Thursday, January 18, 2007

புரியாத புதிர்- 19-1-07

எல்லா பெண்களும் வீட்டில் உள்ள ஆண்களின் நல்வாழ்வுக்காக வாசலில் விளக்கேற்றி வைத்து வரும் ஆபத்தை தடுத்து நிறுத்திப் போராட தொடங்கியுள்ளனர். நன்றி தினமலர் செய்தி. முன்பு இப்படிதான் பச்சை புடைவை கூத்து நடந்தது. வேலைக்காரம்மாகூட பச்சை புடைவை கொடுத்தால், வேலையில் இருந்து நின்றுவிடுவேன் என்று மிரட்டும் அளவிற்குக்கு நிலைமை இருந்தது.

இருந்தால்போல் திருப்பதி தாயாரின் மாங்கல்யம் கழண்டு விழுந்து விட்டது என்ற வதந்தி பரவியது. இனி அவ்வளவுதான், இனி ஊரில் உள்ள அனைத்து இந்து பெண்களுக்கும் அதே கதி. அதனால் எல்லா ஸ்தீரிகளும் பெருமாளிடம் கணவனுக்கு நீண்ட ஆயுளை தரும்படி வேண்டிக் கொண்டு புதிய மஞ்சள் சரடை கட்டிக் கொள்ளும்படி ஆள் ஆளுக்கு வேண்டுக்கோள் விடுத்துக் கொண்டு இருந்தனர். ஆரம்பித்தது பத்திரிக்கை செய்திகள்தான்.பிறகு இங்கிட்டும் ஆரம்பித்து,நானும் சுவாரசியமாய் கேட்டுக் கொண்டு இருந்தேன்.

அதைவிட தினமும் நாலு ஈ மெயில் பயமுறுத்திக் கொண்டு இருந்தன. வந்தவை அனைத்தும் அமெரிக்க தோழிகளிடமிருந்து. அமெரிக்கா என்றால் கானடா, கலிபோர்னியா எல்லா அடக்கம். உங்களுக்கு செளதி அரேபியா,குவைத், அபுதாபி எல்லாம் துபாய் இல்லையா அதுபோல!
போதாக்குறைக்கு பார்க்கிறவங்க எல்லாம் கழுத்தையே பார்க்க வேண்டியது. எல்லாரிடமும் கயிறு போடுகிற பழக்கம் இல்லை.செயிந்தான் என்று சொல்லிக்கிட்டு இருந்தாலும், எனக்கும் லேசாய் ஒரு நப்பாசை, கழுத்தில் இருக்கும் தாலி செயின் (மஞ்ச கயிறு இல்லை) அவுட் ஆப் பேஷன் ஆயிடுச்சே, மாத்திடலாமா என்று, கேட்டதும், தல கேல்குலேட்டரில் செய்கூலி, சேதாரம் எல்லாம் கணக்கு போட்டுவிட்டு, இதெல்லாம் மூட நம்பிக்கை என்று அறிவித்துவிட்டார். ஹ¥ம்...
.
இதுல புரியாத புதிர்- தலைப்பு வந்தாச்சு. அது என்னங்க. பொண்டாட்டிங்களுக்கு ஆபத்து. புருஷனுங்க. ஒரு மண்டலம் ஒரு பொழுது இருக்கணும். விளக்கேற்றி பூஜை செய்யணும்னு யாரும் கிளப்பி விட்டதா சரித்திரமே இல்லை. அது சரி. அப்படி ஏதாவது சொன்னா
சந்தோஷமா விளக்கு ஏத்தி வெச்சிட்டு, சிரியர்ஸ்ன்னு கொண்டாட ஆரம்பிச்சிடுவாங்க இல்லே?

37 பின்னூட்டங்கள்:

At Thursday, 18 January, 2007, சொல்வது...

//புருஷனுங்க. ஒரு மண்டலம் ஒரு பொழுது இருக்கணும். //

கெளம்பீட்டாங்கைய்யா! கெளம்பீட்டாங்கைய்யா!

