Monday, August 11, 2008

அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டி- 2008ல் கிடைத்த பரிசு

கஜினி முகமது கணக்காய் மூன்றுமுறை தோற்று விடாகண்டியாய் நான்காவது முறை பாஸ் செய்துவிட்டேன். மூன்று வருடங்களாய் அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டிக்கு சிறுகதை அனுப்பிக் கொண்டு இருந்தேன். இவ்வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் என் கதையும் உள்ளது என்று என் தோஸ்துகள் மதுமிதாவும், ஷைலஜாவும் மெயில் அனுப்பியுள்ளார்கள். செய்தி எனக்கு உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், போட்டிக்கு கதை அனுப்பியதாலும், ராமசந்திரன் உஷா, சூரத் என்றுப் போட்டு இருப்பதால் நானாகத்தான் இருப்பேன் என்று நினைத்தாலும் கதைக்கு நான் கொடுத்த பெயர் "பிறப்பொக்கும்"..." ஆனால் அது தமிழ் வாசகர்களுக்கு புரியாது என்று நினைத்து அட்மிஷன் என்று மொழிப் பெயர்த்து தலைப்பாக்கிவிட்டார்கள் போல :-) எப்படியும் கதை பத்திரிக்கையில் வர இரண்டு மாதமாவது ஆகும். அதற்குள் வழக்கப்படி தைரியமாய் கையைத் தூக்குபவர்களுக்கு, மெயில் ஐடி தந்தால் கதை அனுப்பிவைக்கப்படும் :-)))

43 பின்னூட்டங்கள்:

At Monday, 11 August, 2008, சொல்வது...

கையைத் தூக்கறேன்க்கா!!

வாழ்த்துகள்!

:)

 
At Monday, 11 August, 2008, சொல்வது...

//அதற்குள் வழக்கப்படி தைரியமாய் கையைத் தூக்குபவர்களுக்கு, மெயில் ஐடி தந்தால் கதை அனுப்பி வைக்கப்படும் :-)))
//
Yes :)

வாழ்த்துகள்!

 
At Monday, 11 August, 2008, சொல்வது...

வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள். முதல் மூன்று முயற்சிகளுக்கு மூன்று முறை.

வாழ்த்துகள்! இது நான்காவது முயற்சியின் வெற்றிக்கு :)

 
At Monday, 11 August, 2008, சொல்வது...

:) கலக்கல்

 
At Monday, 11 August, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள். இதோ நானும் கையைத் தூக்கி விட்டேன்.

//ஆனால் அது தமிழ் வாசகர்களுக்கு புரியாது என்று நினைத்து அட்மிஷன் என்று மொழிப் பெயர்த்து தலைப்பாக்கிவிட்டார்கள் போல :-) //

ரசித்தேன்.

 
At Monday, 11 August, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள் அக்கா!

//இலவசக்கொத்தனார் said...
கையைத் தூக்கறேன்க்கா!!
/

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:))

 
At Monday, 11 August, 2008, சொல்வது...

இனிய பாராட்டுகள்.

நானும் கையைத் தூக்கிக்கிட்டு நிக்கறேன்.

 
At Monday, 11 August, 2008, சொல்வது...

சொல்லவிட்டுப்போச்சு....
தலைப்பு 'தமிழில்' இருக்கணுமுன்னு நினைச்சிருப்பாங்க, இல்லே????

 
At Monday, 11 August, 2008, சொல்வது...

துளசி கோபால் சொல்வது...
//சொல்லவிட்டுப்போச்சு....
தலைப்பு 'தமிழில்' இருக்கணுமுன்னு நினைச்சிருப்பாங்க, இல்லே????//

இதுவும் சூப்பர்:))!

 
At Monday, 11 August, 2008, சொல்வது...

உஷா,
வாழ்த்துக்கள்.. "முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்" -னு நிரூபிச்சிடீங்க..

அப்படியே எனக்கும் ஒரு காபி அனுப்பி வையுங்க..

சீமாச்சு

 
At Monday, 11 August, 2008, சொல்வது...

வாழ்த்துகள் உஷா. நானும் கை தூக்கிட்டேன் :-)

நிர்மலா.

 
At Tuesday, 12 August, 2008, சொல்வது...

ஹலோ !!

வாழ்த்துக்கள் !!

( கை தூக்கியாச்சு !! )

எனக்கு எப்பவுமே கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி....ஹி....ஹி..

 
At Tuesday, 12 August, 2008, சொல்வது...

கதையை இடுகையா போட்டிருப்பீங்கன்னு வந்து பார்த்தா கையத் தூக்க சொல்றீங்களே. இதழில் வருவதற்கு முன் இங்கே தரக்கூடாது என்று நினைக்கிறீர்கள் போல. நானும் கையத் தூக்கிட்டேன். அனுப்பி வைங்க.

