Wednesday, June 04, 2008

''வாய்'' "மை'' யே வெல்லும்

வாய் என்றால் மைக். மைக்கில் திரும்ப திரும்ப ஒரு புளூகை சொல்லிக் கொண்டு இருந்தால் அது உண்மையாகிவிடும். மை- செய்திதாள் பத்திரிக்கைகளில் திரும்ப திரும்ப பொய்யையும் புனை சுருட்டையும் எழுதிக் கொண்டு இருந்தால் அதையும் மக்கள் உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். மிக வயிற்றெரிச்சலுடன் இதை எழுதுகிறேன். திரும்ப திரும்ப குஜராத்தில் கரண்டு கட்டே கிடையாது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

குஜராத் அரசு மின்வாரிய இணைப்பு மூலம் மின்சாரம் கிடைக்கப் பெறும் துர்பாக்கியசாலி நாங்கள் இருக்கும் ஏரியா. டோரட் பவர் என்ற தனியாய் மின் விநியோகம் மூலம் பணக்கார ஏரியா, வி.அய்.பிகள், அரசு அதிகாரிகள் வசிக்கும் இடங்களில் கரண்ட் கட் என்பதே கிடையாது. ஆனால் அரசு மின் விநியோகத்தில் மின் வெட்டு என்பது நாளும் நடக்கும் செயல். இப்பொழுது கோடை காலம் என்பதால், பத்து நிமிடம்,. அரை மணி நேரம், அரை நாள் என்று தினமும் மின் வெட்டு இருக்கிறது.

இதை விட பெரிய கூத்து என்னவென்றால், மாலை ஆனதும் வோல்ட்டேஜ் பிரச்சனை. மின் விசிறிகள் ஸ்லோ மோஷனில் சுத்தும், நான்கு நிமிடத்துக்கு பிறகு பேய் போல விர் என்று சுத்த ஆரம்பிக்கும். இதனால் ப்ரிஜ், ஏசி இருந்தும் பயனில்லை.
ப்ரிஜ்ஜில் வைக்கும் காய்கறிகள் இந்த தொடர் மின் வெட்டால் அழுகிவிடுகின்றன.

நாங்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஜெனரேட்டர் இருக்கிறது. ஆனால் மின் விசிறி, விளக்கு மட்டுமே எரியும். ஆனால் குஜராத்தில் மின் வெட்டே இல்லை என்று ஆள் ஆளுக்கு கதைவிடுவது ஆச்சரியமாய் இருக்கிறது.

14 பின்னூட்டங்கள்:

At Wednesday, 04 June, 2008, சொல்வது...

டோண்டு பதிவு பாருங்க. தமிழகத்தில் ஒரு கிராமத்தில் மின்வெட்டே இல்லையாம். ஏன்னா மின்வசதியே இல்லையாம். ஒரு வேளை அந்த மாதிரி எதாவது இருக்குமோ?

அது இருக்கட்டும் அது என்ன வி.அய்.பி? உள்குத்து எதாவது இருக்கா இல்லை நீங்களும் ஐ என்ற எழுத்து தேவையே இல்லை என்ற கட்சியா?

அப்புறம் அடிக்கடி பதிவு போடாததுக்குக் கூட இதைக் காரணமா சொல்லிக்கலாமே. இல்லைன்னா நமக்கு எல்லாம் ரைட்டர்ஸ் பிளாக்கா வரப்போகுது?

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

வீட்டுக்கு வீடு வாசப்படி , நாம இன்னா பண்ண முடியும்

பேசமா ஆட்டிகினு உக்காந்துக்க வேண்டியதுதான்

விசிறியணா.........

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

நீங்கள் சொல்வது புது செய்தி. ஆனால் அதை நம்பாமலிருக்க எந்தவிதப் பிரமேயமும் இல்லைதான்.

ஆனால் ஒரு சந்தேகம். இதை ஏன் காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரங்களில் சரியாக எடுத்து கூறவில்லை? கிராமங்களில் 100% மின்சாரம் என்பது ஒரு ஆண்டுக்கும் மேலாக சொல்லப்பட்டபோது ஏன் காங்கிரசார் இதை எதிர்த்து கூறவில்லை?