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

ஹூம் என்ன பண்ணுவது எங்க கணக்கெல்லாம் கால்குலேட்டர் தான் "பளிச்" என்று காண்பிக்கிறது.
:-))

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

//விளக்கேற்றி பூஜை செய்யணும்னு யாரும் கிளப்பி விட்டதா சரித்திரமே இல்லை. //

அதெல்லாம் மார்க்கெட்டிங் டெக்னிக் மாமி. இதுக்கான ஷாப்பிங் எல்லாம் செய்யறதுக்கு ஆம்பிளைங்களுக்கு சுறுசுறுப்பு போதாதே.இது எல்லாம் பரப்பறதே அந்த ஷாப்பிங் ஸ்ப்ரீக்குத்தானே (ஹலோ ஸ்ப்ரீன்னு சொன்னேன் ஸ்த்ரீ இல்லை)

அதனாலதான் அவங்க சரியா டார்கெட் மார்க்கெட் செக்மெண்டை ஐடெண்டிபை பண்ணிட்டு அப்புறமா இந்த மார்க்கெட்டிங்க் காம்பெயினை ஸ்டார்ட் பண்ணறாங்க.

(எப்படி என் தமிழ் பின்னூட்டம்!!)

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

இப்பத்தான் பாலாபாய் பதிவுல
\\பத்த வச்சிட்டியே பரட்ட\\ன்னு பின்னூட்டம் போட்டுட்டு வந்தா அதுக்குள்ள உஷா மேடம் கேள்விய கேட்டுப்புட்டாங்க.

இதப்பத்தி விரிவா எழுத இருக்கறதால இப்பத்திக்கி அப்பீட்டு விட்டுக்குறேன்

மறுக்கா கண்டிப்பா வருவேன்.


சென்ஷி

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

//இதுல புரியாத புதிர்- தலைப்பு வந்தாச்சு. அது என்னங்க. பொண்டாட்டிங்களுக்கு ஆபத்து. புருஷனுங்க. ஒரு மண்டலம் ஒரு பொழுது இருக்கணும். விளக்கேற்றி பூஜை செய்யணும்னு யாரும் கிளப்பி விட்டதா சரித்திரமே இல்லை. அது சரி. அப்படி ஏதாவது சொன்னா
சந்தோஷமா விளக்கு ஏத்தி வெச்சிட்டு, சிரியர்ஸ்ன்னு கொண்டாட ஆரம்பிச்சிடுவாங்க இல்லே? //

hehe...maybe in dreams it is possible!

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

மேபி இப்படியும் இருக்கலாம், அதாவது வேலைக்குச் செல்லும் ஆண்களுக்குத் தானே பிரச்சனை வரவாய்ப்புள்ளது. வீட்டில் உட்கார்ந்து சீரியல் பார்த்து அழுதுக் கொண்டும். ப்ளாக் எழுதிக்கொண்டும் இருப்பவர்களுக்கு(;-)) பூமி அதிர்ச்சி போன்ற பெரிய பிரச்சனைகள் மட்டும் தானே வரமுடியும்.

வேண்டுமானால் இன்னும் ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில்(அவ்வளவு ஆகுமா?) பையன் வீட்டில் உட்கார்ந்து பெண் சம்பாதித்து வருவது அதிகரிக்குமானால் நீங்கள் கேட்ட அந்த விஷயம் நடக்கும்.

இதெல்லாம் அமேரிக்காவில் நடப்பதில்லை என்பதை ஒரு கருத்தாக வைக்கிறேன் ஏனென்றால் நான் கேள்விப்பட்டவரை பிரிட்டினி ஸ்பியர்ஸ் குழந்தையை கீழே போட்டுவிட்டார் அதனால் புருஷனுக்கு ஆபத்து போன்றவை நடந்ததில்லை.

