Thursday, November 06, 2008

எழுத்தாளினியின் கணவன்

கொஞ்சமும் எதிர்பார்க்காத தருணத்தில் என் முதல் கதை பிரசுரமான அன்று. நான் ஒரு முக்கிய முடிவு எடுத்தேன். இன்றைய தேதியில் பார் புகழும் தமிழ் பெண் எழுத்தாளர்களைப் போல் நானும் இலக்கிய உலகை கலக்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எழுதும் எதையும் என் ஆருயிர் கணவனிடம் டிஸ்கஸ் செய்யக் கூடாது என்பதுதான் நான் எடுத்த முடிவு.


இந்த முடிவுக்கு காரணம் என் தாய்தான். இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி என்று பெண் எழுத்தாளர்கள் பத்திரிக்கைகளில் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். அனுராதாரமணன் அப்பொழுதுதான் என்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தார் என்று நினைவு. என் அம்மாவுக்கு தானும் ஒரு எழுத்தாளினி ஆக வேண்டும் என ஆசை ஏற்பட்டதில் அதிசயமில்லை.பிள்ளைகளுக்கு முழு பரிட்சை முடிந்ததும், நோட்டு புத்தகங்களில் மீந்து இருந்த வெற்று தாள்களை கிழித்து, கோணி ஊசியால் தைத்து, நோட்டு புத்தகங்களை தயாரித்துக் கொண்டு, எழுத ஆரம்பித்தார்.


எட்டாவது மட்டும் படித்த அம்மாவுக்கு, தமிழ் மறந்தே போயிருந்தது. வல்லின,மெல்லின "ரா'' சந்தேகம். வார்த்தைகள், வாக்கியங்கள் அமைப்பதில் குழப்பங்கள். சொல்ல வந்த செய்திகளில் குழறுப்படி இருக்குமோ என்ற நடுக்கம். இவை எல்லாம் சேர்ந்து கதையை எழுதி முடித்ததும், ஈசி சேரில் சாய்ந்துக் கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவிடம், தன் நோட்டு புத்தகத்தை, இருந்தி முகந்திருந்தியிருந்த சந்தர்ப்பம் பார்த்து சமர்பிப்பார்.


அப்பா இதை இப்படியா எழுதுவது என்று ஆரம்பிப்பார். வாக்கிய பிழை, எழுத்து பிழை இவைகளைப் பார்த்து என்ன எழுதி இருக்கே என்று திட்டிக் கொண்டே, அவைகளை திருத்தி தருவார். அம்மா எந்த பதிலும் தராமல், கண்டிப்பான ஆசிரியை முன்னிலையில் கை கட்டி நிற்கும் பள்ளிக்கூட சிறுமியின் எக்ஸ்பிரஷனுடன் பவ்யமாய் நின்றுக் கொண்டு இருப்பார்.


மக்கு என்ற திட்டுக்கூட அம்மா வாங்கியதாய் நினைவு. இப்படி பிழை திருத்தம் செய்யப்பட்ட கதைகளை, அதே பள்ளிக்கூட நோட்டு புத்தக தாளில் கொட்டை கொட்டையாய், இங்க்கு பேனாவில் அழுத்தமாய் எழுதி, படி எடுப்பார். அடுத்த பிரச்சனை பிள்ளைகளான எங்களால் உருவாகும். அக்கதைகளை எடை பார்த்து ஸ்டாம்ப் ஓட்டி, தபாலில் அனுப்ப போவது யார் என்று?


ஒவ்வொருவரிடமாய் கேட்டும், பிறகு கெஞ்சவும் ஆரம்பிப்பார். பெரும்பாலும் என் அண்ணந்தான் இந்த வேலையை செய்வான். ஆனால் காசு தண்டம், உனக்கு வேறு வேலை இல்லையா என்ற முக எக்ஸ்பிரஷனோடு போஸ்ட் ஆபிசுக்கு, அதற்கான லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு செல்லுவான். கதை பிரச்சுரம் ஆகாவிட்டால், திரும்ப பெற ஸ்டாம்ப் இணைக்கும் வழக்கம் கிடையாது. அது வேறு எதுக்கு தண்டம் என்று யார் எடுத்த முடிவோ தெரியவில்லை.


