குடியரசு தினத்தில் ஒரு கவிதையாய் ஒரு நிகழ்வு.
இன்று குடியரசு நாள். அறுபதாவது ஆண்டுவிழா கொண்டாட்டம். இங்கு அருகில் உள்ள கிராமத்து பள்ளியில் இக்கொண்டாட்டத்திற்கு என் கணவர் சிறப்பு விருந்தினராய் அழைப்பட்டு இருந்தார். நானும் காலை ஏழு மணிக்கு கிளம்பிவிட்டேன். சின்ன பள்ளிக்கூடம். அதை உருவாக்கியவருக்கு இப்பொழுது எண்பத்தி நான்கு வயது. அவரும் அங்கு இருந்தார். மொழி பிரச்சனை காரணமாய், என்னுடன் பேச முற்பட்டும், புன்னகையுடன் நிறுத்திக்கொண்டேன்.
மேனேஜ்மெண்ட் பள்ளிக்கூடம் என்றாலும், முழு அரசு உதவியுடன் நடக்கிறது. ஆணும் பெண்ணுமாய் சுமார் நானூறு பிள்ளைகள் படிக்கிறார்கள். பத்தாவது வரை இருக்கிறது. கொடி ஏற்றத்துடன், சிறு ஏற்புரையுடன் விழா தொடங்கியது. மேரே தேஷ்கி தர்த்தி என்ற சினிமா தேசபக்தி பாடலுக்கு பிள்ளைகள் ஆடினர். பிறகும் இரண்டு பாடல்கள். எல்லாம் சினிமா பாட்டுகள்தான். திரைப்படம் அந்தளவு நம் நடைமுறை வாழ்க்கையுடன் கலந்துவிட்டது.
இங்கும் வல்லபாய் படேல் படமே பிரதானமாய் இருந்தது. இவர் மாநில தந்தையாய் எல்லா இடங்களிலும் கொண்டாடப்படுகிறார். மகாத்மா காந்தி, குஜராத்தியானாலும் முழு தேசத்துக்கு தந்தையாய் போனதால் முதல் மரியாதை சர்த்தாருக்குதான்.
அதற்கு பிறகு தலைமை ஆசிரியரின் பேச்சு. அங்கும் சரி அதற்கு பிறகு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் சரி. குடியரசு தினம் என்றால் 2001 பூகம்பத்தைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடிவதில்லை. அந்தளவு அதன் தாக்கம் இம்மக்கள் மனதில் ஆழமான வடுவாய் இருக்கிறது.
ஜனகன மண ஒலிக்கும்பொழுது, பள்ளிக்கூடத்தில் குஜராத்தி ஆக்செண்ட்- உச்சரிப்பில் இருந்தது. அடுத்து அலுவல நிகழ்ச்சியில் பக்கா பெங்காலி உச்சரிப்பு. ஏனோ அதிக பெங்காலி மொழிப்பெயர்ப்பு நாவல்கள் படித்ததால், பெங்காலி மொழியின் மீது ஒரு ஈர்ப்பு. பெங்காலி ஆக்செண்ட்ல் ஜனகனமன மிக நன்றாக இருப்பதாய் தோன்றியது.
நாங்கள் வண்டியில் பள்ளிக்கூட வாசலில் இறங்கியதும், தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் வரவேற்றனர். பள்ளிக்கூட தலைமை பெண்ணும், பையனும் சல்யூட்
அடித்து வரவேற்றதும், பாண்ட் முழங்கியது. அழகான ரோஜா பூக்கள் தரப்பட்டன. நெற்றியில் சிவப்பு சாந்து வைத்து, நான்கைந்து அரிசியை ஒட்ட வைக்கிறார்கள்.
இதே போல, நேபாளத்தில் பல கோவில்களில் பலி தரப்படுவதால், சிவப்பு சாந்தில் வெட்டி படைக்க பட்ட மிருகங்களின் சதை துணுக்குகள் நெற்றியில் வைக்கப்படுவதை கண்டேன்.
