Saturday, February 07, 2009

வயது பதினாறு!

ஒரு சின்ன பார்ட்டி. எல்லாம் அலுவலக நட்பு வட்டம். இந்த ஊருக்கு வந்து ஒன்றே முக்கால் வருடம் ஆகியும் பெயர்களும் முகங்களும் பிடிப்பட மறுக்கின்றன. ஓரிரு தெரிந்தவர்களுடன் மிக சாதாரண, சுவாரசியம் அற்ற பேச்சுகள். போய் ஆக வேண்டுமே என்ற கட்டாயத்திலும் வேடிக்கைப் பார்க்கும் ஆவலும் இருப்பதால் போய் கொண்டு இருக்கிறேன்.

இம்முறை கல்லூரி ஹாஸ்டலில் இருந்து மகளும் வந்திருந்ததால் பிளஸ் டூ படிக்கும் மகனும் அதிசயமாய் கூட கிளம்பினான். என் பக்கத்தில் அமர்ந்து அக்காவும் தம்பியும் பேசிக் கொண்டு இருந்தார்கள். மகன்,"அந்த பொண்ணு எங்க ஸ்கூல்தான். மகா அலட்டல்" என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தது காதில் விழுந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு, என் கணவர் எழுந்து வரச் சொல்லி ஜாடை காட்டியதும், எழுந்துப் போனேன். இவர் கம்பனி டாக்டர் என்று அறிமுகப்படுத்தப்பட, கைக்கூப்பி வணங்கினார், வணங்கினேன். அவர் மனைவியும் டாக்டர் என்றுச் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது, அவரும் குடும்பமும் அருகில் வந்தார்கள்.

இரண்டு பெண்கள் பதினைந்து, பன்னிரெண்டு வயதில். மிக தாமதமாய் மூன்று வயதில் ஒரு பிள்ளை :-) பிள்ளைகளை அறிமுகப்படுத்தும்பொழுது எந்த ஸ்கூல் என்றுக் கேட்க, என் மகன் படிக்கும் பள்ளிதான் என்றதும், "தெரியும் ஆண்டி. எங்க பஸ்லதான் வருவான்" என்று பெரிய பெண் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது, தாய், என் மகன் எந்த வகுப்பு என்றுக் கேட்க, நான் வாயைத் திறப்பதற்கு முன்பு, பக்கத்தில் என் மகன் அவன் தான் எந்த வகுப்பு என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தான்.

சட்டென்று யாருடன் பேச மாட்டான், பழக மாட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது எழுந்து வந்தான் என்று திரும்பியவள் கண்ணில் மாந்துளிரில் பளபளப்பில் முகமும், அதில் அழகாய் சிறு பருக்கள் இன்னும் முக பளபளப்பை அதிகப்படுத்தின. காதில் இருந்து நீளமாய் இறங்கிய மயிர் கோடு! முன்பே பார்த்தது என்றாலும் புது பொருளை தந்தது இன்று.

என் மகள் கையைக் கிள்ளிவிட்டு மெல்ல என்னைப் பார்த்து சிரித்தாள்.

இளமை :-)

Labels:

31 பின்னூட்டங்கள்:

At Saturday, 07 February, 2009, சொல்வது...

//இளமை :-)//

:-))

At Saturday, 07 February, 2009, சொல்வது...

அடுத்த பலியாடு தயாராயிருச்சு போல! :)

At Saturday, 07 February, 2009, சொல்வது...

நான் சைட்டடிக்கறதைப் பாத்து மகிழ இப்படி ஒரு அம்மா இல்லையே!

At Saturday, 07 February, 2009, சொல்வது...

:-)

உஷா உங்களுக்கு நன்றி..

எதுக்கு தெரியுமா...எனக்கு மட்டும் தான் இப்படி தோனுதோன்னு ஒரு மாதிரி கில்டி கான்ஷியசா இருந்தேன்....

இதும் ஒரு அழகு உஷா..

At Saturday, 07 February, 2009, சொல்வது...

நான் என்னங்க புதுசா சொல்ல போறேன்.. நல்ல பதிவை படிச்சேன்.

வாழ்த்துக்கள்.. அன்புடன் மண்சட்டி..

At Saturday, 07 February, 2009, சொல்வது...

