Saturday, January 12, 2008

மொக்கை- சில குறிப்புகள்

கீதா நான் என்னமோ சீரீயசாய் பதிவு எழுதுவதாகவும், சும்மா ஜாலியா ஒரு மொக்கை பதிவு போடுமாறு அழைப்பு விட்டிருந்தார். ஏதோ இவராவது நம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறாரே என்று மனம் பூரித்துப் போனது. நான் வலையுலகில் நுழைந்த நேரம், பெரும்பாலோர் நல்ல எழுத்தாளர்கள். அவர்கள் மத்தியில் என் எழுத்து மொக்கையாகத்தான் தெரிந்தது. இப்பொழுது பரவாயில்லை, அதாவது என் எழுத்தில் முன்னேற்றம் தெரிகிறது என்றுச் சொல்வதைவிட, பல புது முகங்கள் நாளும் எழுதுவதைப் பார்த்தால் சின்ன கோடு பெரிய கோடு தத்துவம்தான் :-)

முதலில் மொக்கை என்றால் என்னவென்று விளக்கிவிடுகிறேன். மொக்கைக்கும் உப்புமா பதிவுக்கும் சற்றேறக்குறைய நான்கைந்து வித்தியாசங்கள் உள்ளன என்றாலும், உப்புமாவையும் கொஞ்சம் மெனக்கெட்டு செய்தாலும் அதுவும் சுவையான, பசி தீர்க்கும் உணவாக மாறுவதைப் போல, உப்புமா பதிவுகளும் நன்றாக இருக்க முடியும்.

ஆனால் மொக்கை மொக்கைதான். பக்கத்தை திறந்ததும், இதையா படிச்சோம் என்று, எழுதிய பதிவரின் பெயரை மூளை, ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அடுத்த முறை, என்னதான் கவர்ச்சியான, தலைப்பு போட்டு இருந்தாலும், எச்சரிக்கை விளக்கு தலையில் எரியும்.

மொக்கையன் என்ற பெயர் சில கிராம சப்ஜெட் படங்களில், சாதாரண நடிகர்களுக்கான பெயராய் வரும். அடுத்து மொக்கை பென்சில் என்ற வார்த்தை நம் சிறுவயதில் அதாவது, பென்சில் வைத்து எழுதிய காலத்தில் பாவித்த சொல். பென்சிலை சீவாமல், ஊக்கு மழுங்கும்வரை எழுதி, கடைசியில் இனி சீவினால்தான் ஒழுங்காய் எழுத முடியும் என்ற நிலைக்கு வரும் பென்சிலை மொக்கை பென்சில் என்போம்.

நான் படிக்கும் காலத்தில் பிளேடில்தான் சீவுவோம். ஆனால் வீட்டில் பீளேடு கையில் தர மாட்டார்கள். பெரியவர்கள்தான் பென்சிலை சீவி தருவார்கள். அப்பா ஷேவ் செய்ய வைத்திருக்கும் புது பிளேடில், நைசாய் பென்சிலை சரக் சரக் என்று சீவி, அழகுப் பார்ப்பேன். புது பிளேடு பிடித்து சீவும்பொழுது எப்படியும், ஆள் காட்டி விரல் தோலில் மெல்லிய கோடு விழுந்திருக்கும். அப்பா ஷேவ் செய்யும்பொழுது, புது பிளேடு சரியாய் மழிக்காவிட்டால், மாட்டிக் கொள்ளுவேன். போதாதற்கு என் அண்ணன் விரலை பார்த்து துப்பறிந்து போட்டு
கொடுப்பான். பள்ளியில் யாராவது அரை பிளேடு கொண்டு வந்தால், அதற்கு ஏக டிமாண்டு இருக்கும்.

நான் இன்றும் தொலைப்பேசி பக்கத்தில் துக்ளியூண்டு பென்சிலைதான் வைத்திருப்பேன். எவ்வளவு பேனாக்களை அருகில் வைத்தாலும், சமயத்தில் எதையாவது குறித்துக் கொள்ள வேண்டும் என்றால் எதுவும் அருகில் இருக்காது. கேட்டால்,அப்படி பேனா இருந்ததையே பார்க்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். பென்சில் என்றால், அதுவும் குட்டியூண்டு
என்றால் யாரும் சீண்ட மாட்டார்கள்.