அடுத்து, ஒரு பதினைந்து பிள்ளைகள் வரிசையாய் இரண்டு புறமும் நிற்க, நாங்கள் நடுவில் நடந்தோம். நாங்கள் அருகில் வர வர பிள்ளைகள் சல்யூட் அடித்துக் கொண்டு இருந்தார்கள். என் வலது பக்கம் கடைசியில் ஒரு சின்னூண்டு பையன், இரண்டாவது அல்லது மூன்றாவது இருக்கலாம். ஒல்லியாய், ரொம்ப சின்னது. நெஞ்சை நிமிர்த்து, விரைப்பாய் சல்யூட் அடிப்பதைப் பார்த்து, என்னால் புன்னகைகாமல் இருக்க முடியவில்லை. கையை இடித்து, என் கணவருக்கு காட்டியதும், அவரும் புன்னகைக்க, அதுக்கு பயங்கர வெட்கமாய் போய் விட்டது. அப்படியே முகம் சிவந்து, பின்னால் நின்றிருந்த பையன் கூட்டத்தில் ஓடி புகுந்துவிட்டது. சோ... ஸ்வீட்.
அழகு :-)
20 பின்னூட்டங்கள்:
அக்கா,
ஸ்லாங் என்ற வார்த்தையின் பாவிப்பு சரி இல்லையே. அங்கு ஆக்ஸென்ட் என வந்திருக்க வேண்டும் இல்லையா?
மத்தபடி கம்ப்ளெயிண்ட் எல்லாம் இல்லாம ஒரு பாசிடிவ் பதிவு! ;-)
//அப்படியே முகம் சிவந்து, பின்னால் நின்றிருந்த பையன் கூட்டத்தில் ஓடி புகுந்துவிட்டது. சோ... ஸ்வீட்.
//
Nice scene
ச்ச்ச்சோ ச்வீட்.. :)
இலவசம் மாற்றிவிட்டேன். நன்றி!
கபீஷ், யட்சன்! இன்றைய காலையில் இந்நிகழ்வு, நாள் முழுக்க மனசுதில் ஒரு சந்தோஷம். அதை நீங்களும் அனுபவிக்க பதிவு போட்டேன். ஜெயித்தேன் என்று நினைக்கிறேன் :-)
உஷா!
ஜெயித்து விட்டீர்கள்.
அந்த ஸோ சுவீட்.... மொத்த அநுபவத்தையும் அப்படியே தாங்கி நிற்கிறது.
ஸோ...
ஸோ சுவீட்!
யம்மாடீஈஈஈஈஈஈ...
பிரதீபா படேல் ரேஞ்சுக்குப் போயிட்டீங்க!!!!!!
அருமை. அருமை.
அந்த நேபாள விசயங்களையெல்லாம் இதுவரை ஒன்னுமே சொல்லலியே.....
அதைப் பத்திக் கொஞ்சம் விளக்கி சில பதிவுகள் போடுங்க.
யம்மாடீஈஈஈஈஈஈஈஇ
பிரதீபா படேல் ரேஞ்சுக்குப் போயிட்டீங்க!!!!!
(எங்களுக்கும் கெத்தா இருக்கு)
அருமை அருமை.
ஆமாம். அந்த நேபாளம்? போய்வந்த பதிவுகள் இன்னும் எழுதலையே.... கொஞ்சம் விளக்குங்க.
துளசிக்கு ஒரு ரிப்பிட்டேஏஏஏஏ போட்டுட்டு, உங்களுக்கு ஒரு "ஓ" போட்டுக்கறேன்!
//மத்தபடி கம்ப்ளெயிண்ட் எல்லாம் இல்லாம ஒரு பாசிடிவ் பதிவு! ;-)// அதானே கொத்ஸ்! யக்காவுக்கு என்ன ஆச்சு?
ஆர் யூ ஓக்கே யக்கா?
முத்து புன்னகைக்கு நன்றி.
துளசி, நல்லா படிச்சிப்பாருங்க. நான் வாலு! பின்னால் போன்னேன். அப்புறம் என்ன பிரதீபா அம்மையாரா? நாங்க எல்லாம் கிரண்பேடி டைப்பாக்கும். எங்கிட்டு போனாலும் ஒரு கலக்கு
கலக்கிட மாட்டோம் :-)
கீதா, துளசி! அந்த நேபாள பயணக்கட்டுரை அப்படியே நின்னுப்போயிடுச்சு. ஏனோ தொடர
மனசு வரலை.
பினாத்தல், முன்ன மாதிரி இல்லை. இப்ப எல்லாம் நான் திருந்திட்டேன் :-)
மாதவ ராஜ், முன்பு போட்ட
"புள்ளிகளின் உலகம்" உங்களூக்காக. படிச்சிப்பாருங்க
http://nunippul.blogspot.com/2007/09/blog-post_21.html
என்ன உஷா.....
