Wednesday, January 07, 2009

2009ன் புத்தக சந்தையும், நான் வாங்கியவைகளும்

.
பழைய புலம்பலேதான். ஹ¥ம்,ஒவ்வொரு வருட புத்தக கண்காட்சியும், வெளிவரும் புத்தக பட்டியல்கள் பார்த்தால் மிட்டாய் கடை வாசலில், எச்சில் ஊற பார்க்கும் சிறுமிப் போல உணர்வேன். சென்னைக்கு போன முறை ஜூலையில் சில புத்தகங்கள் வாங்கினாலும், இந்த சமயம் வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம் சொல்லி மாளாது. இந்த அழகில்
இலக்கியவாதி/ எழுத்தாளினி ஆகிக் கொண்டு இருப்பதால் புதிய புத்தக வெளியிடு தகவல்கள் வேறு வயிற்றெரிச்சலைக் கிளப்பின.

இருந்தாற்போல ஒரு யோசனை தோன்றியது. இதே நேரம் கருக்கு அழியாத புத்தகங்கள் வாசிக்க வேண்டும். இணையம் மூலம் ஆர்டர் தந்தால் என்னவென்றுப் பார்த்து, நேராய் எனி
இந்தியன், கிழக்கு பதிப்பக பக்கத்துக்கு சென்றேன்.

எனி இந்தியனில் எதை எடுக்க எதை விட அளவிற்கு கலெக்ஷன். அங்கு அள்ளிய பிறகு, கிழக்கில் தேவனுடன் நிறுத்திக் கொண்டேன். ஆர்டர் தரலாம் என்றுப் பார்த்தால் என்னுடைய மாஸ்டர் கார்ட் கடனட்டை மூலம் செலுத்த வழியில்லை. வூட்டுக்காரர், ஆறு மாசத்துக்கு முன்பு இதுதான் விசா பிளாட்டின கார்ட், ஐந்து லட்சம் வரை செலவழிக்கலாம் என்று தூரமாய் கண்ணில் காட்டிவிட்டு உள்ளே வைத்தது நினைவுக்கு வந்தது. அட என் பெயரில்தாங்க :-(

அதை தேடி எடுத்து மூவாயிர சொச்ச ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிவிட்டு, குளிக்க சென்றால், போன் அடித்து இருக்கிறது. அம்மா எங்காவது ஷாப்பிங் போனாளா
என்ற விசாரிப்புக்கு, பையன் அம்மா காய் வாங்க, புரொவிஷன் வாங்க எல்லாம் சாயந்தரம் போவாங்க என்று சொல்லியிருக்கிறான். அதற்குள் நான் வந்து என்ன ஏது என்றால், பொண்டாட்டி என்ன செலவு செய்கிறா என்று செல்போனில் அதற்குள் செய்தி போயிருக்கு, பாருங்க சொந்தமா நெனச்சத வாங்க கூட நமக்கு உரிமையில்லை என்ற பெண்ணீய மன தாங்கலுடன் நான் தான் ஆன் லைனில் புக் வாங்கினேன் என்றேன்.

சுரத்திழந்த குரலுடன், "கார்ட் காணாமா போயிடுச்சோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு புக்கா? சரி சரி! என்ன சைட்டு, சே·ப் தானா? ஆனாலும் மூவாயிரம் அதிகமில்லை?"

''அன்னைக்கு, டீவி கேபிள் கட் செய்தப் பொழுது, மாசம் மூன்னூறு ரூபாய். அதுக்கு புக் வாங்கிக்கோன்னு சொல்லலை'' என்றதும், மீட்டிங் இருக்கு போனை வை என்றார்.

லிஸ்ட் இதுதான்.