குஜராத் எலெக்‌ஷன் கவரேஜுகளில் மீடியாவினர் யாருமே இது பற்றி கோடி காட்டவில்லையே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

வாந்தியும், பேதியும் வந்தால்தான் தெரியும் என்பார்கள். உங்களுக்கு வந்திருக்கிறது.. தெரிகிறது..

எனக்கென்னவோ குஜராத் பற்றி அளவுக்கதிமாக இமேஜ் கிரியேட் செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன்.

உண்மையை சொன்னதற்கு நன்றிகள்..

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

இலவசம், அதிஷா, டோண்டு, உ. தமிழன்! தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு என் கண்ணில் பட்டது, சரியான தலைமை இல்லை, சமஸ்தான இளவரசர் போல, ராகுல்காந்தி தன் ரதகஜ படையுடன் வந்துப் போனார். ஆனால் மோடி அவர்களுக்கு மக்களின் நாடி துடிப்பை தெரிந்து வைத்திருக்கிறார். நல்ல நிர்வாகி, தொழில் முனைவோர்களுக்கு
லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு, ஏராளமான முன்னேற்ற திட்டங்கள். அருமையான சாலை வசதி. மாநிலத்தை முன்னேற்ற
வேண்டும் என்று செயல்படுவதாய் பலரும் சொல்ல கேட்டேன். இந்துமத சார்ப்பு என்ற வாதத்துக்கு பதில் முஸ்லீம் எண்ணிக்கை
வெறும் 3% மட்டுமே. அதனால் இந்துக்கள் ஓட்டு அவருக்கே கிடைத்ததில் அதிசயமில்லை. இந்த மின் வெட்டு பற்றி எல்லாம் நாங்கள் வாங்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும், எக்ஸ்பிரசிலும் வரவில்லை. கல்கியும் துக்ளக்கும் எந்த குஜராத்தியரும் படிக்கப் போவதில்லை- இது டோண்டுவுக்கு
:-)

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

”இந்த மின் வெட்டு பற்றி எல்லாம் நாங்கள் வாங்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும், எக்ஸ்பிரசிலும் வரவில்லை. கல்கியும் துக்ளக்கும் எந்த குஜராத்தியரும் படிக்கப் போவதில்லை- இது டோண்டுவுக்கு
:-)”

இது பதில். ஆனாலும் பாருங்கள்,
இன்னொரு பதிவில் டோண்டு குஜராத்தில் மின் வெட்டே இல்லை
என்று எழுதாமல் இருக்க மாட்டார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் சல்மான்
கான் வீட்டில் மின் வெட்டுக் காரணமாக நாய்களுக்கு வியர்த்தால்
கட்டாயம் செய்தி வரும் :)

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

//இந்த மின் வெட்டு பற்றி எல்லாம் நாங்கள் வாங்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும், எக்ஸ்பிரசிலும் வரவில்லை...

அதைத்தான் ஏன் என்று கேட்கிறேன். பத்திரிகைகளுக்கும் மோடிக்கும்தான் ஆகவே ஆகாதே. ஒருவேளை இப்படியிருக்குமோ, அதாவது மற்ற மாநிலங்களில் நகரங்களை மட்டும் கவனித்து கிராமங்களை ஒதுக்குகிறார்கள். குஜராத்தில் நிலைமை தலைகீழ்.

அத்துடன் "நல்ல நிர்வாகி, தொழில் முனைவோர்களுக்கு
லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு, ஏராளமான முன்னேற்ற திட்டங்கள். அருமையான சாலை வசதி. மாநிலத்தை முன்னேற்ற
வேண்டும் என்று செயல்படுவதாய் பலரும் சொல்ல கேட்டேன்" என்றும் நீங்களேதான் எழுதுகிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

வடக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆறு மணி நேரம் தான் மின்சாரம் விநியோகம் இருக்கிறதாம் !! உங்களுக்கு தெரியுமா ?

எங்கள் தமிழ்நாட்டில் வாரத்தில் ஒரு நாளில் பகலில் மின் விநியோகம் இருக்காது !
கண்டிப்பாக சண்டே அல்லாது வேறு ஒரு நாள் விடுமுறை விட வேண்டும் .(ஐ ட்டி நிறுவனங்கள் உட்பட !)

