Friday, June 20, 2008

Blogger's meeting with Kamal

பறவைப் பார்வை என்கிற கிரேன் பார்வையில் பார்ப்போம். கசகசவென்று பேச்சு சத்தம். யார் எவர் என்று புரிப்படவில்லை. மேலும் பதிவாளர்கள் ஒவ்வொருவராய் உள்ளே நுழைந்துக் கொண்டு இருக்கிறார்கள். செல்பேசி, காமிரா போன்றவை அனுமதியில்லை என்று டோக்கன் கொடுத்து எடுத்திவைக்கப்படுகின்றன. டேப் ரிகார்டர் போன்ற கருவிகள் உள்ளனவா என்று விசாரிக்கப்பட்டும், மெடல் டிடக்டர் மூலமும் முற்றிலுமாய் சோதனை செய்து, தடவியும் பார்த்து அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு நடக்கும் விஷயங்களை வெளியில் பேசவோ, எழுதவோ மாட்டேன் என்று எழுதப்பட்ட தாளில் கையெழுத்து இடுகின்றனர். அத்தனை ரகசியம்!

நடுநாயகமாய் அடக்கத்தின் உருவமாய் அமர்ந்திருக்கிறார் கமலஹாசன். கொஞ்சம் பின்னால் கே.எஸ். ஆர். தொண்டையை செறுமிக் கொண்டு கமல் பேச ஆரம்பிக்கும் பொழுது, ஒரு இளமையான தாத்தா தன் சிஷ்யகோடிகளுடன் உள்ளே நுழைகிறார்.

"ஐங்கார்சமூகத்தின் சார்ப்பாய் இந்த மலர் மாலையை திரு. கமலஹாசனுக்கு அணிவிக்கிறேன்" என்றதும், சிஷ்யகோடிகள் கைத்தட்டுகிறார்கள் "தென்கலை அய்யங்கார்
சார்ப்பாய்" திருத்துகிறது ஒரு குரல். மாலை அணிவிக்க உதவியவரைப் பார்த்து, ஒரு குரல் ''எங்க உங்க தோஸ்த் கி.அ? என்கிறது. "தெரியவில்லை. ஆனால் நான் அவனில்லை" என்கிறார் அவர்.

"நான் அவனில்லை, சமீபத்தில் எழுபதில் வந்தப்படம். ஜெமினி ஒன்பது வேஷத்தில் நடித்திருப்பார்"

"ஆமாம், நவராத்திரியில் சிவாஜி ஒன்பது வேஷத்துல, சிட்டிசன்ல எங்க தல ஒன்பது வேஷத்துலையும்தான் நடிச்சிருக்கார். இதே நான் அவனில்லை ரீ மேக்ல ஜீவன்
அதே ஒன்பது வேஷத்துல பூந்துவெளையாடியிருப்பார். ஆனா இந்த படத்துல கமல் ஓரே பிரேம்ல பல வேடத்துல வராரே? சூப்பர் சார்"

"இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுஞ்ச கதைத்தானே? ஆனா 1913ல் ரோல்ப் ரஸ்லி இருபத்தி ஏழு வேடத்துல நடிச்சிருக்கார். 1924ல ...." அவர் தொடர கூட்டம் அமைதியாகிறது.

கமல் வாயை திறந்து திறந்து மூடுகிறார். "வந்து... எஸ்... நாம் இதைப் பற்றி பிறகு பேசுவோம்" என்கிறார்.

"என்னத்த படம், பிரமாண்டம்னு சொல்லிட்டு அபத்தமாய் இருக்கு. தாரே ஜமீன் பர் அமிர்கான் எடுத்தாரே அது படம்" பக்கத்தில் இருந்தவரிடம் மெல்ல சொல்கிறார்.

"ஹிஹி! அந்த படம் தமிழ்ல எடுத்தா கமல் எந்த வேஷத்துல நடிச்சிருப்பார்?"

" ஜோக்கூ? சுகன்யா இந்த படத்த பார்த்தா சந்தோஷப்பட்டிருக்கும். ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி வயநாட்டு தம்பன் னு ஒரு மலையாளப்படம். அதுல
கமல் பல வேஷத்துல வருவாரு. முன்னூறு வருஷ கெழவனா வருவாரு பாரு. சூப்பர். ஆனா அதையே எல்லா படத்துலை செஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி?"

"நேத்து தசாவதாரம் டிவிடில பார்த்துட்டு , கடைசி சீன்ல .... பெருமாளே" கை எடுத்து கும்பிடுகிறார்.

"ரீச்சர் பிரசண்ட்"

"உடம்பு பரவாயில்லையா?"

"டிவிடியா?" கமலும், கே. எஸ். ஆரும் அலறுகின்றனர்.

"ஆமாம், என்.டி. ராமாராவ்காரு விஷ்ணு, ராமர், கிருஷ்ணன்னு நடிச்ச படம்"

"சார் படம் சூப்பர் ஹிட். அமெரிக்கவுல மட்டும் நூறு கோடி வசூல். ஜாக்கிசானே புகழ்ந்து தள்ளிட்டார்" வாழ்த்துக்கள் மழையாய் கொட்டுகின்றன.

"அந்த ஆளு பத்து நிமிஷம் படம் பார்த்தேன்னாரு. மல்லிகா பொண்ண பார்த்து ஜொல்லுவிட்டுட்டு, ஹாங்காங்க்கு பிளேன் ஏறிட்டாரு. ஆனா ஒண்ணு மட்டும் சொல்லுதேன், புஷ்க்கு படம் கிடம் காட்டூனீக, அந்த ஆளு போகிறபோக்கில் கடுப்பாயி, மிச்சம் மீதி இருக்கிற பாம்மை நம்ம தலையில போட்டுட போறாரு"

"மிஸ்டர் கமல், பன்னிரெண்டாவது நூற்றாண்டு கதை. அப்பொழுது ஏசுவும், அல்லாவும் இந்தியாவில் நுழையாத காலம்... என்று ஆரம்பிக்கிறீர்கள். ஆனா கிறிஸ்துவம்
முதலாம் நூற்றாண்டிலும், இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டிலும் இந்தியாவில் மேற்கு கடற்கரையில் கால் ஊன்றிவிட்டது"

கமல் வழக்கப்படி பேச முஸ்தீபு செய்வதற்குள், " இப்படிதான் லிங்கத்தையும் ஆவுடையாரையும் நீங்கள் தவறாய் குணா, காதலா காதலாவில் காட்டியுள்ளீர்கள்.
யோ....."

