Sunday, July 27, 2008

27, July, 2008- Surat times

இப்படி ஒரு ஞாயிற்றுகிழமையை நான் இந்த ஒரு வருடத்தில் கண்டதில்லை. தெருவில் ஈ காக்கா கூட இல்லை. இந்தூரூ ஆட்கள், வீக் எண்டு கொண்டாட்டம் என்பது சூரத்தின் ஓரே பெரிய, துமாஸ் தெருவின் இரண்டு பக்க பிளாட்பாரங்களில் கும்பல் கும்பலாய் உட்கார்ந்து வார இறுதியில் மட்டும் கடைப்போடும் கடைகளில் சாட் ஐட்டம், ஐஸ்கிரீம், சுட்ட சோளம்
வாங்கி தின்பது என்று தெருவே திருவிழா கோலம் போட்டு இருக்கும்.

என் டி டீவி முதற்கொண்டு, ஜீ குஜராத்தி வரை கண்டுப்பிடிக்கப்பட்ட வெடிப்பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்றுச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இன்றே அனைத்து கடைகள், சினிமா தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டுவிட்டன. நாளை பள்ளிகளும் கிடையாது.

மாலை ஆறரை மணி இருக்கும், எதிர்த்த வீட்டுக்காரர் வெளியே போய்விட்டு வரும்பொழுது, வேகமாய் சென்ற ஒரு ஸ்கார்ப்பியோவில் இருந்து ஒரு கை, ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையை குப்பை தொட்டியில் போட்டு இருக்கிறது. உடனெ அவரும், குடியிருப்பு சங்க செகரட்டரியின் போலீசில் சென்று புகார் தந்துள்ளனர். இதைத் தவிர ஜன்னலில் இருந்து
பார்த்தால், மாலையில் இருந்து ஒரு பழைய கார் ஒன்று தெருவில் நின்றுக் கொண்டு இருக்கிறது. அதைப் பார்த்தால் அடிவயிறு கலங்குகிறது. இன்னும் குண்டுகளை செயழிழக்க செய்ய போலீசார் வரவில்லை. எல்லாரும் காத்திருக்கிறார்கள்.

டீவியில் தந்தையை இழந்து உடல் முழுவதும் வெடிக்குண்டால் காயம்பட்டு கதறும் ஒரு ஆறுவயது சிறுவனைக் காட்டினார்கள். முதுகு முழுக்க தோல் உரிந்து முழுவதும்செவ செவ என்று இருந்தது. யார் மீது என்ன கோபம்? எதற்காக இந்த வன்முறை? இத்தகைய வன்முறைகளால் என்ன தீர்வு கிடைக்கப் போகிறது? முழுக்க முழுக்க முட்டாள்தனம், ஆனால் அவதிப்படுவதோ எந்த சம்மந்தமும் இல்லாத அப்பாவிகள்.

கடவுள் என்று ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா :-) :-(

12 பின்னூட்டங்கள்:

At Sunday, 27 July, 2008, சொல்வது...

//முதுகு முழுக்க தோல் உரிந்து முழுவதும்செவ செவ என்று இருந்தது. யார் மீது என்ன கோபம்? எதற்காக இந்த வன்முறை? //

சிட்டிசன் ஜர்னலிசம் என்ற முறையில் ஒருவர் கேமராவில் எடுத்த நிகழ்வினை ஐபிஎன்னில் பார்த்தப்போது அதிர்ச்சியாகவே இருந்தது! இரு கைகளும் மேலோங்கி நிற்க ஒருவரின் கூச்சலும் மற்றொருவர் உடலெங்கும் சிதைத்த குண்டுகளால் ரத்தம் சொட்ட சொட்ட அமர்ந்திருப்பதும் அய்யோ!

பாவிகள் பார்த்து இருப்பார்களோ!??? கண்டிப்பாக கடவுள் தருவர் தண்டனை அது எந்த மிருகமாக இருந்தாலும் சரி....!

