Thursday, April 02, 2009

உன் கணவர் உன்னை நேசிக்கிறாரா - ஏகாம்பரிக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ஏகாம்பரி நலமா?
நீ ஏன் பதிவு இடுவதில்லை என்று உன் ஓரே தோழியான என்னை கேட்கிறார்கள். பிலோக்கோ போபியாவுக்கு சிகிச்சை தந்த மருத்துவர், உங்களை பதிவு பக்கமே போகாதே என்றா சொன்னார்? நடுவில் நட்சத்திரமாய் டால் அடித்தாய். போன வருடம் என்றைக்கு தமிழ் வருஷப்பிறப்பு கொண்டாடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துப் போனவள், இரண்டே
முறை மட்டுமே தலையைக் காட்டினாய், பிறகு அட்ரசே காணோமே?

நிற்க, இணைய உலகத்தில் நடக்கும் சிலவற்றை உன்னிடமாவது பகிர்ந்துக் கொண்டு என் சோகத்தை தீர்த்துக் கொள்கிறேன். ஒருமுறை, வீட்டு வேலைகளில் உதவும் உன் கணவர் கூட அவர்கள் வீட்டார் வந்துவிட்டார், சைலண்டாய் ஒதுங்கிப் போய்விடுவார் என்று சொல்லியிருக்கிறாய். ஆனால் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஆண்களுக்கான சமையல் குறிப்புக்கள் என்ற புத்தகமே போட்டிருக்காராம். பேச்சிலர் சமையலுக்கு குறிப்புகள் என்று என்னைப் போல நினைக்காதே!


இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் போட்ட பதிவு படிக்க ஆரம்பித்ததும் முதலில் வந்த சந்தேகம் அது ஏதாவது அறிவியல் புனைக்கதையா என்று! இல்லை என்று தெரிந்ததும் முழுவதையும் படித்து விட்டு நெஞ்சம் இனிக்கவில்லை. ஆனால் கண்கள் பனித்தன. பதிவும் எதைக் குறித்து தெரியுமா, ஆண்டாண்டு காலமாய் சமையலறையில் வேகும் பெண்களுக்கு விடுதலை தந்துவிட்டு, இனி ஆண்கள் சமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


பின்னுட்டங்களில் இணைய உலக ஆண் சமூகமே கண்ணீர் வடித்துவிட்டு, இனி நாங்களும் சோறு வடித்து மனைவிக்குப் போடுவோம் என்று சூள் உரைத்திருக்கிறார்கள். அம்மாவையும், மனைவியும் நேசிப்பவன் சமைக்க மாட்டேன் என்று சொல்லமாட்டான் என்று வேறு போட்டிருந்ததா நானும் அதை டெஸ்ட் செய்துவிடலாம் என்று நினைத்து, மாலை வீட்டுக்கு திரும்பி என் கணவரிடம், சூடாய் காபியை தந்துவிட்டு, "என்னை நீங்கள் நேசிக்கீறீர்களா" என்றுத்தான் கேட்டேன்.


பாவம், சூடான காபியை சட்டை மீது கொட்டிக் கொண்டு விட்டார். சோபா வீணாகிவிடும் என்று துணி எடுத்து துடைத்துவிட்டு, மீண்டும் அந்த கேள்வியை சிறிது மாற்றி ," ஏங்க நீங்க உங்கம்மாவையும், என்னையும் நேசிக்கிறீர்களா? என்று கேட்டதும், மனுஷன் முகம் பூவாய் மலர்ந்துவிட்டது .

"இது என்ன கேள்வி எங்க அம்மா எவ்வளவு படாத பாடு பட்டு என்னை வளர்த்தார்கள்? அவங்களை நேசிக்காமல், அப்கோர்ஸ் உன்னையும் தான் நேசிக்காமல் இருக்க முடியுமா " என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

"நீங்க எங்க ரெண்டு பேரையும் நேசிப்பது உண்மை என்றால், எங்களுக்கு நீங்க சமைச்சிப் போட்டணும். அதுவும் ஒரு மாசம், நானும் சங்கடமான சமையலை விட்டு முழு மூச்சுடன் இலக்கியம் படைக்கப் போகிறேன் என்றேன்.

ஏகாம்பரி! அவர் நம்ம கமல் மாதிரி வாயை திறந்து திறந்து மூடினார். ஏதோ சொல்ல வந்தார். பிறகு தொண்டையை கனைத்துக் கொண்டார்.

"இந்த மாதிரி எல்லாம் பிளாக்குல தானே படிச்சே?" என்று சரியாய் கேட்டதும், நான் தலையை ஆட்டினேன்.