ஒரு கட்டத்தில் அம்மாவின் மூன்று பக்க சிறுகதையும், ஒரு பக்க அளவில் சுருக்கப்பட்டு அன்றைய மங்கை என்ற மாதமொருமுறை பத்திரிக்கையில் வெளியே ஆகிவிட்டது. ஏழாம் வகுப்பில் இருந்த நான். அப்பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு வீடு வீடாய் சென்றுக் காட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. இருபத்தி ஐந்து ரூபாய் மணியார்டரும் வந்தது.

அம்மா, நட்பு உறவு வட்டத்தில் எழுத்தாளினி என்ற பெயரும் பெற்றுவிட்டாள். வீட்டுக்கு வரும் சொந்தங்கள் அம்மாவைப் பார்த்ததும், என்ன கதை வந்துள்ளது என்றும் விசாரிப்பார்கள். நோட்டு புத்தகங்களை வாங்கி படிக்கவும் செய்வார்கள். இதன் நடுவில் மூன்று பக்க சிறுவர் கதை ஒன்று மூக்கால் பக்கமாய் சுருக்கப்பட்டு அம்புலிமாமாவில் வெளியானது. பதினைந்து ரூபாய் பணமும் கிடைத்தது.


இந்த புகழினால் அம்மா, இலக்கிய உலகில் வெகு தீவிரமாய் இயங்க ஆரம்பித்தார். அதாவது கதைகள் மேன்மேலும்அனுப்பப்பட்டன. ஆனால் அவற்றின் கதி என்னவாயின என்று தெரியவேயில்லை. சில பத்திரிக்கைகளில் வெளியான கதை தன்னுடையது என்று அம்மா வருத்தத்துடன் சொல்லுவார். ஒரு கீழ் மத்திய குடும்பத்தில் மாதமானால், ஐந்து, பத்து ரூபாய்கள் ஸ்டாம்பு, கவர்களுக்கு செலவிடுவது சிறிது கஷ்டம்தான்.


ஒவ்வொருமுறையும் அப்பாவிடம் திருத்தங்கள் செய்ய வேண்டுவது, போஸ்ட் செய்ய பிள்ளைகளிடம் கெஞ்ச வேண்டிய எரிச்சல். மேற்கொண்டு எதுவும் பிரசுரம் ஆகாதது எல்லாம் சேர்ந்து ஒரு நாள், வீட்டு பின் பக்கம் வெந்நீர் காய்ச்ச, மட்டை, சுள்ளிகளுடன் தன் நோட்டு புத்தகங்களையும் போட்டு எரித்துவிட்டு, எழுத்தாளினி செத்துவிட்டாள் என்று அறிவித்துவிட்டார். அம்மா சிரித்துக் கொண்டே சொன்னதைக் கேட்டு, நாங்களும் சிரித்தோம்.


சில வருடங்களுக்கு முன்பு கணிணி அறிமுகமும், தமிழில் எழுதலாம், பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பதிவில் நம் இடம் என்று ஒன்று உருவாக்கிக் கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். படிக்க வாசகர்கள் உண்டு, படித்துவிட்டு விமர்சனமும் செய்வார்கள் இருக்கிறார் என்பதை எல்லாம் அம்மாவுக்கு எடுத்து சொன்னேன்.


"போன் வந்ததும், தபால் எழுதுவது கூட இல்லை. எழுத எல்லாம் விட்டு போச்சு"என்றார்.


