Wednesday, November 12, 2008

இன்றைய இலக்கியம்- தநி தொலைக்காட்சியில் அலசுகிறாள் ஏகாம்பரி

ஏதோ ஒரு வில்லங்கமான நேரத்தில் தநி (தமிழ் நிலா) தொலைக்காட்சி அதிபர் ரவீந்தர நாயருக்கு தமிழ் பணி ஆற்ற வேண்டும் என்று தோன்றிவிட்டது. முதல் வேலையாய் இலக்கியவாதிகளை தன் தொலைக்காட்சியில் பிடித்துப் போட உத்தரவு வழங்கினார்.
பாவம்! இலக்கியம், தமிழ், எழுத்து இவைகளைப் பற்றி அரிச்சுவடி கூட அறியாதவர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். சில புத்திசாலிகள் கணிணி இருக்க கவலை ஏன் என்று தேடு பொறியில் தேடினால் ஐயகோ நம் ஏகாம்பரியின் பெயர் முதலில் தென்பட, ( ஏகாம்பரியைப் பற்றி அறிய இங்கே கிளிக்கவும்) பெண்ணுக்கு முதல் மரியாதை தரும் பண்பாடுடன், அவருக்கு அழைப்பு போனது.

தமிழிலும் ஏதோ சிறிது வீட்டுபாடம் செய்த தொகுப்பாளியின் இஷா மற்றும் தொகுப்பாளன் விஜய் ராஜ்யுடன், பாங்குடன் உடுத்திய புடைவையுடன், அழகுக்கு அணி சேர்க்கும் பொருத்தமான அணிகலன்கள் மின்ன, இரண்டு முழம் மல்லிகை பூவுமாய் கலாசாரத்தின் மொத்த உருவமாய் வீற்றிருந்தாள் ஏகாம்பரி. தன் உடையையும், நகையையும் சரி செய்துக் கொள்ளும்பொழுது, பேட்டி தொடங்கியது.

இஷா- ''வெல்கம் டூ அவர் தமிழ் இன்பம் ஷோ மேடம். நீங்கல் தான் இந்த நிகள்ச்சியின் முதல் கெஸ்ட்'' ஏகா கையைக் கூப்பி வணங்குகிறாள்

விஜய்- ஆமாம் மேடம்... இன்றைய தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி சொல்லுங்கள். முதலில் உங்களைப் பற்றி சில..

ஏகா- நான் இதுவரை பத்துகவிதை கவிதை தொகுப்புகளும், பன்னிரெண்டு ஆய்வு கட்டுரைகளும், நான்கு சிறுகதை தொகுப்புகள், இரண்டு நாவல்கள், சனாதானத்தை கட்டுடைக்கும் பாணியில் எழுதி வெளியிட்டு உள்ளேன். பல பரிசில்களும், விருதுகளும் பெற்றுள்ளேன்.

விஜய்- மேடம்! சரியாய் விஷயத்துக்கு வந்துவிட்டோம். உங்கள் புது நாவலைக் குறித்து சொல்லுங்கள். அது என்ன கட்டுடைத்தல்?

ஏகா- திரும்ப திரும்ப மத்திய வர்க்கத்தின் சிந்தனைகளில் வெளியாகும் அக்ரஹார எழுத்தை உடைக்கும் நவீனம், இருத்தலியலில் ஒரு பாணி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியாவில் ஆரம்பித்தது... "ஏகா சொல்ல சொல்ல இருவரும் ஒரு மாதிரி முழித்துவிட்டு.. "இன்றைய தமிழ் இலக்கியத்தைப் பற்றி சொல்லுங்கள்" விஜய் சொன்னதும்,

ஏகா- ஓரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் சென்சார் செய்யப்பட்ட எழுத்துக்கள் லைட் ரீடிங். ஆபாச வார்த்தை பிரயோகங்களும், பெண்ணின் தாபங்களையோ அல்லது பேராண்மையை விளக்கும் எழுத்துக்களே ஹை லெவல் இலக்கியம்.

ஏகா மேலும் சொல்ல சொல்ல, பயந்துப் போன இருவரும் சைகை செய்ய, கொய் என்று பேச்சு புரியாமல் செய்யப்படுகிறது.

விஜய்- மேடம், என்ன இது? இலக்கியம் பற்றி கேட்டால், போர்னோ மாதிரி இருக்கிறது நீங்கள் சொல்வது.

ஏகா ஒரு நொடி பேசாமல் இருக்கிறாள்.