இதை எல்லாம் பார்க்கும் போது குஜராத்தில் இருப்பது மின்வெட்டாக எனக்கு தோணவில்லை .

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

குஜராத் எங்க இருக்கிறது துபாயிலா? இல்லை அபுதாபியிலா???

:((


ச்சும்மா அட்டெண்டன்ஸ்க்காக ஒரு பின்னூட்டம்!!

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

தகவலுக்கு நன்றி.. என்னை போல அப்பாவிகளெல்லாம், புரட்டு பதிவுகள் புண்ணியத்தில் குஜராத் ஒரு சொர்க்க பூமி போல நினைத்து, எப்போ ரீலொக்கேட் செய்யலாம் என எண்ணிய வேளையில் வந்த நல்ல தகவல்..

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

மின்வெட்டு இல்லாத மாநிலம் நமது மின் உற்பத்தி அளவில் சாத்தியமில்லை. மின் திருட்டைக் குறைப்பதன் மூலம் பெருமளவு குறைக்கலாம். ராஞ்சியில் கரண்ட் கட் ஆகாத ஒரே தினம் ஞாயிறு மதியம் என்று வாழும்போது தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்று பெருமையடித்துக் கொள்வேன்.அது போலத்தான் குஜராத் கதையும் :-) எனக்கும் சொல்வதை நம்ப சிலர் கிடைத்தார்கள், குஜராத்தில் மின்வெட்டு இல்லை எனச் சொல்லப்படுவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் - அவ்வளவே!

அதிருக்கட்டும், மோடியின் நிர்வாகம் சூப்பர் என்ற பேச்சை துக்ளக், கல்கி, டோண்டு யாருமே இந்தப் பொங்கலுக்கு முன்னால் (மோடி துக்ளக் விழாவுக்கு வருவதற்கு முன்னால்) பேசாதது எனக்கு ஒரு ஆச்சரியமே.. How he became Suddenly so good?

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

டோண்டு சார், என் வீட்டு வேலை செய்யும் பெண், அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து வருகிறாள். அங்கும் கரண்டு கட் இருக்கிறது என்றும் வாரம் ஒரு நாள் (திங்கள் என்று நினைவு) முழு நாள் மின்சாரம் இருக்காது என்றாள். எனக்கு
மொழி பிரச்சனை, இதைக் குறித்து ஆராய ஆவல் இருந்தாலும், இயலவில்லை. இவ்வூர் வியாபர மக்கள் வசிக்கும் இடம்.
அதனால் படிப்பறிவு மிக குறைவு. நம்மூர் போல பொட்டி கடைகளில் புத்தகங்கள், தினசரிகள், பத்திரிக்கைகள் தொங்குவது கிடையாது. ஜெயா டீவியைப் பார்த்தால் எங்கும் அராஜகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று சோகமான முகத்துடன் ரபி பெர்ணாண்டோ சொல்கிறார். ஆனால் கலைஞர் டீவியில் பாலாறு தேனாறு தமிழகத்தில் வழிந்து ஓடிக் கொண்டு இருக்கிறது என்றும் சொல்லலாம், இங்கு கலைஞர் டீவி
வருவதில்லை. எது உண்மை :-)
பதிவும் தலைப்பில் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன். இனியும் இதை விவாதிப்பதில் பயனில்லை.

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

மின்சாரத்தை என்ன, வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்?

இருந்தால் கொடுத்து விடப் போகிறார்கள்!!

------

இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளை ஆராய்வதற்கு கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்ள சற்றே தயக்கம்போல ஏதோ ஒன்று இருப்பதாக கருதவே நான் விழைகிறேன்!

:-)

ஏஜெண்ட் NJ!

 
At Thursday, 05 June, 2008, சொல்வது...

A revelation!

That comes from horse's mouth. I mean, from your first hand experiences.

Any state is good only if, each and every citizen there, feels secure. If 3 per cent of its population feel insecure, that state is not good, regardless of whichever area it has excelled.

 

Post a Comment

<< இல்லம்