Sunday, November 23, 2008

தோஸ்தானா, யூமா வாசுகி & சட்ட கல்லூரிகள்

சென்ற ஞாயிறு தோஸ்தானா பார்த்தேன். ஒரு வரி கதையின் அம்சம் கொஞ்சம் ஆர்வத்தை தூண்டியது. ஆரம்பக்காட்சிகளில் ஏறக்குறைய நிர்வாண ஜான் ஆப்ரகாமை பார்த்து, என்னடா படம் முழுக்க இந்த கண்ராவிதானா என்று பயந்துப் போயிருந்தப்பொழுது அபிஷேக் பச்சன் நுழைந்தார். அம்மாஞ்சி தோற்றம், முதல் முறையில் திரையில் பார்க்கிறேன், அப்பாவின் பிரபலம் மகனுக்கு குலத் தொழில் ஆகிவிட்டது என்ற கடுப்பு, சில நிமிடங்களில் மாறிப் போனது. நடிப்பில் தூள் கிளப்புகிறார். ஜான் ஆப்ரகாமும், ப்ரியங்கா சோப்ரா, கிரண்கேர், பாபி டியோல் என்று எல்லாரும் அவரவர் பாத்திரத்தில் மிளிர்கிறார்கள். கதையும் நடிப்பும், இயக்கமும் அற்புதம். சில இடங்களில் வசனங்களால் திரையரங்கில் வெடி சிரிப்பு. படம் முழுக்க ஹிந்தீலீஷ் என்பதால் கதையும் வசனமும் நன்கு புரிகிறது. நகைச்சுவை என்றாலும் ''கே'' உறவு சாதாரண விஷயம்தான் என்ற போக்கில் படமாக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமான மாற்றம். ஹிந்தி திரைப்படவுலகின் புதிய பரிமாணம் வியப்பளிக்கிறது. லிப் டு லிப் கிஸ், ஜானும், அபிஷேகும் :-)

ரத்த உறவு மீண்டும் எடுத்துப் படித்தேன். தம்பி (சிறுவன்) யின் பார்வையில் கதைச் சொல்லப்படுகிறது. ஒரு இடத்தில் அக்கா பேரு சொல்லு என்றதும், ஏழு வயதான
பயல், வாஸ¥கி என்று ஓட்டை பல் வழியாய் காற்று வெளிப்பட சொல்கிறான். பதினொன்று/ பன்னிரெண்டு வயது சிறுமி. கழுகுகளின் கையில் தன் குஞ்சுகள் சிக்காமல் போரிடும் கோழிப் போல, தன் சகோதரர்களைக் காக்கிறாள். என்ன பெண் இவள். மனம் முழுக்க நிறைந்துப் போகிறாள். படிக்கும்பொழுது சட்டென்று நினைவுக்கு வருகிறது, எழுதியவரின் பெயர் யூமா வாசுகி. ஆக, உயிரும் சதையுமான பெண் அவள். என்றாவது ஒரு நாள், அவளைப் பார்க்க வேண்டும், இரு கைக்களையும் பிடித்துக் கொண்டு அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் தோன்றுகிறது.

