பிகில்
எங்கள் சென்னை செந்தமிழில் விசில் என்பதை பிகில் என்றே குறிப்பிடுவோம். என் பாட்டி அழைத்துப் போவது சிவாஜி அல்லது என்.டி. ஆர் படங்கள் மட்டுமே!பலே பாண்டியா படம். குண்டு சிவாஜியும், தேவிகா அம்மாள், சின்ன பெண்ணாய் பாவாடை தாவணியில் இரட்டை சடை போட்டுக் கொண்டு நடித்த படம். அந்த காலக்கட்டத்தில் சிவாஜி ஊதிக் கொண்டே போக, பிறகு புதிய பறவை, கலாட்டா கல்யாணம், சுமதி என்
சுந்தரியில் அழகாய் மெலிந்து மீண்டும் குண்டாகி, கோட் போட்டுக்கொண்டு ஸ்ரீப்ரியா வகையாற ஸ்ரீ களுடன் டூயட் ஆடி, பிறகு முதல் மரியாதையில் அழகாய் இளைத்தாரா அல்லது வயதாகி உடம்பு சரியில்லாமல் போனதா என்று தெரியவில்லை.
சரி விஷயத்துக்கு வருகிறேன். பலே பாண்டியா படம். வாழ நினைத்தால் வாழலாம் என்று சிவாஜியும், ரெட்டை சடை தேவிகாவும் பாட, அரைகுறை தூக்கத்தில் இருந்த நான், திடீரென்று பிகில் சத்தம் காதை பிளக்க கண்ணை திறந்தால், "துடித்து நிற்கும் இளமை சாட்சி" என்று வரிக்கு, தேவிகாவின் போஸ்க்கு தான் அந்த பிகில் சத்தம்.
அந்த காதை பிளந்த பிகிலின் தாத்பரியம், பல வருடங்களுக்கு பிறகு முதல் மரியாதையில் சோகமாய் ராசாவே வருத்தமா என்று ராதா பாடிக் கொண்டே
கஷ்டப்பட்டு கையை தூக்கி மரத்தில் வைத்து, அதே சைடு போஸ் காட்ட, மீண்டும் பிகில்கள். ஆஹா! வாழநினைத்தால் வாழலாம்
பிகிலின் உள் அர்த்தம் புரிந்தது.
இது இப்படியிருக்க, ரெண்டொரு வாரங்களுக்கு முன்பு "தோஸ்தானா"வில் ஜான் ஆப்ரஹாம் அழகாய் எண்ட் ரி கொடுத்ததும், எங்கிருந்தோ பிகில் சத்தங்கள். தொடர்ந்து கை தட்டும் ஒலி. இதுதான் பெண்ணுரிமை. காலம் மாறுகிறது என்று நினைத்துக் கொண்டேன்.
பி.கு எனக்கு பிகில் அடிக்க தெரியாது.
11 பின்னூட்டங்கள்:
அது நீங்க இல்லையா அப்போ(-:
த்சொ த்சொ......
இப்போ என்னான்றீங்க?
துள்சி அதுதான் தெளிவா எனக்கு பிகில் அடிக்க தெரியாதுன்னு சொன்ன பிறகு, அப்ப நீங்க இல்லையான்னு என்ன கேள்வி?
இலவசம், என்னய்யா, விளக்கம் எல்லாம் கேட்டுக்கிட்டு! அதாவது எனக்கு கைத்தட்ட தெரி... சாரி சாரி சிலிப் ஆப் தி டங்-
எனக்கு பிகில் எல்லாம் அடிக்க தெரியாதுன்னு, அதனால ஜானை திரையில் பார்த்ததும் நான் பிகில் எல்லாம் அடிக்கவில்லைன்னு
தெளிவா சொல்லிக் கொள்கிறேன்.
ஒரு பெண்ணியவாதியில் சுய விமர்சனமாக நான் இதை எடுத்துக் கொள்ளலாமா ?? ;-)
//"துடிக்கும் நிற்கும் இளமை சாட்சி" //
என்ன மாதிரி பாட்டு, படம், மறக்கவே மறக்காது !!!
//
"துடிக்கும் நிற்கும் இளமை சாட்சி"
//
துடிக்கும் இல்ல, "துடித்து" என்பது தான் சரி,(பல்லவியும் சரணமும் புகழ்!) பாலா இதை வாசிப்பார்னு தெரியுமில்ல :)
உஷா... people magazine ல கண்ணில பட்டது... அந்த மஞ்சள் நிக்கரை தலைவர் இன்னும் கொஞ்சம் கீழே இழுத்து (பின்பக்கம்ப்பா!) ஒரு ஜூப்பர் போஸ்! :-)
தாங்ஸ் பாலா. மாற்றிவிட்டேன்.
//"துடித்து நிற்கும் இளமை சாட்சி" //
என்ன மாதிரி பாட்டு, படம், மறக்கவே மறக்காது !!!///
அதுதானே :-)
நிர்மலா,
படத்துல எடுத்தவுடன் பாடல். பிறகு நீங்க குறிப்பிடும் சீன். உண்மையில் பயந்துப் போனேன், ஷகீலா ஸ்டைலில் படம் முழுக்க இதே அலங்கோலமா என்று :-) ஆனால் பிறகு அவ்வளவாய்
இல்லை.
//நான் பிகில் எல்லாம் அடிக்கவில்லைன்னு
தெளிவா சொல்லிக் கொள்கிறேன்//
சரி நம்பிட்டோம் அக்கா!
/
காலம் மாறுகிறது
/
கரிக்க்ட்டு
பின் குறிப்பு ஜூப்பரு
30 நாட்களில் பிகில் அடிக்க கற்று கொள்ளுவது எப்படி..??
{தமிழ்வாணன் பதிப்பகத்தார் கவனிக்க}
அதாவது மணிமேகலை பிரசுரத்தார்
Post a Comment
<< இல்லம்