தலை இருக்க வால் ஆடக்கூடாதுன்னு இருக்கா என்ன?
வால் 'மட்டும்' ஆடினாலும் தப்பே இல்லை:-)))))
ச்சோ ஸ்வீட்..
துளசி, கன்னா பின்னா வென்று பழமொழியை மாற்றாதீங்க :-)
நர்சிம் நன்றி
நல்ல காலம்,நாசிக் பள்ளியில் குடியரசு தினத்திற்குப் போகவில்லை. போனாலும் போஜ்பூரியில் பாடக்கூடாது :(
இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்திற்கு மதிப்பில்லை;குண்டர்கள் கூட்டமைப்பு சட்டம்தான் நடைமுறை.மங்களூராகட்டும்,மும்பை நட்சத்திர ஹோட்டலாகட்டும் அல்லது நாசிக் ஆகட்டும்.
மன்னிக்கவும், உங்கள் கவிதையான தருணத்தை கெடுக்கவந்தேனே :( பினாத்தலார்/கொத்ஸின் குறை தீர்க்கவா ?!
மற்றபடி சுட்டிப்பையனின் வெட்கத்தை இரசித்து ‘வாலாட்டியதற்கு' வாழ்த்துகள் !
எச்சுச்சுமி.. பக்கத்தூருல ஏப்ரல் ஒண்ணு நிகழ்ச்சிக்கி தலைமையேற்று நடாத்தி தர பொருத்தமான தகுதியான ஒரு சிறப்பு விருந்தினர் வேணுமாம்.. உங்கள(மட்டும்தான், ஹஸ்பண்டு நாட் குவாலிஃபைடு)த்தான் பரிந்து உரைச்சிருக்கேன்... வந்து தலைமையேத்து நடத்தி கொடுக்கணுமின்னு கேட்டுக்கிறோம் சாமியோவ்...
**
என்னதான் நெல்லுக்கு பாஞ்ச தண்ணி புல்லுக்குன்னாலும், ப்ளாக்கருக்கெல்லாம் சல்யூட்டு அடிக்கிற நெலமயாகி போச்சேன்னு அந்த ச்சோ ச்வீட் பையன் கோவி கோவி அழறானாமே?
\\அதுக்கு பயங்கர வெட்கமாய் போய் விட்டது. அப்படியே முகம் சிவந்து, பின்னால் நின்றிருந்த பையன் கூட்டத்தில் ஓடி புகுந்துவிட்டது\\
ஜோ ஜுவீட்
ஒன் மோர் கொஸ்டீன் :: நாமெல்லாம் பிச்சயெடுத்துகிட்டே இருக்கோம். இதுக்கெல்லாம் ஹெல்த் மினிஸ்டர் தவிர்த்த இந்திக்காரனுங்கதான் காரணம். அதனால அவனுங்க பண்டிகையான குடியரசு தினத்தை நாமெல்லாம் கொண்டாடக்கூடாதுன்னு டாலரில் சம்பாதிக்கும் தமிழர்கள் கட்சி சர்க்குலர் விட்டுச்சே பாத்தீங்களா?
துணை கொஸ்டீன் ::
குடியரசு தினத்துக்கு போயி அதில் கலந்து ஆரிய மாயையில் மயங்கிட்டீங்களா? அல்லது உணர்வில்லாமல் வெறுமே பார்வையாளர்களாக மட்டும் இருந்து இன உணர்வை வெளிப்படுத்தினீர்களா?
நன்றி ஜமால்.
முகமூடி ஐயா!
சல்யூட் எனக்கு இல்லே இல்லவேயில்லை. அப்பால ஏப்ரல் ஒண்ணாந்தேதி நிக்ழச்சிக்கு என்னைவிட பொருத்தமானவங்க நிறைய பேரு இருக்காங்க. தகுதியில்லாததற்கு நான் ஆசைப்படுவதில்லைங்கய்யா!
ஐயா, நா என்னத்த கண்டேன். முட்டாயை மென்னுக்கிட்டே, புள்ளைங்க ஆடியதை ஆனந்தமாய் ரசித்து, கையும் தட்டிட்டேனே :-(
மிகவும் அருமையான நிகழ்வுதனை சொல்லும் அழகிய பதிவு.
Post a Comment
<< இல்லம்