இந்த குட்டியூண்டு பென்சிலைப் பார்த்தாலே எனக்கு சுஜாதாவின் சிறுக்கதை அல்ல அல்ல குறுநாவல் ஒன்று ஞாபகம் வரும். மனைவி தற்கொலை செய்துக் கொண்டாள் என்ற கணவனை, கொலைக்காரனாய் அடையாளம் காட்டுவது இப்படி ஒரு சின்ன பென்சில்தான். கார்பெண்டர்கள், பென்சிலை தங்கள் உளியில் செதுக்குவது போல சீவுவார்கள். அதை வைத்து கணேஷ், வசந்த் கண்டுப்பிடிப்பார்கள். கதையின் பெயர் நினைவில்லை.

என் பங்கிற்கு நானும் மொக்கை பதிவு போட்டாகிவிட்டது. ஒழுங்காய் எழுதும் இந்த நால்வரை மொக்கைப் போட அழைக்கிறேன்
1- குமரன்
2- ஜி.ரா என்ற ராகவன்
3-கானாபிரபா
4- மா.சிவகுமார்

26 பின்னூட்டங்கள்:

At Saturday, 12 January, 2008, சொல்வது...

மொக்கைச் சங்கிலித் தொடரா இப்போ...... தமிழ் வலைப்ப்பூக்களை மொக்கையாலும் காப்பாத்த முடியாதுங்குறது.....உஷா மொக்கைப் பதிவு போடும் போதே தெரிஞ்சு போச்சே. ஆகா!!!!!

அழைச்சிட்டீங்க. நான் அடுத்து போடப்போற பதிவு 2008ல நான் போடப் போற மொதப் பதிவு. அது மொக்கையாத்தான் இருக்கனும்னு இருக்குறப்போ...யார் என்ன செய்ய முடியும்!!!

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

ஆஹா மொக்கைக்கு வரைவிலக்கணம் கொடுத்து எங்களையும் அழைத்திருக்கீங்க.

நான் மொக்கைக்கு என்று தனியாவே பதிவு போடணுமா ;-) முயற்சிக்கின்றேன் உஷாக்கா, நன்றி

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

//நான் படிக்கும் காலத்தில் பிளேடில்தான் சீவுவோம்.\\
படிக்கிற காலத்துல மட்டுமா? பிளேடில்லாமலே இந்த சீவு சீவிட்டிங்களே.

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

மொக்கை பற்றிய இவ்வளவு சிறப்பு செய்திகளுடன் வந்திருக்கும் இந்தப் பதிவு மொக்கையில் சேராது எனத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையால் அடுத்த பதிவாவது மொக்கையாய் போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

எனக்கும் மொக்கைன்னா பென்சில் மேட்டர்தான் ஞாபகத்துக்கு வருது.

நீங்கள் இவ்வளவு சொல்லியும் மொக்கை பதிவுன்னா எனக்கு என்னன்னு தெரியலங்க.

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

//
தாமோதர் சந்துரு said...
//நான் படிக்கும் காலத்தில் பிளேடில்தான் சீவுவோம்.\\
படிக்கிற காலத்துல மட்டுமா? பிளேடில்லாமலே இந்த சீவு சீவிட்டிங்களே.

//
:-))))))))

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

//
இலவசக்கொத்தனார் said...
மொக்கை பற்றிய இவ்வளவு சிறப்பு செய்திகளுடன் வந்திருக்கும் இந்தப் பதிவு மொக்கையில் சேராது எனத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையால் அடுத்த பதிவாவது மொக்கையாய் போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

//
ரிபீடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

ஆஹா உஷா... ஈது மொக்கையா? எப்படி ஒரு கருத்து இருக்குது...ஹ்ம்ம்

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

உப்புமாவுக்கும் மொக்கைக்கும் இத்தனை வித்தியாசம் சொல்லி கடைசியில் உப்புமாதானே கிண்டி இருக்கீங்க!

அந்த பென்சில் கதை -- நம்பினா நம்புங்க -- நீங்க மூணாவது பாரா எழுதும்போதே நினைவு வந்தது.. தப்பித்தால் தப்பில்லை ன்னு நினைக்கிறேன்.