"யாருடே அது, இந்த பின்நவீனத்துவ வாதிகளை உள்ளே விட்டது? ஆரம்பிச்சுட்டாங்கையா "

அண்ணாச்சி, இவுரூ ஆன்மீக பதிவர்.

ஆன்மீகமா, பின்ன ஏன்டே குறி சொல் எல்லாம் சொல்லுதாரு?

அதற்குள் கமல், ஆரம்ப தகராற்றை கடந்து, " படத்தில் சில தவறுகள் இருக்கலாம். நடிப்பும், கதை வசனம் என்னுடையது. மத்த விஷயங்களை நீங்கள் இயக்குனரைத்தான்
கேட்க வேண்டும்"

ஏதோ யோசனையில் இருந்த கே. எஸ். ஆர், திடுக்கிட்டு, "ஆமாம் நாந்தான் டைரக்டர்" என்றார்.

இப்பொழுது நான் உங்களை அழைத்தது, என் அடுத்த படத்தைப் பற்றி பேச

மர்மயோகியா சார்?

இல்லை மர்மயோகிக்கு பின்னால், மருதநாயகத்துக்கு முன்னால் எடுக்கப் போகிற படம். இந்த படத்தில் என்ன விசேஷம் என்றால்.... ரவிகுமாரைப் பார்த்து கண் அசைக்கிறார். எதிரில் இருந்த திரையில் ஒரு ஸ்டில் வருகிறது.

கமல் குரல் ஒலிக்கிறது. "தெருவில் ஒரு கார். முன் பக்கம் ரெண்டு பேர், பின் சீட்டில் மூணு. தெருவில் பூட் பாலிஷ் போடும் சிறுவன், காலை நீட்டிய ஆண். குடையுடன் பேசிக் கொண்டே போகும் சிறுமியும் தாயும். நீங்க பார்க்கிற அத்தனை காரெக்டரும் நான் தான். படத்தில் வரும் அனைத்து வேஷமும் நானே போடுவதாக ஒரு ஸ்கிரிப்டும், ஆண்கள் காரக்டர் மட்டும் என்று இன்னொரு ஸ்கிரிப்டும் ரெடி. புரொட்யூசரும் ரெடி இன்னும் டைரக்டர் பார்த்து ஒண்ணை ஓ.கே சொல்லணும். என்ன டைரக்டர் சார்''

ஓ.கே சார். டைரக்ஷன் நான் தான்

அந்தா ஓரமாய் காலை தூக்குகிற நாயி, காக்கா இதை விட்டுட்டீங்களே

சூப்பர் படம் சூப்பர் ஹிட்டுதான்

"ஏந்.. காரு, சைக்கிள், பில்டிங் வேஷமும் போடலாமே? இதுவரை யாருமே போட்டிருக்க மாட்டாங்க"

"சார்.....'' மிக பெரியதாய் உற்சாகத்துடன் ஒலிக்கிறது ஒரு குரல். "அங்க பாருங்க. தெருவுல போஸ்ட் பாக்ஸ்! பாப்பா, ரெண்டாம்ப்பூ படிக்கிறச்சே, போஸ்ட் பாக்ஸ் வேஷம் போட்டு, ப்ர்ஸ்ட் பிரைஸ் வாங்கிச்சு சார்"

"அப்படியா? அப்ப நீங்க எங்க மேக்கப் டீம்ல சேர்ந்துடுங்க. பர்ஸ்ட் ஷெட்டியூல் டேட் முடிவானதும் நீங்க வந்துடணும்"

அவரால் தன் காதையே நம்ப முடியவில்லை. "தாங்ஸ் கமல் சார். அத்தனை பெருமையும் என் ஓய்ப்க்குதான். இப்படிதான் நடராஜ்ஜை கிருஷ்ணன் ஆக்கியதும், மாயூரமே கொண்டாடிச்ச்சு சார்" பாவம் அதீத ஆனந்தத்தில் வார்த்தைகள் குளறின.

"சிவன் விஷ்ணுவாய் உருமாற்றம். சரித்திர சான்று இருக்கா?" ஆனால் பதில் சொல்லும் நிலையில் அந்த பதிவாளர் இல்லை.

"இப்படிப்பட்ட மேக்கப் ஆளுங்க நமக்கு தேவை" ரவிகுமாரிடம் மெல்ல சொன்னார் கமல். ஆமாம் சார் என்றார் ரவிகுமார்.

"ஒன் மினிட் மிஸ்டர் கமல்'' ஒரு பெண் குரல் ஓங்கி ஒலித்தது. "இந்த படத்துல மனோரமா மேடத்தை மேக்கப்ல கொஞ்சும் குமரியாக்கி உங்களுக்கு ஹீரோயின் ஆக்கலாமே?"

"வந்துட்டாங்கையா பெண்ணீயவாதிங்க. இந்த எளவை எல்லாம் எவன் பார்க்கிறது?"

"தோடா, கிழவனுங்க கொமரனாய் வேஷம் கட்டலாம். அதை பார்க்கிறது இல்லே?" கோவமாய் ஒலித்தது இன்னொரு பெண் குரல்.