1-ரப்பர் (நாவல்)- ஜெயமோகன்
2- புயலிலே ஒரு தோணி- ப. சிங்காரம்
3- அஞ்சலை- கண்மணி குணசேகரன்
4-உறுபசி- எஸ்.ரா
5-எப்போதும் பெண்- சுஜாதா
6- நதிமூலம்- விட்டல் ராவ்
7-விட்டல் ராவ் கதைகள்
8-அவஸ்தை- யு. ஆர். அனந்த மூர்த்தி
9-பிறப்பு (நாவல் - மூலம்: யு.ஆர்.அனந்தமூர்த்தி)
10-ஆனந்தரங்கப்பிள்ளை
11-போக்கிடம்- விட்டல் ராவ்
12-அக்னியும் மழையும்(க்ரீஷ்கர்னாட்)
13-எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது- வைக்கம் முகமது பஷீர்
14-தமிழினி மாத இதழ் - ஓராண்டு இந்தியச் சந்தா
15-உயிர் எழுத்து (மாத இதழ் ஓராண்டு இந்திய சந்தா)
16-உயிர்மை மாத இதழ் - ஓராண்டு இந்தியா சந்தா
17-வடக்கு வாசல் ஓரு ஆண்டு இந்திய சந்தா
18-வார்த்தை (இரண்டு ஆண்டு சந்தா)
19-மிஸ்டர் வேதாந்தம்- தேவன்
20-ஜஸ்டிஸ் ஜகந்நாதன்- தேவன்
(விட்டல் ராவ் அம்மா கேட்டது, தேவன் மாமனாருக்கு)


இதில் என் தாத்தாவிடம் ஒரு யானை இருந்ததும், உறுபசியும் ஸ்டாக் இல்லையாம். இப்ப இது போதும் :-)


பதிவுகள் ஆரம்பித்த நாலே நாளில் பத்தாயிரம், இருபதாயிரம், லட்சம் என்ற பார்வையாளர்கள் இருக்க,10-5-2005ல் ஆரம்பித்த நுனிப்புல் மெல்ல இப்பொழுதுதான் ஒரு லட்சம் வாசக பார்வையைக் காட்டுகிறது. வாசகர்களுக்கு நன்றி.

Labels:

24 பின்னூட்டங்கள்:

At Wednesday, 07 January, 2009, Blogger ஆயில்யன் சொல்வது...

//''அன்னைக்கு, டீவி கேபிள் கட் செய்தப் பொழுது, மாசம் மூன்னூறு ரூபாய். அதுக்கு புக் வாங்கிக்கோன்னு சொல்லலை'' என்றதும், மீட்டிங் இருக்கு போனை வை என்றார்.//

:)))

 
At Wednesday, 07 January, 2009, Blogger ஆயில்யன் சொல்வது...

//ஆனாலும் மூவாயிரம் அதிகமில்லை?"//

விடுங்க பாஸ்!

அக்காதான் இலக்கியவாதி/ எழுத்தாளினி ஆகிக் கொண்டு இருங்காங்கல... !


:))))

 
At Wednesday, 07 January, 2009, Blogger Geetha Sambasivam சொல்வது...

//- புயலிலே ஒரு தோணி- ப. சிங்காரம்
3- அஞ்சலை- கண்மணி குணசேகரன்
4-உறுபசி- எஸ்.ரா//
இதெல்லாமும் இன்னும்
இதுங்களோட கிரீஷ் கர்நாடும் படிச்சதில்லை. உயிர்மை எல்லாம் அப்போ அப்போ கிடைக்கும்போது படிக்கிறது தான். தேவன் எல்லாமே படிச்சாச்சு! கிழியக் கிழியப் புதுசு வாங்க வேண்டி இருக்கு!

 
At Wednesday, 07 January, 2009, Blogger anujanya சொல்வது...

முதலில் ஒரு இலட்சத்திற்கு வாழ்த்துகள். புத்தகம் வாங்குகையில் நடந்த உரையாடல் சுவாரஸ்யம் :).

