என் இனிய இணைய எழுத்தாளர்களே.....
நான் முதல் முதலில் எழுத்தாளர் அவதாரம் எடுத்து, திண்ணை இணைய இதழுக்கு அனுப்பிய கதை "பரிசு" வெளியான தேதி, மார்ச், 2002ல் அதற்கு பிறகுதான், யாஹ¥ குழுமங்களில் சேர்ந்து, கதை கட்டுரை என்று எழுதிப்பழக ஆரம்பித்தேன். திண்ணை, தமிழோவியம், பதிவுகள், அம்பலம் டாட் காம், குமுதம் டாட் காம், திசைகள் டாட்காம், அப்புசாமி.காம் என்று கண்ணில் படுகிற இணைய இதழ்களுக்கு எல்லாம் கதைகள் அனுப்பி
அவைகள் வெளியாகத் தொடங்கின.
ஆசை யாரை விட்டது? ஒரு நாலைந்து கதைகள் கல்கி, ஆவிக்கு அனுப்ப, ஆகஸ்ட், 2003ல் என் முதல் கதை ஆனந்தவிகடனில் வெளியாகி, பிறகு அனைத்து அச்சு இதழ்களிலும் கதைகள் வெளியாகத் தொடங்கின. ஆக முதலில் வெளியானவை எல்லாம் இணையத்தில் தான் , பிறகே அச்சு இதழ்களில் !
இந்த பீடிகைகள் எல்லாம் எதற்காக என்றால், இணையத்தில் எழுத ஆரம்பித்து அச்சு இதழில் புகுந்த முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பட்டத்தை நான் போட்டுக் கொள்ளலாமா? என்னுடைய இந்த நாவல், அச்சில் புத்தகமாய் வெளி வர இருக்கிறது. அதில் என்னுரையில் போட்டுக் கொள்ளவே, இந்த சந்தேகம் கேட்கிறேன்.
சரித்திரத்தை மறக்கவோ மறைக்கவோ கூடாது இல்லையா :-)
27 பின்னூட்டங்கள்:
வாழ்த்துக்கள் உஷா. நாவல் எந்தப் பதிப்பகத்தின் மூலம் எப்போது வெளிவருகிறது என்பதையும் அறியத் தாருங்களேன்.
// சரித்திரத்தை மறக்கவோ மறைக்கவோ கூடாது இல்லையா :-)//
வரலாறு முக்கியம் அரசே.
தாராளமாப் போட்டுக்கலாம்:-)
இனிய வாழ்த்து(க்)கள்.
congradz madam
// கார்த்திக் சொல்வது...
// சரித்திரத்தை மறக்கவோ மறைக்கவோ கூடாது இல்லையா :-)//
வரலாறு முக்கியம் அரசே.
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்:))
ஆஹா. மது இல்லையே இங்க!! சரித்திரம் மறக்க்காதவங்க அவன்ங்க தானே.
இந்தச் செய்தியை வரவேற்கிறேன். வரலாறு முக்கியம் பா;)
போட்டுக்குங்க... தளராம பின்னூட்டம் போடும் எங்களுக்கெல்லாம் ராயல்டி குடுத்துருங்க ..ஏன்னா இந்தப் பதிவுலையும் வந்து போட்டுக்கலாம் அப்படீன்னு பின்னூட்ட சஜஷன் குடுக்குறோமுல்ல:)
வாழ்த்துகள்
>>இணையத்தில் எழுத ஆரம்பித்து அச்சு இதழில் புகுந்த முதல் எழுத்தாளர்<<
தமிழை மறக்காமல் சேர்த்துக் கொண்டு முதல் தமிழ் எழுத்தாளர் எனக் குறிப்பிட்டால் பிரசினைகள் இருக்காது.
-மாலன்
ம்ம், நீங்க ப்ரிண்ட் பண்ற வரைக்கும் பொறுமையா இருப்பாங்க, அப்புறம் தான் பஞ்சாயத்தை கூட்டுவாங்க. :)
போகட்டும், எலக்கியவாதி உஷாஜி வாள்க. :))
தாராளமாக போட்டுக்கொள்ளுங்கள், உஷா!
சரித்திரத்தை மறைக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. பெருமையாயிருக்கு. வாழ்த்துக்கள்!!
வாழ்த்துகள், உஷாஜி!