ஏனென்றால் அங்கே இந்த விஷயம்(பெண்கள் வேலைக்குப் போவது - ஆண்கள் வீட்டில் இருப்பது) அதிகம். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கடைசியாக ஒன்று. என்னதான் பெண்ணியவாதியாக(நாத்தீகவாதியாக) இருந்தாலும் தாலிச்சரடை மாற்றிப் போடலாம் என்ற முடிவிற்கு நீங்கள் வருவதைப் போல மாற்றி அணிந்து கொள்வதற்கு திருமணங்கள் ஆண்களுக்கு எதுவும் வழங்குவதில்லையே. மேலும் இலவசக் கொத்தனார் சொன்னது கூட ஒரு காரணமாக இருக்கலம்.

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

மற்றபடிக்கு விளக்கேத்துவதென்பதெல்லாம் சும்மா ஸ்டைலுக்கு. நானும் என் புருஷனை மதிக்கிறேனாக்கும், என்று பறைசாற்ற. மேபி புருஷன் இறந்ததும் மறுமணம் செய்து கொள்வதும் அதை சமூகம் ஏற்றுக்கொள்வதும் சர்வ சாதாரணமாக ஆகும் போது மக்களிடம் இந்த விளையாட்டு எடுபடாது.

ஏன் எதுத்த வீட்டுக்காரி செய்றா நீ செய்யலை என்று கணவன் கேட்டுவிடக்கூடாதில்லை அந்த பயம் தான். ;-)

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

நல்லதா ஒரு வதந்தி இருந்தா யோசிச்சு சொல்லுங்களேன்...கொஞ்சம் கிளப்புவோம்....

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

மோகன் தாஸ், அது பாயிண்டு ;-) நாளைக்கு தெருல போஸ்டர் பார்த்துக்கிட்டு எதிர்ல வர சைக்கிள்ல மோதிக்கிட்டு மண்டைய
ஒடச்சிக்கிட்டா கூட பழி விளக்கு ஏற்றவில்லை அதனாலத்தான் என்று சொல்லிடுவாங்க. அதனால எதுக்கு வம்பு :-)
ஆனா, முதல் பின்னுட்டம் படித்து உள்வாங்கிக் கொள்ள இப்ப தெம்பில்லை :-) நவீன இலக்கியங்களை தேடி
தேடி படிக்கீறீர்களா?

துர்கா,ஸ்மைலி இல்லையா :-))))

இலவசம், நீங்க தமிழ்ல ஏதோ சொன்னீங்க, பொருள் புரியலைங்க :-)

சென்ஷி, மீண்டும் வாங்க வாங்க. பலரின் சிந்தனைகளை நாம் கிளறிக் கொண்டு இருக்கிறோம்.

வடூவூர் குமார், ஒரு ஆணோட மனம் ஒரு ஆணுக்குதான் புரியும்

நாமக்கலாரே, ஒரு பொழுது, ஒருவேளை சாப்பாடைக் குறைத்தால் கொழுப்பு குறையும்.

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

சரிங்க..

பொம்பளங்களுக்கு ஆபத்து வராஅம் பாதுகாக்க, இனிமே வீட்லே பேன் ஸ்விட்சை ஆம்பளைங்க மட்டும்தான் போடணும்னு ஒரு வதந்தி கிளப்பிடலாமா?

 
At Thursday, 18 January, 2007, சொல்வது...

//பொம்பளங்களுக்கு ஆபத்து வராஅம் பாதுகாக்க, இனிமே வீட்லே பேன் ஸ்விட்சை ஆம்பளைங்க மட்டும்தான் போடணும்னு ஒரு வதந்தி கிளப்பிடலாமா?//

வேணாம். டி.வி. ரிமோட்ட கையால தொடக்கூடாதுன்னு சொல்லி பாருங்க...சும்மா காமெடிக்கு:-))

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

உஷா...இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு சொல்லனுமா என்ன? மூடநம்பிக்கைன்னு சொல்றத விட விளம்பர வியாபாரத் தந்திரம். பச்சைச் சேலை....தாலிச்சரடு...சரி. விளக்கேத்தி வெச்சா யாருக்கு என்ன வியாபாரம்? எண்ண வியாபாரமா? சரியா வரலையே. ஏன்னா...எல்லார் வீட்டுலயும் விளக்கு ஏற்கனவே இருக்கும்.