பாவம் கமல், முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொள்ள சிரமப்பட்டு, " ஆ... நல்ல ஐடியா. யோசிக்கலாம். டைரக்டர் என்ன சொல்கிறார்ன்னும் பார்க்கலாம்"

"நல்ல ஐடியா சார். மத்த காரக்டருக்கு யூத்தா போட்டுடலாம்"

"தசாவதாரத்தில் மல்லிகா ஷெராவத்தைப் போட்டா மாதிரி, ஹாலிவுட் ஹாட் லிஸ்ட் என்கிட்ட இருக்கு சார்" வழிந்தது ஜொள்ளு.

"கமல், நானும் விக் எண்ட் ஜொள்ளுன்னு ஒரு லிஸ்ட் வெச்சிருக்கேன்"

கமல் கை கடிகாரத்தில் நேரம் பார்கிறார். "அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளுக்கு நன்றி. உங்களில் சிலரை படம் முழுக்க பயன்
படுத்திக் கொள்ள விரும்புகிறேன். நன்றி" என்று கையைக் கூப்புகிறார்.

கமலும், ரவிகுமாரும் வெளியே வந்து ஓரே காரில் ஏறுகிறார்கள். கேட்டை தாண்டியவுடன் எதிரில் இருந்த பொட்டி கடையில் தினசரிகளின் விளம்பர தாள்கள் தொங்கின்றன. அனைத்திலும் கொட்டை எழுத்தில் ஓரே செய்தி. பார்த்ததும் திடுக்கின்றன இருவர் முகமும். செய்தி இதுதான்.

"கமலின் மேக்கப் சாதனை. அடுத்த படத்தில் இளம் நாயகியாய் கமலுடன் நடிக்கிறார் ஆச்சி. இட்லிவடை என்ற இணையதளம் ஒன்றில் படங்களுடன், விவரமான செய்திகள் சுட சுட வெளியாகியிருக்கிறது''

பி.கு தசாவதாரம் சென்ற ஞாயிறு அன்றுப் பார்த்துவிட்டேன். புண்பட்ட மனதை பதிவிட்டு ஆற்றிக் கொண்டேன்.



''

40 பின்னூட்டங்கள்:

At Friday, 20 June, 2008, சொல்வது...

ஹைய்யோ....ஹைய்யய்ய்யோ....

:-))))))))

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

ஹைய்யோ....ஹைய்யய்ய்யோ....

:-))))))))

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

/
துளசி கோபால் said...

ஹைய்யோ....ஹைய்யய்ய்யோ....

:-))))))))

/
ரிப்பீட்டு

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

இராம்,துளசி ரசித்ததற்கு நன்றி
( நல்லவேளை டீச்சர் கண்டுப்பிடிக்கவில்லை :-)

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

மசி! டாங்ஸ்

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

இம்புட்டு எல்லாம் படம் மோசமில்லை. ஆனாலும் நீங்க ரொம்ப ரூ மச்சு.

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

;-)

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

லேடஸ்ட் என்றாலும் கிரேட்டஸ்ட் என்று பதிந்துள்ளீர்கள்..கமல் என்றால் அமீரகத்திலிருந்து நியுஸீ வரை பதிவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்களே !

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

சும்மா அடிச்சு ஆடியிருக்கீங்க,படம் பாத்த சூட்டில் எழுதியது போல இருக்கு....

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

இலவசம், போன வருடம் ஏப்ரலில் சூரத் வந்ததும், இங்க வெளியான தமிழ் படம் சிவாஜி. ஆனால் அதைப் பார்க்க விரும்பவில்லை. அடுத்து இந்த படம். கமலஹாசன் தமிழில் இருக்கும் வெகு சில நல்ல நடிகர்களில், நான் மிக நேசிக்கும் கலைஞரில் ஒருவர். ஆனால் அவர் ஆர்வ
கோளாறுக்கு அளவே இல்லை என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. இரண்டாம் சொக்கன் லிஸ்ட் போட்டு இருக்கிறார்,
பார்த்தீர்கள் அல்லவா? தன்னை தானே புகழ்ந்துக் கொள்ளும் வசனங்கள், ஒலக நாயகனே என்று எம். ஜி. ஆர் டைப்
பாடல்கள், தேவையா இது? பத்து அவதாரம் வேண்டும் என்று நுழைத்த சில பாத்திரங்கள், மேக்கப் திராபை!

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

பிரபா நன்றி

அறிவன்! அதுதான் பி.குவில் தெளிவா சொல்லியிருக்கேனே :-)

மணியன், இட்லி வடையைத் தவிர யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை நீங்களா எதையாவது கிளப்பாதீங்க :-)))

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

ஹா ஹா ஹா ஹா

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

ஒ...ஓ...சனம்...

உடல் பூமிக்கே போகட்டும்...
இசை பூமியை ஆளட்டும்...

வீழ்வது யாராயினும்...
வாழ்வது நாடாகட்டும்...

நீ பாடினால் மெல்லிசை...
உன் மௌனமும் மெல்லிசை...

---- x ---- x ----

மழை பெய்து பூமியை நனைத்து,கடலில் கலந்து விட்டது.

சூரியன் காய்ந்து பார்க்கிறான்; கடல் நீர் ஆவியாகிறது; மேகக் கூட்டங்களின் திரட்சியில், அடுத்த மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறது பூமி!

சக்கரம் சுழல்கிறது; சுழன்று கொண்டே இருக்கும், சக்கரம் இருக்கும்வரை...

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.

ஓம் நமோ நாராயணாய

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அந்த முகுந்தனுக்கே.

 
At Friday, 20 June, 2008, சொல்வது...

நல்ல வேளை நீங்கள் சிவாஜி பார்க்கவில்லை :-))

பொத்தாம் பொதுவாக எழுதுவதற்கு என்ன மறுமொழி போடறதுன்னு ரொம்பவே யோசனையா இருக்கு.

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

//ramachandranusha(உஷா) சொல்வது...

இலவசம், போன வருடம் ஏப்ரலில் சூரத் வந்ததும், இங்க வெளியான தமிழ் படம் சிவாஜி. ஆனால் அதைப் பார்க்க விரும்பவில்லை//.