//சரித்திரத்தை மறக்கவோ மறைக்கவோ கூடாது இல்லையா :-)
//
ஆமாம், என்ன மாதிரி வரலாறு அது ;-)
ராமலஷ்மி, கார்த்திக்,துளசி, மிஸஸ்.டவுட், ஆயில்யன்,வல்லி, ச.சங்கர், மாலன் அம்பி, நானானி, பாலா நன்றி
மாலன் சார், திருத்தியதற்கு நன்றி
///ambi said...
ம்ம், நீங்க ப்ரிண்ட் பண்ற வரைக்கும் பொறுமையா இருப்பாங்க, அப்புறம் தான் பஞ்சாயத்தை கூட்டுவாங்க. :)//
அம்பி, அப்படி நடக்குமா? பதிபிக்கப்பட்ட நாவல் பிரபலம் அடைய இதுவல்லவா சிறந்த வழி :-)
வாழ்த்துகள் உஷா மேடம்
//இந்த பீடிகைகள் எல்லாம் எதற்காக என்றால், இணையத்தில் எழுத ஆரம்பித்து அச்சு இதழில் புகுந்த முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பட்டத்தை நான் போட்டுக் கொள்ளலாமா?//
இதுவரை இதற்கு வேறு யாரும் போட்டிக்கு வரமாட்டாங்கன்னு கன்ஃபர்ம் செஞ்சுட்டா நான் வாழ்த்துக்கள் சொல்லிக்க வசதியா இருக்கும்.
அதனால் இந்த விசயத்தை தமிழ் படிக்கும் அனைத்து நல்லிதயங்களும் மற்றும் அவர்களின் கண்களும் ஃபார்வர்டு மெயில் அனுப்பி குறுக்கு விசாரணை செஞ்சுக்குமாறு கேட்டுக்குறேன்.
:-)))
வாழ்த்துக்கள் உஷாஜி
உஷா உங்கள் புத்தகத்திற்கு என் வாழ்த்துக்கள்..:)
கோவி, முத்து நன்றி
சென்ஷி, ஸ்டாப் ஸ்டாப். அம்பிக்கு சொன்னதுதான், அங்கங்க ஏதாவது விவாதம் கிளம்பி, நாலு பேரு கண்ணுல் பட்டு, எம் புத்தக விற்பனையும் கூடுமில்லே. அதனால இந்த பதிவே ஏன் போட்டேன்னு இப்ப யோசிச்சிக்கிட்டு இருக்கேன் :-))))))))
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் உஷா, மறக்காமல் வெளிவரும் நாள், பதிப்பகம் விவரங்கள் சொல்லுங்க.
வாழ்த்துக்கு நன்றி ராதாகிருஷ்ணன், கடையம் ஆனந்த், அபுல்.
’பரிசு” ங்கிற தலைப்புல நானும் ஒரு கதை எழுதியிருக்கேன். படிங்க. பிடிச்சிருந்தா சொல்லுங்க
சைனண்ட்டா இத்தனை வேலை நடக்குதா...
வாழ்த்துகள்...வாழ்த்துகள்...
உங்களை ஆரம்பத்தில் இருந்து படித்து வரும் அப்பாவி வாசகர்களுக்கு ராயல்டியில் எதுவும் பங்கு தருவதாக எண்ணமிருந்தால் இந்த ஏழையின் பெயரை பட்டியலில் முதலாவதாக சேர்த்துக்கொள்ளவும்....
பின்னாளில் வாசகனுக்கு ராயல்டியில் பங்கு கொடுத்த எழுத்தாளர்னு போட்டுக்கறது எவ்ளோவ் நல்லா இருக்கு...யோசிங்க...யோசிங்க...ஹி...ஹி..
லதானந் சார், உங்க "பரிசு" தேடிப் பார்த்தேன் தென்படவில்லை. லிங்க் ப்ளீஸ்.
யட்சன், அப்ப ராய்ல்ட்டி எக்கசக்கமாய் வரும்ன்னு சொல்றீங்க :-)))))))))))))
வாழ்த்துகள் சகோதரி.
வாழ்த்துகள்..
மனமார்ந்த வாழ்த்துக்கள் உஷா.
நாவல் எந்தப் பதிப்பகத்தின் மூலம் எப்போது வெளிவருகிறது என்பதையும் அறியத் தாருங்கள்.
Post a Comment
<< இல்லம்