1'ல வருதோ????????

:)

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

அப்போ என்ன மல்டிபிள்(டிஸ்) ஆர்டர்ல போட்டுருங்கோ.:)

நிர்மலா எழுதலியா.
இதென்னடா புது நியூஸ்.

அவங்களைக் கில்லி பக்கத்தில பார்த்திருக்கேனே!!!!!!!!!

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

நானும் ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டேன்.

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

ஆஹா உஷா...நெடுநாள் லட்சியம் வெள்ளோட்டம் ஆய்டுச்சா..(பாடறது).. குட் குட்...

கலக்கல் பதிவு..WWF தான் இதுல ஹைலைட்..

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

ஏற்கெனவே 'தமிழ்மணம்' என்னும் பெயரில் வந்து கொண்டிருக்கும்ம் இந்தா சேனலை புதிய சேனல் என அறிவித்து ஏன் குழப்பறீங்க உஷா?

கலைஞர் டிவி மாதிரி போட்டியா?
:)))))))0

 
At Saturday, 19 April, 2008, சொல்வது...

அங்கயும் வீக் எண்ட்ல மட்டும் தான் ஜொள்ளா?.. ஏன் டெய்லி ஜொள்ளுனு ஒரு நிகxசி ஆரம்பிக்க கூடாது? :P

 
At Sunday, 20 April, 2008, சொல்வது...

//ஏன் டெய்லி ஜொள்ளுனு ஒரு நிகxசி ஆரம்பிக்க கூடாது? //

அட! ஆமாம்:-) சொல் ஒரு சொல் மாதிரி....

ஜொள் ஒரு ஜொள்.

அப்படியே மிருக வளர்ப்பு நிகழ்ச்சிகளுக்கு 'வள் ஒரு வள்'

சரியா வருதுல்லே?

 
At Sunday, 20 April, 2008, சொல்வது...

ஆஹா கலக்கல்
இந்த தொலைக்காட்சியின் இனிய தொகுப்பாளினி 'நுனிப்புல்'உஷா னு சேத்துக்கோங்க.

ஆமாம் என்ன பேரு?
அதுக்கு ஒரு போட்டி வைங்க சீக்கிரம் சொல்லிடுங்க.இல்லை குமுதம் காரன் 'மனநோயாளிங்க டிவி'பேர் வச்சிடுவான்.

 
At Sunday, 20 April, 2008, சொல்வது...

அறிவன், நாம என்ன கட்சிகளுக்கு அதிபதியா? கோடிகளுக்கு எங்கே போவது,சானல் எல்லாம் ஆரம்பிக்க? ஏதோ கற்பனையில் மகிழும் சாதாரண எழுத்துக்காரர்கள்.

வல்லி, நிர்மலா ஒரு எக்ஸ்லுசிவ் ரைட்டர். நம்மை போன்ற வெகுஜன எழுத்துக்காரி இல்லை. அதனால் விட்டு போச்சு (அப்ப சமாளிச்சாச்சு)

மங்கை, மயில் போன்றவள் நான்,(ஹி ஹி பாடுவதை சொன்னேன்) அதிகம் யாரும் wwF நிகழ்ச்சியைக் கண்டுக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். டாங்ஸ் :-)

வி.எஸ். கே! அப்படியா :-))))))

சஞ்சய், மிட் நைட் மசாலா மாதிரி, டெய்லி ஒரு ஜொல்லு என்று பாதி ராத்திரியில படம் காட்டிடலாம்

துளசி, உங்களுக்கு சீரியல் ஒதுக்கியாச்சு. மீண்டும் மீண்டும் சான்ஸ் கேட்பது நல்லா இல்லே :-)

கண்மணி, என்னங்க வம்பா போச்சு. புலி பசித்தாலும் புல்லை தின்னாது. பக்தி கீதமாவது பாடுவேன், ஆனால் கொஞ்சி கொஞ்சி, தமிழை கொலை செய்யும் வேலை மட்டும் செய்யவே மாட்டேன். அப்பால என்ன சொன்னீங்க? மனநோயாளர்களின்
டீவீயா? சொல்ல முடியாதுங்க, எல்லா சேனலும் அரைச்ச மாவே அரைக்கிறாங்கன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்கும்பொழுது,
இப்படி குமுதக்காரன் விளம்பரம் கொடுத்தா நமக்கு நல்லா வொர்க் அவுட் ஆனாலும் ஆகும் :-)

 
At Monday, 21 April, 2008, சொல்வது...

தேங்ஸ் துளசி மேடம்...
உஷாக்கா.. எதுவா இருந்தாலும் ராத்திரி 10 மணிக்கு முன்னாடியே இருக்கனும்.. 10 மணிக்கு தூங்கிடனும்னு என் போன ஜென்மத்து பொண்டாட்டி ஜொள்ளி இருக்கா. :P

 

Post a Comment

<< இல்லம்