Thursday, September 25, 2008

இது குழந்தைங்க சமாசாரம் மட்டுமில்லே

போன வார குமுதம். நடிகை பூமிகா, அழகான கொழுக் மொழுக் என்றிருந்த ஒன்றரை வயதுக்குட்பட்ட குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஒரு விழாவில் அமர்ந்திருந்தார். அக்குழந்தைக்கும் அவருக்கும் உள்ள சம்மந்தம். அக்குழந்தையுடன் நடிக்கப் போகிறாராம். இது நல்ல உத்தி இல்லையா? புது முகம் என்று குழந்தை மிரளாது. காமிரா வட்டத்தைத்
தாண்டி நிற்கும் அம்மாவைப் பார்த்து கையை நீட்டி அழாது. அவ்வழுகையின் ஒலி பார்ப்பவர்கள் காதில் விழாவிட்டாலும், கண்ணில் நீர் தழும்ப மிரளும், கதறும்
குழந்தைகளை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறோம்! எம்.ஜி.ஆர் படங்களில், அவர் தன் நாயகியை கையாளுவதுப் போல குழந்தைகளுடன் நடிப்பார். பத்மினி நடித்த ஒரு படம், காலமிது காலமிது பாட்டு வருமே, அதில் பேபி ராணி தத்தக்கா பித்தக்கா என்று அழகாய் ஓடி பத்மினியைக் கட்டிக் கொள்ளும். ஆனால் பிறகு கேள்விபட்ட விஷயம், பார்க்க சிறுகுழந்தையாய் தெரிந்தாலும், பேபி ராணியின் உருவம் சிறியது. அதனால் அப்படத்தில் நடிக்கும்பொழுது மூன்று வயதுக்கு மேல் இருக்கும் என்றார்கள்.

கிருஷ்ண ஜெய்ந்தி சமயம், ரிமோட் உதவியால் சானல்களை தாண்டிக் கொண்டிருந்தப் பொழுது, ஜி குஜராத்தி சேனலில் கண்ணில் பட்டது. நல்லா யோசிக்கிறாங்கப்பா
என்று தலையில் அடித்துக் கொள்ளலாம் என்று இருந்தது. அழகான குழந்தை, தலையில் சிறு கிரீடம் அதில் மயிர் பீலி, பளபள உடை, கழுத்தில் முத்துமாலை என்று அலங்கரித்து, ஒரு கூடையில் இட்டு ஆயர்பாடி நந்தகோபனைப் போன்ற காஸ்ட்யூமில் ஒரு ஆள், குழந்தை இருந்த கூடையை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு வலம் வந்துக் கொண்டு இருந்தார். மேடையில் '' ஒரு ஆனந்தா"கையில் செல்போனுடன் கிருஷ்ணபஜனையில் கூட்டமே அவருடன் அலறிக் கொண்டு இருந்தது. எல்லாரும் நின்றுக்கொண்டு ஆனந்த கூத்தாடிக் கொண்டு இருக்க, குழந்தை கிருஷ்ணன் இருந்த கூடையுடன் அந்த ஆள் கூட்டத்தில் புகுந்து வர எல்லாரும் குழந்தையை தொட்டு கும்பிட்டுக் கொண்டு இருந்தனர். குழந்தையோ அலறிக் கொண்டு கூடையில் இருந்து குதிக்க முயற்சிக்க, நந்தகோபன், தலைக்கு மேல் இருந்த கூடையை ஒரு கையில் பிடித்து பேலன்ஸ் செய்துக் கொண்டும், இன்னொரு கையில் குழந்தையின் இரு கால்களை சேர்த்து கூடையின் இன்னொரு முனையில் கெட்டியாய் பிடித்துக் கொண்டு இருந்தார். குழந்தை சுற்றி முற்றிப் பார்த்து பெற்றவளை தேடுகிறது. கீழே குதிக்க குனிகிறது. அதற்கு மேல் என்னால் பார்க்க முடியாமல், சேனலை மாற்றிவிட்டேன்.

இதை தட்டும்பொழுது தோன்றிய விஷயம், முதுகுவலி நிவாரணி மூவ், விக்ஸ், பாங்க் ஆப் இந்தியா, சென்னை சில்க்ஸ், கோல்ட் வின்னர் எண்ணை, கோகுல் சந்தன பவுடர் என்று அனைத்து விளம்பரங்களிலும் சிறுபிள்ளைகளை பயன்படுத்துகிறார்களே இது சரியா?