ஆனா...எல்லாமே பெண்களைக் குறி வைத்துத்தான் இருக்கும். இந்தக் கொடுமைகள் கர்நாடகாவுல நடக்குறாப்புல தெரியலை. நடந்தாலும் எனக்குத் தெரியலை. தெக்கத்திப் பெண்கள் ரொம்பவே செண்டிமெண்டு. அதான் அவங்கள பயமுறுத்துறாப்புல அண்ணனுக்கு அல்வா, கணவனுக்குக் கல்கண்டு, தம்பிக்கு தயிரு, அப்பாவுக்கு அவுலுன்னு கதை விடுவாங்க. கண்டுக்காம இருக்குறது ரொம்பவும் நல்லது. இதே மாதிரி இன்னொரு ஏமாத்தல் அஷய திதி. திருந்துங்கடான்னா யாரு கேக்குறா?

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//ஒரு மண்டலம் ஒரு பொழுது இருக்கணும். //

அப்படியினா என்ன உஷா? உண்மையில் புரியவில்லை :(

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

ஒரு மண்டலம் என்பது 24 நாட்கள்

அல்லது கணவருக்கு மண்டகப்படி கொடுத்தது மறக்கும் வரைக்கும்

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//நாமக்கலாரே, ஒரு பொழுது, ஒருவேளை சாப்பாடைக் குறைத்தால் கொழுப்பு குறையும்.
//

அதென்னவோ வாஸ்தவம்தான். நம்ம உடம்புக்கும் நல்லது இல்லையா!

ஒரு பொழுதுன்னு சொல்லிகிட்டு மீதி வேளையில நல்லா ஃபுல் கட்டு கட்டுறவங்களுக்கு ஒரு பயனும் இருக்காதே!

ஒரு பொழுதின்போது பாலும், பழமும் சாப்பிடலாம் என்று ரெண்டு ஆப்பிள், 4 பச்சை வாழைப் பழம், 2 கிளாஸ் பால் (அதாவது 8 மில்க் பிக்கிஸ் பிஸ்கெட்) சாப்பிடலாம்தானே!

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//ஒரு மண்டலம் என்பது 24 நாட்கள்//

ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் அல்லவா?


//அல்லது கணவருக்கு மண்டகப்படி கொடுத்தது மறக்கும் வரைக்கும்//

:)))

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

ராகவா, அதைதானே நாங்களும் கேட்கிறோம். மனைவி நல்லா இருக்கணும்னு ஒரு பூஜை இருக்கா :-)

செந்தழல், யோசி என்றால் எல்லாம் யோசிக்க வராது. அதெல்லாம் தானா வரணும்.

சுரேஷ், வீட்டுல ஒரு சீரியலும் வ்டுவது இல்லை என்று கேள்விப்பட்டேன். விசாரித்ததற்கு சீரியலுக்கு
கதை எழுத பயிற்சி எடுப்பதாக சொல்லியிருக்கீங்களாம் ;-)

சென்ஷி சேம் சைட் கோல் போட்டா ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் இது பின்னாத்தலாருக்கு நீங்க கொடுத்த பதிலுக்கு எதிர்வினை :-)

ரவியா, ஒருபொழுது என்பது சென்னை தமிழ், அதாவது ஒரு பொழுது பெரும்பாலும் இரவு சாப்பிடாமல் விரதம் இருப்பது,
அதைத்தான் நாமக்கல் சிபிக்கு கொழுப்பு குறையும், அதாவது எடை குறையும் என்றேன். மற்ற விவரங்களை சென்ஷி சொல்லி
விட்டாள். நன்றி சென்ஷி.