"இந்த மேட்டரில் ஒரு தப்பு இருக்கு. உங்க ரெண்டு பேரையும் நான் சமமாதான் நேசிக்கிறேன். ஆனா எங்கம்மாவுக்கு நான் சமைச்சிப் போட்டா உனக்கு கோபம் வரும். உன்னை உட்கார வைத்து ஒரு மாசம் சமைச்சிப் போட்டா எங்கம்மா வருத்தப்படுவாங்க. நான் சொல்ரேன்னு நினைக்காதே, கண்டதையும் படிச்சி மனச போட்டு குழப்பிக்காதே என்றார். நான் விடவில்லை. ''நீங்கள் என்னை நேசிப்பது உண்மை என்றால் சமையலறைக்கு வந்தே ஆக வேண்டும்" என்று கண்கள் கலங்க கூறினேன்.

சிறிது நேரம் யோசித்தவர், " வேணா இந்த ஞாயிற்று கிழமை நான் சமைக்கிறேன்" என்றார். எங்கள் பேச்சுகளை சுவாரசியமாய் கேட்டுக் கொண்டு தங்களுக்குள் கண் ஜாடை செய்துக்கொண்டு இருந்த பிள்ளை செல்வங்கள், " உவே, உன் சமையலை யார் சாப்பிடுவாங்க? அதுக்கு அம்மா சமையலே பெட்டர்" என்றான் அருமை மகன்.

மகளோ, " அம்மா, போன வருஷம் பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு நாலு நாளு ஊருக்குப் போனியே, அப்ப அப்பா அடிச்ச கூத்து மறந்துப் போச்சா? பாத்திரங்கள் எல்லாம் கருப்பாக்கி, அடுப்பை தீவட்டி மாதிரி எரிய விட்டு, குக்கரோட காப்பர் பாட்டமே கழண்டுப் போயி வேற வாங்குனியே. அப்புறம் தாளிச்ச எண்ணை எல்லாம் சுவரு, தரை எல்லா தெளிச்சி, கிச்சனையே நாஸ்டி பண்ணிட்டாருன்னு புலம்பிக்கிட்டு இருந்தியே. வேணாம், உன் டிச்சை நீயே தோண்டிக்காதே" என்றாள்.

இவை எல்லாம் கேட்டு எனக்கு பயமாகிவிட்டது. முதுகு வலி வேறு பாடாய் படுத்துகிறது. இந்த மனுஷன் சமையல் செய்கிறேன் பேர்வழி என்று கிச்சனை நாற அடித்தால், அந்த எக்ஸ்ட்ரா வேலை எல்லாம் வேலைக்கார பொண்ணு செய்யுமா? பிறகு நான் தானே சுத்தம் செய்ய வேண்டும் என்ற ஞானோதயம் ஏற்பட நான் மேற்கொண்டு பேசாமல் இருந்துவிட்டேன்.

என் மகளோ, இதெல்லாம் ஆரம்பத்துலேயே அப்பாவ டிரெயின் செய்து இருக்கணும். இவ்வளவு வருடம் கழிச்சி சொன்னா அதெல்லாம் செய்ய அவருக்கு உடம்பு வணங்காது என்றாள். அவள் சொன்னத்தைக் கேட்டதும், கொஞ்சம் மனசுக்கு திருப்தியானது. ஏதோ அவளாவது புத்தியாய் பிழைத்துக் கொள்ளட்டும் !


இப்பொழுது புரிகிறதா இணையம் நம் வாழ்வில் எப்படி எல்லாம் விளையாடுகிறது என்று? ஒரு மாசம், அவர் சமைத்துப் போட நான் சமையறை பக்கமே போகாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று மனசு முழுக்க ஏக்கமாய் ஆகிவிட்டது. ஹூம், ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள்

யார் ஒரு மாதம் மனைவிக்கு சமைத்துப் போட போகிறார்கள், ஒரு மாதம் சமையல் செய்த மகானுபவனின் மனைவியின் சோகக்கதைகள் போன்றவை வந்தால் உனக்கு தெரியப்படுத்துகிறேன். அதற்குள் நீயும் உன் கணவர் உன்னை நேசிக்கிறாரா என்று மட்டும் சோதனை செய்துப் பார்!
இப்படிக்கு,
உன் அன்பு தோழி.


எழுத்தாளினி ஏகாம்பரியின் அறிமுகம் இல்லாதவர்கள் "பிலாக்கோ போபியா மற்றும் நட்சத்திரம் ஆகிய லிங்கைக் கிளிக்கிப் படிக்கவும்

Labels:

28 பின்னூட்டங்கள்:

At Thursday, 02 April, 2009, சொல்வது...

