Friday, March 06, 2009

அபர்ணா ஐஏஎஸ் அவர்களுடன் ஒரு நேர்காணல்

சென்ற புதன் அன்று இரவு ஷைலஜாவிடம் இருந்து ஒரு மெயில். சாதனை பெண்கள் என்ற தலைப்பில் ஆனந்தவிகடன் இணையதளத்தில் பெண்கள் சிறப்பு மலருக்கு
எழுத முடியுமா என்று? நமக்கு எந்த சாதனை பெண்களை தெரியும்? என்னை பற்றியே நான் எழுதினால் நன்றாக இருக்காது, வேண்டுமானால் உன்னைப் பற்றி எழுதட்டா என்று கடியாய்
ரிப்ளை மெயில் அடித்தவுடன், சூரத் கமிஷனர் அபர்ணா ஐஏஎஸ் அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நினைவு வந்தது. உடனே அவரைப் பற்றி கூகுளில் தேடி,
மெயில் ஐடி, போன் நம்பரை பிடித்தேன். ஷைலஜாவுக்கு விஷயத்தைச் சொல்லி, ஆரம்பிக்கவா என்றுக் கேட்டேன். அவரும் ஆ.வி மலருக்கு பொறுப்பாளரைத்
தொடர்ப்பு கொண்டு கேட்டு விட்டு , முழு உற்சாகத்துடன் "புரோசிட்" என்றார்.

சூரத் கார்ப்பரேஷன் ஐடிக்கு மெயிலில் விஷயத்தை சுருக்கமாய் சொல்லிவிட்டு, அதையே எஸ் எம் எஸ் ஆகவும் கமிஷனர் செல் நம்பருக்கு அனுப்பினேன். மறுநாள் காலை பதில் வந்துவிட்டது. சனிக்கிழமை காலை சந்திக்கலாம் என்று. கமிஷனர் ஆபிசில் இருந்தும், மெயிலில் அழைப்பு அனுப்பிவிட்டார்கள்.

சொந்த கற்பனையில் தோன்றுவதை கதையாக்குவது சுலபம். நேர்காணல் என்பது
முதல் முறை என்பதால் தடுமாற்றமாகவும் இருக்கிறது. கைக் கொடுப்பாள் தோழின்னு மதுமிதா, அருணா, பத்மா ஆகிய வித்தகிகளைப் பிடித்தேன். எப்படி, என்ன கேட்க
வேண்டும் என்றும் அதை எப்படி எழுத வேண்டும் என்று வகுப்பே எடுத்துவிட்டார்கள்.

கமிஷனரைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாது. மிக உயர்ந்த பதவியில் இருப்பவர், எப்படி பேசுவார் என்றெல்லாம் யோசனையாகவும் இருந்தது. பத்தேகாலுக்கு வர சொல்லியிருந்தார்கள். கடைசி சனிக்கிழமை அலுவலகம் விடுமுறை. பாதுகாப்பு பணியினரைத் தவிர இரண்டொரு ஆட்களே, அந்த பிரமாண்டமான பிரிட்டிஷ்காலத்து கட்டிடத்தில்.

பத்து நிமிடத்தில் என் செல்பேசியில் அழைத்தார். ரவுண்ட்ஸ் போய் கொண்டு இருக்கிறேன், தாமதத்திற்கு மன்னிக்கவும் என்ற வார்த்தைகள் மனதில் ஒரு நம்பிக்கையை
ஏற்படுத்தியது. என்னுடைய அனைத்து தயக்கங்களும் நொடியில் மாறிப் போனது. அதே போல பத்தே நிமிடத்தில் அவர் அறையில் இருந்தேன்.

என்ன சொல்லணும் என்று அவர் ஆரம்பித்தவுடன் போன் கால்கள். இரண்டாவது அழைப்பை பேசி முடித்ததும், அதை சைலண்டில் வைத்துவிட்டார். தொடர்ந்து ஒரு மணி
நேரம், மிக சுவாரசியமாய் இருந்தது. நான் ஒரு எழுத்துக்காரி, பத்திரிக்கையாளர்/ நிருபர் இல்லை என்று முதலிலேயே சொல்லிவிட்டேன் :-) என் கேள்விகளுக்கு மிக அருமையாய் பதில் அளித்தார். அதை குறிப்பெடுத்து வந்து, இரவே டைப் செய்து மறுநாள் காலை ஞாயிறு அன்று அவர் பார்வைக்கு அனுப்பிவிட்டேன்.

அதில் சில திருத்தங்களையும், விட்டுப் போனவைகளையும் சரி செய்து மாலை ரிப்ளை அனுப்பிவிட்டார். அதே நேரம், அருணா நேர்காணலை தொடங்கும் விதத்தை
சொல்லித்தர, முழுக்க ரீ ரைட் செய்து, கமிஷனர் பார்வைக்கு பைனல் டிராப்ட் அனுப்பி வைத்தேன். மறுநாள் திங்கட்கிழமை, அலுவலகத்தில் இருந்து புகைப்படம் கிடைத்ததும், நேர் காணல் முழு வடிவம் பெற்றது.

கமிஷனர் அவர்களின் சாதனைகள், உழைப்பு, மக்களுக்கு தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் போன்றவையும், உயர்பதிவில் வகிப்பவர்கள் எப்படி
நடந்துக் கொள்ள வேண்டும் போன்ற கருத்துக்களும் கேட்கும்பொழுது, எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாய் இருந்தது. மறக்க முடியாத அனுபவமாகிவிட்டது.அதற்கு ஷைலஜாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நேர்காணல் ஆனந்தவிகடன் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. நாளை இங்கும் போட்டு விடுகிறேன்

Labels:

11 பின்னூட்டங்கள்:

At Friday, 06 March, 2009, சொல்வது...