:((

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

//பத்து அவதாரம் வேண்டும் என்று நுழைத்த சில பாத்திரங்கள், மேக்கப் திராபை!//

:))))

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

//Agent 8860336 ஞான்ஸ் said...

ஒ...ஓ...சனம்...

உடல் பூமிக்கே போகட்டும்...
இசை பூமியை ஆளட்டும்...

வீழ்வது யாராயினும்...
வாழ்வது நாடாகட்டும்...

நீ பாடினால் மெல்லிசை...
உன் மௌனமும் மெல்லிசை..//

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:))

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

//கமலஹாசன் தமிழில் இருக்கும் வெகு சில நல்ல நடிகர்களில், நான் மிக நேசிக்கும் கலைஞரில் ஒருவர். ஆனால் அவர் ஆர்வ
கோளாறுக்கு அளவே இல்லை என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. இரண்டாம் சொக்கன் லிஸ்ட் போட்டு இருக்கிறார்,
பார்த்தீர்கள் அல்லவா? தன்னை தானே புகழ்ந்துக் கொள்ளும் வசனங்கள், ஒலக நாயகனே என்று எம். ஜி. ஆர் டைப்
பாடல்கள், தேவையா இது? பத்து அவதாரம் வேண்டும் என்று நுழைத்த சில பாத்திரங்கள், மேக்கப் திராபை!//

வழிமொழிகிறேன். பலரின் கருத்தைப் பார்த்தால் அப்படித்தான் உள்ளது. ஆனால் நான் இன்னும் சிவாஜியும் பார்க்கவில்லை.. தசாவதாரமும் பார்க்கவில்லை. :)

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

அப்ப படம் பார்க்க வேண்டாமா. என்னாத்துக்கு!!! பதிவு எழுதி வேற ஆத்திக்கணும்னு சொல்றீங்க.

ஆளைவிடு:))

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

"ஏந்.. காரு, சைக்கிள், பில்டிங் வேஷமும் போடலாமே? இதுவரை யாருமே போட்டிருக்க மாட்டாங்க"

"சார்.....'' மிக பெரியதாய் உற்சாகத்துடன் ஒலிக்கிறது ஒரு குரல். "அங்க பாருங்க. தெருவுல போஸ்ட் பாக்ஸ்! பாப்பா, ரெண்டாம்ப்பூ படிக்கிறச்சே, போஸ்ட் பாக்ஸ் வேஷம் போட்டு, ப்ர்ஸ்ட் பிரைஸ் வாங்கிச்சு //
இன்னோரு ஹைய்ய்யோஓஓஓஓஓஓஒ:)

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

கிரி நன்றி

ஞான்ஸ், உங்களுக்கு முத்திடுச்சு. என்ன சொல்றீங்கன்னே புரியலை. ஆயில், இதுல ரீப்பிட்டு வேற? என்ன பாட்டு இது?

ஆயில் மூணு பின்னுட்டத்துக்கு நன்னி. ஆனா மொத பின்னோட்டம் போட்டது உங்க அண்ணாத்தைதானே :-)

வல்லி, இந்த மாதிரி எல்லாரும் பிரிச்சி மேஞ்சினத, விலாவாரியா படிச்சிட்டு படம் பார்த்தா எங்களை விட நீங்க ரொம்ப
வ்ருத்தப்படுவீங்க :-))

இன்னும் மாயவரத்தார் பதிவு படிக்கலையோ :-)))))

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

ஸ்ரீதர் நாராயணன்,
சிவாஜி பார்க்காமலேயே போட்ட பதிவு .கிழட்டு நாயகனும், இளம்வயது நாயகியும் . பார்க்க http://nunippul.blogspot.com/2007/05/blog-post_31.html

ஜமாலன்,
நீங்க வயநாட்டு தம்பன் பார்த்திருக்கிறிர்களா? கமல் தன் இருபதின் ஆரம்ப வயதில் நடிக்க படம். அந்த படத்திலும் நாலைந்து
வேடங்கள். ஆனால் இதில் மாஸ்க் மாதிரி போட்டு ஹாலிவுட்காரங்க கெடுத்துட்டாங்க. கூட இருக்கும் கூட்டம் ஏத்திவிட, இந்த மேக்கப் மேனியா பிடித்துஅலைகிறார். உண்மையில் மிக வருத்தமாய் இருக்கிறது.
தன்னை நாத்திகனாய் அறிவித்துக் கொண்டவர், கதை பாத்திரங்களை ஆத்திகர்களாய் காட்டலாம். ஆனால் சம்பவங்களில், நம்பிக்கையைக் காட்டுவது சரியா? அசின், கண்ணா, அனாதைரக்ஷகா என்று திரெளபதி மாதிரி அலறியதும், கருத்த
பூவராகவன் காப்பாற்றுகிறார்.
மசூதியில் விசாரணைக்கு வைக்கப்பட்ட இரண்டாயிரம் இஸ்லாமியர் சுனாமியால் சாகாமல் தப்பிக்கின்றனர். நாகேஷ்
அல்லாவுக்கு நன்றி சொல்கிறார். இவை கமலின் நாத்திக கொள்கைக்கு முரண்பாடாய் தெரிகின்றன.

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

அக்கா, உடம்பு சரியில்லைன்னு தெரியுது.
உடம்பு சரியானபிறகு பதிவு போடுங்க.. ஒரு அவசரமும் இல்லை. ரொம்ப அலைக்கழிச்சுக்க வேண்டாம்.

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

உஷா அவர்களுக்கு,

முதலில் இந்த பதிவில் என்ன நகைச்சுவை இருக்கிறது என்று பார்க்க வந்தேன்.

முன்முடிவுகளோடு நீங்கள் படத்தை அனுகியிருக்கிறீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது. இதில் இன்னொரு பதிவரின் பதிவைப் பார்க்கச் சொல்கிறீர்கள். இந்தப் படத்தை பற்றி பல்வேறு நல்லவிதமான விமர்சனங்களும் வந்துதான் இருக்கின்றன.

