Thursday, April 17, 2008

தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

"எதுனாலும் ரொண்டு ரொண்டுன்னு வர்ணும் மேடம்" தெலுங்கு மணக்க தமிழில் கண்டிப்பாய் சொன்னார் தயாரிப்பாளர். ஏகாம்பரி முழித்தாள்.

சின்னதாய் ஒரு பிளாஷ் பேக்.

தொலைக்காட்சியில் தொடர் எழுத அழைப்பு வருகிறது ஏகாம்பரிக்கு. வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு மேல் போய்விட்டால், இந்தகைய சந்தர்ப்பங்கள் பெரிய பிரமிப்பை தருவதில்லை. அதனால் சாதாரணமாய், அவர்கள் அனுப்பிய காரில் பயணித்து அசோக் நகரில் இருந்த பிரமாண்டமான பங்களாவில் இறங்கினாள்.

ஆளுயர பளபளப்பான வெங்கடாசலபதி, மின் விளக்குகளில் பிரகாசித்துக் கொண்டு இருந்தார். வரவேற்பரையில் தயாரிப்பாளர் வம்சி கிருஷ்ணகுமாரும், அவர் மனைவியும், உதவியாளர் ரமேஷ் என்கிற திருசெந்தில் இருந்தார்கள்.

மேடம், நாங்க புதுசா சீரியல் தயாரிக்கப்போகிறோம். நாங்கன்னா நானும்... (கொஞ்சம் குரலை தாழ்த்திக் கொண்டு) வெளிய லீக் பண்ணிடாதீங்க. பிக் பீ மேடமும் சேர்ந்து மொதல் மொதலா தமிளு சீரீயல்".

ஜெயாபச்சனா? ஏகாம்பரி கேட்டதும், ஆமாம். மேடம். நடிக்கப் போவது யாரூ தெரியுமா? நம்ம ஐஸ்வர்யா!

ஏகா வரும் ஆனந்த மயக்கத்தை சமாளித்துக் கொண்டு ஏதோ கேட்ட வாயை திறந்தாள் காற்றுதான் வெளியே வந்தது. மன கண்ணில் அண்ணாசாலையில் போஸ்டரில் ஐசு சிரிக்க, கீழே ஏகாம்பரியின் பெயர் பளிச்சிடுகிறது.

தயாரிப்பின் மனைவி," மேடம், என்னோட பிரண்டு உங்கள பத்தி சொன்னா. அதை பீ மேடம் கிட்ட சொன்னதும், லேடீஸ் சப்ஜெட் லேடீஸ்தான் எளுதணும்னு சொல்லிட்டாங்க. அவுங்க எப்போதும் இப்படிதான். புதுசு புதுசா சொல்லுவாங்க" மெய்சிலிர்க்க சொன்னார்.

அந்நேரம் கவிதாயினி மதுமிதா தன் தோழியுடன் உள்ளே நுழைகிறார். எல்லோரையும் வணங்கிவிட்டு அமைதியாய் இருக்கையில் அமர்கிறார். தன் தோழி வளர்மதியை
அறிமுகப்படுத்தியதும், ஏகாம்பரி "வணக்கம் வளர்மதி, கவிதை தொகுப்பு போட்டு இருக்கீங்களா?'' கேட்டதும்,

வளர்மதி ஆச்சரியத்துடன், '' நான் கவிதை எழுதுவேன்னு அவுங்களுக்கு எப்படி தெரியும்? நான் வேலை செய்கிற கல்லூரி மலர்களில் சில கவிதைகள் பற்றி அவங்கக்கிட்ட
நீங்க சொன்னீங்களா?'' கிசுகிசுக்க, "வளர், உங்களை பற்றி உங்களுக்கே தெரியாது" என்றதும், அதே கேள்வியை ஏகாம்பரியிடம் கேட்கிறார் வளர்மதி. ''அதுவா, மதுமிதாவோட நட்புகள் எல்லாருமே கவிஞர்கள். அதனால கேட்டேன்'' என்றாள்.