சட்ட கல்லூரி சம்பவ வீடியோ காட்சிகளைப் பார்த்து மனம் தாங்கவில்லை. அப்படி அடிக்க என்ன காரணம்? ஏன் இந்த வன்மம்? நாம் எல்லாருமே என்று சமூகத்தை குற்றம் சாட்டினாலும், வெறும் மெளனசாட்சியாய் உச்சுக் கொட்டிவிட்டு அடுத்த வேலையில் மறந்துப் போகிறோம். இங்கு ஊர் முழுக்க, ஒரு விசேஷ உடை அணிந்த பெண்கள். பெண்கள் உடுத்தும் உள் பாவாடை அதன் மீது, தாவணி போல, தலையை முக்காடு போட்டு ஒரு இரண்டு மீட்டர் துணி.
பெரும்பாலும் கூலி தொழிலாளிகள், கட்டட தொழிலாளிகள். கூடவே அழுக்காய் மண்ணில் விளையாடிக் கொண்டு குழந்தைகள். கேட்டதற்கு ஆதிவாசிகள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆதிவாசிகள் என்றால் பழங்குடிகள். எங்கிருந்து விரட்டப்பட்டார்கள்? எந்த சுபிட்சத்தை தேடி நகர்களுக்கு வருகிறார்கள்? இந்த குழந்தைகளின் எதிர்காலம் என்ன? இந்த கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கப் போவதில்லை. தெரிந்தவர் வீட்டு பையன், பத்தாவதில் 96%சதவீதம். ஐ ஐ டி மட்டும், முயற்சிக்கப் போகிறேன் என்றதும் நான் சும்மா இல்லாமல், அப்படி நம்ப முடியாது என்று அறிவுரை கூற ஆரம்பித்ததும், நாங்க எஸ்.டி பிரிவில் வருகிறோம் என்று ஓரே வார்த்தையில் முற்று புள்ளி வைத்தான். சுஜாதா சொன்னதுப் போல, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.
கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். ஏழை பிள்ளைகளுக்கு தரமான கல்வியும், விடுதி வசதியும் தர வேண்டும். சாதியால் மாணவர்களை பிரிக்காமல், பொருளாதார அடிப்படையில், கிராமத்தில் பயில்பவர்கள், உடல் ஊன முற்றோர்கள், மாணவிகள் என்று இடஒதுக்கீடு செய்யத் தொடங்கினால், எல்லா பிரிவினைகளுக்கும் முடிவு வரும். அரசு மனம் வைத்தால் எதையும் செய்யலாம், ஆனால் செய்ய மாட்டார்கள் என்பது நிச்சயம்.

என் மகள் ஒன்பதாவது படிக்கும்பொழுதே, சட்டம் படிக்கப் போகிறேன் என்று முடிவெடுத்துவிட்டாள். எங்கள் குடும்பத்தில் வக்கீல் யாரும் இல்லை. லா காலேஜா, அதுவும் பொம்பள பிள்ளைக்கு வேண்டவே வேண்டும் என்று கேட்டவர்கள் எல்லாம் சொன்னார்கள். திங்கட்கிழமை வரும் ஹிந்து பேப்பரில், எஜிகேஷன் ப்ளஸ் என்ற இணைப்பு வரும். அதில்தான் முதன் முதலில் நேஷனல் லா ஸ்கூல்கள் பற்றி தெரிந்துக் கொண்டேன். பிறகு அவளே கல்லூரிகளுக்கு எழுதிப் போட்டு, விவரங்கள் சேகரித்தாள். அக்கல்லூரிகளில் சேர, நுழைவு தேர்வு எழுத வேண்டும் போன்ற விவரங்கள் www.lawentrance.com கிடைத்தன. அப்பொழுது நாங்கள் துபாயில் இருந்ததால், பன்னிரெண்டாவது வகுப்பு தேர்வு முடிந்ததும், மறுநாள் கிளம்பி சென்னை வந்துவிட்டோம். ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு, லீகல் ரீசனிங் லாஜிகல் ஆப்டிடீயூட். இதற்கு கோச்சிங் கிளாஸ் அவசியம். நாற்பது நாள் வகுப்பில் சேர்ந்து தேர்வெழுதி , வெற்றி பெற்றாள். மேலும் விவரங்களுக்கு www.clat.ac.in/index.aspx