ஒரு எழுத்தாளராக நீங்கள் உங்கள் தனிப்பட்ட கருத்துகளை மட்டும் சொல்லியிருக்கலாம்.

//ஆனால் இதில் மாஸ்க் மாதிரி போட்டு ஹாலிவுட்காரங்க கெடுத்துட்டாங்க. கூட இருக்கும் கூட்டம் ஏத்திவிட, இந்த மேக்கப் மேனியா பிடித்துஅலைகிறார்//

உங்கள் பதிவிற்கு நீங்கள் வைத்த பெயர் சரிதான் போலும். 'ப்ராஸ்தெடிக்' என்னும் தொழில்நுட்பம் பல வருடங்களாக வழக்கதில் இருந்து வருகிறது.

உதாரணத்திற்கு ஒரு காட்சியில் இரண்டு கிழவிகள் காட்டுவார்கள். இருவரும் தொண்டு கிழம் என்று சொல்லப்பட வேண்டிய வயதுதான். ஒருவரை நீங்கள் 'கமல்ஹாசன்' என்ற நடிகர் என்ற எண்ணத்துடன் அணுகாமல் பார்த்தால் எனக்கு இரண்டு பேருக்கிடையும் எந்தவித உறுத்தலும் தெரியவில்லை.

இதைப் பற்றி படித்த நிறைய பதிவுகளில், ஒருவர் இந்த பாத்திரம் ஓஹோ என்று வந்திருக்கிறது என்பார்கள். இன்னொருவர் அதே பாத்திரத்தின் மேக்கப் சரியில்லை ஆனால் இன்னொரு பாத்திரத்தின் ஒப்பனை அருமை என்பார்.

நீங்கள் மொத்தமாக திராபை என்கிறீர்கள். இது நுனிப்புல் மேய்கின்ற மனப்பாண்மை மாதிரிதான் தெரிகிறது. மன்னிக்கவும்.

எனக்குத் தெரிந்த வரையில் திரைக்கதை மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. பத்து கதாபாத்திரங்கள் நுழைக்கப்பட்டனவா என்றால், அதுதான் chaos theory-ன் படி சொல்லப்படும் வெவ்வேறு சம்பவங்களின் தொடர்ச்சி. பத்து என்ன இருபது சம்பவங்களைக் கூட தொடர்பு படுத்தலாம். இங்கு பத்து என்பது மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு சம்பந்தபடுத்துவதற்காக அப்படி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே தசாவதாரம் என்று கதைப் பெயர். அது ஏன் விஷுனு பத்து அவதாரம் மட்டுமே எடுத்தார்? தேவையில்லாமல் ஆமை, குள்ளன் என்றெல்லாம அவதாரம் என்று நீங்கள் பல கேள்விகள் கேட்கலாம்.

உங்கள் கதையில் நானும் புகுந்து பல கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது உங்கள் கதை என்ற அள்வில்தான் நான் படிக்க முடியும்.

மசூதியில் இருக்கும் இசுலாமியர் காப்பாற்றப் படும் காட்சியை நன்றாக பாருங்கள். அந்த மசூதிக்கு கபிபுல்லாகான் நிலம் தானம் செய்கிறார். அதே மசூதியில் அவரும் அவருடைய சுற்றம் பாதுகாக்கப் படுகிறது. இது நமக்கு தசாவதாரத்தில் வரும் குள்ள வாமனன் அவதாரத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. அங்கே வாமனன் வஞ்சகமாக 3 அடி நிலம் தானமாக கேக்கிறார். பின்னர் உலகளந்த பெருமாளாக நிற்கிறார். இவர் இருக்கும் நிலத்தை தானமாக தருகிறார். தன் சுற்றமும் நட்பும் காத்த அவதாரமாக தெரிகிறார். இது ஒரு அழகான ஒப்பீடு.

ஆனால் ஒன்று இந்த ஒப்பீடுகள் எல்லாம் உங்கள் மனதில் தோன்றுகின்றன. ஆனால் இந்த ஒப்பீடுகள் இன்றியும் கதை சீராகவே செல்கிறது.

ஆண்டாளுக்கு அது கோவிந்தராஜப் பெருமாளின் உறசவ சிலை.

அறிவியல் விஞ்ஞானிக்கு அது கொடிய Vail-ஐ சூடாக்காமல் காக்கும் ஒரு ஜாக்கெட்.

முடிவும் அப்படியே. எல்லாத்துக்கும் பெருமாள் என்பதை கோவிந்த் ஒத்துக்கொள்ளவில்லை. நீங்களும் ஒத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

உங்களின் இந்த அங்கத விமர்சனமும், அதைத் தொடர்ந்து நீங்கள் எழுதியிருக்கும் பின்னூட்டங்களும், மிகவும் ஏமாற்றத்தை தருகின்றன. இந்த பின்னூட்டத்தை நீங்கள் விருப்பப்பட்டால் பிரசுரிக்கலாம். மிக்க நன்றி.