லிஸ்ட் நல்லா இருக்கு. விட்டல் ராவ் படித்ததில்லை. (அப்ப மீதிப்பேர் என்று கேட்கக் கூடாது). ஆண்டுச் சந்தா இப்படி கட்டலாம் என்று தெரியாது இதுவரை. தகவலுக்கு நன்றி.

எல்லாவற்றையும் படித்து, அனுபவங்களையும் எழுதுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

 
At Wednesday, 07 January, 2009, Blogger A Simple Man சொல்வது...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

 
At Wednesday, 07 January, 2009, Blogger Krishnan சொல்வது...

ஒரு இலட்சத்திற்கு வாழ்த்துகள். ம்ம்ம் அதிகமா புத்தகம் வாங்கும் ஒவ்வொரும் இந்த அவஸ்தையை பட்டுதான் தீர வேண்டும் ...நான் ஒரு பெரிய list வைத்திருக்கிறேன் ...புத்தக கண்காட்சிக்கு சண்டே போகவதாக plan..

 
At Wednesday, 07 January, 2009, Blogger  வல்லிசிம்ஹன் சொல்வது...

''பிறப்பு' வாங்கினதுதான். ஈன்னும் படிக்க ஆரம்பிக்கலை. எங்களுக்கு தேவன் பழகினவரா இருக்கறதனால் மீண்டும் படிக்க ஆசை.
கண்காட்சி நாளைக்குத்தானெ அதுக்குள்ள ஆன்லைன் ச்ஷாப்பிங் செய்தாச்சா:)

ஒரூ லட்சம் வாசகர்களா!!! சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈ!!!!!

 
At Wednesday, 07 January, 2009, Blogger மாதவராஜ் சொல்வது...

உஷா அவர்களுக்கு!

அதென்னமோ தெரியவில்லை.
யார் புத்தகம் வாங்கினாலும் சந்தோஷமாய் இருக்கிறது.
நானும் வர சாத்தூரிலிருந்து புத்தகம் வாங்க சென்னைக்கு.

 
At Wednesday, 07 January, 2009, Blogger Boston Bala சொல்வது...

சூப்பர்!

(காலச்சுவடு & யுகமாயினி சந்தா செலுத்த வில்லையா??)

 
At Wednesday, 07 January, 2009, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ஆயில்,
பீசா, கேபிள் டீவி, பட்டுபுடைவை, டிசைனர் உடுப்புகள் என்று எல்லாம்
செலவழிக்கும்போது, சில நூறுகள் புத்தகங்களுக்கு ஒதுக்க மனத்தடைதான். பெங்களூரில் பால்சம் என்ற கடை இருக்கிறதாம். அங்கு வாங்கி படித்துவிட்டு, திருப்பி கொடுத்தால் பாதி விலை பணமாகவோ அல்லது வேறு புத்தகமாகவோ எடுக்கலாமாம். இந்த நல்ல யோசனை
பத்ரி போன்றவர்கள் கண்ணில் விழ வேண்டும் :-)

கீதா,
தேவன் எல்லாம் எப்பொழுதோ வாசித்தது. மீண்டும் வாசிக்க ஆவலாய் இருக்கிறது.

அனுஜன்யா, நன்றி. anyindian.com க்குப் போய் பாருங்கள். இன்னும் நன்றாக விமர்சனம் எழுத வரவில்லை.

அபுல் நன்றி. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கிருஷ்ணன், என்ஜாய் :-)

வல்லி, அதுல நான் எத்தனை முறை நுனிப்புல்லை நானே கிளிக்கி இருப்பேன் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்:-)

மாதவராஜ், அதையே தான் மிட்டாய் கடையைப் பார்த்து எச்சில் ஊற நிற்கும் சிறுமி என்று என்னை சொல்லிக் கொண்டேன்.இரண்டொரு
நாளும் புத்தக கட்டு வந்துவிடும். ஆவலுடன் காத்திருக்கிறேன் :-)

பாபா, யுகமாயினி சந்தா கட்டி ஒழுங்காய் வந்துக் கொண்டு இருக்கிறது. சித்தனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். காலச்சுவடு, என் புரிதலுக்கு மிக மேம்பட்டது. அதை சாய்ச்சில் விட்டு விட்டேன்.