ஏகா- நீங்கள், உங்கள் வயது காலத்தில் சரோஜா தேவி என்று சொல்லப்படும் புத்தகங்களைப் படித்துள்ளீர்களா?

இஷா முழிக்கிறாள். ''எனக்கு சென்னைய் தமிள் பேச மட்டும் தெரியும். எளுத படிக்க தெரியாது.

விஜய்- அது வந்து சின்ன வயசுல, கூட படிக்கிற பசங்க.. அப்புறம் இங்கீலீஷில படிச்சிருக்கேன்.

ஏகா- அதில் என்ன வரும்?

விஜய் ஒருமாதிரி முழித்துக் கொண்டு, அது வந்து திரும்ப திரும்ப வந்து... (தொண்டையை கனைத்துவிட்டு) ஓரே மேட்டர்தான் மேடம்.

ஏகா- அதாவது, பொருந்தா, கூடா, முறை தவறிய காமம் தானே?

விஜய் தலை அசைக்கிறான்.

ஏகா- அதுவே தான் இன்றைய தமிழ் இலக்கியம் ஆகிவிட்டது. முதலில் நீங்கள் தேர்ந்த இலக்கிய வாதி என்ற பட்டமும், இலக்கிய பத்திரிக்கைகளில் பரவலாய் உங்கள் பெயர் தென்படவும் ஆரம்பித்து, உங்களுக்கு என்று ஒரு சிஷ்ய வட்டம் கிடைத்துவிட்டால், உங்களின் ஏக்கங்கள், தாபங்கள், அரிப்புகளை கற்பனையில் தீர்த்துக் கொள்வதை கதையாக்கி, இலக்கியமாக்கிவிடலாம்.

இஷா- ''ஏன் மேடம், லேடீஸ் இந்த மேட்டர் எல்லாம் எழுதுவதில்லையா?

ஏகா- ஓரளவு எழுதினாலும் ஆனால் அவை எல்லாம் அவர்களின் சோக புலம்பாய் வெளிப்படுகிறதாம். ஆனால் அதுவே ஆண் எழுதும்பொழுது, இன்னும் பரவலாய் பேசப்படுகிறது. காரணம் எழுதியதை படிப்பவர்கள், அச்சிடுபவர்கள், விற்பவர்கள் எல்லாம் ஆண்கள் இல்லையா?

இஷா கொஞ்சம் கோபமாய், " ஐ காட் கெட் யூ மேடம். அப்ப அந்த மாதிரி புக்ஸ்சுக்கும், இலக்கியத்துக்கும் வித்தியாசமே இல்லையா?

ஏகா- ஏன் இல்லை? நிறைய இருக்கு. தமிழ் இலக்கியங்கள் இப்பொழுது எல்லாம் நல்ல குவாலிட்டி பேப்பர்ல, நல்ல தரமாய் அச்சில் வருது. விலையும் இருநூறு ரூபாய்க்கு மேலே. அசட்டு கலரில் சீப் டிராயிங்காய் இல்லாமல், நாவலுக்கு அட்டைபடம் மார்டன் ஆர்ட்டாக பெண்ணின் விசேஷ உறுப்புகளை பிச்சி பிச்சி போட்டிருக்கும் அல்லது கோட்டு ஓவியமாய் அதீத கற்பனையில் விசித்திரமாய் வரையப்பட்டிருக்கும். போட்டோஸ் என்றால் பிளாக் அண்ட் ஓயிட்டில் காட்டலாம். எதுவென்றாலும் பெண்ணின் நிர்வாணம் முக்கியம். அதுவே இலக்கிய புத்தகத்தின் அட்டை பட நியதி.

மேற்கொண்டு என்ன கேட்பது என்று அறியாமல், பொதுவாய் கேட்டு விட்டு வணக்கம் போடுகின்றனர். ஏகாம்பரி வெளியேறியதும்,

இஷா, "டிஸ்கஸ்ட்டிங். இத டெல்காஸ்ட் பண்ணினா பிராப்ளம் வரும்"

விஜய் லேசாய் சிரித்துக் கொண்டு, "இஷா, இது சூப்பரா பத்திக்கும். எல்லா மீடியாவிலும் இந்த இண்டர்வீயூ பத்தி பேசுவாங்க. அவங்கக்கிட்ட பேசினதுல தெரிஞ்சது, தமிழ் இலக்கியம் செம்ம ஹாட் போல, புக் ரீடிங், இவங்க சொன்ன ரைட்டர்ஸ்ன்னு தினமும் ப்ரைம்டைம்ல ஒரு மணி நேரம் கேட்டுப் பார்க்க போறேன். தமிளை வளர்த்தா மாதிரி ஆச்சு. என்ன சொல்ற?"