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

நாமக்கல்லாரே, ஐயப்பனுக்கு மாலை போடுவீங்களோ, மண்டலம் என்றால் நாற்பத்தி எட்டு நாள் என்று திருத்தியதற்க்கு நன்றி.

எப்படியோ இந்த சப்பை பதிவுக்கு இம்புட்டு பின்னுட்டமான்னு என் கண்ணையே என்னால நம்ப முடியலை, எப்படியோ கண்ணுப் போட்ட கொள்ளி கண்ணு திஸ்டி கழிஞ்சி போச்சு :-)

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//அதைத்தான் நாமக்கல் சிபிக்கு கொழுப்பு குறையும்//

இதை திரும்ப திரும்ப ஏன் சொல்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

:-))

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

நாமக்கல்லாரே, என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் என்ற பதிவில் இனி ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் எழுதப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். கொலஸ்ட்ரால் என்ற் ஆங்கில வார்த்தையை பயன்படுத்த விருப்பமில்லாமல் கொழுப்பு என்றேன்.
போதுமா விளக்கம் :-))))))

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//இனி ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் எழுதப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். கொலஸ்ட்ரால் என்ற் ஆங்கில வார்த்தையை பயன்படுத்த விருப்பமில்லாமல் கொழுப்பு என்றேன்.
போதுமா விளக்கம்//

ஓ! அப்படியா! அப்ப சரி!

நாமக்கல் சிபிக்கு கொழுப்பு என்பதைத்தான் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறீர்களோ என்று நினைத்தேன்!

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

"ஈ மெயில், செயின் , அவுட் ஆப் பேஷன், கேல்குலேட்டரில்"

இதெல்லாம் ஆங்கில வார்த்தைகள் கிடையாதா, இமெயிலை "ஈ" போட்டு எழுதுவதாலும், கால்குலேட்டரை "கே"ல்குலேட்டர் என்று எழுதுவதாலும் தமிழாகிவிடாது என எனது சிறுமூளை நினைக்கிறது.

விளக்குவீர்களா?

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

பதில் பெருசா இருந்ததால பதிவா போட்டுட்டேன் சாரி.. :-))

http://senshe-kathalan.blogspot.com/

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//"ஈ மெயில், செயின் , அவுட் ஆப் பேஷன், கேல்குலேட்டரில்"

இதெல்லாம் ஆங்கில வார்த்தைகள் கிடையாதா, இமெயிலை "ஈ" போட்டு எழுதுவதாலும், கால்குலேட்டரை "கே"ல்குலேட்டர் என்று எழுதுவதாலும் தமிழாகிவிடாது என எனது சிறுமூளை நினைக்கிறது.

விளக்குவீர்களா?
//

அதானே!

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

மோகன் தாஸ், ஓரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடுபா. இதுவரை ஊரு ஒலகத்துல நியூ இயர் ரெசயூஷன்
நாலு நாளு தாக்கு பிடிச்சதா சரித்திரம் உண்டா? அடுத்து இன்னொரு தீர்மானம் கூட போட்டு இருக்கேன், இனிமே ஒழுங்கா தமிழ் எழுதுகிறேன்னு. அது கண்ணுல விழுந்துச்சா? இப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்கிறது நல்லா இல்லே . அழுதுடுவேன்.:-)

எங்கே அந்த இலவச கொத்தனார்? பின்னுட்டம் போட ஹெல்ப் செய்யட்டா என்று வாய் வைக்கும்போதே நெனச்சேன் :-)

நாமக்கல்லாரே, நீங்கோ ஒரு அப்பாவி (கவனிக்க அட பாவி இல்லை), கண்ணாடியை நன்கு துடைத்துவிட்டுப் படிக்கவும். உங்களுக்கு கொழுப்பு என்று சொல்வேனா?
இப்படிக்கு,
இன்னும் ஒரு அப்பாவி.