 
At Wednesday, 07 January, 2009, Blogger உண்மைத்தமிழன் சொல்வது...

பரவாயில்லை.. இந்த வருஷம் ஏதாவது வாங்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தேன். உங்களது பதிவைப் படித்தவுடன் உஷா மேடம் தகுதிக்கு 3000.. நம்ம தகுதிக்கு 300 ரூபாய்க்காவது வாங்கிருவோம்னு முடிவு பண்ணிட்டேன்..

நன்றி அம்மா..

 
At Thursday, 08 January, 2009, Blogger ambi சொல்வது...

இருந்தாலும் மூவாயிரம் கொஞ்சம் அதிகம் தான்.

ஓசில படிக்கற பழக்கம் இல்லையா? :))

 
At Thursday, 08 January, 2009, Blogger ambi சொல்வது...

//பதிவுகள் ஆரம்பித்த நாலே நாளில் பத்தாயிரம், இருபதாயிரம், லட்சம் என்ற பார்வையாளர்கள் இருக்க,10௫௨005ல் ஆரம்பித்த நுனிப்புல்//

ஹாஹா. யாருக்கு இந்த கும்மாங்குத்து?னு தெரியல,(அப்படி தான் சொல்லிக்கனும்) இருந்தாலும் ரசித்தேன். :))

இலட்சம் பேர் வரது முக்யமில்லை, ஆயிரம் பேர் மனசுலயாவது நாம் இருக்கோமா? என்பது தான் முக்யம். :)

(பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கோ?)

 
At Thursday, 08 January, 2009, Blogger ரமேஷ் வைத்யா சொல்வது...

உங்கள் புத்தகத் தேர்வு கச்சிதம். பத்து வருடத்துக்கு முந்தைய என் பட்டியல் போலவே இருக்கிறது!

 
At Thursday, 08 January, 2009, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

உண்மை தமிழன், வாங்குங்க வாங்குங்க.

அம்பி, ஓசியில் படிக்கிறேனோ இல்லையோ, யாருக்கு ஓசி கொடுப்பதில்லை என்ற கொள்கையை
சமீபக்காலமாய் கடைப்பிடிக்க தொடங்கியுள்ளேன்
//இலட்சம் பேர் வரது முக்யமில்லை, ஆயிரம் பேர் மனசுலயாவது நாம் இருக்கோமா? என்பது தான் முக்யம். :)// அடடா ;-)

ரமேஷ் வைத்யா, ஒரு கலெக்ஷன் மாதிரி ஆரம்பித்து இருக்கிறேன். சென்ற வருடம் வாங்கியவை
சொல்லட்டா?

யாமம், கருத்தலப்பை, மீன்காரத் தெரு, நடந்தாய் வாழி காவேரி (தி.ஜா), வேர்பற்று, வேதபுரத்து
வியாபாரிகள், கிருஷ்ணா கிருஷ்ணா (ஆங்கிலம்), ஓம் நமோ - கன்னடம் சாந்திநாத தேசாய்(பாவண்ணன் மொ.பெ), அபராஜிதா வீபூதிபூஷண் பந்தோபாத்யாய (திலகவதி- மொ.பெ),காலம் எம்.டி. வாசுதேவன் நாயர். ஆங்கில புத்தகங்களை சேர்க்கவில்லை. இந்த லிஸ்ட் எப்படி ;-)

 
At Thursday, 08 January, 2009, Blogger Boston Bala சொல்வது...

கடந்த ஆண்டு வாங்கியதின் பட்டியல் ரொம்பக் கம்மியாக இருக்கோ!?

 
At Thursday, 08 January, 2009, Blogger அபி அப்பா சொல்வது...