த. மனைவி, "கதையோட அவுட் லைன் சொல்லிட்டா, எல்லாரும் சேர்ந்து டெவலப் செஞ்சிடலாம். அப்புறம் டயலாக்ஸ் நீங்க எழுதணும். டைட்டில் சாங்கும், கதையோட ஹீரோயின் கவிதாயினி காட்டி அப்ப அப்ப கவிதை சொல்லுகிறா மாதிரி காட்டிடலாம். அதெல்லாம் மதுமிதா மேடம் எழுதி தரணும். இருநூத்தி எழுபத்தி ரெண்டு எபிசோட் வர மாதிரி கதை இருக்கணும்''

''கணவனும், மனைவியும் பாங்க் ஆபிசர்கள். பூஜா, சந்தோஷ்னு ரெண்டு பசங்க... '' ஏகாம்பரி ஆரம்பிக்கும்பொழுது இடையில் புகுந்த தயாரிப்பாளர், "மேடம், சில விஷயங்களை மொதல்ல சொல்லிடரேன். நூமராலஜிபடி எனக்கு ரெண்டு ராசியான நம்பர். பாரூங்க, ஜெயாபச்சன் மேடமும், நானும் ரெண்டுபேரும் புரோடியூஸ் பண்ணுரோம். கதை எளுதரது நீங்களும், மதுமிதா மேடமும். டைரக்ஷனும் ரெண்டு பேரூ, அதனால கதையில எல்லாம் ரெண்டுனு வரணும். ஐசு மேடமும் மொதல்ல ஒரு மாசம், சில எபிசோடுல வருவாங்க. அப்புறம் இங்கத்து ஐஸ்வர்யாவை அவருக்கு பதில் இவர்னு மாத்திடுவோம். பாத்தீங்களா ரெண்டு ஐஸ்வர்யா? கதையில நெறைய ரெண்டு வரணும்''

"சார், எம்பொண்ணு ஐஸ்வர்யா யூகேஜி படிக்குது. அதை சின்ன வயசு ஐஸ்வர்யாவா காட்டிடலாம். டைட்டில்ல ரெண்டு ஐஸ்வர்யான்னு பேரூ வருமே!" உதவி ஆவலுடன் கேட்டதும், தயாரிப்பாளர் மையமாய் தலையாட்டுகிறார். அந்நேரம் செல்பேசி அடிக்க, எண்ணைப் பார்த்துவிட்டு, "மேடம்'' என்று பயபக்தியுடன் கதை பண்ணிக் கொண்டு
சொல்கிறார் தயாரிப்பாளரின் மனைவி.

''ரொம்ப புரொபஷனல்'' பாராட்டிக் கொண்டே செல்பேசியை அணைக்கிறார்.

''அப்புறம், சீரியலுனா சில விஷ்யத்த மாத்த முடியாது. பேரூ லஷ்மி, கலா, ஈஸ்வரி இப்படிதான் இருக்கணும். நிறைய பொம்பள புள்ளைங்க கேரக்டர் வரணும். கஷ்டப்பட்டு
கடைசி ஜெயிக்கணும். கிராமத்துல படிக்காம, காசு இல்லாம திண்டாடி, மாமியார், புருஷன், ஊரூக்காரங்க தொல்லைன்னு கஷ்டப்பட்டு, சிடிக்கு வந்து பிசினஸ் பன்ணி பெரியாளா வரா மாதிரி முடிக்கணும். ஆனா புதுசா சொல்லணும்னு மேடம் ஸ்ட்ரிட்டா சொன்னாங்க''

மதுமிதா ஏதோ சொல்ல ஆரம்பிக்க, ஏகாம்பரி நடுவில் புகுந்து., "கிராமத்துல ரெண்டு பேமலி. பக்கத்து பக்கத்து வீடு"ஆரம்பிக்க,

"சூப்பர். அப்புறம்?"

"பெரியவருக்கு அஞ்சு பொம்பள புள்ளைங்க, சின்னவருக்கு நாலு பொம்பள புள்ளைங்க. ரெண்டு வீட்டுக்கு ஆகாது. ரெண்டு பேரூம் சொந்த அண்ணன் தம்பி இல்லை, பெரியப்பா சித்தப்பா பசங்க. இந்த வீட்டு வாசல்ல ஒரு வெள்ள சீல அப்பத்தா, அந்த வீட்டு திண்ணையில இன்னொரு வெள்ள சீல அப்பத்தா. ரெண்டு பேரூம் எப்பத்தான் ரெண்டு குடும்பமும் ஒத்துமையா ஆகுமோன்னு அப்ப அப்ப கண்ணை தொடச்சிக்கிட்டு இருப்பாங்க. அவுங்களுக்கு வேற டயலாக்கு தேவையில்லை இல்லையா?''

''பெரியவங்க பொண்ணுங்க ரொம்ப மோசமாவங்க, சின்னவங்க பொண்ணுங்க அடிச்சா கூட திருப்பி ஏன்னு கேட்க மாட்டாங்க" மதுமிதா தொடர்ந்ததும், "சபாஷ்" என்றார் தயாரிப்பு. "சரியா 'நாட்' டை புடிச்சீட்டீங்களே அப்புறம்?"