"நீங்க எங்க ரெண்டு பேரையும் நேசிப்பது உண்மை என்றால், எங்களுக்கு நீங்க சமைச்சிப் போட்டணும்."
ரெம்பவும் பயமுறுத்துகிறீர்கள்.
என் மனைவி காதில் படாமல் இருக்க வேண்டும்.

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

நல்லாக்கேட்டீங்க.. :))
அட்லீஸ்ட் நம்ம மகள்கள் புத்திசாலியா இருப்பாங்கன்ற கனவில் தான் நாம் மனசத்தேத்திக்கனும் ... கடிதம் கலக்கல்

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

//ஏகாம்பரி! அவர் நம்ம கமல் மாதிரி வாயை திறந்து திறந்து மூடினார். ஏதோ சொல்ல வந்தார். பிறகு தொண்டையை கனைத்துக் கொண்டார்.//

:))))))))))))

//என் மகளோ, இதெல்லாம் ஆரம்பத்துலேயே அப்பாவ டிரெயின் செய்து இருக்கணும். இவ்வளவு வருடம் கழிச்சி சொன்னா அதெல்லாம் செய்ய அவருக்கு உடம்பு வணங்காது என்றாள். அவள் சொன்னத்தைக் கேட்டதும், கொஞ்சம் மனசுக்கு திருப்தியானது. ஏதோ அவளாவது புத்தியாய் பிழைத்துக் கொள்ளட்டும் !//

:------))))))))))))))))))))))))

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

//இந்த மனுஷன் சமையல் செய்கிறேன் பேர்வழி என்று கிச்சனை நாற அடித்தால், அந்த எக்ஸ்ட்ரா வேலை எல்லாம் வேலைக்கார பொண்ணு செய்யுமா? பிறகு நான் தானே சுத்தம் செய்ய வேண்டும் //

இந்தக் கஷ்டத்தை நினைச்சு தாங்க லீவு விட்டும் ஊருக்குப் போக யோசிச்சுகிட்டு இந்த சென்னை வெயில்ல வீட்டுக் கிச்சன் தர்பாரை விட முடியாம அட...கிச்சன் மட்டுமென்ன மொத்த வீட்டையும் கூடத்தான் டேமேஜ் ஆகாம பாதுகாக்க வேண்டி இருக்கு?! என்னத்த சொல்ல?

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

இப்ப என்ன சொல்றீங்க... நாங்கல்லாம் சமைக்கக் கத்துக்கலாமா, வேண்டாமா :)

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

டாக்டர் ஐயா, நல்லா பாருங்க. நானா சொன்னேன் அந்த வார்த்தைகளை?

முத்து, இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் தெளிவாத்தான் இருக்குதுங்க.

ஆயில், என்னுடைய சோகங்களை கண்ணீர் காவியமாய் படைத்திருக்கிறேன். அதுக்கு இத்தனை
ஸ்மைலி போடுவது நியாயமா?

மிஸஸ்.தேவ், ஒரு பெண்ணோட கஷ்டம் இன்னொரு பெண்ணுக்குதாம்மா தெரியும் :-)
கட்டி கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த வாக்கியமுமாய் போகும் பொழுது ஆயிரத்தெட்டு
அட்வைஸ் செய்யதற்கு, தலையை தலையை ஆட்டிவிட்டு, வீட்டையே ரணக்களம் ஆக்கி மடித்து வைக்காத பேப்பர்கள், காய்ந்த துணிகள், நாறும் ஈர டவல்கள், அழுக்கு துணிகள்,
ஈயும் கரப்பானும் துள்ளி விளையாடும் சமையல் அறை... சொல்லாதீங்க.

ஜ். சுந்தர் (முழு பெயர் நாலு முறை தப்பா தட்டிட்டேன்) உமக்கு கல்யாணம் ஆயிற்றா ? ஆம் என்றால் காதலை மனைவிக்கு சொல்லும் வழியாம் சமையல்.
இல்லை என்றால் உங்கள் சமயலறை சாகசத்தைக் கண்டு பெற்றவள், நமக்கே இவ்வளவு செய்கிறானே , நாளைக்கு பொண்டாட்டிய கிச்சனுக்கே அனுப்ப மாட்டானோ என்று உங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கவே யோசிக்க ஆரம்பித்துவிடும் அபாயம் உண்டு.

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

சூப்பர் உஷா மேடம்!
//அவள் சொன்னத்தைக் கேட்டதும், கொஞ்சம் மனசுக்கு திருப்தியானது. ஏதோ அவளாவது புத்தியாய் பிழைத்துக் கொள்ளட்டும்//

:-) எனக்கும் அதே தான் தோன்றியது.