இன்றும் படிக்கும் பழக்கம் உள்ளவரிடம், தமிழ்ல டைப் அடிக்க நான் கற்று தருகிறேன். எழுதியதை சரி பார்த்து, பிளாக்கில் போடுவது என் பொறுப்பு என்றதற்கு அம்மா என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே " ஆமா, ஆதிகாலத்துல இப்படிதான் உங்கப்பா சொன்னார். இப்ப நீயா? எழுத்தாளினி என்றைக்கோ செத்து போயாச்சு" என்றார் அம்மா.


நான் சொன்னதின் தவறும், அம்மாவின் முறைப்புக்கு காரணம் கொஞ்ச நேரம் கழித்து புரிந்தது.


இப்பொழுது சொல்லுங்கள், முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட என் தீர்மானம் சரிதானே?



*****************************
யுகமாயினி
நவம்பர், 2008

Labels:

34 பின்னூட்டங்கள்:

At Thursday, 06 November, 2008, சொல்வது...

mmmmmmmmmmmm

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

அப்பாவாவது படித்துத் திருத்திக் கொடுத்தாரே.
உஷா உங்க அம்மாவை நினைத்து ரொம்பப் பெருமையாக இருக்கு.

எங்க அம்மா எழுதின கதைகள் இன்னும் அவளுக்குச் சொந்தமான பொட்டியில் இருக்கும்.
அவள் எழுதின டயரிகளை மட்டும் எடுத்துவைத்துக் கொண்டிருக்கிறேன்.

அம்மாவின் கதை இன்னும் உங்ககிட்ட இருந்தா கட்டாயம் உங்க ப்ளாக் லயாவது போடுங்க.

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

மெல்லின’ர’ உண்டா என்ன?

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

///இன்றும் படிக்கும் பழக்கம் உள்ளவரிடம், தமிழ்ல டைப் அடிக்க நான் கற்று தருகிறேன். எழுதியதை சரி பார்த்து, பிளாக்கில் போடுவது என் பொறுப்பு என்றதற்கு அம்மா என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே " ஆமா, ஆதிகாலத்துல இப்படிதான் உங்கப்பா சொன்னார். இப்ப நீயா? எழுத்தாளினி என்றைக்கோ செத்து போயாச்சு" என்றார் அம்மா. //


:(( உணர்வுபூர்வமாய் உணர்கிறேன்! ஒவ்வொரு முறையும் அம்மாவின் ஆசையும் அது நிராகரிக்கப்பட்ட விதமும்!

எனக்கும் கூட இது போல சிலரிடம் நீங்கள் சொல்லுங்க நான் டைப் செய்து தருகிறேன் என்று கேட்டகேள்விக்கு இதே ரீதியில்தான் பதில் பெற்றிருக்கிறேன்!

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் நாம் இப்படியான சிறு உதவிகளை கூட செய்ய மறுத்து எப்படிப்பட்ட மனங்களை வருத்தியிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி வந்து செல்கிறது!

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

இளக்கியவாதி அண்ணி உஷா வாழ்க!!

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

உஷா
கர்னாடகால திருமலாம்பா என்கிறவங்க எழுதின கதைல்லாம் பரண்லபோட்டுவச்சிருந்தாங்களாம் அப்போல்லாம் வீடுகளில் பெண்கதைஎழுதறத அனுமதிக்கமாட்டாங்களாம் ஆனா இவங்களுக்கோ கற்பனை ஊறுமாம்.எழுதி பரண்ல வச்சிடுவாங்களாம் அவங்களோட 70வயசுக்குப்பிறகு கன்னட பெண் எழுத்தாளர் சங்கமிதனை எப்ப்டியோ அறிந்து கண்டுபிடிச்சி கன்னட உலகுக்கு தெரியப்படுத்தி அவங்க விருதெல்லாம் வாங்கினாங்க...என்னவோ போங்க உஷா கதை எழுதற எல்லார்ட்டயுமே ஒரு கதை இருக்கும் நிச்சயம்!(நானும் எழுதும் எதையும் பதிகிட்ட டிஸ்கஸ் பண்ணமாட்டேன்:))))

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

வல்லிசிம்ஹன் said...
//அம்மாவின் கதை இன்னும் உங்ககிட்ட இருந்தா கட்டாயம் உங்க ப்ளாக் லயாவது போடுங்க.//

செய்யலாமே உஷா?
___________________________________

சென்னை பித்தன் said...
//மெல்லின’ர’ உண்டா என்ன?//

இது வல்லின 'ற'! அப்போ இந்த 'ர'?

