Sunday, September 21, 2008

கடித இலக்கியமும், இணைய எழுத்தாளர்களும்

சில வருடங்களாய் இணையம் மூலம் அறிமுகமாகிய தோழிகளுடன் ஒரு சந்திப்பு சென்னை வந்தால் கட்டாயம் உண்டு. பாட்டி ஆன மூத்த பதிவரில் இருந்து,போன மாதம் கல்யாணம் செய்துக் கொண்ட இளசு வரை, ஹோட்டல் என்றால் மற்ற டேபிளில் இருப்பவர்கள் திரும்பி பார்க்குமாறு கலகலப்பு இருக்கும்.கடற்கரை என்றால் மாங்காய் பத்தையோ அல்லது வாங்கிவந்த பலகாரங்களையோ மொசுக்கிக் கொண்டு வட்டமாய் உட்கார்ந்துக் கொண்டு, கதையளப்பவர்களை தாண்டிப் போகிறவர்கள் ஒரு விநாடி கண்ணில் வியப்பு மின்ன நின்று பார்த்துவிட்டு போவார்கள்.

இந்த நட்புகளும், இன்னும் சிலரும் சேர மெயில் இலக்கியமாய், சொந்த கதை, இலக்கியம், இட்லிக்கு அரைத்தால் அவல் எவ்வளவு போடுவது போன்ற அனைத்து விஷயங்களும் எங்களுக்குள் பரிமாறப்படுகிறது. இதில் பார்த்தே இல்லாத தோழிகளும் உண்டு. ஆனால் அவர்களை நேரில் பார்த்தவர்களை எனக்கு தெரியும் :-)

எந்த வித தயக்கமோ பயமோ இல்லாமல் கடித இலக்கியம் படைக்கும் இந்த வட்டத்தில் சேர வேண்டும் என்றால் தொடர்ப்பு கொள்ளவும்.ஆனால் மகளிர் மட்டும் மற்றும் பெயரிலிகளுக்கும் முகமூடிகளுக்கும் அனுமதியில்லை.( சாமி, இது யாரையும்
குறிப்பிடும் சொல் இல்லை)

சாரு மேட்டர் என்னடா யாரும் ஆரம்பிக்கவில்லையேன்னு இருந்தது :-) இணையத்தில் "அ" போட ஆரம்பித்து அச்சு இதழ்களில் வெற்றிக் கொடி நாட்டிய நான் இதற்கு பதில் சொல்வது சால சிறந்தது என்பதால் ஆரம்பிக்கிறேன் :-)))

ஐயா, தெருவில் கிரிக்கெட் விளையாடும் குட்டிபையன்கள் அனைவரும் சச்சின் ஆகப் போவதில்லை. ஆனால் சச்சின் தெருவில் விளையாடித்தான் டெஸ்ட் மேட்சுக்கு போனார். இன்று ப்ளாக்கர்கள் அனைவரும் எழுத்தாளர்கள் ஆக போவதில்லை. தெருவில் கிரிகெட் விளையாடிய சிறுவர்களுக்கு சச்சினின் டெடிகேஷன் இல்லை. அவர்களுக்கு அது வெறும்
விளையாட்டு அல்லது பொழுது போக்கு மட்டுமே. அதுக்காக இலக்கியம் படைக்கும் தகுதி இருப்பவர்கள், பிளாக் எழுத வேண்டும் என்று சட்டம் போட முடியுமா என்ன? அவரவர் திறமை, இதற்கும் செலவழிக்க நேரம், பொறுமை, வீட்டு ஒத்துழைப்பு, அதே டெடிகேஷன் இருந்தால் சச்சின் ஆவது பெரிய விஷயம் இல்லை. மற்றவர்கள் சும்மா டைம் பாஸ்க்கு
எழுதி விட்டு காணாமல் போவார்கள், ஆனால் புதியவர்கள் தோன்றிக் கொண்டே இருப்ப்பார்கள்.