"சின்னவங்க புள்ளைங்க குடியிருக்கிற பூர்வீக் வீட்டை ஏமாத்தி தங்களோடதுன்னு சொல்லி வீட்டை விட்டு வெளியேத்திடராங்க பெரியவங்க பொண்ணுங்க" ஏகாம்பரி முடிப்பதற்குள், மதுமிதா " அதுக்கு முன்னாடி அவங்க வாங்குர பால்ல விஷத்த கலக்கிடராங்க. தீபாவளி நாளு, பட்டாசை அவங்க வீட்டு கூரையில போட்டு அவங்கள கொளுத்த பாக்குராங்க''

"சொல்லுங்க சொலுங்க" சுவாரசியத்தின் எல்லைகே போனார் தயாரிப்பு.

"ஒரு ஒண்ணுவிட்ட அண்ணன் கேரக்டரை சேர்த்திடலாம். பிரச்சனையில் அந்த பொம்பள புள்ளைங்க கண்கலங்கி நிக்கும்போது, ஆஜராகி பிரச்சனையில இருந்து தப்ப
வழி முறைகள் சொல்லுவாரூ, காப்பாத்துவாரூன்னு... சரியா?'' ஏகாம்பரி எடுத்துக் கொடுக்க, '' அந்த அண்ணன், பக்கத்து வீட்டு பொண்ணுங்களுக்கும் அண்ணன் முறைன்னாலும், புத்திமதி சொல்லுராரு, சித்தப்பா பொண்ணுங்கன்ன அவருக்கு இஷ்டம்னு இந்த பொண்ணுங்க அவர மதிக்காதுங்க'' மதுமிதா தொடருகிறார்.

"இன்னும் ஒரு விஷயம், இங்க இந்த பொண்ணுங்க அராஜம் பண்ணுதுங்க, அங்க பாடாபடுதுங்க. ஆனா வீட்டுல பெரியவங்க கேட்கிறது இல்லையான்னு யாரும் சொல்லிட கூடாது இல்லையா? அதனால அண்ணனுக்கு காது கேக்காது. அதனால நடப்பது எதுவும் அவருக்கு விளங்காது. அங்க தம்பி நித்ய நோயாளி, இருமிக்கிட்டு படுத்து இருப்பார்" மதுமிதா சொல்கிறார்.

''சார், ஒரு இண்டரஸ்டிங் மேட்டர், சின்னவரூ பொண்ணுங்க நாலு பேரூக்கும் ஓரே கணவன்னு காட்டிடலாம். தாய்மாமனுக்கும் இரண்டாவது பொண்ணுக்கும் லவ்வு.
மூத்த பொண்ணுக்கு பார்த்து வெச்ச அசல் ஊரு பையனுக்கும், இவுங்களுக்கும் ஓரே மேடையில கல்யாணம்னு ஏற்பாடு நடக்குது. ஆனா பக்கத்து வீட்டு பொண்ணுங்க, அந்த மாப்பிள்ளை பையன் மனச கலச்சி, கல்யாணத்துக்கு வராம செஞ்சிடராங்க. பெரிய பொண்ணுக்கு கல்யாணம் செய்யாம சின்ன பொண்ணுக்கு எப்படி? வேற பையன அவசரத்துல தேடினா, பக்கத்து வீட்டு பொண்ணுங்க சதி செஞ்சி தடுக்கிறாங்க. இரண்டாவது பொண்ணு, மணமேடை ஏறின எங்கக்காவுக்கு வாழ்வு கொடுங்கன்னு அழுது புலம்பி ரெண்டு பேரூக்கும் தாலி கட்டிடராரு தாய்மாமன்.

"மூணாவது பொண்ணு....?"

ஏகாம்பரி குறுக்கிட்டு, "படிக்க போன எடத்துல பணக்கார பையன் கண்ணுல வீழ்ந்து, ஏமாந்து போகுது. அதனால வேற வழியில்லாம அந்த பொண்ணுக்கும் வாழ்வு
கொடுக்கிறாரூ"

"மிச்ச ஒரு பொண்ணு?"

''அதுக்குள்ள வீடு, நெலம் எல்லாம் போய் நடு தெருவுக்கு வந்துடராங்க. இந்த நிலையில யாரூ கட்டிப்பாங்கன்னு இந்த மூணு பொண்ணுங்களும், புருஷன்கிட்ட அழுது புலம்பி தங்கச்சிய அவுரூக்கே கட்டி வைக்கிறாங்க.''