 
At Tuesday, 12 August, 2008, சொல்வது...

நானும் நானும்...

 
At Tuesday, 12 August, 2008, சொல்வது...

நான் கையை கூப்பிட்டேன்-வாழ்த்துக்களுக்காக
நான் கையை தூக்கிட்டேன்- கதைக்காக
Sridhar Latha

 
At Tuesday, 12 August, 2008, சொல்வது...

இலவசம், எ. அ. பாலா, ஆயில்யன், ராமல்ஷ்மி, சீமாச்சு, லஷ்மி, குமரன், நிர்மலா,துளசி, ஸ்ரீதர் சார்! கதை அனுப்பியாச்சு.கிடைத்ததற்கு ஒரு ரிப்ளை அடியுங்களேன்.

திகழ்மிளிர், சுந்தர், இராம் மெயில் ஐடிதாங்க அனுப்புகிறேன் (சுந்தர் எந்த சுந்தரடி :-)

கபீரன்பன், பாபா வாழ்த்துக்கு நன்றி.

 
At Tuesday, 12 August, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள்.

நான் கதையை கல்கியில் ( காசு கொடுத்து வாங்கி) படித்துக் கொள்கிறேன். :)

///"பிறப்பொக்கும்"..." தமிழ் வாசகர்களுக்கு புரியாது என்று நினைத்து அட்மிஷன் என்று மொழிப் பெயர்த்து தலைப்பாக்கிவிட்டார்கள் போல ///

:))))

 
At Monday, 18 August, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா ! என்னுடைய ஜிமெயில் ஐடிக்கு அனுப்பலாம்

 
At Tuesday, 19 August, 2008, சொல்வது...

Krishnan, your mail ID pls

 
At Tuesday, 19 August, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள்.

நானும் கையைத் தூக்கி இருக்கேன். பார்க்காம இருந்திடாதீங்க.

 
At Tuesday, 19 August, 2008, சொல்வது...

ச.சங்கர் சொல்வது...
//நான் கதையை கல்கியில் ( காசு கொடுத்து வாங்கி) படித்துக் கொள்கிறேன். :)//

கதையை மெயிலில் படித்த பிறகும் கல்கியை வாங்கி என்ன படம் போட்டு எப்படி பிரசுரித்திருக்காங்க..எல்லாம் பார்க்கலாமே சங்கர்:)?

ஏனென்றால் நான் படித்து விட்டேன். பரிசுக்குரிய கதையல்லவா? மிக நல்ல கதை. மிக நல்ல தேர்வு.

 
At Tuesday, 19 August, 2008, சொல்வது...

congratulation usha,

plz sent me ur story to my email id

writer@iamgod.in

urs
writer olerzor

 
At Tuesday, 19 August, 2008, சொல்வது...

ச. சங்கர், ராமலஷ்மி தந்த நற்சான்றிதழ் கண்ணுல விழுந்துச்சா :-)

 
At Tuesday, 19 August, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா.... கலக்குங்க...

நான் கூட கையை தூக்கீட்டேன். எனக்கு tcsprasan அட் ஜிமெயில் டாட் காம்-க்கு அனுப்புங்க...

 
At Saturday, 23 August, 2008, சொல்வது...

அபுல், சித்தன், புகழன், கோபி,ஓளிஞர், பிரசன்னா என்று மெயில் ஐடி தந்தவர் அனைவருக்கும்
கதையை அனுப்பிவிட்டேன். பாண்ட் பிரச்சனை என்று சிலர் சொன்னதால், யூனிகோர்ட்டில் மாற்றி சொன்னவர்களுக்கு திரும்ப அனுப்பியிருக்கிறேன். மெயில் ஐடி இருக்கும் பின்னுட்டங்களை
பிரசுரிக்கவில்லை.

 
At Monday, 25 August, 2008, சொல்வது...

உஷா, நீங்கள் மின்மடலில் அனுப்பிய 'பிறப்பொக்கும்' கதையினை வாசித்தேன். நிதர்சனத்தோடு ஒன்றிய கதை. 'சில நேரங்களில் சில மனிதர்களைப் போல', சாதி, இனம், மதச்சாயம் பூச்சுக் கொண்ட சமுதாயத்தில் 'ராஜா' போன்ற சில நல்ல மனிதர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று தங்கள் கதை எனக்கு நினைவூட்டியது. தொடர்ந்து கருத்துள்ள கதைகளைப் படைக்க என் வாழ்த்துகள். :)

 
At Thursday, 28 August, 2008, சொல்வது...

Congrads Usha !!

கையைத் தூக்குபவர்களுக்கு, மெயில் ஐடி தந்தால் கதை அனுப்பிவைக்கப்படும்..

Thanks in advance

 
At Friday, 29 August, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள் அக்கா!
mglrssr@gmail.com

 
At Sunday, 31 August, 2008, சொல்வது...