உங்கள் பக்கத்துக்கு வெகு நாள் கழித்து வருகிறேன். நிறைய மிஸ் பண்ணிவிட்டேனோ!

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

என்னத்த சொல்ல!!

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

இதை(மட்டும்) வச்சுப்பார்த்தால்.....
நேசிக்கலைன்னுதான் தோணுது.

வூடு தங்குனாத்தானே சமைக்க முடியும்?

ஆனா....இன்னொரு கோணத்தில் பார்த்தால் அதீதமா நேசிக்கிறாருன்னும் சொல்லலாம்.

வீடு தங்காததால்...... (அவருக்காகன்னு )சமைக்கும் வேலை மிச்சம்:-)))

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

தீபா, ஒன்றும் ஸ்பெஷலாய் எழுதவில்லை. பிலாக்கோபோபியாவும், நட்சத்திரம் லிங்கும் கிளிக்கிப் பாருங்க.

இலவசம், இப்படி ஒண்ணும் சொல்லாமல் போனால் எப்படி?

துளசி, இப்படித்தான் காரணம் கண்டுப்பிடிச்ச்சி நம்மை நாமே தேத்திக்கணும்.

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு!

 
At Thursday, 02 April, 2009, சொல்வது...

ம்ம்ம்ம்ம்ம்ம்????????????????? என்ன சொல்றதுனு தெரியலை! இப்போ எல்லாமே மாறிட்டுத் தானே இருக்கு.

 
At Friday, 03 April, 2009, சொல்வது...

நன்றி சுரேஷ். (கண்ணைத் துடைத்துக் கொண்டு)

கீதா, ஆழ்ந்த யோசனையில் சொல்கிறா மாதிரி இருக்கிறது.

 
At Friday, 03 April, 2009, சொல்வது...

ஆமாம், யோசனை தான், கணவர் சமையலில் உதவி செய்யறதை வச்சு அவர் நேசிப்பை எடை போடணுமானு யோசிச்சேன், அதான் எழுதலாமா, வேண்டாமானு யோசிச்சேன்.

 
At Saturday, 04 April, 2009, சொல்வது...

என் மகளோ, இதெல்லாம் ஆரம்பத்துலேயே அப்பாவ டிரெயின் செய்து இருக்கணும். இவ்வளவு வருடம் கழிச்சி சொன்னா அதெல்லாம் செய்ய அவருக்கு உடம்பு வணங்காது என்றாள். அவள் சொன்னத்தைக் கேட்டதும், கொஞ்சம் மனசுக்கு திருப்தியானது. ஏதோ அவளாவது புத்தியாய் பிழைத்துக் கொள்ளட்டும் !

ஆமாம். இப்போதே உங்கள் மகனுக்காவது ஆரம்பித்து விடுங்கள்.
:):)

 
At Sunday, 05 April, 2009, சொல்வது...

நேசத்தை காட்ட ஆண்களும் சமைக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டத்தான் அது ச"மையல்" கட்டு என்பதா?

சரிதான்..உக்காந்து யோசிக்கிறாங்கப்பா:)

 
At Sunday, 05 April, 2009, சொல்வது...

///மீண்டும் அந்த கேள்வியை சிறிது மாற்றி ," ஏங்க நீங்க உங்கம்மாவையும், என்னையும் நேசிக்கிறீர்களா? என்று கேட்டதும், மனுஷன் முகம் பூவாய் மலர்ந்துவிட்டது .///


///
"இந்த மாதிரி எல்லாம் பிளாக்குல தானே படிச்சே?" என்று சரியாய் கேட்டதும், நான் தலையை ஆட்டினேன்.
///நல்ல புரிதல்:)))))))

 
At Monday, 06 April, 2009, சொல்வது...

எனக்கு கேள்வி கேட்கவே தெரியுமென்பதால் என் மனைவியிடம் நீ என்னை நேசிக்கிறாயா எனக் கேட்டேன். ஆம் உண்மை, அதனால்தான் உங்களுக்கு சமைச்சிப் போடறேன் என்றாள்.
:))

 
At Tuesday, 07 April, 2009, சொல்வது...

சதானந்தன், பொண்ணுக்கு வெளங்கிடுச்சு. பையனும் புரிஞ்சிக்கிட்டா சரி.

//அது ச"மையல்" கட்டு என்பதா?//
ச.சங்கர், நீங்க சொன்னாமாதிரி சமீபத்தில் ஒரு ஆய்வு கண்ணில் பட்டது :-)

மது, புரிதலை புரிந்துக் கொண்டதற்கு நன்னி.