ஒரு நாளிதழ் அல்லது வாரந்தரியை வாங்குபவர்களில் வெகு சிலரே முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்க கீழ் பார்டரில் இருக்கும் ஆசிரியர், அச்சிட்டவர், முகவரியை கூட விடாமல் படிப்பார்கள். ஆவியில் சந்தா கட்டியுள்ளேன். சிறுகதைகள் ஆரம்பிப்பேன்,
நன்றாக இருந்தால் படிப்பேன். சினிமா பக்கத்தில் விமர்சனம் மட்டும். தற்பொழுது நாஞ்சில் நாடன் தொடர். எந்த காலத்தில் மதன் கேள்வி பதில்கள் படித்ததில்லை. அப்படியே ஆன்மீகமும். அதே போலதான் பிளாக்குகளும்! ஒருவரின் சில பதிவுகள் பார்த்தால் லட்சணம் தெரிந்துவிடும். ஹோட்டல் பலகாரம் போல,நன்றாக இருந்தால் தேடி வந்து சாப்பிட்டு விட்டு, பிறருக்கும் சொல்வார்கள். விளம்பரம் எல்லாம் தேவையேயில்லை. ஆனால் ஒன்று பத்திரிக்கையில் எழுதுவதை விட இணையம், பிளாக்குகளில் எழுதி பெயர் வாங்குவது கடினம் மிஸ்டர். சாருநிவேதிதா.

30 பின்னூட்டங்கள்:

At Sunday, 21 September, 2008, சொல்வது...

// இன்று ப்ளாக்கர்கள் அனைவரும் எழுத்தாளர்கள் ஆக போவதில்லை. தெருவில் கிரிகெட் விளையாடிய சிறுவர்களுக்கு சச்சினின் டெடிகேஷன் இல்லை. அவர்களுக்கு அது வெறும்
விளையாட்டு அல்லது பொழுது போக்கு மட்டுமே.//

உண்மை!

 
At Sunday, 21 September, 2008, சொல்வது...

/ ஒன்று பத்திரிக்கையில் எழுதுவதை விட இணையம், பிளாக்குகளில் எழுதி பெயர் வாங்குவது கடினம் மிஸ்டர். //

உண்மை!

உண்மை!

உண்மை!

 
At Sunday, 21 September, 2008, சொல்வது...

ஆயில், சாரு சொன்னது மனதை மிகவும் பாதித்துவிட்டது போல இருக்கு :-)

 
At Sunday, 21 September, 2008, சொல்வது...

அந்த இட்லி க்ரூப் எதுடான்னு யோசிச்சுக்கிட்டு இருந்தா அது இங்கதான் ஆரம்பிக்குதா!!

//இந்த நட்புகளும், இன்னும் சிலரும் சேர மெயில் இலக்கியமாய், சொந்த கதை, இலக்கியம், இட்லிக்கு அரைத்தால் அவல் எவ்வளவு போடுவது போன்ற அனைத்து விஷயங்களும் எங்களுக்குள் பரிமாறப்படுகிறது.//

 
At Sunday, 21 September, 2008, சொல்வது...

//சாரு மேட்டர் என்னடா யாரும் ஆரம்பிக்கவில்லையேன்னு இருந்தது :-) //

நான் இப்படி ஒரு பதிவு போட்ட பின்னாடி இப்படி எல்லாம் சொன்னா என் பதிவு பொறுப்பற்ற பதிவுதானோன்னு சந்தேகம் வருது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(


//இணையத்தில் "அ" போட ஆரம்பித்து அச்சு இதழ்களில் வெற்றிக் கொடி நாட்டிய நான் இதற்கு பதில் சொல்வது சால சிறந்தது என்பதால் ஆரம்பிக்கிறேன் :-)))//

அப்படிப் போடு அருவாள! நீங்க எல்லாம் மூத்தவங்க! நல்லவங்க! வல்லவங்க!! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

 
At Sunday, 21 September, 2008, சொல்வது...

//ஆனால் மகளிர் மட்டும் //

எங்களுக்கு 33% ஒதுக்கீடாவது தரணும்!

 
At Sunday, 21 September, 2008, சொல்வது...

//ஒருவரின் சில பதிவுகள் பார்த்தால் லட்சணம் தெரிந்துவிடும். ஹோட்டல் பலகாரம் போல,//

அப்படியெல்லாம் டேஞ்சரா முடிவு பண்ணி எட்டிப் பாக்காம இருந்திடாதீங்க.