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

அடுத்து நான் 'எழுத்தாளனின் மனைவி'ங்கற தலைப்புல ஒரு இடுகை எழுதப்போறேன். எல்லாம் சொந்தக் கதை சோகக் கதை தான்.

'நீங்க எழுதுறதெல்லாம் மனுசன்/மனுசி படிப்பானா/படிப்பாளா' என்பதே என்னுடைய பாதியின் எண்ணம். நீங்க பதியைப் பத்தி சொன்னா நான் பாதியைப் பத்தி சொல்லணும்ல. :-)

சரியா பேரு வச்சாங்க சதிபதின்னு தம்பதிகளை. இவுங்க நான் பதிவு எழுதவே கூடாது செய்யற சதி எல்லாம் எடுத்து விட்டா ஒரு தொடர்கதை அளவுக்கு ஓடும். :-)

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

// ராமலக்ஷ்மி said...
வல்லிசிம்ஹன் said...
//அம்மாவின் கதை இன்னும் உங்ககிட்ட இருந்தா கட்டாயம் உங்க ப்ளாக் லயாவது போடுங்க.//

செய்யலாமே உஷா?
___________________________________

சென்னை பித்தன் said...
//மெல்லின’ர’ உண்டா என்ன?//

இது வல்லின 'ற'! அப்போ இந்த 'ர'?//

இது இடையின’ர’!!மெல்லின எழுத்துக்கள்”ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்”.!!

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

எனக்கு புரியவில்லை உஷா.. உங்கள் அம்மாவின் எழுத்துத் திறமை தடை பட்டதற்கு உங்கள் அப்பா மட்டுமே காரணம் என்பதுபோல் குற்றம் சாட்டுவது போல் உள்ளது நீங்கள் எடுத்துள்ளதாகச் சொல்லும் முடிவு.. அந்த கால ஆணாதிக்க குடும்ப நிலைகளில் அது சரி.. இன்று உங்கள் கணவரிடம் நீங்கள் உங்கள் கதைகளை விவாதிப்பதால் உங்கள் அம்மா போலவே நீங்களும் எழுதுவது ஒரு கட்டத்தில் நிற்கும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

அல்லது என் புரிதலில் ஏதாவது தவறா?

***

என்னைப் பொறுத்தவரை நாம் எழுதும் கதையோ பதிவோ, யாரிடமுமே காட்டக்கூடாது. எழுதுவது நம் எண்ணங்களைத்தான், அடுத்தவருடையது அல்ல. அந்த வரையில் உங்களுடன் உடன்படுகிறேன்..

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

ஆமாம்.....பதிகிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டாலும்.......

பின்னூட்டத்தைப் படிச்சுட்டு 'இதுக்கு இப்படிச் சொல்லேன்'னுகூட வரும்.

ஒரே ஒரு பார்வை ( பொருள் நிறைஞ்சது) அனுப்புவேன். அம்புட்டுத்தான்:-)

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

எனது அம்மா ஐம்பதுகளில் "விஜயஸ்ரீ" என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தார். அவரது படைப்புகளை இந்த வலைப்பதிவில் பதிவு செய்துள்ளேன். முடிந்தபோது பாருங்கள்.