''ஆனா ஒண்ணு, இவுங்க ஒத்துமையை பார்த்து ஊரே மூக்கு மேலே கையை வைக்குது! புருஷன், நாலு பொண்டாட்டிகளும் எல்லாத்தையும் இழந்து கட்டிய துணியோட சென்னைக்கு வராங்க. சாப்பாடு கூட கிடைக்காம பிச்சை எடுத்து, பிறகு பிசினஸ் செஞ்சி பெரியாள் ஆகி, மூத்த பொண்ணு ஜனாதிபதிகிட்ட சிறந்த தொழிலதிபர் விருது வாங்குறாங்கன்னு முடிச்சிடலாம்"

"அதுக்கு பதிலா பெரிய கவிதாயினி ஆகி, சினிமாலையும் பாட்டு எழுதி, ஜனாதிபதி கிட்ட அவார்ட் வாங்குகிறா போல முடிச்சிடலாம்" மது

" இதுக்கூட நல்ல ஐடியா. கடைசி சீன் டெல்லியில பிக் பீ பேமலி வரா மாதிரி காட்டிடலாம்" தயாரிப்பின் மனைவியும் தன் பங்கிற்கு கதை பண்ணினார்.


யாரும் எதுவும் பேசவில்லை. அமைதி நிலவுகிறது. ஒருவேளை கதைப்பிடிக்கவில்லையோ என்று சந்தேகமாய் தயாரிப்பாளரை பார்க்கிறார்கள் ஏகாம்பரியும், மதுமிதாவும்.

எழுந்து நின்று பெருமாள் படத்தைப் பார்த்து கையை உயர்த்தி கும்பிட்டுக் கொண்டே, "என்ன ஸ்டோரி, என்னா ஸ்டோரி. நாலு பொண்ணுங்களுக்கு ஓரே புருஷன். எந்த சீரியலில் வராத மேட்டரூ இது. ஏழு குண்டலவாடா, வெங்கட் ரமணா, கோ.... '' முடிக்கும்முன்பு, மனைவி, ''ந்தா ஒத்தண்டி'' என்று வாயை பொத்துகிறார்.

உதவி முழிக்கிறார். எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்கிறதே என்று தோன்றினாலும், சொல்ல இது சமயமில்லை என்பது அவருக்கு தெளிவு.

மனைவியைப் பார்த்து சைகை செய்ததும், செக் புக் வருகிறது. அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறது.

ரொம்ப சந்தோசம் அம்மா! ஆனா சீரியலுக்கு ஹெட்டிங்ல கட்டாயம் ''ரொண்டு''ன்னு வரா மாதிரி இருக்கணும். ரெண்டு வராமாதிரி ஹெட்டிங் நீங்களும் யோசியுங்க, நாங்களும் மேடத்த கன்ஸ்டல்ட் பண்ணறோம்'' கைக்கூப்பி விடை தருகிறார்.

'என்னா கதை இது? நல்லா தெரிஞ்சா மாதிரி இருக்கே என்று யோசித்தப்படி, வண்டி ஓட்டுனரை அழைக்க வெளியே செல்கிறார் உதவி.

*************************************************************************************
சங்கம்னா ரெண்டுக்கு எழுதப்பட்டது

28 பின்னூட்டங்கள்:

At Thursday, 17 April, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!

இங்கேயும் 2 தடவை...

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

முதுகுல ரெண்டு குடுக்க வேண்டியதுதான்!! :)))

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

நானும் ரெண்டு பின்னூட்டம் போடப் போறேன்:-))))

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

ஏமண்டி ஆ தயாரிப்பாளரு கோவிந்தடுக்கு ஏமோ செப்பேதானிக்கி உன்னாரே.... அது ஏமி?:-)

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

இளா, இலவசம் டாங்ஸ்

ஏமி துளசி, மீக்கு இ சந்தேகமு பிசினஸ் பேசிறபோது, கோவிந்தா போடலாமா

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

மகாபாரதம் - 2

அப்படிக்கூட வச்சிகிடலாமில்ல :-)

ஆனாலும் அநியாயத்துக்கு ஒரிஜினலா எழுதறீங்க. அந்த உதவியாளர் சந்தேகப் படலன்னா நமக்கும் சந்தேகம் வராது.

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

மகாபாரதம்- 2 ஆ, அரத்தல் பழசா இருக்கே, மேடம், சீரியலானாலும் புதுமை வேண்டும் என்று கண்டிப்பாய் சொல்லியிருக்காங்களே?