ஸ்ரீதர் ;-))))

இலவசம் வயசு கோளாறு எல்லாருக்கும் வரும்

பினாத்தலாரே, உங்க அம்மா முன்னால் சைட் அடிச்சீங்களா :-)

மங்கை, நம் பிள்ளைகளேயானாலும் கொஞ்சம் விலகி கவனித்தால் எல்லாமே அழகாய் இருக்கு, ரசனை :-) இதில்
குற்றவுணர்ச்சி எதுக்கு? இது இயல்பான விஷயம்தானே :-)

At Saturday, 07 February, 2009, சொல்வது...

இப்படிப்பட்ட (ஆம்பளைப் பசங்களைப் பெத்த) அம்மா (& அப்பா) வர்க்கத்தினர் உலகில் தழைத்தோங்க வேண்டும் :-)

எனக்கு இது அப்ளிகபிள் இல்லை, நான் பெத்தது இரண்டும் பொண்ணு, இப்படி ரசிக்கறது சற்று சிரமம் ;-)

(ஏதாவது ஒரு அவசரக்குடுக்கை, நான் MCP என்று ஆரம்பிக்க வேண்டாம்!!!)

At Saturday, 07 February, 2009, சொல்வது...

ரசிச்சேன்.

Can't wait for my turn:-)

At Saturday, 07 February, 2009, சொல்வது...

வயசு வயசு. எல்லாம் பருவம் வரும் வயசு.

ரசிச்சதுக்கு நன்றி.

காலம் மாறி வருது:-))))))

At Saturday, 07 February, 2009, சொல்வது...

:D

At Saturday, 07 February, 2009, சொல்வது...

அபியும் நானும் படம் பார்த்தீங்களா?
அந்த படத்தோட மையக்கருத்து தான் என்னோட பதிலும்
http://mahawebsite.blogspot.com/

At Saturday, 07 February, 2009, சொல்வது...

\\நான் பெத்தது இரண்டும் பொண்ணு, இப்படி ரசிக்கறது சற்று சிரமம்\\\

பாலா நானும் தான்...ஒத்தை பொண்ண பெத்துருக்கேன்...ஆனா ரசிக்கறனே..

உஷா???

At Saturday, 07 February, 2009, சொல்வது...

//இரண்டு பெண்கள் பதினைந்து, பன்னிரெண்டு வயதில். மிக தாமதமாய் மூன்று வயதில் ஒரு பிள்ளை :-) //

:-)))

At Saturday, 07 February, 2009, சொல்வது...

பையன் ரெடியாகிட்டான்:-))

At Saturday, 07 February, 2009, சொல்வது...

///பினாத்தல் சுரேஷ் said...

நான் சைட்டடிக்கறதைப் பாத்து மகிழ இப்படி ஒரு அம்மா இல்லையே!///

யோவ் , பினாத்தலு

நீர் அந்தப் பருவத்தில் பண்ணதெல்லாம் ரவுடித்தனதில் சேரும் அப்படீன்னு ஊர் நாட்டில பேசிக்குறாங்களே? மெய்யாலுமா? :)

At Saturday, 07 February, 2009, சொல்வது...

///enRenRum-anbudan.BALA said...

(ஏதாவது ஒரு அவசரக்குடுக்கை, நான் MCP என்று ஆரம்பிக்க வேண்டாம்!!!)///

திஸ்கி போட்டா விட்டுருவமாக்கும் ? உண்மை என்பது எப்பவும் உண்மைதான்.

At Saturday, 07 February, 2009, சொல்வது...

///"தெரியும் ஆண்டி. எங்க பஸ்லதான் வருவான்" என்று பெரிய பெண் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது,///

இந்தக் காலத்து பொண்ணுங்களும் நல்ல சுறு சுறுப்புதான் :)

At Saturday, 07 February, 2009, சொல்வது...

ஒரு சிறுகாற்று வருட, சட்டென்று இனம் புரியாத ஒரு சந்தோஷம் ப்ரவுமே அப்படியிருந்தது உங்கள் ப்திவும், பார்வையும். ஆஹா... அழகு, ஆரோக்கியம் எல்லாம்.

At Saturday, 07 February, 2009, சொல்வது...