சென்ஷி - இந்த மாதிரி பெயர் வைத்தால் குழப்பாதா? விளக்கம் போட்டு விட்டேன். தம்பி, விளக்கு வைத்தால் உனக்கும் ஒன்று சரியா :-)

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//சென்ஷி - இந்த மாதிரி பெயர் வைத்தால் குழப்பாதா? விளக்கம் போட்டு விட்டேன்.//

இது எங்க போய் முடியுமோ தெரியல

//தம்பி, விளக்கு வைத்தால் உனக்கும் ஒன்று சரியா :) //

தேங்க்ஸ்க்கா...

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//இப்படிக்கு,
இன்னும் ஒரு அப்பாவி.
//

நம்புகிறேன்!

எல்லாரும் நம்பிடுங்கப்பா!

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

சென்ஷி, யாருடைய தனிப்பட்ட , சொந்த விஷயங்கள் எனக்கு தேவையில்லாதவை. உங்களுடான என் நட்பு என்பது இந்த பின்னுட்ட பெட்டிவரைத்தான். அதைத்தாண்டி, மெயில், ஊருக்கு சென்றால் நேரில் சந்திப்பது இவை எல்லாம் மிக தேர்ந்தெடுத்துதான். தவறாக எதுவும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

சிபி, உங்கள் பின்னுட்டம் வேண்டாமே!

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

உஷா!
நீங்கள் கூறுவது உண்மையே!
குறிப்பிட்ட நாளில் பெண்களுக்குமாக ஆயுள் வேண்டி; ஏதாவது கிளப்பி விட்டுத்தான் பாருங்களேன்.
யோகன் பாரிஸ்

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

இப்படி ஒரு கோலாகலம் நம்ம ஊர்ரில நடந்து இருக்கு. நான் பாக்காம விட்டேனே.
அலுப்பாக இல்லை இவங்க செய்யறது.?
நீங்க சொல்லற மாதிரி,
புருஷர்கள் செய்யட்டுமே.
அப்படி ஒரு காலம் வருமா. அடுப்பில வெண்டைக்காயைப் பார்த்துக்கோங்கனு சொன்னா அது கருகும் வரை பார்த்துக் கொள்ளுகிறவங்களோட இல்லை குடித்தனம் செய்யரோம்:-)

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//மேபி இப்படியும் இருக்கலாம், அதாவது வேலைக்குச் செல்லும் ஆண்களுக்குத் தானே பிரச்சனை வரவாய்ப்புள்ளது. வீட்டில் உட்கார்ந்து சீரியல் பார்த்து அழுதுக் கொண்டும். ப்ளாக் எழுதிக்கொண்டும் இருப்பவர்களுக்கு(;-)) பூமி அதிர்ச்சி போன்ற பெரிய பிரச்சனைகள் மட்டும் தானே வரமுடியும்//
அப்படிங்களா மோகன்தாஸ் சார்? அப்போ இந்த விண்வெளி பயணத்தின் போது உயிரை விட்டாங்களே நம்ம கல்பனா சாவ்லா, அது பத்தின செய்திகள் எதையுமே நீங்க கேள்விப்படலயோ?
நான் கூட செய்தித்தாள்களில் 10வது, 12வது முடிவுகள் எல்லாம் பார்த்து நம்ம பெண்கள் எக்கச்சக்கமா பாஸ் பண்றாங்களே அதும் எக்கச்சக்கமா மதிப்பெண்களோட பாஸ் பண்றாங்களே அவங்க எல்லாம் அப்படியே கல்லூரிகளுக்கு படையெடுத்து அப்படியே அங்கிருந்து கேம்பஸ் இன்டர்வ்யூனெல்லாம் ஏதோ சொல்றங்களே அது வழியா பன்னாட்டு கம்பெனிகளுக்குள்ள பூந்துடறாங்க போலன்னு இல்ல தப்பா நினைச்சுட்டேனே, அப்படி எதும் இல்லீங்களா? அத்தனை பேருமா சீரியல் பார்க்க போயிடறாங்க?
தவிர நாட்டுல நடுத்தர வர்க்க குடும்பங்கள்ள ரெண்டு பேரும் சம்பாதிக்கும் குடும்பங்களோட எண்ணிக்கை அதிகரிச்சுட்டதா சொல்றாங்களே, அவங்க எல்லாரும் ஒரு வேளை வீட்டுலயே உட்கார்ந்துகிட்டு பீடி சுத்தறது மாதிரியான குடிசைத்தொழில்கள் மூலமா சம்பாதிக்கறாங்க போல. கலக்கறீங்க போங்க.
உஷா மேடம், ராகவன் சொல்றா மாதிரி நம்மூர் பெண்கள் கொஞ்சம் ஒவர் சென்டிமென்டல்தான். ராம நாரயணனோட படமெல்லாம் கூட நம்ம தாய்குலத்தை டார்கெட் பண்ணித்தான் வரும். கொஞ்ச நாளாகும் நாம இதையெல்லாம் தாண்டி வர. அது வரை இது போன்ற காமெடிகளுக்கு பஞ்சமே இருக்காது.