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

ஸ்ரீதர்,
படம் பார்க்க டிக்கெட் புக் செய்தவுடன், விமர்சனம் எதையும் படிக்கவில்லை. விமர்சனம் என்ற பெயரில் சீன் பை சீன், பதிவுலகில் அலசப்படுவதால், படம் பார்க்கும் த்ரில் போய்விடுகிறது. கதையின் வேகம் நன்றாக இருக்கிறது,
அவ்தார் சிங் வரும், பாடல் காட்சிகள் அந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் தொய்வு.
கதையும், வசனங்களும் கமல் என்பதால் ஆத்திகத்தை வலியுறுத்தி எழுதிய கதை - ஆத்தீக் பாத்திரங்களை சொல்லவில்லை-
நீங்கள் குறிப்பிட்ட மசூதி/ கோவில்/ சர்ச்சுக்கு நிலம் எழுதி வைத்தால் அந்த கடவுள்கள் காப்பாற்றிவிடுவார்களா?
இரண்டாம் சொக்கனின் பதிவை இரண்டு நாட்களுக்கு முன்புதான் படித்தேன். அதனால் இந்த உலகிலேயே முதன் முறையாய்...
போற்றல் தேவையா என்றுக் கேட்டேன். இவை எல்லாம் என் வருத்தங்கள் மட்டுமே. ப்ளெட்சர், நம்பி, பூவராகவன்,நாயுடு கேரக்டர் மட்டும், அதிலும் ப்ளெட்சர் காரக்டரை நன்றாக, மேக்கப் உட்பட செய்திருந்தால் படம் இன்னும் நன்றாக
இருந்திருக்கும் என்ற ஆதங்கம் மட்டுமே! கிழவி கேரக்டர், இந்தியன் சுகன்யாவை நினைவுப்படுத்தியது.
மற்றப்படி, என் எழுத்தை மட்டுமல்ல, யாருடைய எழுத்தையும் வாசிப்பவர்கள் விமர்சிக்க முழு உரிமையுண்டு.

சுரேஷ், பதிவிட்டதும் உடம்பு சரியாகிவிட்டது

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

பாபா என்னோட பதிவில் வந்து நுண்ணரசியல் விளக்கங்கள் தரும் பொழுது எடுத்துக்காட்டுகள் தரக்கூடாதா எனக் கேட்டு இருந்தார். இந்தப் பதிவு அப்பொழுது வந்திருந்தால் அட்லீஸ்ட் கலர்கண்ணாடி நுண்ணரசியலுக்கு எடுத்துக்காட்டு கிடைத்திருக்குமே. படத்தையே பார்க்காமல் மத்தவங்க சொல்லறாங்க என்பதால் ஆமாம் போட்டு வந்திருக்கும் பின்னூட்டத்தை மேற்கோள் காட்டி க.க.நுண்ணரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கலாமே. அதுவும் பலர் நல்ல படம் என்பதோ, இட்லி வடையாகட்டும் சர்வேசனாகட்டும் எடுத்த சர்வேக்களில் படம் ஓஹோ எனச் சொன்னதோ கண்ணில் படவே இல்லையாம். ஆனால் நல்லா இல்லை என சொன்னது எல்லாம் இவர் கண்ணில் பட்டுவிட்டதாம். சபாஷ். பதிவு படிக்காமல் பின்னூட்டம் போட்டால் அது கும்மி (உஷாக்கா பாணியில் கும்பி). ஆனால் படமே பார்க்காமல் பின்னூட்டம் போட்டால் அது பேர் விமர்சனம்! நல்லா இருங்க சாமி!!

 
At Saturday, 21 June, 2008, சொல்வது...

உஷாக்கா, நீங்க படத்தைப் பார்க்கும் வரையில் மத்த விமர்சனங்களைப் படிக்கலை. சரி. அதுக்கு அப்புறமா படிச்சது ஒரே ஒரு விமர்சனம்தான் போல. அதான் அதை மேற்கோள் காட்டி நீங்க சொல்வது எல்லாம் சரி என்று காட்டுகிறீர்கள் போல. சரி போகட்டும். உங்கள் கருத்துக்கு வலு சேர்பதற்காக ஒத்த கருத்துள்ளவர்களை மேற்கோள் காண்பிக்கறீர்கள் என வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் அடுத்து ஒண்ணு சொல்லி இருக்கீங்க பாருங்க. கமல் நாத்திகர். ஆனால் ஆத்திக வேடம் போடலாம். ஆனால் சம்பவங்களில் ஆத்திகம் பற்றிய நம்பிக்கையை காட்டுவது சரியா?

இது என்ன கமல் என்ற கதாசிரியரின் தப்பா? இல்லை கமல் என்ற நடிகரின் தப்பா? ஒரு வேளை கே. எஸ். ரவிக்குமார் ஆத்திகராய் இருந்து கமல் கதையை மாற்றி இருப்பாரோ?
பேசாமல் ஒரு படத்தில் பணிபுரிபவர் அனைவரும் ஆத்திகராகவோ நாத்திகராகவோ இருத்தல் அவசியம் என்று சொல்லி விடலாமா? தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருப்பதைக் கலைத்து விட்டு ஆத்திக நடிகர் சங்கம்., நாத்திக நடிகர் சங்கம் என்று கொண்டு வந்துவிட்டால் எந்த படத்திற்கு எங்க போக வேண்டும் என்பது எளிதாகத் தெரியுமே. (ஸ்ரீதர், பதிவையும் பின்னூட்டங்களையும் படித்த உடன் இப்படி எல்லாம் தோன்றச் செய்யும் இந்தப் பதிவு நகைச்சுவை என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதில் உமக்கு என்ன சந்தேகம்? )

படத்தில் எல்லாமே சரி என்று நானும் சொல்ல வரவில்லை. நுழைக்கப்பட்ட பாத்திரங்கள், மைதா மாவு மேக்கப், முட்டாள்தனமான காட்சிகள் என ஏகப்பட்ட ஓட்டைகள். ஆனால் அவற்றையும் மீறி அழகான கதையமைப்பு, வேகமான கதையோட்டம், அசட்டுப் பிசட்டு காமெடி இல்லாதது, தேவையில்லாமல் ரீச்சர் ஊருக்குப் போய் இடுப்பொடிப்பது என இல்லாமல் ஒரு படம். அது எல்லாம் ஒரு வேளை குஜராத்தில் சென்சார் செய்து விட்டார்களா?
இன்று வரும் தமிழ்ப் படங்களோடு பார்க்கும் பொழுது இது கட்டாயம் பார்க்கக்கூடிய படம் என்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதா? நீங்களாகவே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு படத்தைப் பார்க்கப் போய் அவை நிறைவேறாமல் போனதால் குடுத்த காசு வேஸ்ட் என்பது போல வெறும் ஓட்டைகளை மட்டும் பேசுவது சரியா?இல்லை விகடன் போல உங்களுக்கும் எதாவது அரசியல் இருக்கிறதா? அப்படி எதாவது இருந்தாச் சொல்லிடுங்க. நேரா சொன்னாலே இந்த மரமண்டைக்கு ஏறாது. இந்த பூடகமாச் சொல்லறது எல்லாம் சத்தியமா விளங்காது.