 
At Sunday, 27 July, 2008, சொல்வது...

இருக்காராம், அவரு பாவ புண்ணியத்து எற்ப சன்மானம் தருவாராம்.

இருந்து, இந்தக் குண்டை அங்கிட்டு இங்கிட்டுப் பார்த்துக்கிட்டே ஒரு இடத்தில வைக்கும் பொழுது வெடுக்குன்னு மாரடைப்பு வந்து சாகடிச்சா(கடவுள்) எவ்வளவு நல்லா இருக்கும். இல்ல, அவரோட கடவுள் வந்து அப்படி வராம பார்த்துக்குவாரா? ஒண்ணுமே புரியலை, போங்க.

 
At Sunday, 27 July, 2008, சொல்வது...

ஆம்..உஷா..அந்த சிறுவன்..கொடுமையாக இருந்தது. அதுவும் சைக்கிள் கற்றுக் கொள்ள சென்றபோது!! எவ்வளவு நிச்சயமில்லாத காலகட்டத்தில் நாம் வாழ்ந்த்துக் கொண்டிருக்கிறோம் என நினைக்கும் போது கனத்துப் போகிறது மனம்!

 
At Sunday, 27 July, 2008, சொல்வது...

இந்தியா முழுக்க நிலமை இவ்வாறுதான்
இருக்கிறது. அரசின் அலட்சியப்போக்கு
மக்களின் இழுப்புகளில் தெரிகிறது.
எப்போது தீவிரவாதம் அரசின் வன்கரங்கள் கொண்டு அடக்கப்படும்?
நம்மால் முடியும்...ஆனாலும்...?

 
At Sunday, 27 July, 2008, சொல்வது...

ஆயில், இனி கடவுள் அவர்களுக்கு தண்டனை கொடுத்துதான் என்ன ஆகப்போகிறது? அச்சிறுவனின் மனதில் இந்நாளில் அவன் அனுபவித்த கொடுமை, சாகும்வரை அவனால் மறக்க முடியுமா? உடல் ரீதீயான பிரச்சனைகளும் முழுக்க சரியாகுமா?
இதை எல்லாம் யோசித்தால் கடவுள் என்ற பெயரைக் கேட்டாலே கோபம் வருகிறது.

தெ.கா! சரியாக சொன்னீர்கள். நம்ம ஆயில்யன் சொல்லியிருக்காரு பாருங்க. கடவுள் இத்தகைய மிருகங்களுக்கு- //மன்னிக்க,
மிருகங்கள் தங்கள் உணவுக்காக மட்டுமே பிற உயிர்களை வேட்டையாடும், அதனால் தயவு செய்து மிருகங்களுடன் மனிதர்களை
ஒப்பிடாதீர்கள்//- கட்டாயம் தண்டனை தருவாராம் :-(

நானானி! கட்சி பேதம் பார்க்காமல், ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாற்றாமல், அனைவரும் இத்தகைய வன்முறைகளை எதிர்க்க வேண்டும்.

சந்தனமுல்லை! ஆம் அதேதான் எனக்கும் தோன்றியது. நம்பிள்ளைக்கள் எதிர்காலத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல்
வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் என்பதே கசப்பான உண்மை. பாதிக்கப்பட்டவர்கள் லிஸ்டில் நம் உற்றமும் நட்பும் இல்லையே
என்று சரிப்பார்த்துக் கொண்டு மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும் இல்லையா :-(

 
At Sunday, 27 July, 2008, சொல்வது...