இஷா என்னமோ செய் என்று ஸ்டைலாய் தோளை குலுக்கிக் கொண்டு வெளியேறுகிறாள்.

******************

பி.கு இது கற்பனை மட்டுமே! இதில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் இறந்தவர்களையோ, உயிருடன் இருப்பவர்களையோ குறிப்பிடுவதில்லை. அப்படி ஏதாவது சம்மந்தம் இருப்பதாய் வாசிப்பர்கள் எண்ணினால்,அது அவர்களின் கற்பனை மட்டுமே!

14 பின்னூட்டங்கள்:

At Thursday, 13 November, 2008, சொல்வது...

பி.கு. லே கலக்கிட்டீங்க:-)))))

 
At Thursday, 13 November, 2008, சொல்வது...

ஏகாம்பரிய இன்னும் கொஞ்சம் பேச விட்ருக்கலாம். :))

ஒரு சின்ன திருத்தம்:

பி.கு இல்ல அது டிஸ்கினு இருந்து இருக்கனும். :)

ஆமா, இன்னிக்கு உங்க வீட்ல ரசம் சாதமும், வழ வழ வெண்டைக்காயும் தான் சமையலா? :p

 
At Thursday, 13 November, 2008, சொல்வது...

நம்புகிறோம்.:)
இந்த மாதிரி எழுத்து தலை(விரித்து)யாக இருப்பதை யாமும் உணர்ந்தோம் ஏகாம்பரி அவர்களே.
தநி மாதிரி தொலைநோக்கு உள்ளவர்கள் ஆதரிக்க இருக்கும்போது நமக்கெல்லாம் என்ன குறை.

 
At Thursday, 13 November, 2008, சொல்வது...

ஆமாங்க உஷா எங்க கற்பனா சக்திக்கு நீங்க என்ன செய்வீங்க :))))

\\அது அவர்களின் கற்பனை மட்டுமே!//

 
At Thursday, 13 November, 2008, சொல்வது...

துளசி, பிகு கதையின் தொடர்ச்சி இல்லை. உங்க சிரிப்பு வேற வில்லங்கமான பொருள் தருது :-)

அம்பி, ஏகாம்பரி சொன்ன பல விஷயங்களை தொலைக்காட்சி சென்சார் செய்துவிட்டது. பிறகு
வெண்டைகாய் மற்றும் ரசம் இங்க எங்க வந்தது? ஜி. நாகராஜன் நினைவுக்கு வரார் :-)

வல்லி நன்றி

முத்துலட்சுமி, மேட்டரை கபால் என்று பிடித்ததற்கு மனமார்ந்த நன்றி

 
At Thursday, 13 November, 2008, சொல்வது...

பாஸ் கலக்கிட்டீங்க பாஸ்!

ஏகாம்பரியை சுருக்கியது மட்டுமில்ல எங்க கற்பனைய பெருக்கியதும் சூப்பர் :))

 
At Thursday, 13 November, 2008, சொல்வது...

//பிறகு
வெண்டைகாய் மற்றும் ரசம் இங்க எங்க வந்தது? //

சரியா போச்சு. தமிழ்மணத்துல ஜூடான இடுகைகளை(வாசகர் பரிந்துரையாக்கும்) எதுவும் பாக்கறது இல்லையா? :))

சுட்டி கூட நான் தான் குடுக்கனுமா? :p

கொத்தனார் வந்து மீதிய சொல்லுவார் என நம்புகிறேன். :))


ஜி. நாகராஜன் நினைவுக்கு வரார் //

ஆமா அது என்ன நாகராஜன் மேட்டர்?

நான் எல்லாம் நேத்து பொறந்த பயல். புதசெவி. :))

 
At Friday, 14 November, 2008, சொல்வது...

அசத்திட்டீங்க ஏகாம்பரி:)


//விஜய் லேசாய் சிரித்துக் கொண்டு, "இஷா, இது சூப்பரா பத்திக்கும். எல்லா மீடியாவிலும் இந்த இண்டர்வீயூ பத்தி பேசுவாங்க. அவங்கக்கிட்ட பேசினதுல தெரிஞ்சது, தமிழ் இலக்கியம் செம்ம ஹாட் போல, புக் ரீடிங், இவங்க சொன்ன ரைட்டர்ஸ்ன்னு தினமும் ப்ரைம்டைம்ல ஒரு மணி நேரம் கேட்டுப் பார்க்க போறேன். தமிளை வளர்த்தா மாதிரி ஆச்சு. என்ன சொல்ற?"//


ஆனா இங்கேயும் பாருங்க விஜய் இஷாவை விட புத்திசாலி.