ஊசிப் போன பலகாரமாயிருந்தாலும், அடிக்கடி வந்துட்டுப் போனாதான், ஹோட்டல் பொழைக்கும் ;)

 
At Sunday, 21 September, 2008, சொல்வது...

இன்னிக்கு சாரு வோட வீட்டுக்கு விஸிட்டர்ஸ் அதிகமா இருக்கணும்.

பத்தாயிரத்துக்குள்ளே வந்துட்டார்னு பதிவர் சொல்லி இருக்கார்( எல்லாம் 'அங்கே'தான்)

இன்றுமுதல் ஒம்போதாயிரத்துக்குள்ளேயா? :-)))))

போகட்டும். இப்ப ஒரு பேட்டி:-)

கேள்வி கேட்பவர்: நீங்க எழுதவரலைன்னா என்னவா ஆகி இருப்பீங்க?

பதிவர்: ஒரு டாக்ட்டராவோ இல்லை நர்ஸாகவோ ஆகி, மதர் தெரேசாவைப்போல சமூக சேவை செஞ்சுருப்பேன்.


ச்சும்மா சிரிச்சுவையுங்க.

எல்லாத்தைய்யும் டேக் இட் ஈஸி பாலிஸியா வச்சுக்கலாமேன்னுதான்:-)

:-))))))))))))))))))))))))))))

இந்த ஸ்மைலி போதுமா.... இன்னும் கொஞ்சம் வேணுமா?

 
At Sunday, 21 September, 2008, சொல்வது...

//நீங்க எல்லாம் மூத்தவங்க! நல்லவங்க! வல்லவங்க!! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!//


இதுக்கு ஒரு ரிப்பிட்டேய்ய்ய் போட்டுக்கிறேன்க்கா! :))

 
At Sunday, 21 September, 2008, சொல்வது...

துளசி தப்பு தப்பு தப்பு :-), இது எழுத்தாளரைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி. ஒரு எழுத்தாளர் (இனி படித்து) டாக்டரோ
இன்ஜினியரோ ஆக முடியாது. ஆனால் டாக்டர்களும் இன்ஜினியர்களும் பதிவு போடுகிறார்களே!

 
At Sunday, 21 September, 2008, சொல்வது...

//ramachandranusha(உஷா) said...
துளசி தப்பு தப்பு தப்பு :-), இது எழுத்தாளரைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி. ஒரு எழுத்தாளர் (இனி படித்து) டாக்டரோ
இன்ஜினியரோ ஆக முடியாது. ஆனால் டாக்டர்களும் இன்ஜினியர்களும் பதிவு போடுகிறார்களே!
//

ஹய்ய்ய்ய்!

இது மாதிரிதானே நம்ம அஜித் (தல)பேசியிருக்காரு:)

 
At Monday, 22 September, 2008, சொல்வது...

இலவசம்!

இணைய சூப்பர் ஸ்டார் நாங்களா? நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய :-)

//இணையத்தில் "அ" போட ஆரம்பித்து அச்சு இதழ்களில் வெற்றிக் கொடி நாட்டிய நான் இதற்கு பதில் சொல்வது சால சிறந்தது என்பதால் ஆரம்பிக்கிறேன் :-)))// அப்படிப் போடு அருவாள! நீங்க எல்லாம் மூத்தவங்க! நல்லவங்க! வல்லவங்க!! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!//

இல்லையா பின்ன? நம்ம பெருமையை நாமே பறைசாற்றிக் கொள்ளாட்டா எப்படி :-))))))))))))))))))

சர்வேசன், காப்பி பேஸ்ட், சினிமா மேட்டர், அதீத உணர்ச்சிவசப்படும் பதிவுகள், ஆன்மீகம் , அதை தவிர இன்னும் சில சொல்ல முடியாதவை :-) இவை எல்லாம் நான் படிக்கும் லிஸ்டில் இல்லை.

இன்ஜினியர் ஆயில்யனுக்கு இப்பதான் நிம்மதியான மாதிரி இருக்கு :-)

 
At Monday, 22 September, 2008, சொல்வது...