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

இதுல வர பொண்ணுகளுக்கெல்லாம் "ரொட்டை" கொழந்தை பொறக்கர மாதிரி வச்சிருந்தீங்கன்னா...தயாரிப்பாளர் இன்னும் சந்தோஷப் படுவார் இல்ல??:)

ஆனாலும் அந்த ஓண்ணு விட்ட அண்ணன் காரக்டெர் தான் என் ஃபேவரிட்.:):)

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

ஹஹா, மனம் விட்டு சிரிச்சேன். ஒரே கலக்கல் போங்க. :)

மெட்டி ஒலி, கோலங்கள் இன்னும் எத்தனையோ எல்லாம் ரீமிக்ஸ் பண்ணியாச்சு போலிருக்கே! :p

 
At Thursday, 17 April, 2008, சொல்வது...

//முதுகுல ரெண்டு குடுக்க வேண்டியதுதான்//

@கொத்ஸ், யார் முதுகுல?னு உஷா அக்கா (அக்கா தானே?) கேக்கறாங்க. :P

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

நீங்க எந்த தகுதிச்சுற்றும் இல்லாம சீரியலுக்கு கதை எழுத தேர்வாயிட்டீங்க உஷா.. வாழ்த்துக்கள்.

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

ரெண்டு பரிசா வாங்கி குடுத்துடுங்க உஷா:-)

வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

கலக்கலா இருக்கு. வாழ்த்துக்களுங்கோவ்.

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

ராதா, ஒண்ணுவிட்ட அண்ணா கேரக்டருக்கு "ரெட்டை கண்ணன்" ன்னு பெயர் வெச்சிடலாமா :-)

அம்பி, என்ன சொல்கிறீங்க? ரீமிக்சா? மேடம் புதுசா இருக்கணும்னு சொல்லியிருக்காங்களே !!!!

மதுமிதா, கிருத்திகா, லஷ்மி இதென்ன சும்மா சும்மா வாழ்த்துக்கள் என்னா எப்படி? முடிவு தெரிஞ்ச பிறகு சொல்லுங்க,
சந்தோஷமா வாங்க்கிறேன் :-)

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

ரொண்டு கதையைச் சேர்த்து எழுதிட்டீங்களா.
:)
ஏகாம்பரி மதுமிதா
ரெண்டு வீடு
அப்ப ரெண்டு பொண்களுக்கு ஒரு கண்வன்னுன்னா இருக்கணும்.:)

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.:)

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

புரியல
புரியல
:(
:(

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

ஸ்ஸப்ப்பாஆஆஆ கண்ணை கட்டுதே

ஸ்ஸப்ப்பாஆஆஆ கண்ணை கட்டுதே

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

/
இலவசக்கொத்தனார் said...
முதுகுல ரெண்டு குடுக்க வேண்டியதுதான்!! :)))
/

repeateyyyyyyyyyy

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

madam,

You are selected as co-cum-sub writer for the mega mivie - sankar's ROBOOO.
Please visit office immdtly.

 
At Saturday, 19 April, 2008, சொல்வது...

வல்லி,ஆமாம். ஆமாம் சின்ன்வருக்கு ரெண்டு பொண்டாட்டி, 2:2, அப்ப அப்ப ரெண்டு பேரையும் ஒண்ணாத்தான்
நடத்தினேன்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு.

ரசிகன் நன்றி.

ம.சி தரும அடின்னா ஓடி வர பார்த்தீயா :-)

எஸ்.ரவி! ஆஹா.. தோ கிளம்பிட்டேன். உடனடியாய் பிளைட்டு பிடிக்க ஒரு ஈ டிக்கெட் அனுப்பவும்.

 
At Sunday, 20 April, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்
/madam,

You are selected as co-cum-sub writer for the mega mivie - sankar's ROBOOO.
Please visit office immdtly/
:))))))))))))

 
At Thursday, 01 May, 2008, சொல்வது...

என்னது இது? அடுத்த பதிவ போடறது? எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஆபிஸ்ல பதிவு படிக்கறோம்? கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்? ;)))

 
At Saturday, 03 May, 2008, சொல்வது...

திகழ்மிளிர் உங்க பெயர் மிக அழகாய் இருக்கிறது.

அம்பி, நா கொஞ்சம் பிஸி :-)

 
At Saturday, 03 May, 2008, சொல்வது...

ஒரு வார்த்தைல உள்ளம் கொள்ளைகொள்ளும் வைக்கும் உஷா!
பிடிங்க இதுக்கு 2தடவை வாழ்த்துகளை!

 
At Saturday, 03 May, 2008, சொல்வது...

ஒரு வார்த்தைல உள்ளம் கொள்ளைகொள்ளும் வைக்கும் உஷா!
பிடிங்க இதுக்கு 2தடவை வாழ்த்துகளை!

 
At Friday, 17 April, 2009, சொல்வது...

Nice effort and humour comes spontaneously. All the very best. Geetha.

 

Post a Comment

<< இல்லம்