L.L.B , ஐந்து வருட படிப்பு. கல்லூரியில் எழுபத்தி ஐந்து சதவீத அட்டனட்ஸ் கட்டாயம், அனைத்துமே ரெசிடெண்ஷியல் கல்லூரிகள், ஓவ்வொரு செமஸ்டர் முடிந்ததும், ஏதாவது லா ·பார்மில் சேர்ந்து இண்டன்ஷிப் செய்ய வேண்டும். சில இடங்களில் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரை ஸ்டைபண்டும் தருகிறார்கள். ஒரு இடத்தில் சட்ட புத்தகம் தந்தார்கள். தீபாவளி
முதற்கொண்டு எந்த பண்டிக்கைக்கு விடுமுறை இல்லை. இதே முறைகளை ஏன் அனைத்து சட்ட கல்லூரிகளிலும் கொண்டு வரக்கூடாது? அரசியல், சாதி சார்ந்த பேரவை லொட்டு லொசுக்குகளை தடை செய்து, எந்த எக்ஸ்றா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்களுக்கு நேரமில்லாமல் செய்துவிட்டால், பிரச்சனைகள் குறைய தொடங்கலாம் இல்லையா?

22 பின்னூட்டங்கள்:

At Sunday, 23 November, 2008, சொல்வது...

//
அரசியல், சாதி சார்ந்த பேரவை லொட்டு லொசுக்குகளை தடை செய்து, எந்த எக்ஸ்றா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்களுக்கு நேரமில்லாமல் செய்துவிட்டால், பிரச்சனைகள் குறைய தொடங்கலாம்
//

என்னங்க உஷா.. ஸ்கூல்ல இருந்து இதத்தானு பண்ணிகிட்டு இருக்கோம். காலேஜ்லயும் இத பண்ணிட்டா நிஜமாவே படிக்கிற பசங்க பாதிக்கப் படுவாங்களே!! அது மட்டும் இல்லை, இத்தனை செஞ்சாலும், பிரச்சினை பண்ணனும்னு நெனக்கிறவங்க கண்டிப்பா செஞ்சிட்டுதான் இருப்பாங்க, சட்டத்தை பாதுகாக்கிறவர்களை விட சட்டத்தை மீறுபவர்களுக்கு சட்டத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கும். சரியா?

ஆனால் ஒரு விசயம்.. உங்கள் மகளைப்போல சட்டம் படிக்க ஆசைப்படுபவர்களை இந்த நிகழ்ச்சி தலையில் தட்டி வேறு படிப்பிற்கு அனுப்பப் போவது நிச்சயம், அது எதிர்கால நீதித்துறைக்கு கொஞ்சமும் நல்லதல்ல :(

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

நல்ல கதம்பம்! :)

நீங்களும் பஞ்ச அண்ணா மாதிரி ஒருத்தர் கிட்ட கொஞ்சம் சூட கமெண்ட் வாங்கிப் போட்டா குளிர்காலத்தில் இதமாக இருக்கும்.

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

இல்லை வெண்பூ, இது வேறு உலகம். என் மகளுக்கும் சென்னையில் இடம் கிடைத்து,கல்லூரியின் பிரபலம் தெரிந்ததால் வேண்டாம் என்று முடிவெடுத்தோம். படித்து முடித்ததும் காம்பஸ் இண்டர்வீயூவில்
வேலை, ஐடியைவிட அதிக சம்பளம். அல்லது மேல் படிப்புக்கு அமெரிக்காவோ, இங்கிலாந்தோ சென்றால் வேலை இன்னும் நன்றாக கிடைக்கும். இப்படிப்பு ஐஐடிக்கு இணையானது என்றால் மிகையில்லை :-)

இலவசம், நாங்க யாருடம் எதையும் கேட்டு வாங்குவதில்லை :-)

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

என்ன உஷா மேடம்
நிறைய உணர்ச்சிகளின் கலவையை ஒண்ணா கொட்டிட்டீங்க போல :)
//குலத் தொழில் ஆகிவிட்டது/// இந்த மாதிரி சொல்றதுக்கு சிலருக்கு காப்பி ரைட் உள்ளது.சிலருக்கு இந்த வார்த்தை பயன் படுத்துவது மறுக்கப்பட்டுள்ளது :) All the Best.

யூமா வாசுகியின் புத்தகத்தை வாசிக்க ஆவலைத் தூண்டி விட்டீர்கள் , நன்றி.