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

ஜிரா புத்தாண்டில் முதல் பதிவா? வாழ்த்துக்கள் நல்ல சகுனம் இல்லே :-)

பிரபா, ஏதோ என்னால் ஆனது

தாமோதர் சந்துரு, பிளேடு இல்லாமலேயே அறுக்கிறேன் என்கிறீர்களா :-)))

இலவசம், அடுத்து சூப்பர் உப்புமா தயாராகிக் கொண்டு இருக்கிறது

ஆடுமாடு, மொக்கை என்றால் உப்புசப்பு இல்லாத பதிவு. உப்புமா என்றால் ஓரளவு சுமாராய் இருக்கும் போதுமா?

மசி, யூ டூ :-)

டெல்பின் மேடம் நன்னி.

பினாத்தல், என்ன செய்ய கிண்டி கிண்டி பழகிவிட்டது. கதை பெயர் தப்பித்தால் தப்பில்லையா? இல்லையே கணவன் மாட்டிக்க மாட்டான்?

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

ம்ம்ம்ம் - இன்னும் -ஐந்து மாத வலைப்பூ அனுபவத்திற்குப் பிறகும் - மொக்கன்னா என்னன்னு புரிய மாட்டேங்குது - உப்புமா வேற ? ம்ம்ம் - இருக்கட்டும். பென்சில் சீவிச் சீவ்வி - அதி புழுக்கைப் பென்சிலாக்கி, கையெ அறுத்துக்கிட்டட்து எல்லாம் நெனவுக்கு வருது. இனிய மலரும் நினைவுகள்.

இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்.

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

ஆஹா, சீனா சார்! அதன் பெயர் "புழுக்கை பென்சில்" இல்லையா? மறந்துப் போனதை நினைவுப்படுத்தியதற்கு நன்றி.
பழைய பேனா கட்டையில், அந்த புழுக்கையை சொறுகி, பேனாவில் எழுதுவதைப் போன்ற பந்தா செய்ததை மறக்க முடியுமா?

 
At Sunday, 13 January, 2008, சொல்வது...

மொக்கை விளக்கம் நன்று உஷா..அதிலும் மொக்கை உப்புமா வித்தியாசங்கள்..

 
At Monday, 14 January, 2008, சொல்வது...

//எவ்வளவு பேனாக்களை அருகில் வைத்தாலும், சமயத்தில் எதையாவது குறித்துக் கொள்ள வேண்டும் என்றால் எதுவும் அருகில் இருக்காது. கேட்டால்,அப்படி பேனா இருந்ததையே பார்க்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். //

very true

 
At Monday, 14 January, 2008, சொல்வது...

//மொக்கையன் என்ற பெயர் சில கிராம சப்ஜெட் படங்களில், சாதாரண நடிகர்களுக்கான பெயராய் வரும். //

எங்க வீட்டில் இருந்த குத்தகைக்காரர் ஒருத்தர் பேர் மொக்கையன் தான். அவரின் பெரிய மீசையை ரசிகமணி மாதிரி வைத்திருப்பார், பிடித்து, இழுத்து, நாங்க மூணு பேரும் விளையாடியதும், அவர் ஆனந்தமாய்ச் சிரித்து ரசித்ததும் நினைவுக்கு வருது.
அது சரி, வெத்திலை, பாக்கு வச்சு அழைக்கலைனாலும் ஒரு தகவலாவது கொடுக்கக் கூடாதா? தமிழ் மணம் பார்த்துட்டு வந்தேன். :P

 
At Monday, 14 January, 2008, சொல்வது...

//மொக்கை பற்றிய இவ்வளவு சிறப்பு செய்திகளுடன் வந்திருக்கும் இந்தப் பதிவு மொக்கையில் சேராது எனத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையால் அடுத்த பதிவாவது மொக்கையாய் போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.//

இ.கொ.சொல்வதை வழிமொழிவதோடு, உங்களுக்கு மொக்கை போடத் தெரியலையே என்று வருத்தமாயும் இருக்கு! இதுவும் கொஞ்சம் சீரியஸ் டைப் தான் என்ன செய்ய, பழக்கத்தை மாத்திக்க முடியலை, உங்களாலே! :))))))))))

 
At Monday, 14 January, 2008, சொல்வது...