\\\\\நமக்கு எந்த சாதனை பெண்களை தெரியும்? என்னை பற்றியே நான் எழுதினால் நன்றாக இருக்காது, வேண்டுமானால் உன்னைப் பற்றி எழுதட்டா என்று கடியாய்
ரிப்ளை மெயில் அடித்தவுடன்...\\\\இந்தக்குறும்புதான் உஷாவோட
ஸ்பெஷாலிடி!!!

 
At Friday, 06 March, 2009, சொல்வது...

பேட்டி நல்லா இருந்தது!!! கேட்ட கேள்விகளும் மறுமொழிகளும் அனுபவத்தைக் காட்டுகின்றன. ஸோ, உங்க வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பெண்களுக்கும் வாழ்த்துகள்:-) ஃபோட்டோல நீங்களாஆஆஆஆஆஆஆ?

(ஆஹெம்:) பெண்ணை பேட்டி எடுக்கும் போது, (ஆண்களை பேட்டி எடுக்கும் போது தேவையில்லாத கேள்விகளான) ‘குடும்பத்தையும் வேலையையும் எப்படி சமாளிக்கிறீங்க?’, ‘காலையில எந்திரிச்சதும் கணவர் காலைத் தொட்டு கும்பிடுவீங்க தானே’ போன்ற கேள்விகள் இல்லாததைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்:-))))

 
At Friday, 06 March, 2009, சொல்வது...

சூப்பர்

 
At Friday, 06 March, 2009, சொல்வது...

ஷைலு, பின்ன :-)

கெ.பி, பேட்டிக்கு முன்னாடி do and don'ts லிஸ்டுல சில கேள்விகளுக்கு தடா போட்டுக் கொண்டேன். போட்டோ நானேதான், ஐந்து நாட்களுக்கு முன்பு எடுத்தது. நீங்களாஆஆஆ ன்னு என்ன
இழுப்பு :-)

 
At Friday, 06 March, 2009, சொல்வது...

பேட்டி சூப்பர்!
இதான் ஒங்க மொதல் பேட்டியா?
எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு! :)

திருவிளையாடல் இஷ்டைலில்....
கேள்விகளை இயற்றியது நீர் தாமே? :))
பின்னே பல பின்னூட்டங்களில் பல வாசகர்கள் கேட்ட கேள்விகளின் தொகுப்பு-ன்னா நினைச்சீக? :))

 
At Friday, 06 March, 2009, சொல்வது...

கேஆர் எஸ், முதல் முயற்சி, அதுவும் எதிர்பாராமல் கிடைத்தது. பாஸ் பண்ணிட்டேன்னு
சொல்றீங்க, நன்றி.

சில கேள்விகளை எழுதிக் கொண்டுப் போயிருந்தேன். மேடத்தை பேச வைக்க என்று. ஆனால்
பேச்சு ஒரு கலந்துரையாடலாய் போக, பிறகு அவங்க சொன்னதற்கு ஏற்ற கேள்வியைப் போட்டு
ஒப்புதல் வாங்கினேன். ஆனால் பொதுவாய் எப்படி நேர்காணல்கள் எடுக்கப்பட்டு, அவைகள்
எழுத்தில் வருகிறது என்று தெரியவில்லை. மாலன் சாரை தான் கேட்க வேண்டும் :-)

 
At Friday, 06 March, 2009, சொல்வது...

பாபா, நன்னி.

 
At Friday, 06 March, 2009, சொல்வது...

இன்னும் கொஞச நாளில் CNN-IBN, NDTV போன்ற சேனல்களுக்கு பேட்டி (walk the talk ;-)) எடுக்கும் அளவுக்கு முன்னுக்கு வர வாழ்த்துகள் :)

//மதுமிதா, அருணா, பத்மா ஆகிய வித்தகிகளைப் பிடித்தேன்.
//
இது பெரிய மாஃபியா ஆச்சே, இவ்வளவு ஆதரவு கிடைச்சா, நான் இன்டர்நேஷனல அளவுக்கு பேட்டி எடுப்பேன், தெரியுமில்ல ;-)

எ.அ.பாலா

 
At Friday, 06 March, 2009, சொல்வது...

//இன்னும் கொஞச நாளில் CNN-IBN, NDTV போன்ற சேனல்களுக்கு பேட்டி (walk the talk ;-)) எடுக்கும் அளவுக்கு முன்னுக்கு வர வாழ்த்துகள் :)//

சே சே எனக்கு அப்பேர்ப்பட்ட ஆசைகள் எல்லாம் கிடையாது பாலா, அவிங்க இல்லே, என்னை
பேட்டி எடுக்கணும் :-)

 
At Saturday, 07 March, 2009, சொல்வது...

அண்ணி பேட்டி விடுங்க! அதான்ன் சூப்பரா இருக்குமே!

உங்க் கிராப், ஐ டோண் லை இட்! ஒரு 3 அடி வளர்த்து, நல்லா எண்ணெய் விட்ட்டு சீவி, அதன் அடியிலே குஞ்சம் வச்சு அதை உங்க வலது கையால தூக்கி சுத்திகிட்டே "இப்ப என்னடா சொல்லுற"ன்னு கேளுங்க ! அப்ப தான் பின்னூட்டம் போடுவேன்:-)))

 
At Saturday, 07 March, 2009, சொல்வது...

//அவிங்க இல்லே, என்னை
பேட்டி எடுக்கணும் :-)
//

என்னை எதால் அடித்துக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன் :)

 

Post a Comment

<< இல்லம்