Reservasion policy -யை தொட்டுச் சொன்ன கருத்துக்கு All the Best :)

கல்வி முறையில் தகுந்த மாற்றம் இல்லாமல் ,Economical consideration -ஐ சீரியசாக எடுத்துக் கொண்டு ஒதுக்கீட்டை அமல்படுத்தாத வரை உண்மையான பலன் தேவைப் படுபவருக்கு கிடைப்பதென்பது கொம்புத்தேன்தான் :(

அதென்னங்க "கே" உறவு? K டிவி மாதிரி? அடம் பிடிக்காம , ஆங்கிலத்திலேயே எழுதிருங்க

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

//நீங்களும் பஞ்ச அண்ணா மாதிரி ஒருத்தர் கிட்ட கொஞ்சம் சூட கமெண்ட் வாங்கிப் போட்டா குளிர்காலத்தில் இதமாக இருக்கும்.///

பதிவே கிட்டத்தட்ட சொசெசூ மாதிரி இருக்கேன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன். இதுல பன்ச் வேறையா ? அது சரி, பன்ச் அண்ணா ஏன் பஞ்ச அண்ணனாயிட்டாரு ?

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

//எழுதியவரின் பெயர் யூமா வாசுகி. ஆக, உயிரும் சதையுமான பெண் அவள். என்றாவது ஒரு நாள், அவளைப் பார்க்க வேண்டும், இரு கைக்களையும் பிடித்துக் கொண்டு அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் தோன்றுகிறது. //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

யூமா.வாசுகின்னு பொண்ணு பேர்ல எழுதுனா உடனே அவங்க பொண்ணாத்தான் இருக்கணுமா. என்ன பெண்ணிய சிந்தனைங்க இது.. :(

அவரு ஆம்பளைங்கோ :)))

அவரோட உயிர்த்திருத்தல் சிறுகதை தொகுப்பு படிச்சதுண்டா. செம்ம கலக்கலா எழுதியிருப்பாரு..

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

Usha
I saw the promo for dostana. It was the same title of one of amitab's movie, Karan Johar dad produced. Now son produced a movie with the actor's son and they were talking about it. Initially I did not like abhishek either, but his acting is getting better and better.

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

///அரசியல், சாதி சார்ந்த பேரவை லொட்டு லொசுக்குகளை தடை செய்து, எந்த எக்ஸ்றா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்களுக்கு நேரமில்லாமல் செய்துவிட்டால், பிரச்சனைகள் குறைய தொடங்கலாம் இல்லையா?///

அரசியல் கட்சி பேக்ரவுண்ட் இருந்தாத்தான் சட்டக்கல்லூரியில இடமே கிடைக்குமாமே ??? இதுல என்னத்தை தடை செய்யறது ?

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

//எழுதியவரின் பெயர் யூமா வாசுகி. ஆக, உயிரும் சதையுமான பெண் அவள். என்றாவது ஒரு நாள், அவளைப் பார்க்க வேண்டும், இரு கைக்களையும் பிடித்துக் கொண்டு அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் தோன்றுகிறது. //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

யூமா.வாசுகின்னு பொண்ணு பேர்ல எழுதுனா உடனே அவங்க பொண்ணாத்தான் இருக்கணுமா. என்ன பெண்ணிய சிந்தனைங்க இது.. :(

அவரு ஆம்பளைங்கோ :)))

அவரோட உயிர்த்திருத்தல் சிறுகதை தொகுப்பு படிச்சதுண்டா. செம்ம கலக்கலா எழுதியிருப்பாரு..

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

//சட்ட கல்லூரி சம்பவ வீடியோ காட்சிகளைப் பார்த்து மனம் தாங்கவில்லை. அப்படி அடிக்க என்ன காரணம்? ஏன் இந்த வன்மம்?//

என்ன கொடுமைங்க இது உஷா, இந்த விஷயம் பத்தி இன்னும் நீங்க படிக்கவேயில்லை, வெறும் டீவி பார்த்ததோட முடிஞ்சிடுச்சா?

