Tuesday, March 17, 2009

அழகிரி, வா.மு.கோமு, சாரு நிவேதிதா :-)

தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற முறையில் தென் தமிழகத்தில் கட்சியை வளர்க்க உங்கள் செயல் திட்டம் என்ன?

திமுக வில் தனிப்பட்ட ஒருவருடைய முடிவைக் கட்சியில் திணிக்க முடியாது. இதுவரை பொதுக்குழுவைக் கூட்டித்தான் வரலாற்று ரீதியான நல்ல முடிவுகளை எடுத்திருக்கிறோம். அந்த வகையில் தென் மாவட்டங்களில் செயலாளர்களை ஒன்றுக்கூட்டி கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். வாய்ப்பு வரும்பொழுது அதை தலைமைக் கழகத்துக்கு தெரிவிப்போம். அதே நேரத்தில் தென் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த தேவையான விஷயங்களையும் போராடிக் கேட்டுப் பெறுவோம்.

மதுரை தொகுதியின் எம்,பியாக நீங்கள் போட்டியிடப் போவதாக உங்களைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். நீங்களோ மெளனமாய் இருக்கிறீர்கள். மெளனம் சம்மதத்தின் அறிகுறியா...?நான் முன்பே சொன்னதுப் போல கட்சித் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை ஏற்றுக் கொள்வதுதான் திமுகவின் மரபு. நான் ஏற்றியிருக்கும் தென்மண்டல
அமைப்புச் செயலாளர் பதவிகூட, தலைவரும் பேராசிரியரும் இணைந்து பேசி எடுத்த முடிவுதான். அதே போல கட்சி கட்டளை இட்டால், கண்டிப்பாக மதுரை
தொகுதி எம். பி யாகப் போட்டியிடுவேன்.
---------------------------------------------------------------------------

சாருநிவேதிதா தன் இலக்கியவாரிசாக உங்களை அறிவித்தார். அவரை எப்படி திருப்திப்படுத்தினீர்கள்?

சாருதான் வாரிசென அறிவித்தார். ஆனாலும் நான் அவரோட வாரிசு இல்லை. பாலியல் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை உடைக்கிற பணியை அவருடைய எழுத்து
செய்வதில்லை. பாலியல் வக்கிரம் மட்டும்தான் அவர் செய்வது. ஏறக்குறைய எழுத்தில் வன்புணர்ச்சி. என்னுடைய எழுத்துக்கள் விளிம்புநிலை மக்களின் பாலியல் உறவுகள் சார்ந்தவை. இரண்டு பேருடைய பயணமும் வேறு வேறு பாதையில். அப்புறம் எப்படி நான் அவருடைய வாரிசுங்கறது? எனக்கு இத்தனை நாள் கழிச்சும் புரியவில்லை.

இதைவிடப் பெரிய கொடுமை சாருநிவேதிதான்னா சூப்பர் பிகரா இருக்கும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்னோட "மண்பூதங்கள்" சிறுகதைத் தொகுதி வெளியிட்டுக்கு சென்னை வந்தப்ப, "இதுதான் சாரு நிவேதிதா"ன்னு ஒரு பெரியவரைக் காட்டினாங்க. என் காதல், காமம் எல்லாம் மளார்ன்னு ஸ்பார்ட்டிலேயே செத்துப் போச்சு. தவிர, கோமுன்னா ஏதோ மாமின்னு நெனச்சேன்னு ஒரு பெருசு என்கிட்ட சொல்ல, தானிக்கும் தீனிக்கும் சரியா போச்சு.

நன்றி. கல்கி 15.03.2009 இதழ்

18 பின்னூட்டங்கள்:

At Tuesday, 17 March, 2009, சொல்வது...

suuuuper

 
At Tuesday, 17 March, 2009, சொல்வது...

ரவி, ரெண்டுல எது அதி சூப்பர் ?

 
At Tuesday, 17 March, 2009, சொல்வது...

முதல் விஷயம் அப்பட்டமா புரியுது! வேற வழியே இல்ல, அண்ணின்னு பார்க்காம ஆட்டோ அனுப்பிட வேண்டியது தான்.
2 வது விஷயம் புரியலை. தயவு செய்து புளி போட்டு விளக்கவும்:-)

 
At Tuesday, 17 March, 2009, சொல்வது...