நான் போட்ட பதிவு அதீத உணர்ச்சிவசப்பட்ட கேட்டகரியில் வருதா? அது பத்தி ஒண்ணும் சொல்லலை?

இல்லை பெரிய அச்சு எழுத்தாளர் ஆனதுனால அதைப் படிக்கிறதுக்கு முன்னாடி உங்க கிட்ட நான் படித்த பதிவர்கள் / எழுத்தாளர்கள் லிஸ்ட் தரணுமா?

என்ன கொடுமைடா இது! :)

 
At Monday, 22 September, 2008, சொல்வது...

இலவசம் என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்கய்யா. ஆக்சுவலி, நான் உங்களுக்கு பின்னுட்டமா போடத்தான்

//சாரு மேட்டர் என்னடா யாரும் ஆரம்பிக்கவில்லையேன்னு இருந்தது :-) // இப்படி ஆரம்பித்து கொஞ்சம் பெரியதாய் போனதும், அட பதிவுக்கு மேட்டர் ஆச்சுன்னு நுனிப்புல் போட்டு விட்டேன் :-)

 
At Monday, 22 September, 2008, சொல்வது...

என்னது நீங்க தப்பு செஞ்சீங்களா? அதுக்கு சாரி வேற கேட்கறீங்களா? கிழிஞ்சது போ!! நீங்க எல்லாம் என்னிக்கு பெரிய எளுத்தாளியா வரது? நாங்க எல்லாம் நாங்க சண்டை போட்ட அக்கா இப்போ எப்படி பட்டையைக் கிளப்புது பாருன்னு பேசறது...

ம்ஹூம். இது தேறப் போற கேசா தெரியலை!

 
At Monday, 22 September, 2008, சொல்வது...

ஏம்பா, அந்த மட்டையும்,பந்தும்,ஸ்டம்பும் ஒட்டு மொத்தமா வாங்க என்னிடம் வசதியில்லாத காலத்தில் குழந்தைகளுக்கு விறகு மண்டியிலிருந்து கட்டைகள்வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
அப்பொ அதில விளையாடி அவர்கள் அனுபவித்த சந்தோஷத்துக்குக் கணக்கே இல்லை:)


நாம எழுதறதுல இவங்களுக்கு என்ன நஷ்டம்??
வாங்க நாமளும் இலக்கியம் படைக்கலாம்.

 
At Monday, 22 September, 2008, சொல்வது...

சர்வேசா,

//அப்படியெல்லாம் டேஞ்சரா முடிவு பண்ணி எட்டிப் பாக்காம இருந்திடாதீங்க//
எங்கியோ போயிட்டீங்க.
ஏ.பி.நாகராஜன் வசனம் தோத்தது.:)

 
At Monday, 22 September, 2008, சொல்வது...

கேள்வி கேட்பவர்: நீங்க எழுதவரலைன்னா என்னவா ஆகி இருப்பீங்க?

பதிவர்: ஒரு டாக்ட்டராவோ இல்லை நர்ஸாகவோ ஆகி, மதர் தெரேசாவைப்போல சமூக சேவை செஞ்சுருப்பேன்.


ச்சும்மா சிரிச்சுவையுங்க.

எல்லாத்தைய்யும் டேக் இட் ஈஸி பாலிஸியா வச்சுக்கலாமேன்னுதான்//:)))

துளசி,

வேற எப்படி இதையெல்லாம் எடுத்துக்கறது.சிரிச்சுதான் ஆகண்ணும்:))

 
At Monday, 22 September, 2008, சொல்வது...

உஷா, எனக்குக் காரசாரமா பதில் (அங்க)போடணும்னுதான் ஆசை.

யோசிக்கணுமே!! அதனால் விட்டுட்டேன்:)

 
At Monday, 22 September, 2008, சொல்வது...