//தெரிந்தவர் வீட்டு பையன், பத்தாவதில் 96%சதவீதம். ஐ ஐ டி மட்டும், முயற்சிக்கப் போகிறேன் என்றதும் நான் சும்மா இல்லாமல், அப்படி நம்ப முடியாது என்று அறிவுரை கூற ஆரம்பித்ததும், நாங்க எஸ்.டி பிரிவில் வருகிறோம் என்று ஓரே வார்த்தையில் முற்று புள்ளி வைத்தான்.//

ஒரு பழைய லஷ்மி நடித்த படம் நினைவிற்கு வருது. தேவையில்லாமல் சைக்கிள் கேப்பில் அடித்த மாதிரி இருக்கு இந்த வரி. உங்களுக்கு எப்படி வைக்கணும் என்று பார்த்து வைத்த முற்றுப் புள்ளி மாதிரி இருக்கே, நீங்களும் அங்கையே வைச்சிட்டீங்க முற்றுப் புள்ளி, அவ்வளவு தானா மேட்டர். அவ்வளவே தானா?

//சாதியால் மாணவர்களை பிரிக்காமல், பொருளாதார அடிப்படையில், கிராமத்தில் பயில்பவர்கள், உடல் ஊன முற்றோர்கள், மாணவிகள் என்று இடஒதுக்கீடு செய்யத் தொடங்கினால், எல்லா பிரிவினைகளுக்கும் முடிவு வரும்.//

இதுக்கு இவ்வளவு பெரிய பதிவா?

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

//எந்த எக்ஸ்றா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்களுக்கு நேரமில்லாமல் செய்துவிட்டால், பிரச்சனைகள் குறைய தொடங்கலாம் இல்லையா?//

அத விட அவங்க எனர்ஜியை சரியான வழியில் செலுத்த உதவலாம். ஒரு பொறியியல் கல்லுரியில் படிக்கும் (கவனிக்கவும் - படிக்கும்) மாணவனுக்குத் தன் துறை சார்ந்த விஷயங்களில் ஈடுபாட்டைத் தானாக வரவைக்கும் விதமாகப் பாடத்திட்டங்கள் உள்ளன. மற்ற விஷயங்களில் ஈடுபட நேரம் குறைவு. ஆனால் சட்டக் கல்லூரியில் இருப்பது வேறு விதம்.

அவர்களுக்கு முன் உதாரனமாக இருப்பது அரசியல்வாதிகள்தான். பெரும்பாலான அரசியல்வாதிகள் BL படித்தவராக இருப்பதைப் பார்க்கலாம். +2 அளவிலேயே எதிர்காலம் குறித்த திட்டமிடல் இல்லாத மாணவர்கள்தான் பெரும்பாலும் சட்டம் பயிலுகிறார்கள். சட்டத்தைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது குறைவான சதவீதமே. அவ்வாறு தேர்ந்தெடுப்பவர்கள் வீட்டில் அல்லது உறவினர்கள் வகையில் யாராவ்து ஒருவர் சட்டம் பயின்றவராக இருப்பர்.அவரது வழிகாட்டல் இருக்கும். மற்றவர்களுக்கு அரசியல்வாதிகள் போன்றோர்தான் ஊக்குவிக்கும் நிலை.

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

1. தோஸ்தானா - நல்லா இருக்குன்றீங்களா? நம்பி பாக்கலாமா - இல்லை உலக சினிமாவா?

2. யூமா - படிச்சதில்லை.. எஸ்கேப்.

3. சட்டக்கல்லூரி - நல்லா சொல்றாங்கய்யா ரெடிமேட் தீர்வு! அரசியல் ஹாஸ்டலில் ஆரம்பித்து போஸ்டர் வரை வியாபித்திருப்பதை நாலு அசைன்மெண்ட் கொடுத்து தீர்த்துவிடலாமாம்! ஹய்யோ ஹய்யோ!