//இதைவிடப் பெரிய கொடுமை சாருநிவேதிதான்னா சூப்பர் பிகரா இருக்கும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்னோட "மண்பூதங்கள்" சிறுகதைத் தொகுதி வெளியிட்டுக்கு சென்னை வந்தப்ப, "இதுதான் சாரு நிவேதிதா"ன்னு ஒரு பெரியவரைக் காட்டினாங்க. என் காதல், காமம் எல்லாம் மளார்ன்னு ஸ்பார்ட்டிலேயே செத்துப் போச்சு. தவிர, கோமுன்னா ஏதோ மாமின்னு நெனச்சேன்னு ஒரு பெருசு என்கிட்ட சொல்ல, தானிக்கும் தீனிக்கும் சரியா போச்சு.//

:):):):):)
அப்படித் தான் நானும் ரொம்ப நாள் நினைச்சிட்டு இருந்தேன்.புனைபெயர்களில் இப்படியும் ஒரு காமெடி இருக்கத்தான் செய்யுது.

 
At Wednesday, 18 March, 2009, சொல்வது...

சூப்பர் பிகரா? ஹஹா :))

கோமுன்னா நானும் மாமின்னு தான் நெனச்சேன். :))

 
At Wednesday, 18 March, 2009, சொல்வது...

வா.மு.கோமு கொஞ்ச நாட்களாகவே சொல்லிட்டுத் தான் இருக்கார். கல்கியிலே இப்போத் தான் வந்திருக்கு போல! :))))))

 
At Wednesday, 18 March, 2009, சொல்வது...

அபி அப்பா, நான் என்ன சொன்னேன்? அஞ்சா நெஞ்சர் சொன்னதை எடுத்துப் போட்டிருக்கிறேன். அம்புட்டுதான்.
என்னுடைய கமெண்ட் இருக்கா? எதையாவது ஹைலைட் செய்திருக்கேனே? ஆட்டோ அனுப்புகிறேன் என்று பயமுறுத்துவது
அநியாயம்
.
வை.மு. கோமு பற்றி படிக்க இதோ லிங்க. படிச்சி உய்யிங்க,

http://vaamukomu.blogspot.com/

 
At Wednesday, 18 March, 2009, சொல்வது...

மிஸஸ். டவுட், அம்பி அந்தக்காலத்துல வை.மு. கோதைநாயகி அம்மாள் என்ற எழுத்தாளர் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (அம்பி, நோட் தி பாயிண்ட் கேள்விதான் பட்டிருக்கிறேன். வாசித்தது இல்லை)வா.மு. கோமு என்றால் அந்தம்மாள் நினைவு வருது :-)

கீதா, எனக்கு இந்த பெயரே புதுசு. யாழிசை லேகாவின் பதிவில்தான் முதலில் பார்த்தேன்.

 
At Wednesday, 18 March, 2009, சொல்வது...

வா.மு.கோமு பற்றி இப்போத்தான் தெரிந்துகொண்டேன்! :-<>

சாருவை நெறையப்பேர் நல்ல கவர்ச்சியான பேரிளம்பெண் என்றுதான் நெனைக்கிறாங்க போல. :-)))

---------------------

சாருக்கு இப்போ ரொம்ப கெட்ட நேரம் போல இருக்கு பாவம்.

* நான் கடவுள் விமர்சனத்தில், இளையராஜா பாடாத பாட்டை அவர் பாடியதாக சொல்லி மூக்கு உடை வாங்கினார்.

இதுல வேடிக்கை என்னனா, இணையதளத்தில் எழுதும்போது கவனமாக எழுதனும்னு அறிவுரை சொன்னவர் இவர்!!!

அவரும் இதே அறிவுரையை தனக்கும் எடுத்துக்க மறந்துட்டார் பாவம்! ;-(

அதையும் ஏதோ இளையராஜா குரல் மாதிரி இருந்துச்சு அது இதுனு சொல்லி அசடுவழிய சமாளிச்சார். ;-0

இப்போ வ்வ்.மு. கோமுவை வாரிசுனு சொல்லிட்டு வாங்கிக்கட்டிக்கொண்டாரா?!

என்ன கொடுமை இது!! :-(

பேசாமல் வா.மு.கோமு எழுத்து எனக்கு பிடிக்கும்னு சொல்லிட்டு போயிருக்கலாம், சாரு.

எதுக்கு நான் அவர் வாரிசு, இவர் என் வாரிசு என்றெல்லாம், சாரு?