மூவாயிரத்துக்கு புக்காஆஆஆஆ! பாவம் அண்ணாத்த!:-))

 
At Friday, 09 January, 2009, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

அபி அப்பா! துட்டுக் கொடுத்து புத்தகம் வாங்கலாம் என்பதைச் சொல்லிக் கொடுத்ததே உங்க
அண்ணாத்தைதான். அவரு வாங்குகிற மானேஜ்மெண்ட், கம்ப்யூட்டர் புத்தகங்கள் விலையைப்
பார்த்தால், தமிழ் புத்தகங்கள் பாவம் ஏழை :-)

பாபா! உங்க கமெண்டை உல்டாவாக பொருள் கொண்டு , இது ஜனவரி தானே, இன்னும் பதினோறு மாதங்கள் இருக்கின்றன என்று சொல்ல நினைத்தேன் :-)

 
At Friday, 09 January, 2009, Blogger அமிர்தவர்ஷினி அம்மா சொல்வது...

//ஆனாலும் மூவாயிரம் அதிகமில்லை?"//

விடுங்க பாஸ்!

அக்காதான் இலக்கியவாதி/ எழுத்தாளினி ஆகிக் கொண்டு இருங்காங்கல... !


:))))

ஹைய் ரிப்பிட்டேஎ

 
At Friday, 09 January, 2009, Blogger நட்புடன் ஜமால் சொல்வது...

நல்லா கலக்க்ஷன்

 
At Friday, 09 January, 2009, Blogger Indian சொல்வது...

I hope you read this blog. Any comments?

http://rajnatarajan.blogspot.com/2008/12/anecdote-on-perceptions.html

//I was reading couple of articles in Tamil blog world about, how and when one is plagiarized. People are copying left and right, all the images, from the nest and also some posts of others, concocting to a different form - wither getting published in print media as stories. They take the story's central theme, and write in their way. Inspiration! Nevertheless, even my stories and experiences have been plagiarized by many including self styled authors. Many write to me quoting the sources.... If that is the way they can earn, so be it. God bless them!

I am not going to growl about it, as God knows what to give to each - when and the best!

My best friend Ramesh's Tamil story with a title One Rupee, was plagiarized (internalized) by someone called Ramachandran Usha, and even got published in a magazine. We laughed about it. She or He would have made few hundred rupees and people would have forgotten about it.//

 
At Friday, 09 January, 2009, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

அமிர்த்தவர்ஷினி அம்மா, ஜமால் நன்றி

இந்தியன் என் பார்வைக்கு விஷயத்தைக் கொண்டு வந்ததற்கு நன்றி. விளக்கம் கேட்டு கமெண்ட்
போட்டு இருக்கிறேன். அதை என் பிளாக்கிலேயே சொல்லியிருக்கலாம். இதில் அந்த ரமேஷ் என்பவரின் லிங்க் பிடித்து, புஃரோபலில் சிறுகதைகள் என்றே ஒரு பதிவு வைத்திருக்கிறார்.
அதை கிளிக்கினால் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லி என்று வருகிறது. நான் இன்வைட்டட் ரீடட்
இல்லை :-)

 
At Sunday, 11 January, 2009, Blogger Ramesh சொல்வது...

Indian, please read this in the following story post

அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

//
Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

4:39 AM//
அவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.

//ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//

நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது.

அந்த உரையாடலுக்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 
At Monday, 09 February, 2009, Blogger  Radhakrishnan சொல்வது...

ஒரு சிறந்த எழுத்தாளாராக வரவேண்டுமெனில் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என பலரும் சொல்ல அதை அலட்சியப்படுத்தி இருக்கிறேன். எழுத்தாளாராகும் எண்ணம் இல்லை, ஆனாலும் இனிமேல் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் எனும் ஆர்வம்தனை தூண்டியது இந்த பதிவு.

 

Post a Comment

<< இல்லம்