http://en-ezhuthu.blogspot.com/

- சிமுலேஷன்

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

வெண்பூ,
இது அனுபவத்தின் அடிப்படையில், கொஞ்சம் கற்பனை சேர்த்து எழுதப்பட்ட சிறுகதை. கிட்டதட்ட
முப்பத்திஐந்து வருடங்களுக்கு முந்திய மனைவிகளின் வாழ்க்கை இது. எங்காவது
செல்வது என்றால், கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லிவிட்டு போவது
நம் பழக்கங்கள். ஆனால் அன்று அம்மா, அனுமதி பெற்றுத்தான் அழைத்த வீட்டுக்கு, வெற்றிலை
பாக்கு வாங்கிக் கொள்ள செல்வார். இரண்டிற்கு உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்கும்.
எழுதுவதை கணவன்/ மனைவியிடம் டிஸ்கஸ் செய்வது தப்பில்லை. ஆனால் ஒவ்வொரு வரிக்கும் அனுமதி வாங்க வேண்டியது தடைதானே ? வீட்டுல அம்மா கிட்ட கேட்டு பாருங்க. அந்தக்கால கதைகள் வரும். இதை ஆணாதிக்கம் என்றெல்லாம் சொல்லவில்லை. நடை முறை பழக்கம் :-)

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

கீதா, ரொம்ப யோசனையில் ஆழ்ந்துவிட்டா மாதிரி இருக்கு :-)

வல்லி, திருத்தியதுதானே பிரச்சனையா போயிட்டுச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் :-) அடுத்த பிராஜக்ட், அம்மாவை பிளாக் எழுத வைக்கணும். பழசு எல்லாம் எதுவுமே இல்லை.

சென்னை பித்தன்! ஒழுங்க சின்ன ர, பெரிய ற ன்னு சொல்லிட்டு போயிருக்கலாம் :-)))))))))))

ஆயில்யன், அப்பொழுது நான் மிக சிறியவள். ஆனால் நான் எழுத ஆரம்பித்தப்பிறகு பல முறை
சொல்லியாகிவிட்டது, மீண்டும் எழுதுங்க என்று! கதை என்று இல்லாமல், அனுபவ பகிர்வுகளை
எழுதினால், அந்த கால மேட்டர் வெளிவரும் இல்லையா? அம்மாவுக்கு வயசு எழுபது. வல்லிக்கு
சொன்னதைப் படிச்சிடுங்க :-)

இலவசம், பட்டத்துக்கு நன்னி :-)

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

ராமல்ஷ்மி, எதுவும் இல்லை :-(

செ.பி!
வல்லின ற, மெல்லின ர இல்லையா? குழப்புகிறீரே? தமிழ் வாத்தியாருங்க
இருந்தா வந்து குழப்பத்தை தீருங்கப்பா.

குமரன், விரைவில் "எழுத்தாளனின் மனைவி" எதிர்ப்பார்க்கலாம் என்றாலும், ஆண்டு ஆண்டு
காலமாய், "நான் எழுத ஆரம்பித்தால் என் மனைவி உடனே தேநீர் தயாரித்து தருவார். என்னுடைய ஒவ்வொரு எழுத்துக்கும் முதல் வாசகி அவள்தான்" என்ற புல்லரிப்புகளைக் கேட்டு கேட்டு
அலுத்துப் போச்சு :-)

துள்சி அது :-)))

ஷை, சுருக்கமா சொன்னதை இன்னும் கொஞ்சம் விவரமாய் சொன்னால், ஆவணமாகும் இல்லையா?
இப்படி எத்தனை விஷயங்கள் தெரியாமலேயே இருக்கின்றன?

சிமுலேஷன், எட்டிப் பார்த்தேன். ஸ்கேன் செஞ்சிப் போட்டிருக்கீங்க இன்னும் படிக்கவில்லை, படித்து விட்டு சொல்கிறேன்.

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

எங்க வீட்டு கதையும் இதே தான்,. அம்மாக்கள் பாவம்.