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

:))
இப்போ ஒகே?

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுறலாமா இல்லை இன்னும் கடிச்சு கொதறலாமா என்று நினைத்தேன். இப்போதைக்கு கொஞ்சமா கடிப்போம்னு வர்றேன்.

லஷ்மி முதலில் ஒரு விஷயம் உறுதியாச் சொல்லிக்கிறேன். இந்தப் பதிவும் சரி அதற்குப் நான் போட்ட பின்னூட்டமும் சரி என் பாஷையில் சொல்லணுனா ஜல்லி தான்.

சரி அப்படியே இன்னமும் கொஞ்சம் ஜல்லியடிச்சிட்டுப் போயிருறேன்.

//நம்ம கல்பனா சாவ்லா //

இந்த விஷயம் செத்துப்போன அந்தம்மாவிற்குத் தெரியுமா. சும்மா வம்பிழுக்கலை திரும்பவும் சொல்றேன் வேற ஆளை சொல்லுங்க ஏன் ஜெயலலிதாவையே கூட ஒத்துக்குறேன் கல்பனா சாவ்லாவையெல்லாம் கம்பேர் பண்ணாதீங்க ப்ளீஸ். அவங்கல்லாம் அமேரிக்கப் பிரஜை, ஒன்னுக்கிடக்க ஒன்னு நான் சொல்லப்போக சிஐஏ வந்து அள்ளிட்டுப்போயிடப்போறாங்க.

சரி மேட்டருக்கு, பொண்ணுங்க நல்லா படிக்கிறதுக்கு, காம்பஸ்(குத்துறதில்லைன்னா) நீங்க சொல்ற கேம்பஸ் இண்டர்வியூ சரிதான், அதில் கிழிச்சி பன்னாட்டு கம்பெனிக்குள் பூந்து புறப்படும் பெண்களை விட, சீரியல் பார்த்து அழும் அம்மணிகளின் சராசரி அதிகமாத் தான் இருக்கும். (இதற்காகத் தானே இன்றைய பெண்ணியவாதிகள் போராடுறதேங்கிறேன். அவங்களும் வேலைக்குப் போகணும் முடிஞ்சால் புருஷன் தலையில் தட்டி வீட்டில் உட்கார வைக்கணும்ங்கிறதும்.) ஹலோ எக்ஸ்கியூஸ் மீ, நீங்களே கட்டிக்கிட்டிருக்கிற கிணத்திலேர்ந்து வெளியில் வாங்க முதலில்.

இது இந்த இடத்தில் தேவையில்லைன்னாலும், சொன்னா சரியா வராதுன்னாலும் சொல்றேன். வேலைக்குப் போய்ட்டு வந்தும் வீட்டில் சீரியல் பார்த்து மூக்கால் தண்ணீர் விடும் பெண்களை எனக்கு நிறையத் தெரியும்.