என்னத்தைச் சொல்ல:)


///பி.கு இது கற்பனை மட்டுமே! இதில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் இறந்தவர்களையோ, உயிருடன் இருப்பவர்களையோ குறிப்பிடுவதில்லை. அப்படி ஏதாவது சம்மந்தம் இருப்பதாய் வாசிப்பர்கள் எண்ணினால்,அது அவர்களின் கற்பனை மட்டுமே!'///

இது சூப்பர் அசத்தல்.

 
At Friday, 14 November, 2008, சொல்வது...

:))

 
At Saturday, 15 November, 2008, சொல்வது...

நன்றி ஆயில்யன். இங்கே வாசகர்களும் எழுத்தாளர்கள் இல்லையா, கற்பனை ஊற்றெடுக்க சொல்லணுமா ;-)

அம்பி, ஆனாலும் ஒரு மூத்த பதிவரை இப்படி எல்லாம் கேள்வி கேட்கலாமா? ஜி.நாகராஜன் என்ற அக்ரஹாரத்து எழுத்தாளர்,
எழுதியது காமம்+ பாலியல் தொழில் செய்பவர்களைப் பற்றியே! ஆனால் ஆபாசம் இல்லை. அதனால் அவர் எழுதியது இலக்கியம் என்றுக் கொண்டாடப்படுகிறது. போதுமா :-)

மது அது என்ன எல்லாரும் பி.குவிலேயே கையை வைக்கிறீர்கள்:-)

சங்கரய்யா முதல் தடவையாய் எதையும் கிளப்பாமல், கமுக்கமாய் சிரித்துவிட்டு போகிறார். நன்றி :-)

 
At Monday, 17 November, 2008, சொல்வது...

A beautiful and a wonderful piece of imagination with relation to the reality.

Siva

 
At Monday, 17 November, 2008, சொல்வது...

Great spoof Usha, I loved it every bit.

 
At Monday, 17 November, 2008, சொல்வது...

நன்றி சிவா, கிருஷ்ணன்

 
At Thursday, 20 November, 2008, சொல்வது...

அன்பு அக்கா,

பகடி என என்னிடம் இருக்கு அகராதியில் தேடப் போக அது தந்த விளக்கம்

பகடி (p. 639) [ pakaṭi ] , s. mockery, jest, sport, பரிகாசம்; 2. a jester, a buffoon.

என்று இருக்கிறது. பகடி எழுத்துக்கள் யதார்த்த நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தி எள்ளல் செய்வதாக அமைய வேண்டும் என்று என் தமிழாசிரியர்கள் கற்றுத் தந்ததும் ஞாபகத்திற்கு வருகிறது.

ஆனால் சற்றும் மிகைப்படுத்தல் இல்லாத சராசரி அன்றாட வாழ்வைப் பிரதிபலிக்கும் கட்டுரையாகவே இந்தக் கட்டுரையைப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ஆகவே நகைச்சுவை என வகைப்படுத்தாமல் வாழ்வியல் என்றே இக்கட்டுரையை வகைப்படுத்தல் அவசியம்.

ஆனால் தற்கால பாவிப்புகளான டிஸ்கி போன்ற நவீனதமிழ் சொற்களைத் தவிர்த்து பிகு போன்ற பழந்தமிழ் சொற்களைப் பாவித்து இக்கட்டுரைக்கு வரலாற்றுச் சான்று இருப்பது போல் காட்டிக் கொள்ளும் போக்கு வன்முறையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

அது மட்டுமில்லாமல் போட்டு இருக்கும் டிஸ்கியின் மூலம் இது புனைவு என்று அடையாளப்படுத்த முயன்ற ஆசிரியரின் போக்கு கட்டுரையின் மதிப்பை முற்றும் குலைக்கிறது.

நல்ல பகடி எழுதும் உங்கள் முயற்சியில் நீங்கள் சிறிதும் மனம்தளராமல் முயலும் பாங்கைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். விரைவில் நல்ல பகடி உங்களுக்குக் கைவர வேண்டும் என அந்த பதிவுலக பாரம்பரியக் கடவுள் மகரநெடுங்குழைக்காதனையும் பகடிக் கடவுள் பாடிகார்ட் முனியையும் வேண்டிக் கொள்கிறேன்.

 

Post a Comment

<< இல்லம்