ரொம்ப ரென்சன் ஆகறதை விடுங்க. உடம்பு சரியாப் போச்சுன்னு பெனாத்தலுக்குச் சொல்லிட்டீங்க. மனசும் சரியாக அந்த கோவிந்தராஜப் பெருமாளை வேண்டிக்கிறேன்.

 
At Monday, 23 June, 2008, சொல்வது...

சூப்பர். சம்மந்தப் பட்டவர்கள் நெறைய பேர் படித்தார்களா தெரியலை.:)


//மணியன், இட்லி வடையைத் தவிர யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை நீங்களா எதையாவது கிளப்பாதீங்க :-)))////

சொல்றதெல்லாம் சொல்லிட்டு இது வேறையா? ஆனாலும் இந்தத் தன்னடக்கம் கொஞ்சம் ஓவர்தான் :)

 
At Monday, 23 June, 2008, சொல்வது...

ஸ்ரீதர் நாராயணன்

உங்களாது பதட்டமான பின்னூட்டத்தைப் பார்க்கும் போது நீங்கள்தான் திறந்த மனத்துடன் இந்தப் பதிவை அணுகவில்லையோ என்று தோன்றுகிறது.

தனிப்பட்ட புரிதல்கள் விருப்புகள், பார்வைகள் , அலசல்கள் மற்றும் விமர்சனங்கள் மாறுபடலாம்தானே:0

உங்கள் பின்னூட்டத்தில் " எனக்குப் புரிந்தது உனக்கு ஏன் புரியவில்லை" என்ற அங்கலாய்ப்பு தெரிகிறது. இது ஒரு சிறந்த படமாகக் கூட இருக்கலாம்.அதன் காலத்திற்கு சற்று முன்னதாக வந்து புரிந்து கொள்ளப் படாமல் தோல்வி கூட அடையலாம். யார் கண்டது? 10 வருடம் கழித்து கமல் இப்படி ஒரு படம் அப்பவே பண்ணினார் என இதே மக்கள் புகழலாம் :)

நோ ரென்சன் ப்ளீஸ்.

நான் இன்னும் படம் பார்க்கலை.பாக்காமலேயே பேச வந்துட்டியாடா மாங்கா அப்படீன்னு திட்டாதீங்க :)வீக் எண்டுல டிக்கட் கிடைக்க மாட்டேங்குது.

 
At Monday, 23 June, 2008, சொல்வது...

இலவசம், இப்ப யாரு ரென்சன் ஆனாங்கன்னு சந்தேகமாய் இருக்கிறது. ஐயா! என்னுடைய கேள்வியை கேட்டுவிட்டேன்,
ஒரு கட்வுள் மறுப்பாளினியான என்னால் கடவுளை நம்பும் பாத்திரங்களை படைக்க முடியுமே தவிர, நம்பிக்கைகளை
வலியுறுத்தும் சம்பவங்களை கதையில் சொல்ல முடியாது. பிறர் நம்பிக்கைகளை மூடத்தனம் என்று நான் சொல்லுவதில்லை.

ச.சங்கர், சம்மந்தப்பட்டவர்கள் என்றால் இட்லிவடை, கமல், கே.ஆர். ரவிகுமார் தானே? தெரியலையே? கமெண்ட் போட்டாதானே தெரியும் :-)
இந்தப்படம், கமலின் சிறந்தபட பட்டியலில் வருமா என்று சந்தேகமே!

 
At Monday, 23 June, 2008, சொல்வது...

///ச.சங்கர், சம்மந்தப்பட்டவர்கள் என்றால் இட்லிவடை, கமல், கே.ஆர். ரவிகுமார் தானே? தெரியலையே? கமெண்ட் போட்டாதானே தெரியும் :-) /////

ஆமாமாம்.அவங்களைத்தான் சொன்னேன்.ஆனால் உங்க பதிவுல அனானி ஆப்ஷன் மூடி வச்சுருக்குறதுனால அவங்களால கமெண்ட் போட முடியலையோ என்னமோ. ஏன்னா அவங்க இன்னும் சொந்தமா ப்ளாக் ஆரம்பிக்கலைன்னு நெனைக்கிறேன் :)

 
At Monday, 23 June, 2008, சொல்வது...

///நீங்களாகவே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு படத்தைப் பார்க்கப் போய் அவை நிறைவேறாமல் போனதால் குடுத்த காசு வேஸ்ட் என்பது போல வெறும் ஓட்டைகளை மட்டும் பேசுவது சரியா///

இப்படியெல்லாம் சொல்லுற இலவசக் கொத்தனாரே கமல் ஐ ஸ்பென்ட் (wasted)34.5$ (ப்ளஸ் எக்ஸ்ட்ராஸ்)ஆன் யூ அப்படீன்னுதான் பதிவுக்கு தலைப்பு வச்சுருக்காரு.

அடைப்புக்குள் இருக்கும் ஆங்கில வார்த்தை சொன்னது கொத்தனாரின் மனசாட்சி.:)))

 
At Monday, 23 June, 2008, சொல்வது...

///ஆனால் படமே பார்க்காமல் பின்னூட்டம் போட்டால் அது பேர் விமர்சனம்! நல்லா இருங்க சாமி!!////

கொத்தனாரே,
"மொசப் புடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும்" அப்படீன்னு ஊர்ப்பக்கம் சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி கமல் எப்படிப் படம் எடுப்பார் அப்படீன்னு ஏற்கனவே தெரியுமோ என்னவோ.:)

 
At Monday, 23 June, 2008, சொல்வது...

