Tuesday, December 23, 2008

ராட்சசன்




சுரேஷ் கண்ணன் எழுதிய விமர்சனம் படித்தேன். புத்தக விமர்சனத்தைப்பொறுத்தவரையில் சுரேஷ் மிக கறார். என்னுடைய ரசனையுடன் 100 சதவீதம் ஒத்துப் போவார். கூடவே தோஸ்துகள் படிச்சியா படிச்சியா என்று ஆரம்பித்ததும், என்னை நானே தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். நான்கு நாட்களாய் சளி, மண்டை இடி. அதனால ஒத்திப் போட்டேன். நல்ல விருந்துக்கு மனசும், உடம்பும் சரியாய் இருக்க வேண்டாமா? ஜெயமோகன் எழுதிய மத்தகம் படிக்கத்தான் இத்தனை முன்னேற்பாடுகள். வாசித்து முடித்ததும், சரியான ராட்சசன் , பாவி பாவி என்று மனசு அடித்துக் கொண்டது. எழுத்து தரும் போதை இதுதான்.
மிஸஸ் டவுட் அவர்களுக்கும் மிகவும் அனுபவித்து ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார்.

இரண்டு நாட்கள் வார்த்தைகள் படமாய் மனதில் சுழன்றுக் கொண்டு இருந்தன.
எழுத்தாளர்கள் வாசகர்களுக்கான நட்பு, எழுத்துடன் மட்டும் இருந்தால் உத்தமம் என்பது என் தாழ்மையான கருத்து. கூட்டமாய் சுஜாதாவைப் பார்த்ததும், பிறகு இரண்டு சந்திப்புகள் சில நிமிடங்கள் வெறும் சோஷியல் மீட்டிங்தான் (தமிழில் என்ன சொல்ல? ) இணைய நட்புகள் எழுதியதற்கு, மிக பிடித்துப் போனால், நட்பு தரும் உரிமையில் பாராட்டு மெயில்கள்.இதுல சேராது :-)

ஆனால் மத்தகம் வாசித்ததும், இதெல்லாம் மறந்துப் போய் நாலு வரி மெயில் தட்டிப் போட்டு விட்டேன். தட்டும்பொழுது நினைவு வந்தது நம் கொள்கையும், அதே போல முன்பு ஒருமுறை கொள்கையை மீறி இதே போல, ஒரு மெயில் அடித்தது நினைவுக்கு வந்தது. அது காடு படித்ததும், இதே பிரம்ம ராட்சசனுக்குதான் :-)

பி.கு மேலே ஏற்றியிருக்கும் படம் சாப்ட் டாய் புள்ளையார். விலையைப் பார்த்து பயந்துப் போய் கடைக்காரன் முறைக்க, மகள், இதெல்லாம் ஓவர் என்று திட்ட எடுக்கப்பட்ட படம். உள்ளங்கை என்னுடையது :-)

3 பின்னூட்டங்கள்:

At Tuesday, 23 December, 2008, சொல்வது...

I too read Suresh Kannan's post bit late and tried to read the story online, but unfortunately the link is no longer working. Hope to catch it in print. Yes Jeyamohan is indeed a sorcerer with words.

 
At Tuesday, 23 December, 2008, சொல்வது...

கிருஷ்ணன்,
நான் தந்த இணைப்பில் போய், ஜெயமோகன் பக்கத்துக்கு போங்க. பிறகு பக்கத்தின் கீழே
முந்தைய படைப்புகள் என்று இருக்கும். அதை கிளிக்கி, கிளிக்கி ஐந்தாவது கிளிக்கில் மத்தகம்
வரும். பாருங்க

 
At Wednesday, 24 December, 2008, சொல்வது...

Got it Usha. Thanks a lot for guiding me. Have you written any new story ?

 

Post a Comment

<< இல்லம்