வல்லின ற, இடையின ர. சொன்னா நம்புங்க. இதுக்காக தமிழறிஞர்களைக் கூப்பிட்டுகிட்டு! சங்கப்பலகை அமர்ந்த கெக்கெபிக்குணியார் சொல்லியாச்சு.

அய்யோ, அடுத்து நான் போடப்போற கதைப் பதிவுக்கு தலைவர்கிட்ட ஒரு முறை படிச்சு காட்டலாம்னு நினைச்சேன்... இப்ப என்ன செய்யறது?

 
At Thursday, 06 November, 2008, சொல்வது...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க உஷா.. எங்கம்மாவை நான் எழுத சொல்லிட்டே இருக்கேன்..தில்லி வந்தப்போ ஒரு காலைப்பொழுது தில்லியில் அவங்களுக்கு எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்ன பேப்பரில் எழுதி வச்சிருந்தாங்க.. அதை என் பதிவில் போட சொன்னாங்க.. நான் மறுத்துட்டேன்.. ஆமா நான் எழுதின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க..
ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிட்டு பாஸ்வேர்டை அனுப்பறேனு சொன்னேன் இன்னும் அனுப்பலை..
இதைப்படிச்சதும் செய்யனும்ன்னு தோணுது.

 
At Friday, 07 November, 2008, சொல்வது...

//கீதா, ரொம்ப யோசனையில் ஆழ்ந்துவிட்டா மாதிரி இருக்கு :-)//

மலரும் நினைவுகள். ஆனால் எங்க அம்மா எழுதினது இல்லை.

 
At Friday, 07 November, 2008, சொல்வது...

Maybe you are right..

 
At Friday, 07 November, 2008, சொல்வது...

>>சென்னை பித்தன்! ஒழுங்க சின்ன ர, பெரிய ற ன்னு சொல்லிட்டு போயிருக்கலாம் :-)))))))))))

- - - - - - - - - - - - - - - -
இந்த குழப்பமெல்லாம் வேண்டாங்கிறதுக்காக ஒரு அருமையான யோசனை சொன்னேன். யாருமே சரியா கண்டுக்கலை :-)

http://puthupunal.blogspot.com/2007/04/blog-post.html

சுபமூகா

 
At Friday, 07 November, 2008, சொல்வது...

உஷா, நான் சொன்னது திருத்தி,
திருப்பிக் கொடுத்தாரே'ன்னு தான்.

'எதுக்கு குப்பை' என்று சொல்லாமல்:)
இப்பவும் இங்க நடகிறது என்னன்னு, மனுஷனுக்குத் தமிழ் படிக்க வராது. அதிலயும் ரொம்ப நேரம் நானும் கணினியும் ஒன்றிப் போயிட்டா(அப்படி இல்லை)

உங்க அம்மாக்கு உடம்பு சரியில்லாத்தற்குக் காரணமே எழுதறதுதான்னு சொல்லிவிடுவார்:)
அவருடைய சுறு சுறுப்புக்கும்,

என்னுடைய+ நாற்காலி
தத்துவத்திற்கும் எப்பவுமே போட்டிதான்:)

 
At Friday, 07 November, 2008, சொல்வது...

வல்லிம்மா,
//மனுஷனுக்குத் தமிழ் படிக்க வராது. அதிலயும் ரொம்ப நேரம் நானும் கணினியும் ஒன்றிப் போயிட்டா...//
//உங்க அம்மாக்கு உடம்பு சரியில்லாத்தற்குக் காரணமே எழுதறதுதான்னு சொல்லிவிடுவார்:)//
ஹைய்யோ, ஸேம் ப்ளட். இங்கியும்.

 
At Saturday, 08 November, 2008, சொல்வது...

கதையில் / சம்பவத்தில் உள்ள மெசேஜ் சூப்பர். கதையை கதாசிரியர் மட்டும் தான் சொல்லணும் :) இல்லைனா குடும்பம் ஒரு கதம்பத்துல ஒருத்தர் மனைவிக்கு லெட்டர் எழுதுவாரே"விசு பக்கத்துல இருந்து திருத்துவார் " அது மாதிரி ஆயிடும் கதை :)

 
At Saturday, 08 November, 2008, சொல்வது...