எல்லா இடத்திலும் நானே சொல்றது தான், எதையும் பொதுமைப் படுத்த முடியாது. படிச்சு வேலைக்குப் போற பொண்ணுங்க சீரியல் பார்த்துட்டு அழலாம், வீட்டில் குடும்பத்தைக் கவனிக்கும் அம்மணிகள் வேறு உருப்பிடியான வேலை பார்க்கலாம். ஆனால் சதவீதம் நான் சொன்ன பக்கம் தான் நிற்கும்.

இல்ல நிக்காது நீ பொய் சொல்ற, அப்படின்னு அமேரிக்காவை உதாரணம் காட்டி பேசிணீங்கன்னா. சரிதான் ஆசாத் பாய் மாதிரி நானும் சொல்லிக்கிறேன் சல்தா ஹை. என்னால முடியாது.

நான் சொன்னது அத்தனையும் பர்சண்டேஜ்களை அடிப்படையாக வைத்து.(இதனாலெல்லாம் நான் சிறுபான்மை இனத்தினருக்கு எதிரானவன் என்ற முகமூடி பொறுத்தப்படுமாயின். கண்களில் பெருகும் தண்ணீருடன் தாங்கிக் கொள்கிறேன்.) வர்ட்டா

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//எங்கே அந்த இலவச கொத்தனார்? பின்னுட்டம் போட ஹெல்ப் செய்யட்டா என்று வாய் வைக்கும்போதே நெனச்சேன் :-)//

எச்சூஸ் மி. எனி ப்ராப்ளம்? :))

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

//அடுப்பில வெண்டைக்காயைப் பார்த்துக்கோங்கனு சொன்னா அது கருகும் வரை பார்த்துக் கொள்ளுகிறவங்களோட இல்லை குடித்தனம் செய்யரோம்:-)//

வல்லியம்மா, அவரு பாண்டியராஜனுக்கு உறவா? சொல்லவே இல்லையே!

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

இந்த பேசினா பொதுக்கூட்டம் நடந்தா ஊர்வலம்னெல்லாம் சொல்லிக்கறாங்களே, அப்படி நீங்க பின்னூட்டம் போட்டாலே அது மத்தவங்களை கடிச்சு கொதறிட்டதா அர்த்தமா? கலக்கறீங்க போங்க.அப்புறம் உங்களோட அடுத்த கண்டுபிடிப்பு - அமெரிக்க பெண்கள் எல்லாம் சீரியல் பார்த்து அழமாட்டாங்க. நம்மூர் பெண்கள் மட்டும்தான் சீரியல் பார்த்து அழுது மூக்கை சிந்தறாங்க. அடடடடடடா...
//இதற்காகத் தானே இன்றைய பெண்ணியவாதிகள் போராடுறதேங்கிறேன். அவங்களும் வேலைக்குப் போகணும் முடிஞ்சால் புருஷன் தலையில் தட்டி வீட்டில் உட்கார வைக்கணும்ங்கிறதும்//
என்ன ஒரு புரிதல்... அது சரி, எந்த பெண்ணியவாதி வந்து உங்ககிட்ட சொன்னாங்க இப்படி?
இதுக்கு மேலயும் உங்க காமெடிய தாங்க என்னால முடியல. போதும். நிப்பாட்டிக்குவோம். please....

 
At Friday, 19 January, 2007, சொல்வது...

அதெல்லாம் சரி.....பிள்ளையார் பால் குடிச்சதவிடவா இதெல்லாம் பெரிய matter.அவர் எல்லா எடத்த்துலேயும் fatfree,2% and whole milk taste பார்த்த்தார்.அது world லெவெல் .இது ஜு ஜுபி உஷா மனச தேதிக்கோஙக!!!!

 

Post a Comment

<< இல்லம்