Thursday, May 22, 2008

மீண்டும்... மற்றும் காத்மாண்டு

ஈமெயில் விசாரிப்புகள், டெலிபோனில் அக்கறையுடன் ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டாய் என்று கவலை மற்றும் உரிமையுடன் கூடிய அதட்டல்கள். அவர்கள் மனதில்
என் மீது வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பிற்கும், என் எழுத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகளுக்கும் தலை வணங்கி மீண்டும் எழுத வந்துவிட்டேன் என்றுச் சொல்லிக்
கொள்ள ஆவலாய் இருந்தாலும், ஒரு ஈ குஞ்சு கூட ஏண்டி எழுதவில்லை என்றுக் கேட்காததால், இனியும் பதிவுப் போடாவிட்டால், பதிவே தூக்கப்பட்டு விடுமோ
என்ற பயத்தில், ஒரு விசாரிப்புடன் வந்துவிட்டேன்.

வரும் ஞாயிறு டெல்லி சென்று மறுநாள் "இந்தியன்" னில் ஏறி காத்மாண்டு (நேபாள்) செல்ல, டிக்கிட்டு எடுத்தாச்சு. அங்கிட்டு பார்க்க வேண்டிய இடங்கள், டூர் பேக்கேஜ்,
ரீசனபிளான ஹோட்டல் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் சொன்னால், பசுபதிநாதரின் அருள் கிடைக்கும்.

11 பின்னூட்டங்கள்:

At Thursday, 22 May, 2008, சொல்வது...

அடச்சே!! நிம்மதியாவே இருக்க விட மாட்டேங்கறாங்கப்பா!! :))

http://www.lonelyplanet.com/worldguide/nepal/kathmandu/

 
At Thursday, 22 May, 2008, சொல்வது...

//ஒரு ஈ குஞ்சு கூட ஏண்டி எழுதவில்லை என்றுக் கேட்காததால்///

ஏன் அக்கா எழுதவில்லை ரொம்ப நாள் ஆச்சு?
- குட்டி ஈ ஆக ஆயில்யன்

 
At Thursday, 22 May, 2008, சொல்வது...

மனசுக்குள்ளே விசாரிச்ச என்னையும் என்னை விசாரிச்ச என் சம்சாரத்தையும் கணக்குல சேத்துக்கலையா?

 
At Thursday, 22 May, 2008, சொல்வது...

சொல்லணுமுன்னு தோணறது. ஆனால்.... என்ன சொல்லணுமுன்னு தெரியலையே.....

நீங்க போயிட்டுவந்து எழுதுங்க உஷா.

என்னைக்கேட்டால்..... எதுவும் முன்னாலேயே தெரிஞ்சுக்காமப் போய்க் கிடைக்கும் அனுபவம்தான் பெஸ்ட்:-))))

 
At Thursday, 22 May, 2008, சொல்வது...

உஷா மேடம்,
உண்மையில் இந்த நீண்ட மௌனம் எப்போது கலையும் என்று கேட்கத் தான் கூகுள் ரீடரில் கூட பார்க்காமல் உங்கள் பதிவுக்கு நேராக வந்தால் மௌனம் கலைத்த 'சிணுங்கல்' ஒன்று இங்கே :)
காட்மாண்டு பயணம் அருமையாக அமைய வாழ்த்துக்கள். இதை பற்றி கூகுளாண்டவரிடம் கேட்டுப் பார்த்தீர்களா? எனக்குத் தெரிந்து அவர் கொடுக்காதது எதுவும் இல்லை. ஒரு எளிமையான முன்னோட்டம் Wiki travel-ல் இருக்கிறது. இங்கு பாருங்கள். --> http://wikitravel.org/en/Kathmandu

 
At Friday, 23 May, 2008, சொல்வது...

//
ambi said...
என்னது இது? அடுத்த பதிவ போடறது? எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஆபிஸ்ல பதிவு படிக்கறோம்? கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்? ;)))

10:34 PM

அம்பி, நா கொஞ்சம் பிஸி :-)

3:59 AM
//

இந்த பின்னூட்டதை பாத்த மாதிரியாவது இருக்கா? :p

ஊரை தெரிஞ்சுகிட்டேன்
உலகம் புரிஞ்சுகிட்டேன் உஷாஜி உஷாஜி!

சரி, சரி, மன்னிப்பு கேட்க உங்க மனம் துடிக்குது!னு எனக்கு தெரியுது. :))

 
At Friday, 23 May, 2008, சொல்வது...

மனிஷா கொய்ராலாவின் சொந்தகாரங்களை நான் ரொம்ப கேட்டதாக சொல்லவும். :p

 
At Monday, 26 May, 2008, சொல்வது...

உண்மையான்ன அன்புடன் உஷாவைவிசாரிக்கும் எல்லாந்தெரிந்த ஏகாம்பரி

நீங்க இன்னோரு புதினம் தயாரிப்பில் மும்முரமாக இருப்பதாக
நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுவதாக ஒரு வதந்தி இருப்பதாக..............அம்மாடி உஷா சௌக்கியமா.ஒரு சாளக்ராமம் கொண்டுவாங்கப்பா. சீதா நகரி போய் வாங்க.

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

இலவசம், ஆயில்,சுரேஷ் & திருமதி. சுரேஷ், துளசி, வந்தியதேவன், அம்பி, வல்லி தாமதமாய் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

வெல்கம் பேக்.

ட்ரிப் நல்லா இருந்துச்சா?

சீக்கிரம் எழுதுங்க.

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

உண்மையைச் சொல்லுங்அ ..பதிவு போட டாபிக் தேடித்தானே காட்மாண்டு பயணம் :)

 

Post a Comment

<< இல்லம்