17 பின்னூட்டங்கள்:

At Thursday, 25 September, 2008, சொல்வது...

இது சரியேயில்லைதாங்க. விளம்பரப் படங்களுக்கு எவ்வளவு நேரம் எடுப்பார்களோ தெரியாது. ஆனால் சினிமாவில்...குழந்தைகள் படுவது அவஸ்தைதான்.

 
At Thursday, 25 September, 2008, சொல்வது...

ராமல்ஷ்மி, நடிகை ரோகிணி, சினிமா குழந்தை நட்சத்திரங்களைப் பற்றி ஒரு படம், டாக்குமெண்ட்ரியாய்
இருக்க வேண்டும்- எடுப்பதாய் சொன்னார். அவரும் குழந்தை நட்சத்திரமாய் இருந்தவர்தான். அப்படம் வெளிவந்ததா என்று தெரியவில்லை.

 
At Thursday, 25 September, 2008, சொல்வது...

உஷா, சன்ஸ்கார் சானல் பார்த்து இருக்கிறீர்களா.
அதில் கிருஷ்ண வேஷம் போட்ட குழந்தைக்கு வெண்ணையோ தயிரொ தலையிலிருந்த கால் வரை அப்பை ஆடவிடுவார்கள். பார்க்கும் போதே என்னவோ செய்யும்.
உண்மைதான் எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட படத்தில் சிவாஜி தன் சினேகிதன் பையனைக் கையில் வைத்துக் கொண்டு பாடுவார். அந்தக் குழந்தைக்கு அன்று கண்டிப்பாகக் கழுத்து சுளுக்கி இருக்கும்.

பேரைச் சொல்ல பயமா இருக்குப்பா:)

 
At Thursday, 25 September, 2008, சொல்வது...

கரெக்ட்தான்!!
ஆனா, பெற்றோர் சம்மத்துடனேதானே நடக்கிறது!! அவர்களுக்கு தேவை வியாபாரம்..அவ்வளவுதான்!!

 
At Thursday, 25 September, 2008, சொல்வது...

எப்படி குழந்தைகளை நடிக்க வைக்கிறார்கள் என்பதே ஆச்சரியம்தான்!!

 
At Thursday, 25 September, 2008, சொல்வது...

இன்னமும் நாடகங்களில் குழந்தை காரே பூரேன்னு அழுதுட்டு இருக்க டப்பிங்க்ல் இவங்க நிறுத்தி நிதானமா பேசிட்டிருக்கமாதிரி செய்துடறாங்களே.. அட இந்த அபிக்கு ( அதான் தேவயானி) இரண்டு பிள்ளை இருக்கு அவ கூட அழுகையை கண்டுக்காம எப்படி பேசிட்டே நடிக்கறா. நமக்கு வயித்த பிசையும் அது பார்க்கறதுக்கே.. அவ அதே இடத்துல இருந்து கேட்கறா ஆனா முக பாவனையில் கூட வித்தியாசமில்லைங்க.. சே ..ராட்சசின்னு தோணிச்சு ..
டிஸ்கி: நான் தொடர்கள் பார்ப்பதில்லை அன்றைக்கு தெரியாத்தனமா அந்த பகுதி பார்க்க நேரிட்டது.

 
At Thursday, 25 September, 2008, சொல்வது...

வல்லி, நான் ஆன்மீக சானல் எல்லாம் பார்ப்பதில்லை :-) இது என்னமோ கண்ணில்பட்டது. சிவாஜி என்றில்லை, பல பிரபலங்கள் நடித்த படங்களில், பிறகு குழந்தையின் கதி என்னவாகும் என்று தோன்றும் அளவிற்கு கையாளுவார்கள். காசுக்காக என்றாலும் ஓரமாய் நின்றிருக்கும் தாயின் மனநிலை எப்படி இருக்கும் :-(


சந்தனமுல்லை, காசுக்காக என்ன என்னவோ செய்யும் பெத்தவங்க இல்லையா?

இலவசம், கேட்க கேட்க சாக்கலேட், ஜூஸ் , பொம்மை என்று குழந்தைகளை குஷிப்படுத்த செய்வார்கள். அந்த மிதப்பில்
அப்பிள்ளைகள் உருப்படாமல் போகும். இதைச் சொல்லும்பொழுது இ.ராமு, ஒரு பிரபல குழந்தை நட்சத்திரத்தைப் பார்த்த
நிகழ்ச்சியை எழுதியிருந்தார். கிடைக்குதான்னு பார்க்கிறேன்.