அச்சிறுவனின் மனதில் இந்நாளில் அவன் அனுபவித்த கொடுமை, சாகும்வரை அவனால் மறக்க முடியுமா? உடல் ரீதீயான பிரச்சனைகளும் முழுக்க சரியாகுமா?
இதை எல்லாம் யோசித்தால் கடவுள் என்ற பெயரைக் கேட்டாலே கோபம் வருகிறது
//
இைத படிக்கும் ேபாது எனக்கும் அப்படி தான் ேதான்றுகிறது. மனித கடவுள்க ைள ேதட ேவண்டியிருக்கிறது.நானும் ேதடி ெகாண்டு தான் இருக்கிேறன். மனித மிருகங்கள் ெசய்யும் தவறுகளுக்கு கடவுள் என்ன ெசய்வார். மனிதர்கள் இரக்க குணம் உள்ள மனிதராக,
ெதய்வ நிைலக்கு உயர்த்தப்படும் ேபாது தான் இது ேபான்ற நிகழ்வுக்கு தீர்வு ஏற்படும். நடக்குமா?

 
At Monday, 28 July, 2008, சொல்வது...

யார் மீது என்ன கோபம் இருந்தாலும் இத்தகைய வன்முறைகளால் அப்பாவி உயிர்களை பலி கொள்வது முழுக்க முழுக்க முட்டாள்தனம் மட்டும் இல்லை. வடிகட்டிய அயோக்கியத்தனம்.

கடவுளை நம் வீட்டு வேலைக்காரனைப் போல பார்ப்பதை விடுப்போம். பாதிக்கச் செய்தவர்களுக்கு அவனிடத்தில் கடுமையான தண்டணையுண்டு.
பாதிக்கப் பட்டவர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவுவோம் இல்லையென்றால், குறைந்தது உதவிக்காக பிரார்த்திப்போம்.

 
At Monday, 28 July, 2008, சொல்வது...

குடி கெடுக்கும் குண்டு கலாச்சாரம்
மடியும் மனிதரும் நம் இனமே
துடி துடிக்கச் செய்யும் மாபதகம்
வடி கெட்டிய துரோகமன்றோ சகோதரா.

என்று தணியும் இந்த் கொடுர குண்டு தாகம்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

 
At Wednesday, 30 July, 2008, சொல்வது...

அனைவருக்கும் நன்றி. விசித்திரமான சூழ்நிலை நீடிக்கிறது. தெருவில் நடமாட்டம் அறவே இல்லை. வீட்டிலேயே இருக்க
சொல்லப்படுள்ளது. சந்தேகத்திற்கிடமாய் ஏதாவது தென்பட்டால் தொட வேண்டாம் என்றும் தெருவில் அறிவித்து சென்றார்கள். மூன்று நாட்களாய் பள்ளிகள் இல்லை. மால்கள், சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. கடைகள் ஏழு மணிக்கு பிறகு
நேற்று மூடப்பட்டுவிட்டது.
மூட்டாள்தனமோ அயோக்கியதனமோ இக் குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களையும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளையும் நினைத்தால் பாவமாய் இருக்கிறது.

நேற்று இந்த பதிவு தமிழ்மணம் ஏற்க மறுத்துவிட்டது. ஆனால் இன்று ஒரு போஸ்ட் போட்டதும், அது கீழே போய் இது மேலே வந்துவிட்டது.

 
At Wednesday, 30 July, 2008, சொல்வது...

நேபால் போய் ஆட்சி மாற்றம், சூரத் போய் குண்டுக் கலவரம். ஒரு முடிவாத்தான் இருக்கீங்க. :)

ஆனா நடப்பது எல்லாம் கோரம். :((

 
At Wednesday, 30 July, 2008, சொல்வது...

இலவசம், தற்சமயம் கொஞ்சம் காமடியாய் போய்கிட்டு இருக்கு :-)

 
At Saturday, 02 August, 2008, சொல்வது...

//கடவுள் என்று ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா :-) :-(
//
உஷா,
இருக்கும் !! நம்பிக்கை தானே வாழ்க்கையே, இல்லையா ?
இது தொடர்பான எனது பதிவு
http://balaji_ammu.blogspot.com/2008/07/450.html

 

Post a Comment

<< இல்லம்