எழுத்தாளினியின் கணவன் படிக்க நன்றாகத்தான் உள்ளது. ஆயினும் கீழுள்ள தமிழாங்கில பெயர் மற்றும் வினைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் பல காலமாக இருந்து வந்தாலும், அவற்றை பயன்படுத்தாதது வியப்பைத் தருகிறது.

தமிழை முடிந்த வரையிலாவது பிறமொழி கலப்புகள் இல்லாமல் எழுத வேண்டும் எனும் எண்ணம் உங்களுக்குத் தோன்றாதா..?

பண்ணித்தமிழ் நற்றமிழை வலுவிழக்கச் செய்கிறது :(



ஸ்டாம்ப் = அஞ்சல்தலை

டைப் = தட்டச்சு

போன் = தொலைப்பேசி

டிஸ்கஸ் = கூடிப் பேசி

என்ட்ரி கொடுத்துக் = நுழைந்துக் கொண்டிருந்தார்

பரிட்சை = தேர்வு

ஈசி சேரில் = சாய்வு நாற்காலி

சிறுமியின் எக்ஸ்பிரஷனுடன் = சிறுமியின் முகப்பாவனையுடன்

 
At Saturday, 08 November, 2008, சொல்வது...

உங்கள் கதை - அட்மிஷன் - நன்றாக இருக்கிறது. பரிசு பற்றி வாழ்த்துகள்!

 
At Saturday, 08 November, 2008, சொல்வது...

கெ.கெ.பி! தெளிவு படுத்தியதற்கு நன்றி

கீதா, புரியுது :-)

கிருஷ்ணன் நன்றி

முத்துலட்சுமி! அம்மாங்களுக்கு பக்கத்துல இருந்து சொல்லிக் கொடுக்கணும். பிறகு பிடிச்சிப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

சுபமூகா! யார் அது பெயர் புதுசா இருக்கு? இல்லே இல்லே? எங்கேயோ கேட்ட பெயர் நினைவுக்கு
வர மறுக்குது :-))))))))))

 
At Saturday, 08 November, 2008, சொல்வது...

:வல்லி, இது அறிவுரை அல்ல , அனுபவம்- இணையம் என்றாலும், அது நம்மை ஆளத் தொடங்கினால்,
வியாதிதான். ஒரு காலத்தில் அப்படி இருந்தேன். கழுத்துவலிக்கு அதுதான் காரணம் என்று
சொன்னதும், குறிப்பிட்ட நேரத்துக்கு மேல், கணிணி முன் அமருவதில்லை என்று விரதம்
மேற் கொண்டேன்.

கெ.கே.பி! தமிழ் படிக்க தெரிந்த அனைவரும் பிளாக் படிக்கிறாங்களா என்ன :-)))




ச.சங்கர், அந்த "கால்" ஜோக் தானே ? மறக்க முடியுமா :-)

வாசன்,
கதையின் நடுவில் வரும் உரையாடல்களை சாதாரண பேச்சு தமிழில் அமைப்பேன். சைக்கிள் எங்கே
என்று இருக்குமே தவிர மிதிவண்டி எங்கே என்று எழுத எனக்கு சரிப்பட்டு வருவதில்லை. ஆனால் இது கதை சொல்லி பாணியில் வந்ததால், சில வார்த்தைகள் அதீதமாய் வந்துவிட்டது என்பது தெரிகிறது.


ஆர்.வி! நன்றி

 
At Saturday, 08 November, 2008, சொல்வது...

ம், கெ.பி.ன்னு சொன்னீங்கன்னா, என் பெயரோட சுருக்கம்னு நினைத்துக் கொள்வேன், கெ கெ பி (கெட்ட கெ.பி.?) அப்படி இப்படின்னு மாத்தி மாத்தி சொன்னா, பயமா இருக்கு.
:-)

 
At Saturday, 08 November, 2008, சொல்வது...