//இணையத்தில் "அ" போட ஆரம்பித்து அச்சு இதழ்களில் வெற்றிக் கொடி நாட்டிய நான் //

நல்லாச் சொல்லுங்கக்கா. தட்டிக் கேக்க ஆளில்லைன்னு நினைச்சிட்டாங்கப் போல :-))

//ஒரு எழுத்தாளர் (இனி படித்து) டாக்டரோ
இன்ஜினியரோ ஆக முடியாது. ஆனால் டாக்டர்களும் இன்ஜினியர்களும் பதிவு போடுகிறார்களே!//

டாக்டர் படிப்போ இஞ்சினியர் படிப்போ படிக்குற பிள்ளைங்களோட ஊர்சுத்தினோம்னா 108 கதை ரெடி பண்ணிறலாமே. :-))

//காப்பி பேஸ்ட், சினிமா மேட்டர், அதீத உணர்ச்சிவசப்படும் பதிவுகள், ஆன்மீகம் , அதை தவிர இன்னும் சில சொல்ல முடியாதவை :-) //

'எளிமையா' இருக்கற பதிவுகள் எந்த வகையில வருதோ? :-)

 
At Monday, 22 September, 2008, சொல்வது...

"அவரவர் திறமை, இதற்கும் செலவழிக்க நேரம், பொறுமை, வீட்டு ஒத்துழைப்பு, அதே டெடிகேஷன் இருந்தால் சச்சின் ஆவது பெரிய விஷயம் இல்லை. மற்றவர்கள் சும்மா டைம் பாஸ்க்கு
எழுதி விட்டு காணாமல் போவார்கள், ஆனால் புதியவர்கள் தோன்றிக் கொண்டே இருப்ப்பார்கள்". 100 % உண்மை

 
At Tuesday, 23 September, 2008, சொல்வது...

///சர்வேசன், காப்பி பேஸ்ட், சினிமா மேட்டர், அதீத உணர்ச்சிவசப்படும் பதிவுகள், ஆன்மீகம் , அதை தவிர இன்னும் சில சொல்ல முடியாதவை :-) இவை எல்லாம் நான் படிக்கும் லிஸ்டில் இல்லை.////

பாவம் சர்வேசன். அவரை மட்டும் பேரைக் குறிப்பிட்டு படிக்கிறதில்லைனு போட்டுருக்குறதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :)))

சரியா பத்த வச்சுருக்கேனா??

 
At Tuesday, 23 September, 2008, சொல்வது...

///சர்வேசன், காப்பி பேஸ்ட், சினிமா மேட்டர், அதீத உணர்ச்சிவசப்படும் பதிவுகள், ஆன்மீகம் , அதை தவிர இன்னும் சில சொல்ல முடியாதவை :-) இவை எல்லாம் நான் படிக்கும் லிஸ்டில் இல்லை.////

தமிழ்ல எந்தப் பதிவையும் படிக்கிறதில்லைனு சுருக்கமா சொல்லுங்க

 
At Tuesday, 23 September, 2008, சொல்வது...

இலவசம், தேறாத கேசா :-))))))))

வல்லி, ஆயில்யனை சமாதானப்படுத்திட்டு வந்தா, உங்க நாலு கமெண்டு. என்ன ஆச்சு?
இப்படி உணர்ச்சிவசப்படுவது நமக்கு எல்லாம் பழக்கமில்லையே :-) என்ன சொன்னீங்க காராசாரமாய் பதிலு அங்க போடணுமா? எங்க? நம்ம மாதிரி ஜூஜூபி பிளாக்கர்ஸ்தான் பின்னுட்ட பெட்டிய திறந்து வெச்சிருப்பாங்க. அவுஹ எல்லாம் பெரீரீரீய எடமாக்கும்.

ஸ்ரீதர் நாராயணன்! போன வாரம் முதன் முதலில் ஒரு குட்டி கதையை ஓபன் செய்துவிட்டு பயந்துப் போனேன். தொடர் போல இருக்கு, ஒண்ணும் புரியவில்லை. என்றாலும் வ்சனங்கள்
உவ்வே! அம்மாவின் லவ்வர்- கிழட்டுடன் மகள் பேசும் வசனங்கள், இதுவா இலக்கியம்? கிழட்டு
பெருசுகளின் மன விகாரங்கள்.