முத்துலஷ்மி, மெட்டி ஒலி ன்னு ஒரு சீரியல் வந்ததே, அதில் ஒரு முறை குடும்ப சண்டையில் இடுப்பில் குழந்தையுடன் ஒரு பெண் பாத்திரம் கத்தி சண்டை போட, கணவன் அடித்து, முடியைப் பிடித்து தெருவில் தள்ளி, இந்த பெண் மண்வாரி
தூற்றி, இடுப்பில் குழந்தையுடந்தான் இந்த குழாயடி சண்டை. அப்பொழுது
அந்த குழந்தை அழக்கூட இல்லை. பயம் பொங்கும் முகம். தேம்புகிறது. தலையை திருப்பி திருப்பி தாயை தேடியது போல. கண்ராவி. அதன்
மனம் எப்படி பாதித்து இருக்கும் ? கொடுமை.

 
At Thursday, 25 September, 2008, சொல்வது...

சின்ன குழந்தைகளை நடிக்க வைக்கிறது தப்பா ரைட்டான்னு சரியா சொல்ல தெரியல!

ஆனா நிறைய பிரம்மிப்புக்களை ஏற்படுத்திய படங்கள் விளம்பரங்களை பார்க்கும்போது குழ்ந்தைகள் இல்லைன்னா இந்த அளவுக்கு ஹிட்டாகியிருக்குமா சான்சே இல்லைன்னு நினைக்கவைக்கும்!

1. அஞ்சலி படம் - அதுவும் குட்டி ஷாம்லி ஒரு பாட்டுக்கு நிறைய போஸ்கள் மட்டுமே கொடுக்கற சீன்ஸ் இருக்கு பாருங்க அற்புதம்! (தத்தி தத்தி நடந்துவரும் ஸ்டைலும்!)

2.சுட்டி குழந்தைன்னு ஒரு டப்பிங்க் படம் அமலா - நாகர்ச்சுனன் பையன் நடிச்சது! அப்படியே ஆச்சர்யம் கொடுக்கும்!

3.அப்புறம் ஒரு டிவி விளம்பரம் சின்ன கைகுழந்தை பிங்கு அப்படின்னு சொல்றது ( பின்ணணி குரலாக இருந்தாலும் கூட் வாயசைவு நச்சுன்னு இருக்கும்!)

:))))))

 
At Thursday, 25 September, 2008, சொல்வது...

சினிமா நாடகம் விளம்பரம் இதையெல்லாம் விட்டுதள்ளுங்க!

ஸ்கூல் பங்க்‌ஷன்ல தம் குழந்தைகள் பர்ஸ்ட்டு வரணும்ங்கறதுக்காக பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி அப்படியே பாந்தமா பார்சல் பண்ணி எடுத்துட்டு போயிட்டு திரும்ப பத்திரமா கொண்டுவந்து வீட்ல வைச்சு நல்லா கும்மு கும்முன்னு கும்முற (சனி அப்படியே நிக்கிது மேடையிலபோய் நின்னுக்கிட்டு என் மானமே போச்சு!)பெற்றோர்கள் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?????

 
At Thursday, 25 September, 2008, சொல்வது...

கொத்ஸுக்கு இருக்கும் அதே சந்தேகம் தான் எனக்கும்.

என் பையனுக்கு நான் ஒரு டயப்பர் மாத்தறத்துக்குள்ள கத்தி ஊர கூட்டிடறான். :))

கொத்ஸ், உங்க பொண்ணும் அப்படி தானா? :p

 
At Friday, 26 September, 2008, சொல்வது...

ஆயில், கோல்கேட் சிரிப்பில் ஒரு பாப்பா அப்பாவின் முக்கிய பேப்பரை டர் என்று கிழித்துவிட்டு
சிரிக்குமே அது அழகு. முதல் அடி எடுத்து வைக்கும் ஜான்சன் பேபி ஆயில் அழகு, ராக்கெட்
விஞ்ஞானியாக பணம் நிறைய செலவாகுமே என்று கவலைப்படும் குட்டி பெண் அழகு. இவை
எல்லாம் கவிதை. ஆனால் படிக்கும் வயதில் எண்ணை, புடைவை, நகை வாங்க சொல்லும் விளம்பரத்தில் தேவையா?இதுல இன்னொரு அசிங்கம், ஒரு பாக்கு விளம்பரத்தில் தத்தக்கா பித்தக்கான்னு ஒரு குழந்தை நடந்து பாக்கை அள்ளும்.விளம்பரத்துக்கு சென்சார் வேண்டும்.