 
At Wednesday, 18 March, 2009, சொல்வது...

ரோட்டோட போற ஆட்டோவை கூப்பிடற சத்தம் கேட்டது... ஓகே, ரைட்ட்!

இரண்டாவது விஷயம்: இன்னுமொரு பதிவிலும் படித்தேன். ஓ போடு. வாமு கோமுவின் பதிவிலும் மேற்படி செய்தியும் கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
At Wednesday, 18 March, 2009, சொல்வது...

சொல்ல விட்டுப்போச்சு; வாமுகோமு பதிவில் வாரிசு என்று தெரிவிக்கப்பட்ட செய்தி தானிருக்கு; அதுக்கு அவர் 'சும்மா எதுகை மோனைக்காக' என்று சொல்லி வைத்திருக்கும் தலைப்பு "வேலி முட்டியும் வாரிசுகளும்"

:-)

 
At Wednesday, 18 March, 2009, சொல்வது...

முதல் விசயம்தான் அதி சூப்பர் !

:)))

 
At Wednesday, 18 March, 2009, சொல்வது...

//At Tuesday, 17 March, 2009, அபி அப்பா சொல்வது...
முதல் விஷயம் அப்பட்டமா புரியுது! வேற வழியே இல்ல, அண்ணின்னு பார்க்காம ஆட்டோ அனுப்பிட வேண்டியது தான்.

//

அட! :)

அண்ணே உங்களுக்குள்ள முழிச்சிக்கிட்டிருக்கிற டெரரரிசம்தான் பலருக்கு உள்ளாற படுத்து தூங்கிக்கிட்டிருக்கு :)))))))))))))))

 
At Wednesday, 18 March, 2009, சொல்வது...

வருண், என்னமோ பேர் பெற்ற எழுத்தாளர் நம்மை வாரிசுன்னு அறிவிச்சாரேன்னு சந்தோஷப்படாம,
இப்படியா நக்கல் அடிப்பது, நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி ஆயிட்டாரு சாரு, எது சொன்னாலும்
குத்தம் கண்டுப்பிடிக்கிறாங்கப்பா.

கே.பி, வேலி முட்டி என்பது அதி போதை தரும் ஒரு சாராய வகை. அதைக் குடித்தால் வேலி
இருப்பதுக்கூட தெரியாமல் திரும்ப திரும்ப போய் முட்டிக்கிட்டு இருப்பார்களாம்- விளக்கம்
போதுமா :-)

ஆயில், அபி அப்பா கட்சி மாறிட்டாரா? அழகிரி ஐயா, தன் கட்சி சனநாயக வழியில் பீடு நடைப் போடுவதை சொல்லி பெருமைப்பட்டிருக்கிறார். அந்த சந்தோஷத்தை எல்லாரிடமும்
பகிர்ந்துக் கொள்ளலாம் என்று இங்கு எடுத்துப் போட்டால், ஆட்டோ வரும், சுமோ வரும் என்று
ஏன் பயமுறுத்துகிறார் என்றே விளங்கவில்லை :-(

 
At Thursday, 19 March, 2009, சொல்வது...

ஆஹா..இதென்ன கலாட்டா :)

கெளம்பிட்டாங்கைய்யா.... கெளம்பிட்டாங்கைய்யா அப்படீன்னு சொல்ல வைக்குது பதிவு.

 
At Thursday, 19 March, 2009, சொல்வது...

2nd மேட்டர் சூப்பர்!!
சாரு வாமு.கோமுவை வாரிசாக அறிவித்தது, நடிகர் சிம்பு, தனுசை தன் நடிப்புலக வாரிசாக அறிவிப்பதற்கு ஒப்பானது. அப்படி செய்தால் தனுஷ் சிம்புவை நக்கலடிக்க மாட்டாரா.
:)

கோமு அவர்களும் 1985 இருந்து இலக்கியம் படைத்து வருபவர்தான்.

 
At Thursday, 19 March, 2009, சொல்வது...

அய்யோ அண்ணி நீங்களும் ஆயிலும் என்னை போட்டு படுத்தாதீங்க்க! நானே குழம்பி போய் இருக்கேன்:-))

 
At Thursday, 19 March, 2009, சொல்வது...

சாரு டவுசர் கிழிஞ்சதுதான் சூப்பர்

 

Post a Comment

<< இல்லம்