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

//சட்டக்கல்லூரி - நல்லா சொல்றாங்கய்யா ரெடிமேட் தீர்வு! அரசியல் ஹாஸ்டலில் ஆரம்பித்து போஸ்டர் வரை வியாபித்திருப்பதை நாலு அசைன்மெண்ட் கொடுத்து தீர்த்துவிடலாமாம்! ஹய்யோ ஹய்யோ///


இன் ஜினியிரிங்க் காலேஜ்ல அதானே பாஸ் நடக்குது! வாய்ப்புக்கள் இருக்கு! :)

லேட்டா வந்தா
அட்டென்டன்ஸ் கொறைஞ்சா
வாத்தியார எதிர்த்து பேசுனா

இப்படி நிறைய ரெஸ்டிரீக்ஸன்ஸ் எல்லாம் பார்த்தா பசங்க ஆடிப்போய்ட மாட்டாங்களா? அப்புறம் எங்கிருந்து வரும் இந்த ஆட்டமெல்லாம்??

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

பினாத்தலஸ்,
//ஹய்யோ ஹய்யோ!//
கடைசில உஷாஜி பதிவை வடிவேலு காமெடி ஆக்கிட்டீங்க ;-)

உஷா,
தோஸ்த்தானா (ஹிந்தி!), இடஒதுக்கீடு (க்ரீமி லேயர்!) -- ரெண்டு பத்தியும் ஒண்ணும் சொல்றதுக்கில்ல :)

நேஷனல் லா ஸ்கூல் பற்றி அறியத் தந்தமைக்கு ஒரு நன்றி.

சட்டக்கல்லூரி பிரச்சினை குறித்து ஒரு பதிவு போட்டிருக்கிறேன். வாசிக்கவும்.
ஜாதீயத்தில்/அரசியலில் ஊறிய சட்டக்கல்லூரி

எ.அ.பாலா

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

//லா காலேஜா, அதுவும் பொம்பள பிள்ளைக்கு வேண்டவே வேண்டும்//

'வேண்டவே வேண்டாம்'

யூமா..... படிக்க நோ ச்சான்ஸ்.

தோஸ்தானா வை போனவாரம் டில்லியில் ஒரு தியேட்டரில் பார்த்துட்டு வந்துருக்கார் கோபால்.

ஒரே சிரிப்புன்னு சொல்லி என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டார்.

 
At Sunday, 23 November, 2008, சொல்வது...

தோஸ்தானா பார்க்க முடிந்தால் பார்க்கிறேன்.

அந்த வீடியோ வெறும் சட்டக்கல்லூரி நிகழ்வாக இல்லை. அபிமன்யு கதை மாதிரி இருந்தது. கெட்ட சக்திகளோட எழுச்சிதான் இது போல பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

 
At Monday, 24 November, 2008, சொல்வது...

//அம்மாஞ்சி தோற்றம், முதல் முறையில் திரையில் பார்க்கிறேன்,//

என்ன ஏங்க வம்புக்கு இழுக்கறீங்க? :))

நேஷனல் லா ஸ்கூல் பற்றி அறியத் தந்தமைக்கு ஒரு நன்றி.

என் பிள்ளையை சட்டம் தான் படிக்க வைக்கனும்னு நினைச்சு இருக்கேன். அவன் இன்ட்ரஸ்ட் எதுல?ன்னு தெரியல.

என்னது வயசா? இப்ப தான் ஐந்து மாசம் முடிஞ்சு இருக்கு. செர்லாக் சாப்டறான். :))

 
At Monday, 24 November, 2008, சொல்வது...

தோஸ்தானா பாத்தாச்சு. இங்க ஆம்ஸ்டர்டாம்லயும் ஓடுது. அல்லது ஓடுச்சு. இங்கல்லாம் இந்தியப் படங்கள் நாலஞ்சு நாள் ஓடுனாலே பெருசு. படம் முழுக்க சிரிப்பு. ஒவ்வொரு சமயம் கடி மாதிரி இருந்தாலும்... படக்குன்னு சுதாரிச்சிக்கிட்டு திரும்பவும் சிரிக்க வைச்சிருது. எனக்கும் படத்தைக் கொண்டு போன விதம் பிடித்திருந்தது.