சா.சங்கர்! நல்லா இருங்கையா :-) ஆனா நீர் ரொம்ப நல்லவரு. என்னா என்னை வம்புக்கு
இழுக்காமல், மத்தவங்களைதானே வம்புக்கு இழுக்குறீரு :-)))))))))

கிருஷ்ணன் அது என்னமோ தெரியலை, ஆரம்பம் முதல் அச்சு பத்திரிக்கை எழுத்தாளர்களுக்கு
இணையத்தில் எழுதுபவர்களைக் கண்டால் உறுத்துகிறது. முதலில் சுஜாதா, பிறகு ஞாநி, இப்ப சாரு.

 
At Tuesday, 23 September, 2008, சொல்வது...

//இட்லிக்கு அரைத்தால் அவல் எவ்வளவு போடுவது போன்ற அனைத்து விஷயங்களும் //

ஏனுங்க, இட்லிக்கு அரைத்தால் உப்பு தானே போடுவாங்க, அவல் கூடவா போடுவாங்க..? புதசெவி. :))

 
At Tuesday, 23 September, 2008, சொல்வது...

என்னமோ அம்பி, கல்யாணம் ஆயி குழந்தையும் பெத்துட்டு இப்படி கேட்டா எப்படி? அவல்
ஒரு கைப்பிடி எடுத்து, பத்து நிமிடம் ஊற வைத்து பிழிந்து கடைசி சுற்றில் சேர்த்து அரைத்தால் இட்லி
மென்மையாய் இருக்கும். தோசை வார்த்தால் நல்ல சிவந்த நிறம் வரும். ஐ மீன் தோசைக்கு :-)

 
At Tuesday, 23 September, 2008, சொல்வது...

மேடம்,

//ஒரு எழுத்தாளர் (இனி படித்து) டாக்டரோ
இன்ஜினியரோ ஆக முடியாது//

ஆனால் எழுத்தாளர் "அடித்து" (ஆளையோ துட்டையோ) அரசியல்வாதி ஆனால் "டாக்டர்" ஆகலாம். எதற்காகப் படிக்க வேண்டும்?நாட்டில் உதா'ரணங்கள்' இல்லையா என்ன?

 
At Tuesday, 23 September, 2008, சொல்வது...

ஆஹா, தீர்ந்தது சந்தேகம்.

தமிழ்மணம் கூட தீர்த்து வைக்காத சந்தேகத்தை தனியொரு ஆளாக இருந்து, உங்க வீட்டு ரங்குவுக்கு போன் பண்ணி விசாரிச்சு எனக்கு சொல்லிய உஷாஜி அவர்களே,

நீவிர் வாழ்க!
நின் சுற்றம் வாழ்க!

இன்னிக்கே அவலை புழிஞ்சு போட்டுடறேன். :)

 
At Tuesday, 23 September, 2008, சொல்வது...

என்னப்பா.,கமெண்டுதானே.அது கிடக்கு .நாலென்ன இதோஅஞ்சு.

ஏற்கனவே மட்டம் தட்ட ஆளிருக்கும்போது இன்னோருத்தருமா.அப்டீனு ஒரு ஆதங்கம்:)
அங்க போயிக் கமெண்ட முடியாதா.பின்ன எதுக்கு பதிவு?
ஓஹோ.சரி.சரி.

 
At Wednesday, 01 October, 2008, சொல்வது...

உஷா மேடம்,

சாருவின் பேச்சையும் ஒரு பொருட்டாய் மதித்து பதில் சொல்வது அவசியமா? அனைத்து பேச்சுகளிலும் சகிக்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட சுய தம்பட்டம். தாக்கி பேசுவதில் அநாகரிகம். (மம்மி ரிடர்ன்ஸ் , ஆர்னிகா நாசருடன் குங்குமத்தில் வந்த கேவலமான மோதல்). நீங்கள் சொன்ன அதீத உணர்சிவசபடுதல் இவரிடம் அதிகமாகவே உண்டு. இவையெல்லாம் எப்படி ஒரு எழுத்தாளனிடம் மதிப்பை ஏற்படுத்தும்? ஆனாலும் மதித்து நீங்கள் பதில் கூறி இருக்கிறீர்கள். நல்ல பொறுமை சாலி தான். உங்கள் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் பாராட்டுகிறேன்.

 

Post a Comment

<< இல்லம்