என்ன நடக்குது இங்கே... விஷயம் சொல்றவங்களுக்கு முதலில் கதையை அனுப்பறதில்லையா உஷா:-)

உரிமையா கேட்டா தப்பாயிடுதே...அதில் வரும் முன்னே எப்படி கேட்பதுன்னு யோசிச்சிட்டிருக்கிறேன்.

 
At Friday, 05 September, 2008, சொல்வது...

மிகவும் தாமதமான வாழ்த்துகள் உஷா!!

சில நெருங்கிய உறவுகளின் திருமண நிகழ்ச்சிகளால் இணையம் பக்கமே தலைகாட்ட முடியவில்லை.

உங்கள் தொடர்ந்த முயற்சியின் வெற்றியில் சகபதிவர் நானும் பெருமைப்படுகிறேன்.

கையைத் தூக்குகிறேன், கதையை எனது profile இல் உள்ள மெயில் ஐடிக்கு அனுப்பிக் கொடுக்கவும்.

 
At Friday, 05 September, 2008, சொல்வது...

வாழ்த்துகள்! கை தூக்கியசுக்கா ..

 
At Saturday, 06 September, 2008, சொல்வது...

மின்னஞ்சலில் கதையை அனுப்பியதற்கு நன்றி. ஒரு பிரசுரமாகப்போகும் கதையின் கையெழுத்துப் பிரதியை படித்த பெருமையை அளித்ததற்கு நன்றி.

சூரத்திலிருந்து நீங்கள் எழுதியுள்ள இந்த சிறுகதை கூப்சூரத் :))

நிதர்சன உலகில் பிறப்பொக்கும் எல்லா வறியவர்க்கும் என அடிக்கோடிட்டிருக்கிறீர்கள். சமூகநீதியுடன் மனிதநேயமும் இணைந்து இயங்க வேண்டிய அவசியத்தை கதை வெளிப்படுத்துகிறது. பிரசுரிக்கப்படும் கதை எவ்வாறு தொகுக்கப்படும் என்று பார்க்கவேண்டும்.

உங்கள் எழுத்துக்கள் மேலும் பல விருதுகளையும் பரிசுகளையும் எட்ட வாழ்த்துகள்.

 
At Sunday, 07 September, 2008, சொல்வது...

மங்களூர் சிவா, மதுமிதா, ரவியா தாமத்திற்கு மன்னிக்கவும். கதையை அனுப்பியுள்ளேன். படித்துவிட்டு சொல்லவும். ரவியா, உங்க பழைய ஹாட் மெயில் ஐடிக்குஅனுப்பிள்ளேன்.

வேணு, வேணாம் ! உங்க மெயில் தெரியாதே

சித்தன், மணியன் உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

 
At Wednesday, 10 September, 2008, சொல்வது...

கல்கி கண்ட யக்காவுக்கு
எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி வைங்க

 
At Thursday, 11 September, 2008, சொல்வது...

ஜீவ்ஸ், மெயில் ஐடி அனுப்பில் கதை வரும்

 
At Friday, 12 September, 2008, சொல்வது...

வாழ்த்துக்கள் மேடம்! அப்படியே நமக்கும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க!

 
At Friday, 12 September, 2008, சொல்வது...

பாராட்டுகள் மேடம். இந்தக் கதை சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. முந்தைய கதைகள் இதனினும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் ஊகம்.

நிறைவாக எழுதுகிறீர்கள்; நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

 
At Saturday, 13 September, 2008, சொல்வது...

வந்தியதேவன், ரத்னேஷ் கதை அனுப்பியாச்சு.

 
At Saturday, 13 September, 2008, சொல்வது...

அட்மிஷன்ன்னு அழகா தமிழ்ல பேர் வைக்காமல் (பத்தீங்களா எதுனா ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்திருக்கா) அது என்ன யாருக்கும் புரியாம "பிறப்பொக்கும்"ன்னு பேர் வச்சிகிட்டு....அதான் மாத்திட்டாங்க! வாழ்க கல்கி!

போகட்டும் ஒரு பார்சேல் தட்டி விடுறது நம்ம பக்கமும்!

அன்புடன்
அபிஅப்பா

 
At Tuesday, 16 September, 2008, சொல்வது...

இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி :)

 
At Wednesday, 17 September, 2008, சொல்வது...

நன்றி அபிஅப்பா, ரிஷான்

 
At Wednesday, 22 October, 2008, சொல்வது...

கையைத் தூக்கிட்டேன்.கதையை அனுப்புங்க தாயி:) இங்க கல்கி கிடைக்கலை.

 
At Sunday, 02 November, 2008, சொல்வது...

congradzzz...me too raised my hand,send a copy to me,

 

Post a Comment

<< இல்லம்