யூமா வாசுகியைப் படிக்கனுமே. அதுலயும் வாஸுகின்னு உச்சரித்த விதத்தச் சொல்லியிருந்த விதமே பிடிச்சிருந்தது.

முழுக்க முழுக்கவே பொருளாதார இடவொதுக்கீடு செய்யனும்னு தேவையில்லை. சாதீய இடவொதுக்கீடு இன்னமும் தவிர்க்க முடியாத நிலையிலேயே இருக்கிறது என்பது என் கருத்து. அதுக்குத்தான் கிரீமி லேயர்னு இருக்கே. என்ன... மாசச் சம்பளம் வாங்குறவங்கள விட தொழில் பண்றவங்களுக்கு இந்தக் கிரீமி லேயர்ல ஏமாத்துறது எளிது. முழுக்க முழுக்கவே பொருளாதார அடிப்படைல குடுக்கனும்னு சொல்றதை ஏத்துக்க முடியாது.

 
At Monday, 24 November, 2008, சொல்வது...

நல்ல வாசனைக் கதம்பம், கெட்டியாவும் இருக்கு! :))))))

 
At Thursday, 04 December, 2008, சொல்வது...

தோஸ்தானா பாடல்களை அடிக்கடி B4U ல் போடுகிறார்கள்.பிரியங்கா இன்னும் அழகாகிக்கொண்டே போகிறார். ஐஸ்வர்யாயா பிரியங்காவா அழகென்ற விவாதம் பண்ணுகிறார்கள் என் தங்கைகள். ஆனால் இந்த ஜோன் அபிஷேக் கிஸ் விசயம் புதுசா இருக்கே.

யூமா வாசுகி பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறேன். வாசிக்கவேண்டும்.

\\\\எந்த எக்ஸ்றா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்களுக்கு நேரமில்லாமல் செய்துவிட்டால், பிரச்சனைகள் குறைய தொடங்கலாம் இல்லையா?\\

சாதிப்பிரச்சனை ஒழியணும்தான் அதுக்காக எக்ஸ்றா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்களுக்கு நேரமில்லாமல் செய்துவிட்டால் அப்புறம் வக்கீல்களுக்குப் பதிலாக மனநோயாளிகள்தான் கிடைப்பார்கள் பறவாயில்லையா?

 
At Friday, 05 December, 2008, சொல்வது...

மிக மிக தாமதமான பதில்களுக்கு மன்னிக்கவும்.

சென்ஷி, கதாபாத்திரம் உண்மையில் இருக்க வேண்டும் என்ற கருத்தில் எழுதினேன். யூமா வாசுகி ஆண் என்பது எங்கோ படித்திருக்கிறேன்.

ஜி.ரா இட ஒதுக்கீடு சம்மந்தமாய் சில குழப்பங்கள் எனக்கும் உண்டு. ஆனால் பொருளாதார அடிப்படையில் ரிசர்வேஷன் வைக்கும்பொழுது, பயனடைய போகிறவர்கள் யார்? முற்பட்ட/ பிராமண வகுப்பில் ஏழைகள் இருப்பார்கள் ஆனால் பஞ்ச
பரதேசிகள் உண்டா? நிறைய பேசலாம், ஆனால் விருப்பம் வர மறுக்கிறது :-)

சிநேகிதி, எக்ஸ்ட் ரா கரிகுலர் ஆக்ட்டிவிடீஸ் என்பதன் பொருளாய் சாதி சங்கம், பேரவை, நோட்டீஸ் கொடுப்பது, பேனர்,போஸ்டர் ஓட்டுவது போன்றவைகளை சொன்னேன். படிக்கும்பொழுது மாறி பொருள் தருகிறது இல்லையா?

 
At Friday, 05 December, 2008, சொல்வது...

தோஸ்தானா படம் வாங்கிவச்சுருக்கேன். நாளைக்குப் பார்த்துட்டுச் சொல்றேன்:-)

 

Post a Comment

<< இல்லம்