உஷா & கொத்ஸ்,

எந்த ரீச்சர் இடுப்பை ஒடிக்க இந்தப் பேச்சு?

அது நானில்லைதானே?

நான் ஒரு ஓரமா சைலண்டாத்தான் இந்தப் பதிவிலும்) உக்காந்துருக்கேன்.

 
At Monday, 23 June, 2008, சொல்வது...

ச. சங்கர், அனானிமஸ் கமெண்ட் போட்டும் வசதி வைத்தால் கமல் தசாவதாரம் என்ன அறுபத்தி
மூன்று நாயன்மார் அவதாரங்களையும் எடுத்துடுவார் இல்லையா? தாங்காது சாமி!

////இப்படியெல்லாம் சொல்லுற இலவசக் கொத்தனாரே கமல் ஐ ஸ்பென்ட் (wasted)34.5$ (ப்ளஸ் எக்ஸ்ட்ராஸ்)ஆன் யூ அப்படீன்னுதான் பதிவுக்கு தலைப்பு வச்சுருக்காரு.

அடைப்புக்குள் இருக்கும் ஆங்கில வார்த்தை சொன்னது கொத்தனாரின் மனசாட்சி.:)))///////


பாருங்க இதுல இருந்தே நான் தசாவதார விமர்சனம் எதையும் படிக்கவில்லை என்பது சந்தெகத்துக்கு இடமின்றி நிரூபணமாகிறது.

துள்ஸ், எனக்கும் சந்தேகமே :-)
ரீச்சர் நீங்க
நீயூசி நீங்க
இடுப்பொடிச்சிக்கிட்டதும் நீங்க!
ஓவர் டூ கொத்ஸ்

 
At Monday, 23 June, 2008, சொல்வது...

//அடைப்புக்குள் இருக்கும் ஆங்கில வார்த்தை சொன்னது கொத்தனாரின் மனசாட்சி.:)))//

சங்கரு என் மனசாட்சி உம்ம கிட்ட வந்து சொல்லிச்சா? அது காணுமுன்னு தங்கமணி தேடிக்கிட்டு இருக்காங்க. அடுத்த தடவை கொஞ்சம் பிடிச்சு பார்சல் பண்ணிடுங்கப்பா.

பதிவைப் படியுமய்யா. படம் கட்டாயம் பார்க்கலாமுன்னுதான் சொல்லி இருக்கேன்!

 
At Monday, 23 June, 2008, சொல்வது...

//உங்களாது பதட்டமான பின்னூட்டத்தைப் பார்க்கும் போது நீங்கள்தான் திறந்த மனத்துடன் இந்தப் பதிவை அணுகவில்லையோ என்று தோன்றுகிறது.//

பதட்டம் எல்லாம் ஒன்றும் இல்லை. முன் முடிவுகளோடு எந்த படைப்பையும் அனுகுவது அவ்வளவு உகந்தது அல்ல. இது உஷாவின் பதிவு. அவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். நான் இரண்டு நாட்கள் கழித்துதான் பின்னூட்டம் இட்டேன். அதையும் அவர் வெளியிட விருப்பமில்லாவிடில் நிராகரிக்கலாம் என்றே குறிப்பிட்டிருந்தேன். அவ்வளவே!

மேலே நீங்கள் சொன்னது எல்லாம், எதற்காக என்னிடம் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. :-) இருந்தாலும் மறுமொழிந்ததிற்கு நன்றி.

 
At Tuesday, 24 June, 2008, சொல்வது...

ok..ok..ok

இலவசக் கொத்தனார்

நடுவுல புகுந்து காமெடி பண்ணி நான் கைப்பிள்ளை ஆகி விட்டேன் அப்படீன்னு தோணுது ( அதுவும் நீங்க எழுதியிருக்கும் ..சங்கரு அப்படீங்குறதைப் படிக்கும் போது உங்க ப்ரொபைலில் உள்ள கூலிங் கிளாஸ் மூலியமா மொறைச்சு பாக்குற மதிரியே இருக்கு:)) உங்க பதிவை ஞாபகம் வச்சுருந்து கோட் பண்ணிய என்னைப் பார்த்து பதிவைப் படியுமையா அப்படீன்னு சொல்லிட்டீங்களே. நீங்க படம் பாக்கலாம் அப்படீன்னு தான் சொல்லியிருக்கீங்க. உங்க பதிவின் தலைப்பு காசு செலவு பண்ணுனதை பத்தி இருந்ததா..அதுனால எனக்கு " Not worth the money I spent" அப்படீன்ன மாதிரி பட்டது. அதுதான் அப்படி போட்டுட்டேன். கோச்சுக்காதீங்க தலை.எனக்கு காமெடி வரலைனு நெனைக்கிறேன் :)

ரொம்ப சீரியஸா போகுது போல. நான் ஜகா வாங்கிக்குறேன்.

படமே பாக்காத எனக்கு ஏன் இந்த வம்பு .

பி.கு : இல்லாத ஒண்ணைப் பத்தி கோட் பண்ணுனது தப்புதான்.உங்க தங்கமணி தேடியே கிடைக்கல அப்படீன்னா அது இல்லைதான்.:)

 
At Tuesday, 24 June, 2008, சொல்வது...

ஸ்ரீதர் நாராயணன்

மேலே இலவசக் கொத்தனாருக்கு சொன்ன பதிலில் கொஞ்சம் உங்களுக்கும் பதில் இருக்கு.

என் (இந்தப் பதிவில் இருக்கும்)பின்னூட்டத்தை சீரியஸா எல்லாம் எடுத்துக்காதீங்க.

மொதல்ல பதட்டம் அப்படீன..இப்ப சீரியஸ் அப்படீங்குறியே அப்படீன்னு சொல்லி கலாய்காதீங்க.

எனக்கு இவ்வளவு சின்சியரா பதில் சொன்னீங்கன்னா தாங்காது சாமியோவ்.

உங்கள் நன்றிக்கு நன்றி:)

 

Post a Comment

<< இல்லம்