நுட்பமான உணர்வுகளோடு கூடிய பதிவாயிருந்தது.
உங்கள் அம்மா ரொம்ப நேரம் என் நினைவில் இருந்தார்கள்.
இனம் புரியாத ஒரு வலி உள்ளுக்குள் ஒடிக்கொண்டிருக்கிறது

 
At Sunday, 09 November, 2008, சொல்வது...

உங்க‌ள் அம்மாவின் அனுப‌வ‌ம் நெஞ்சை உருக்குவதாக‌ இருந்த‌து.
பலரும் சொல்லி இருப்பது போல் உங்கள் அம்மாவின் கதை‌களை Bloக் ல் வெளியிடுங்களேன்!

 
At Sunday, 09 November, 2008, சொல்வது...

கெக்கேபிக்குணி, ஒவ்வொரு முறையும் உங்க பெயரை எழுதிட்டு, ஸ்பெல்லிங் சரியாய்ன்னு
பார்க்கணும். அதனால, பி.கே.பி மாதிரி ஏன் கெ. கே.பி இருக்கக்கூடாதுன்னு பெயர் சூட்டிட்டேன்.
என்னை பலரும் வாழ்த்துவதாய் தோணுகிறது கெ.கே.பி :-)

மாதவராஜ், தீபா நன்றி. இதை அன்றைய அம்மாக்களுக்கு . தங்களுக்கு என்று
தனிப்பட்ட கருத்து விருப்பு வெறுப்புகள் கிடையாது. உறவுகள், அக்க்ம் பக்கத்தில் பெரும்பான்மையான பெண்கள் அப்படியே இருந்துவிட்டதால், இதை ஒரு தவறாய் யாரருமே நினைக்கவில்லை. பழையது
எல்லாம் தீக்கிரையாகிவிட்டது. இனி புதியதாய் எழுத வேண்டும். ஆனால் அம்மாவுக்கு கற்றலில் ஆர்வம் உண்டு. எழுபது வயதில் மவுஸ் பிடிக்க சொல்லிதர வேண்டும் :-)

 
At Sunday, 09 November, 2008, சொல்வது...

//எழுதும் எதையும் என் ஆருயிர் கணவனிடம் டிஸ்கஸ் செய்யக் கூடாது என்பதுதான் நான் எடுத்த முடிவு.
//

நானும் பதிவு போடும் பொழுது என் தன்க்ஸ்கிட்ட சொல்ல கூடாது!ன்னு தான் நினைக்கிறேன்.

ஆனா, என்ன செய்ய, என் வங்கி பாஸ்வேர்டு உட்பட எல்லாம் அம்மணி வசம்.

அதனால ரிஸ்க் எடுக்கறதில்லைனு முடிவு பண்ணிட்டேன். :))

 
At Wednesday, 12 November, 2008, சொல்வது...

உங்கள் அப்பாவைப் போலவே உங்கள் கணவரும் இருப்பார் என்று எப்படிச் சொல்ல முடியும். மாறாக உங்கள்கணவர் உங்களை ஊக்குவிக்கும் ரகமாக இருக்கலாமே?
அன்புடன்,
விஜய்

 
At Wednesday, 12 November, 2008, சொல்வது...

அன்புள்ள விஜய்,
இது ஒரு அனுபவத்தை, கொஞ்சம் மசாலா சேர்த்து கதையாக்கியது.
என் கணவரருக்கு புனைவுகளில் அவருக்கு விருப்பமில்லை. தமிழில் அவர் படிப்பது அரசியல் மட்டுமே!

அம்பி,
இது பெண்ணீய கட்டுரை. இதில் உன் சொந்த புலம்பல்கள் வேண்டாம் :-))))

 

Post a Comment

<< இல்லம்