கெ.பி, துளசி, கப்பி, மாதவராஜ் என்னுடன் நீங்களும் ரசித்ததற்கு நன்றி

மகா, தமிழ்படம் எல்லாம் கிடைத்தா தூரத்தில் இருக்கிறேன் :-(

பாலா, மங்கை சரியாய் சொல்லிட்டாங்க, பருவ வயது என்பது எல்லாருக்கும்தானே? அம்மா
கண்டுப்பிடித்துவிடுவாள். தாய் அறியாத சூல் இல்லை என்பது பழமொழி. அதுக்காக என்னை
பெண்ணீயவாதின்னு சொல்லிடாதீங்க. ஆனாலும் ஆண்கள், நுண்ணுணர்வுகளில் கொஞ்சம் கேனைத்தான். (இந்த வரிகள் ச.சங்கருக்காக :-)

அபி அப்பா said...
//இரண்டு பெண்கள் பதினைந்து, பன்னிரெண்டு வயதில். மிக தாமதமாய் மூன்று வயதில் ஒரு பிள்ளை :-) //

:-)))

அபி அப்பா, இதுக்கு நோ கமண்ட்ஸ் :-)

ச.சங்கரய்யா, பினாத்தல் ஒரு அப்ராணி. அப்புறம் பெண்கள் எந்த காலத்துலையும் நல்ல சுறுசுறுப்புதான்.

At Sunday, 08 February, 2009, சொல்வது...

:)

At Sunday, 08 February, 2009, சொல்வது...

//
பினாத்தல் சுரேஷ் said...

நான் சைட்டடிக்கறதைப் பாத்து மகிழ இப்படி ஒரு அம்மா இல்லையே!//

repeateyyyyyy :)))

At Sunday, 08 February, 2009, சொல்வது...

நீங்க ரசிக்கிறதுதான் எனக்கு ரொம்ப அழகாப் பட்டது:)

At Sunday, 08 February, 2009, சொல்வது...

இது போன்ற சூழல் எனக்கும் என் அம்மாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது;

ஒரு மகனாக நான் அன்று மிகவும் மகிழ்ச்சியும்,பெருமையும் அடைந்தேன்.

எனக்கென்னவோ நீங்கள்தான் நடந்த எல்லாவற்றிலும் அழகாகத் தோன்றுகிறீர்கள்.

வாழ்த்துக்கள் !

At Sunday, 08 February, 2009, சொல்வது...

;-) ஆகா இப்படி எல்லாம் ரசிக்கிறீங்களே

At Monday, 09 February, 2009, சொல்வது...

மிகவும் வித்தியாசமான அனுபவம் தான். நாம் காதலித்த காலங்களை விட, நமது பிள்ளைகள் காதலிக்கும் காலங்களை இரசிக்கும் தன்மை மிகவும் வித்தியாசமானதுதான். :)

At Monday, 09 February, 2009, சொல்வது...

நன்றி குரங்கு, வல்லி, பிரபா, ஆயில்யன்

அறிவன், என்றும் மகனின் வளர்ச்சி அம்மாவுக்கு பெருமைதான். உங்கள் அம்மாவும் பெருமைப் பட்டிருப்பார். இன்று சுலபமாய் எழுதி அதை பகிர்ந்துக் கொள்ள முடிகிறது. அவ்வளவுதான் விஷயம். மகனின் வளர்ச்சி பூரிப்பு. மகளின் வளர்ச்சி சில சமயங்களில் பயம்- என்றும் அம்மாக்களுக்கு !

ராதாகிருஷ்ணன் சார், பதினாறு வயதில் இது வெறும் எதிர்பாலினரின் மீது உண்டாகும் ஒரு
ஈர்ப்பு.

At Monday, 09 February, 2009, சொல்வது...

இதென்ன வம்பா போச்சு. அம்மாகூடதான் பையன் இருக்கான்னு பொண்ணுங்கள பக்கத்திலவிட்டா...?

அந்த பொண்ணுகளோட அம்மா சொல்றது எங்காதுல கேட்குது. உங்களுக்கு?

"கவிதை"

At Monday, 09 February, 2009, சொல்வது...

:)

At Tuesday, 10 February, 2009, சொல்வது...

அம்மா - இங்கு ஒரு கேடயம், அவ்வளவு தான்.
ஆத்தாடி! இ.கொத்தனாரும் & பி.சுரேஷ் ம் இப்படி போட்டு வாங்கியிருக்காங்க!!!

At Tuesday, 10 February, 2009, சொல்வது...

மென்மை! அழகிய பதிவு.

என் தோழியின் நினைவு வருகிறது. அவளும் அவள் மகனும் எரிக்கரைக்கு சென்ற போது மகன் 'அம்மா, உனக்கு கொஞ்சம் ப்ராப்ளம்.. இருக்கலாம் நான் யுவதிகளை சைட் அடித்தால் '

தோழி; ' நீ சைட் அடிக்காமர் இருந்தால் தான் எனக்கு ப்ராப்ளம்'

;-)

At Wednesday, 11 February, 2009, சொல்வது...

pls visit and give your feedback.

http://peacetrain1.blogspot.com/

Post a Comment

<< இல்லம்