மொக்கை, பலருக்கு கொசுவர்த்திய சுத்திப் போடுது போலவே... அப்போ மொக்கைன்னா கொசுவர்த்தியா?

 
At Monday, 14 January, 2008, சொல்வது...

கீதா, நேற்று காலையில் இருந்து மின்சாரம் போய் போய் வந்துக் கொண்டு இருந்தது. மாலை ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை கட். உங்களுக்கு போட இருந்தது, போயே போயிந்தி. இது மொக்கையில் வராது, உப்புமா வகையறாதான். சுரேஷ் கரைக்டா கண்டுப்பிடிச்சிட்டார்.

பாசமலர் உங்களுக்காவது புரிந்ததே,
காட்டாறு, நன்கு இன்னொறு முறைப் படித்து தெளிக.

ரவியா, வீட்டுக்கு வீடு வாசப்படி :-)

 
At Tuesday, 15 January, 2008, சொல்வது...

இந்தாங்க உஷாக்கா

ஏதோ என்னாலான மொக்கை ;-)

http://videospathy.blogspot.com/2008/01/britney-spears.html

 
At Tuesday, 15 January, 2008, சொல்வது...

---பள்ளியில் யாராவது அரை பிளேடு கொண்டு வந்தால், அதற்கு ஏக டிமாண்டு இருக்கும்----

ஆகா !!!

 
At Saturday, 19 January, 2008, சொல்வது...

பிரபா ஓ.கே

அரைபிளேடு, நம் பெயரையும் பிறர் குறிப்பிடும்பொழுது ஏற்படும் ஆனந்தமே ஆனந்தம் இல்லையா :-)

 
At Saturday, 19 January, 2008, சொல்வது...

இந்த "மொக்கை" அலம்பல் தாங்க முடியலடா, சாமீ :))))

 
At Saturday, 19 January, 2008, சொல்வது...

//
இந்த குட்டியூண்டு பென்சிலைப் பார்த்தாலே எனக்கு சுஜாதாவின் சிறுக்கதை அல்ல அல்ல குறுநாவல் ஒன்று ஞாபகம் வரும். மனைவி தற்கொலை செய்துக் கொண்டாள் என்ற கணவனை, கொலைக்காரனாய் அடையாளம் காட்டுவது இப்படி ஒரு சின்ன பென்சில்தான். கார்பெண்டர்கள், பென்சிலை தங்கள் உளியில் செதுக்குவது போல சீவுவார்கள். அதை வைத்து கணேஷ், வசந்த் கண்டுப்பிடிப்பார்கள். கதையின் பெயர் நினைவில்லை.
//
உஷா,
அந்தக் கதை "மறுபடியும் கணேஷ்" ! பெனாத்தலார் சொன்ன "தப்பித்தால் தப்பில்லை" இல்லை !!!
எ.அ.பாலா

 
At Sunday, 20 January, 2008, சொல்வது...

பாலா அதே அதே! மறுபடியும் கணேஷ் தான்.

 
At Thursday, 24 January, 2008, சொல்வது...

இந்தச் சின்ன கோடு பெரிய கோடு தத்துவத்தை நான் அடிக்கடி நினைச்சுக்கிறதுண்டு உஷா. நானெல்லாம் நல்லா எழுதுறேன்னு சொல்லாதீங்க. இப்ப இன்னொரு பெரிய கோடு வந்தாச்சு. (ஒன்னு என்ன நாலைஞ்சு வந்தாச்சு). ஆனாலும் ரொம்பச் சின்னக் கோடா மாறாம இருக்கத் தான் போராடிக்கிட்டு இருக்கேன். :-)

மொக்கை போடலாம்னு பாத்தா என்ன போடறதுன்னு தான் தெரியலை. ஏதாவது ஒரு பழைய இடுகையை எடுத்து மீள்பதிவு செய்யலாமான்னு யோசனை. பாக்கலாம்.

 
At Thursday, 24 January, 2008, சொல்வது...

மொக்கை போடலாம்னு பாத்தா என்ன போடறதுன்னு தான் தெரியலை. ஏதாவது ஒரு பழைய இடுகையை எடுத்து மீள்பதிவு செய்யலாமான்னு யோசனை. பாக்கலாம்.//

குமரன், இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே :-)))))))))))))

 

Post a Comment

<< இல்லம்