மற்றப்படி, அவர்களாக பள்ளி போட்டிகளில் கலந்துக் கொள்ளுவரை இந்த மாறுவேஷம், பாட்டு,
நடனம் என்று என் குழந்தைகளை படுத்தியதில்லை. அதன் காரணமாய் வளர்ந்த பிற்கு அதிகம்
எந்த போட்டியிலும் சேர மாட்டார்கள். ஒன்றிரண்டில் சேர்ந்து பரிசும் கிடைக்காததால், டீச்சர்கள்
பார்ஷியல் என்று விட்டு விட்டார்கள் :-)

அம்பி, ஆயிர கணக்கில் துட்டு வாங்கிக் கொண்டு ஐநூறுமுறை, குழந்தை சிரிக்கும்வரை
காத்திருந்து டயாப்பர் மாற்றுவது கஷ்டமா என்ன ;-)

 
At Friday, 26 September, 2008, சொல்வது...

இது குழந்தைங்க சமாச்சாரமே அல்ல; குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கிற பெரியவங்களை முட்டிக்கு முட்டி தட்ட வேண்டிய சமாச்சாரம்.

குழந்தை வளர்ந்து பெரியவள்/ன் ஆனபிறகு தன் சிறு வயதில் தான் மிஸ்யூஸ் செய்யப்பட்டதாக உணர்ந்தால் பெற்றோர் மீது வழக்குத் தொடுக்க ஒரு சட்ட அமைப்பு வேண்டும் என்கிற கருவில் ஒரு கதை எழுதுங்க மேடம்.

 
At Sunday, 28 September, 2008, சொல்வது...

//முதுகுவலி நிவாரணி மூவ், விக்ஸ், பாங்க் ஆப் இந்தியா, சென்னை சில்க்ஸ், கோல்ட் வின்னர் எண்ணை, கோகுல் சந்தன பவுடர் என்று அனைத்து விளம்பரங்களிலும் சிறுபிள்ளைகளை பயன்படுத்துகிறார்களே இது சரியா?
//
இதற்கு பெற்றோரே காரணம், தம் குழந்தைகள் டிவியில் வர வேண்டும் என்று ரியாலிட்டி ஷோக்களிலும், விளம்பரங்களிலும் நடிக்க வைக்க அலைகிறார்கள் :( பள்ளிக்கு லீவு சொல்லிவிட்டுக் கூட, இதைச் செய்வதை நான் அறிவேன். எல்லாம் peer pressure !!!

 
At Wednesday, 01 October, 2008, சொல்வது...

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவதே நல்லது..

 
At Thursday, 02 October, 2008, சொல்வது...

ம்ம்ம்ம்??/ இதை எதிர்த்து சினிமாவிலேயே இருக்கும் ரோகிணி குறும்படம் எடுத்துட்டு எல்லாரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டு படத்தை வெளியிட முடியாமல் தவிக்கிறாங்களே! :(((((( அம்மாக்கள் யோசிக்கலாமே, குழந்தைகளின் கஷ்டத்தை!

 
At Friday, 03 October, 2008, சொல்வது...

எக்கோவ் ....நல்ல கான்செப்ட் ...ஆனா படிச்சு முடிக்கையிலே தலைஇலே முடி தான் மிச்சம் இருக்குமா தெரியல்லே ....

நானும் ஒரு வலை பதிவு பண்ணிருக்கேன் பாருங்களேன்...
http://valaikkulmazhai.wordpress.com
கார்த்தி

 
At Thursday, 09 October, 2008, சொல்வது...

Mihavum kodumayaana vizhayam. Varai muRaye illamal ellaa viLambarangaLilum kuzhanthaigal. EnenRaal avargal thaane ippothellam TV viLambarangaLai athiga ALavil paarkiraargaL. Athai avargaL appadiye imitate seivathil periyavargaL poorithum pogiraargaLe. Enave kuzhanthaigaLaye payanpaduthuvathu chirandha vyabaara yukthi.

Sorry tamizh font payan padutha theriyavillai. Aathalal ungalai paduthugiren. mannikavum.

 

Post a Comment

<< இல்லம்