மணியன், யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று மொழிப்பெயர்த்தால் தகுமா ஐயா????

 
At Wednesday, 08 April, 2009, சொல்வது...

//ஏதோ அவளாவது புத்தியாய் பிழைத்துக் கொள்ளட்டும் !
//

ஆக இன்னொரு ஏகாம்பரி உருவாகிறாள்!
இல்லை, உருவாக்கப்படுகிறாள். :))

ஏகாம்பரியை எங்க வீட்டுக்கு வந்து பாக்கச் சொல்லுங்க,

வேலைக்காரி லீவு போட்டா எனக்கு தான் ஆப்பு.(நீங்க தானே அவளை ரெக்ரூட் பண்ணீங்க?) அவ்வ்வ். :))

பி.கு: விம் லிக்விட்டை விட விம் பார் நன்றாக சுத்தம் செய்கிறது, சிக்கனமும் கூட. :))

 
At Thursday, 09 April, 2009, சொல்வது...

:-))

 
At Thursday, 09 April, 2009, சொல்வது...

கலக்கல் பதிவு!

//இந்த மேட்டரில் ஒரு தப்பு இருக்கு. உங்க ரெண்டு பேரையும் நான் சமமாதான் நேசிக்கிறேன். ஆனா எங்கம்மாவுக்கு நான் சமைச்சிப் போட்டா உனக்கு கோபம் வரும். உன்னை உட்கார வைத்து ஒரு மாசம் சமைச்சிப் போட்டா எங்கம்மா வருத்தப்படுவாங்க. நான் சொல்ரேன்னு நினைக்காதே, கண்டதையும் படிச்சி மனச போட்டு குழப்பிக்காதே என்றார். நான் விடவில்லை. ''நீங்கள் என்னை நேசிப்பது உண்மை என்றால் சமையலறைக்கு வந்தே ஆக வேண்டும்" என்று கண்கள் கலங்க கூறினேன். //

என்ன அருமையா ஒரு லாஜிக் சொன்னார். இப்படி கண்ண கசக்கியே ஏமாத்த பாத்தீங்களே? ;)

அது சரி, ஏகாம்பரிய ஏதாவது தூர தேசம் அனுப்பி வச்சுட்டீங்களா? கடுதாசி போடறீங்க? வளர்ந்து வர ஒரு இணையுலக கதாநாயகியை நாடு கடத்தியத வன்மையா கண்டிக்கறோம். சீக்கிரம் கூப்பிடுங்க!

 
At Thursday, 09 April, 2009, சொல்வது...

புரியுது அம்பி புரிகிறது

அமுதா நன்றி. பெயரைப் பார்த்தால் புதுமுகமாய் தெரிகிறதே?

வந்தியதேவன்,
அவங்க பெரிய எழுத்தாளினி. பிளாக் ஆரம்பிக்க எல்லா பிரபலம் போல யோசிக்கிறாங்க, பாவம்!
கவலைப்படாதீங்க, பின்னுட்ட பெட்டிய வைக்காம பிளாக் ஆரம்பித்து எழுதுங்க, ஒரு பிரச்சனையும் வராதுன்னு சொல்லியிருக்கிறேன்.

 
At Sunday, 12 April, 2009, சொல்வது...

அன்புடையீர்!
www.lathananthpakkam.blogspot.com
என்ற எனது வலைப் பூவில் நான் பதிவிட்டிருந்த APS என்ற கட்டுரையை நேரம் கிடைக்கும்போது படிக்கவும்
http://lathananthpakkam.blogspot.com/2009/03/aps.html
.

 
At Thursday, 16 April, 2009, சொல்வது...

Vanakkam Usha. Thank Manju for introducing a good blog. Geetha

 
At Friday, 17 April, 2009, சொல்வது...

லதானந்த் சார், பிலாக்கோபோபியா படிச்சீங்களா :-)


நன்றி கீதா. இதை கிளிக்கிப் பாருங்க. மதுமிதாவை வைத்து ஒரு கதை :-)http://nunippul.blogspot.com/2008/04/blog-post_17.html

 
At Saturday, 18 April, 2009, சொல்வது...

அதப் படிச்சதாலதான் மொதோ கமெண்ட் எழுதினேன். அது இருக்கட்டும். APS படிச்சீங்களா?

 
At Saturday, 18 April, 2009, சொல்வது...

லதானந்த் சார்,
படிச்சிட்டேன்.சும்மாவா சொன்னாங்க, 'அறிவாளிகள் ஓரே மாதிரி சிந்திக்கிறார்கள்" என்று :-)

 

Post a Comment

<< இல்லம்